Saturday, August 09, 2008

ஒரு கப்பலின் கதை- டாக்டர் ஜெயபாரதி


சமீபத்தில் டாக்டர் எஸ்.ஜெயபாரதி ஐயாவால் எழுதப்பட்ட ஒரு கப்பலின் கதை எனும் நீள் கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தகவல் நிறைந்த இக்கட்டுரையை மிக சுவாரசியமாக கொடுத்திருப்பது ஜெயபாரதி ஐயாவின் தனித் தன்மை.

நீங்கள் இங்கே படித்து முடிக்கும் ஒவ்வொரு சொற்களிலும் சரித்திரம் படிந்து வருவதை உங்களால் உணர முடிகிறதா? இறந்த காலம் முக்கிச் செய்தியை பரப்புமாயின் அது சரித்திரத்தைப் படைக்கிறது. நடந்து முடிந்த செய்தியை நன்முறையில் சமர்ப்பித்தலும் மிக முக்கியமல்லவா. இக்கட்டுரையின் வழி புதிய சந்த்தியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நன்தகவலை சிறப்பான முறையில் ஜெயபாரதி ஐயா சொல்லியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

பலதுறைகளில் வல்லுனராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கும் கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி ஓர் ஓய்வு பெற்ற மருத்துவ இயக்குனர். தற்சமயம் சுங்கைபட்டாணியில் மனைவியுடன் வசித்து வருகிறார். பல பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதி புகழ்பெற்றவர். பல நூல்களை எழுதி இருக்கிறார். ஆறாவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் இவர் வாசித்த குமரிக்கண்டம், சிரிப்பு ஆகிய கட்டுரைகள் இவருக்கு தமிழ்கத்தில் புகழ் வாங்கித் தந்தன.

தற்சமயம் இவரது இருபத்திரண்டு நூல்கள் தயாரிப்பில் உள்ளன. அவற்றில் ‘இராஜேந்திர சோழரின் கடார படையெடுப்பு’, ‘புராணங்களில் விண்வெளி நாகரிகங்கள்’ ‘சித்தர்கள் ஒரு பார்வை’ போன்றவை மிக முக்கியமானவய்.

அவரது ஒரு கப்பலின் கதை எனும் நீள் கட்டுரையில் ஆரம்ப காலத்தில் மேடான் –பினாங்கு மற்றும் சென்னைக்கு பயண சேவையை வழங்கி வந்த எஸ்.எஸ்.ரஜூலா எனும் கப்பலின் கதையை ஆராய்ந்துக் கொடுத்திருக்கிறார்.

அக்காலத்தில் இரு கரைகளுக்கும் இடையே மக்களை சுமந்து சென்று வந்த ரஜூலா எனும் கப்பல் இறுதியாக உடைபட்டது எனும் வரியை படிக்கும் போது நாமக்கு அக்கப்பலை பார்க்கும் வாய்பில்லாமல் போனதை எண்ணி மனம் ஏங்குகிறது.

அக்காலகட்டத்தில் ரஜூலா மிகப் பெரிய கப்பலாக கருதப்பட்டது. அதன் வேகம், தன்மை, என அனைத்து சித்தரிப்புகளையும் ஜெயபாரதி ஐயா கொடுத்திருப்பது நாமும் கப்பலின் ஒரு பயணியெனவும், அக்கப்பலை பார்க்கும் மக்களில் ஒருவனாகவும் மாறிவிடுகிறோம்.

யார் கண்டார்கள், என் முன்னோர்கள் கூட அந்த ரஜூல கப்பலில் மலாயாவிற்கு வந்திருக்கலாம் இல்லையா? திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது போல் அக்கப்பலில் வந்தவர்கள் வசதிபட பொருள் தேடிக் கொண்டு திரும்பி இருக்கிறார்கள். தலையில் முக்காடோடு திரும்பியவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் அவரவர் உழைப்பு அல்லவா? ஏற்றி வந்த கப்பல் என்ன செய்யயும்.

ரஜூலாவை ‘ரிப்பேரே ஆகாத கப்பல்’ என குறிப்பிட்டிருக்கிறார். இது அக்காலத்தில் மக்கள் வேலை மீது காட்டும் அக்கரையை எடுத்துரைக்கிறது. அது மட்டுமன்றி கடல் போக்குவரத்துக்களில் ஏற்பட்ட முக்கிய விடயங்களையும் ஆசிரியர் விளங்கக் கூறி இருக்கிறார். அவர் வைத்திருக்கும் நினைவாற்றலுக்கும், சேகரித்து வைத்திருந்திருக்கும் தகவலுக்கும் கண்டிப்பாக நன்றி சொல்லியாக வேண்டும்.

