Monday, August 18, 2008

நெஞ்சோடு சில ராகங்கள்


அவளைச் சந்தித்த
மணித் துளிகளோடு நெஞ்சம்
வட்டம் போட்டுத் திரிகிறது.
அவளோடு இருந்திடவே எண்ணம்
திட்டம் போட்டுத் தவிக்கிறது.

கையோடு கை- சேர்த்து
விரலோடு விரல் கோர்த்து
புரியாத கோலம் பல பல
வரைந்த பொழுதுகள்.

கோலத்திலும் கவிதை
பிறக்கும் விந்தை கண்டேன்.
பார்வையிலும் தேன் துளி
சிந்த உன்னுள் விழுந்தேன்.

காதலெனும் மதத்தை
ஏற்ற பின்
இனமெனும் வேறுபாடுகள்
இல்லையடி பெண்ணே.

காந்த உதட்டில்
கபடி ஆடத் தடைகள் போடுகிறாய்.
காதல் கடிதம் போதவில்லை என்று
காதோடு முறையீடு செய்கிறாய்.

தள்ளி நிற்கும் என்னை
கிள்ளிச் சீண்டிப் பார்ப்பதேன்?
பக்கம் வந்த என்னை
தர்க்கம் செய்து தடுப்பதேன்?

உன் கரம் வருடி
உச்சி முகர்தலும் இன்பம்
உன் கோபம் கண்டு
உனைக் கொஞ்சுதலும் இன்பம்

காதலின் கொடுமையான இன்பம் நீ
காதலின் இன்பமான கொடுமையும் நீ!

31 comments:

நிஜமா நல்லவன் said...

முதலில் வந்தது நானா?

நிஜமா நல்லவன் said...

ஆஹா...ஆஹா..கவிதை கலக்கல்!

நிஜமா நல்லவன் said...

//நேற்று அவளை சந்தித்த
மணித் துளிகளோடு நெஞ்சம்
வட்டம் போட்டுத் திரிகிறது.
அவளோடு இருந்திடவே எண்ணம்
திட்டம் போட்டுத் தவிக்கிறது.//




கும்மி த்ரெட்டில் சொல்லப்பட்ட டேட்டிங் நெசம் தான் போல:)

நிஜமா நல்லவன் said...

//காதலெனும் மதத்தை
ஏற்ற பின்
இனமெனும் வேறுபாடுகள்
இல்லையடி பெண்ணே.//

ஆமா...நீங்க மலாய் பொண்ணை தானே காதலிக்குறீங்க?

நிஜமா நல்லவன் said...

//காதலின் கொடுமையான இன்பம் நீ
காதலின் இன்பமான கொடுமையும் நீ!//

சூப்பர்...சூப்பர்ப்....சூப்பரோ சூப்பர்..!!!!

ஜோசப் பால்ராஜ் said...

எங்கயோ வசமா சிக்கியிருக்கீங்க விக்கி.
கவிதை அருமையா இருக்கு, ரொம்ப ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
கவிதை என்றும் இதே போல் இன்பமாகவே இருக்க வாழ்த்துக்கள்.

ஜெகதீசன் said...

ஆஹா...ஆஹா..கவிதை கலக்கல்!

VIKNESHWARAN ADAKKALAM said...

@நிஜமா நல்லவன்
1) ஆமா நீங்க தான் பஸ்ட்டு
2) ஆஹா ஆஹா நன்றி
3) கும்மியில் வரும் வதந்திகளை நம்ப வேண்டா. பதிவுலகில் ஜோசப் என்ற பெயரி ஒரு எதிரி நடமாடுகிறார். என்னா ஒரு வில்லத்தனம்.
4) நான் காதலிக்கவில்லை. குசேலன் படத்தின் மீது பகிரங்க சத்தியம்.
5) நன்றி நன்றி நன்றியோ நன்றி.

@ஜோசப் பால்ராஜ்

ஏங்க பத்து நிமிசத்தில் எழுதுனத ஃபீல் பண்ணி எழுதி இருக்கேனு சொன்ன முதல் ஆள் நீங்கதான்.

