Monday, November 24, 2008

இலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் !

1)முதன் முதலில் எப்போது பத்திரிக்கையை(நாளிகை) படிக்க தொடங்கினீர்கள்?
சரியாக ஞாபகம் இல்லை. நாளிகை படிக்க ஆரம்பித்த காலத்தில் அதிகம் விரும்பிப் படிப்பது சினிமா பக்கம் தான். இப்போது சினிமா இதழ்களை முற்றினும் தவிர்த்துவிட்டேன். நடிகைகளின் தொடையில் ஓடுகிறது இன்றய பாத்திரிக்கை வியாபரம் என அன்மையில் ஒரு தமிழ் ஆர்வாளர் சொல்லியது இவ்வேளையில் ஞாபகம் வருகிறது. சினிமா இல்லாமல் பத்திரிக்கை இல்லை எனும் இக்கால பத்திரிக்கையாளர்கள் எண்ணத்தைச் சற்றே மாற்றிக் கொள்வது நலம்.

2)அறிமுகமான முதல் புத்தகம்?
முதல் புத்தகம் என் தந்தை, என் பிறந்த நாளுக்குப் பரிசாக கொடுத்த அணிலும் கொய்யாப் பழமும் எனும் படக்கதைப் புத்தகமாகும். அப்போது எனக்கு வயது 6 இருக்கும். பத்திரமாக வைத்திருந்தேன் ஆனால் இன்று காணவில்லை. அப்புத்தகம் தான் என்னில் கதை படிக்கும் ஆர்வத்தை முதன் முதலாக துவக்கியது எனலாம். அதன் பின் என் அக்காள் சில மலாய் சிறுவர் கதை புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார். அன்று முதல் புத்தகத்தின் வாசம் ஒட்டிக் கொண்டது.

3)பள்ளியில் கதை படித்து மாட்டிய அனுபவம்?
கதை படித்து மாட்டிய அனுபவம் இல்லை. கதை சொல்லத் தெரியாமல் மாட்டிய அனுபவம் உண்டு. வாரம் ஒரு கதையைப் படித்து மன்னம் செய்து பள்ளியில் ஒப்புவிக்க வேண்டும். இப்படி ஒரு ஆசிரியர் கட்டளை போட்டிருந்தார். கதைகளை விரும்பி படிக்கும் ஆர்வம் இருந்தாலும், பலரது முன்னிலையில் மனனம் செய்த கதையை மறந்து போய் உளற ஆரம்பித்துவிடுவேன். பிறகு என்ன வாத்தியாரிடம் (சுப்பையா ஐயா இல்லை) அடியை வாங்கி கொண்டு அடுத்த வாரத்திற்கு தயாராக ஆரம்பித்துவிடுவேன். (அடி வாங்கவா என கேட்கக் கூடாது).

4)நாவல்கள் படிக்கும் பழக்கம் உண்டா?
நிச்சயமாக உண்டு. இன்று வரை நாவல்கள் படிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. எனக்கு முதன் முதலாக அறிமுகமான நாவல் கண்ணீர் சொல்லும் கதை. மலாயவில் தோட்டபுர பகுதியில் நடக்கும் விதமாய் கதைகளம் அமைக்கப்பட்டிருக்கும். ஜப்பானிய மற்றும் பிரிடிஸ்காரர்களின் ஆட்சியின் போது மக்கள் பட்ட துயரமும், தமிழினத்திற்கு உண்டான கொடுமைகளும் விவரிக்கப்பட்டிருக்கும். இந்த நாவலும் காணாமல் போய்விடட்து.

இத்தொடரை எழுத அழைத்த ஹேமாவிற்கு நன்றி.

நான் எழுத அழைக்கும் மூவர்:
1) கோவி.கண்ணன் (காலம்)
2) NATTY (எண்ணங்கள் எழுத்தானால்)
3) சத்தீஸ் குமார் (ஓலைச்சுவடி)

6 comments:

கோவி.கண்ணன் said...

//நடிகைகளின் தொடையில் ஓடுகிறது இன்றய பாத்திரிக்கை வியாபரம் என அன்மையில்//

:)

தொடையிலும் இடையிலும் ( தொப்புள் காட்சிகள்) மேலாடையின் இடையிலும் என்று சொன்னால் தகும்.

Natty said...

me the firstu :))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி.கண்ணன்

புரியலையே... வருகைக்கு நன்றி.

@ Natty

ஹா ஹா ஹா... ஏங்க படத்ததான் சரியா எடிட் பண்ணல... இங்கயுமா...

ஹேமா said...

விக்கி நீங்க நிறைய வாசிக்கிறீங்க.
நிறையவே எதிர்பார்த்தேன்.
சுருக்கமாக முடிச்சிட்டீங்க.
என்றாலும் நன்றி விக்கி.

Natty said...

விக்கி... நானும் எழுதிட்டேன் ;)

http://ennangal-ezhuthanal.blogspot.com/2008/11/blog-post_26.html

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஹேமா

வருகைக்கு நன்றி.... கேள்விகள் சுருக்கமாக இருக்கு... அதான் நிறைய எழுத முடியவில்லை...

@ Natty

படித்தேன்... நல்லா எழுதி இருக்கிங்க... மிக்க நன்றி...