51 ஆண்டுகள் பயண சேவையை வழங்கிய ரஜூலவை பாழைடைந்தவுடன் உடைத்துவிடுகிறார்கள். அதன் பின் எம்.வி.சிதம்பரம் மற்றும் பூங்காராயா என்னும் கப்பல்கள் சேவையை வழங்கி இருக்கின்றன. கால ஓட்டத்தில் உருவான விமான சேவையால் கடல் பயணம் வெகுவாக பாதிப்படைந்தது.
ரஜூலாவின் மகத்தான சகாப்தம் மறைந்துவிட்டது. எத்தனையோ பேர்களுடன் அவர்களுடைய நம்பிக்கைகளையும் அவர்களின் வெற்றிகளையும் சுமந்து சென்ற கப்பலல்லவா என ஆசிரியர் முடித்திருப்பது நெஞ்சை வருடும் வரியாக இருக்கிறது.

ஜெயபாரதி ஐயாவுடன் அதன் பின் வந்த பூங்கா ராஜா கப்பலின் தகவல்களை கொஞ்சம் விசாரித்துப் பார்த்தேன். அக்கப்பலை பற்றிய சில காது வழி தகவல்கள் மட்டுமே சிக்கியுள்ளன. மேலும் தகவல் கிடைக்குமாயிம் பதிவிடுகிறேன்.

கப்பலின் கதையை இணையத்திலும் படித்து மகிழலாம்.

ஒரு கப்பலின் கதை நான்கு பாகங்களாக கொடுக்கப்பட்டிருக்கிறது. சன்னலின் வலது பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் NEXT சுட்டியை அழுத்தி அடுத்த பகுதியை படிக்க முடியும்.

நன்றி: டாக்டர் எஸ்.ஜெயபாரதி

10 comments:

Anonymous said...

கடல் பயணம் செய்வது குறித்த எனது ஆசையை தூண்டிவிட்டுள்ளது இந்தப் பதிவு....

Sathis Kumar said...

மலேசிய இந்தியர் வலாற்று ஆவணங்களின் பொக்கிஷமாகத் திகழும் மருத்துவர் செயபாரதியைச் சமயம் கிடைக்கும்பொழுது சென்று சந்திக்கலாம். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

Athisha said...

விக்கி நம்ம வலைல வர பல்லாயிரம் மொக்கை பதிவுகளுக்கு நடுவுல நச்னு நல்ல ஒரு பதிவு

வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் சேவை

நாஞ்சில் பிரதாப் said...

இந்த சுட்டியில் டாக்டர்.செயபாரதியின் அரிய தகவல்கள் உள்ளன.

சின்னப் பையன் said...

படிக்கிறேன்... உரல் கொடுத்தமைக்கு நன்றி...

A N A N T H E N said...

அருமையான விமர்சனம்,
படிக்கத் தூண்டுகிறது

அவரின் எழுத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி

படிக்கப் போறேன்...

Anonymous said...

நம் நாட்டு தமிழறிஞரின் கட்டுரையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி...வாய்ப்பி கிடைத்தால் அவசியம் அவரை சந்திக்க வேண்டும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@விஜயகோபால்சாமி
கடல் பயணம் இப்போது உள்ளதா..?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@சதீசு குமார்
வருகைக்கு நன்றி. நிச்சயம் சந்திக்கலாம்.

@அதிஷா
நன்றி அதிஷா

@நாஞ்சில் பிரதாப்
உங்கள் முதல் வருகைக்கு நன்றி. நாம் நாம் அறிய வேண்டிய பல பல தகவல்கள் உள்ளன.

@ச்சின்ன பையன்
வருகைக்கு நன்றி. கண்டிப்பாக படிக்கவும்.

@ஆனந்தன்
நன்றி ஆனந்தன். படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

@இனியவள் புனிதா
ம்ம் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் சந்தியுங்கள். நன்றி.

Thamiz Priyan said...

அந்த தொடுப்பை குறித்து வைத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது படிக்கின்றேன்... :)
நூல்களை அறிமுகம் செய்வதற்கு நன்றிகள்... :)

Anonymous said...

டாக்டர் எஸ்.ஜெயபாரதி ஐயாவின் எழுத்து படிவங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி, விக்னேஷ்வரன்...நானும் படிக்க போறேன் அந்த சுவாரியமான கப்பல் பயணத்தை!