எங்கேயும் சிக்கவில்லை. இது சத்தியம் படத்தின் மீது சத்தியம்.

கடைசி லைனில் ஏதோ உள்குத்தும் நுண்னரசியலும் இருக்கரதா ஒரு பச்சி சொல்லுது...

Anonymous said...

அதுதான் ரெண்டு நாளா ஆள் சாட்ல வரலயா?

ந்ந்நல்லா ம்ம்மாட்டிகிட்ட.

அதென்னப்பா காதல் வந்ததும் தானகவே கவிதை வந்துவிடுகிறது?

வாழ்த்துக்கள்.

நிஜமா நல்லவன் said...

// VIKNESHWARAN said...
@ஜோசப் பால்ராஜ்

ஏங்க பத்து நிமிசத்தில் எழுதுனத ஃபீல் பண்ணி எழுதி இருக்கேனு சொன்ன முதல் ஆள் நீங்கதான்.//

எழுத பத்து நிமிடங்கள் என்பது சரி....ஆனா எழுத்தில் இருப்பதை பார்க்கும் போது ரொம்ப காலம் பீல் பண்ணிட்டு இருக்கிற மாதிரி தெரியுதே:)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜெகதீசன்

நன்றி.

@வடகரை வேலன்

சொன்னால் நம்புங்கள் அப்படி ஏதும் இல்லை... எல்லாம் மாயை...

நிஜமா நல்லவன் said...

//VIKNESHWARAN said...
@நிஜமா நல்லவன்
4) நான் காதலிக்கவில்லை. குசேலன் படத்தின் மீது பகிரங்க சத்தியம்.//

_________படத்தின் மீது உங்களுக்கு இருக்கும் கோபம் ஊரறிந்த ரகசியம்....இதன் மூலம் நீங்க பொய் சத்தியம் செய்வது தெளிவாக தெரியுதுங்கோ!

நிஜமா நல்லவன் said...

//VIKNESHWARAN said...
@வடகரை வேலன்

சொன்னால் நம்புங்கள் அப்படி ஏதும் இல்லை... எல்லாம் மாயை...//

மையல் கொண்டால் எல்லாம் மாயை தான்...:)

anujanya said...

வேலன் மற்றும் ஜோசப்பை முற்றிலும் ஆமோதிக்கிறேன். கும்மியில் சுத்தமாக ஆளைக் காணோமே என்று நினைத்தேன். கவிதையின் முதல் வரிகளே காட்டிக் கொடுக்கிறது. 'நேற்று அவளை...' ஹ்ம்ம். நடக்கட்டும். வாழ்த்துக்கள்.

காதலித்தால், இன்பமோ/துன்பமோ, கவிதை அழகாக வருகிறது. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ரகசிய சிநேகிதி said...

"உன் கரம் வருடி
உச்சி முகர்தலும் இன்பம்
உன் கோபம் கண்டு
உனைக் கொஞ்சுதலும் இன்பம்"

அழகான வரிகள்

கவிதை நல்லா இருக்கு!,,, வாழ்த்துகள்

A N A N T H E N said...

அட அட அட...

எல்லாம், சனிக்கிழமை நடந்த டேட்டிங் பண்ணுர மாயம் போல!!!
நல்லா இருந்தா சரி ஹிஹிஹி

கவிதையின் துவக்கமே அருமை...

"அவளோடு இருந்திடவே எண்ணம்
திட்டம் போட்டுத் தவிக்கிறது."
- திட்டம் பலிக்கலையோ???

Anonymous said...

எப்பொழுதாவது வரைந்ததாலும் தங்களின் கவி அழகுதான்.நிறைய எழுத வாழ்த்துகள்!

ஜோசப் பால்ராஜ் said...

//3) கும்மியில் வரும் வதந்திகளை நம்ப வேண்டா. பதிவுலகில் ஜோசப் என்ற பெயரி ஒரு எதிரி நடமாடுகிறார். என்னா ஒரு வில்லத்தனம்.//

இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீது வீணாக பழி சுமத்த முயற்சித்தால் லண்டன் ராயல் நீதிமன்றத்தில் விக்கிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஆதரவு வழங்கிய நிஜமா நல்லவன் மற்றும் அனுஜன்யா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜோசப் பால்ராஜ் said...

//கும்மி த்ரெட்டில் சொல்லப்பட்ட டேட்டிங் நெசம் தான் போல:) //

அது முழுக்க முழுக்க உண்மை என்பதை லண்டன் ராயல் நீதிமன்றத்தின் மேல் சத்தியமிட்டு சொல்கிறேன்.

மேலும் விக்கி இரண்டாவது முறை பார்த்த குசேலன் படத்தின் மீதும் சத்தியம் செய்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@நிஜமா நல்லவன்

அடடே... தத்துவம்லாம் சொல்றிங்களே... அருமை... அருமை..

@ அனுஜன்யா

நீங்களுமா... இது சும்மா எழுதுனதுங்க... சொன்ன நம்புங்க...

@ரகசிய சிநேகிதி

நன்றி அக்கா.

@ ஆனந்தன்

அட பாவமே... நீங்களுமா???

@ புனிதா..

மிக்க நன்றி... நீங்களும் கிண்டலுக்காக சொல்லலியே :P

அகரம் அமுதா said...

/////காதலெனும் மதத்தை
ஏற்ற பின்
இனமெனும் வேறுபாடுகள்
இல்லையடி பெண்ணே/////

அழகிய வரிகள். வாழ்த்துகள்.

சின்னப் பையன் said...

என்னப்பா -- ஒரே கவிதை மயமா இருக்கு?
இயற்கை படம் பாத்தீங்க... டேட்டிங் போனீங்க... அப்புறம் என்ன ஆச்சு?

சின்னப் பையன் said...

டேட்டிங் போன பயண கட்டுரை - வரும்னு பாத்தேன். கவிதை வந்திருக்குது...

Anonymous said...

விக்ணேஷ், சும்மா குசேலன் படத்தின் மீது சத்தியம் செய்யாதிங்க...அப்புரம் அந்த இலச்சிமில ஆத்தா உங்கள சும்மா விடமாட்டா....

நிஜமா நல்லவன் said...

ச்சின்னப் பையன் said...
டேட்டிங் போன பயண கட்டுரை - வரும்னு பாத்தேன். கவிதை வந்திருக்குது...//

''அழகி''ய ''கவிதை''யுடன் டேட்டிங் சென்று விட்டு கட்டுரை எழுதினால் நன்றாகவா இருக்கும்?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஜோசப் பால்ராஜ்

நீங்க நல்லவரு

@அகரம் அமுதா

மிக்க நன்றி

@ச்சின்ன பையன்

வருகைக்கு நன்றி. நீங்க ரொம்ப நல்லா ஜோக் பண்றிங்க

@உஷா

மிக்க நன்றி

@ நிஜமா நல்லவன்

நீங்க ரொம்ப நல்லவரு

Unknown said...

வாவ் கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு..!! :)) வாழ்த்துகள்..!! ))

anujanya said...

ஹாய் விக்கி,

என் வலைப்பூவில் உனக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருக்கு. வந்து பார்க்கவும்
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)

அனுஜன்யா

Anonymous said...

கவிதை அழகா இருக்கு! மனதை நெருடுகிறது, காதலின் தவிப்பு...

//காதலின் கொடுமையான இன்பம் நீ
காதலின் இன்பமான கொடுமையும் நீ!
//
சூப்பரா இருக்கு..தொடருங்க விக்னேஸ்..உங்கள் காதல் மொழிகளை :)

Anonymous said...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஸ்ரீ, அனுஜன்யா, மலர்விழி, கேவியர் அண்ணன்.

மிக்க நன்றி.