Saturday, August 02, 2008
குளிர்கால காதல்
வெண்சுருட்டில்லாமல்
புகைகக்கும் சுவாசப்பை
இசைப்பயிற்சியின்றி தாளம் போடும்
வெள்ளை பற்கள்.
கூட்டுப் புழுவென
போர்வைக்குள் அடங்கும்
மனிதர்கள்.
சோம்பல் முறித்த காற்று
தூக்கம் கொண்டு
தரையில் படுத்துவிடும்.
மீன்கள் ஓடைக்கு
விடுமுறை கொடுத்து
எரிமலைக்கு பயணம் போகும்.
ஆதவனையும்
ஊதி அணைத்து விடும்
குளிர் பனிக்காலம்.
சூடு தேடிய உடல்கள்
சிக்கிமுக்கி கற்களாகும்.
கூடு தேடிய கிளிகள்
திக்கித் திணறி பாடும்.
குளிர்காலத்தில் குளியல்
உடலுக்கு கொடுக்கும்
மரணதண்டனை.
மதுக் கிண்ணமும்
மாமிசப் படையலும்
சுவைக்கச் சொல்லும் சிந்தனை.
பூக்களும்
மூச்சிழுக்க முடியாமல்
தலை கவிழ்ந்து கொள்ளும்
அதிகாலையில்....
என் காதலிக்காக தேடுகிறேன்
எங்காவது தப்பி பிழைத்திருக்கும்
ஒரு ஒற்றை ரோஜாவை.
நான் பூவோடு வரும்
கனவில்அவள்.
புன்னகை ரோஜாவை
பரிசளிக்க போகும்
மகிழ்ச்சியில் நான்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கவிதை சூப்பர் லா
சொந்தமா எழுதினதா
கவிதை சூப்பர் லா
சொந்தமா எழுதினதா
அழகான உயர்ந்த கற்பனைகள் நிறைந்த 'குளிர்கால காதல்' படிக்க படிக்க இதமாக இருக்கிறது...அந்த குளிர் சீதோஷணத்தை உண்மையில் நுகர்ந்த உணர்வு பிறக்கிறது.
கவிதை பணியைத் தொடருங்கள் தோழரே!
விக்ணேஷ், பொய் சொல்லாமல் சொல்லுங்கள்...உங்கள் வாழ்கையில் காதல் நிகழ்காலமா? இறந்த காலமா?
விக்கி! இம்புட்டு காதல் உணர்வா? ... கவிதை அழகா இருக்கு... :)
கலக்கல் கவித அண்ணாச்சி...
wow...really super viknesh!
விக்கி.. பிரமாதப்படுத்திட்டேப்பா... எல்லா வரிகளுமே பிரமாதம் !!!
உனக்குள்ள இப்படி ஒரு காதல் கவிஞன் ஒளிஞ்சிட்டிருக்கிறது தெரியாம போச்சே :)
@ அதிஷா
என் நான் எழிதினதாக தோன்றவில்லையா... எப்போதாவது உதிக்கும் கற்பனை...
@ மலர்விழி
மிக்க நன்றி. மீண்டும் வருக.
@ அனானி
உங்களுக்கான பதில் எதிர்காலம்
@ தமிழ் பிரியன்
இது உண்மைதானே? மிக்க நன்றி.
@ ஜி
உங்களை விடவா... நீங்க அசத்துரிங்களே...
@புனிதா
நன்றி புனிதா அக்கா.
@ சேவியர்
சேவியர் அண்ணே நீங்க கேட்ட கேள்விக்கான பதில் தான் இந்தக் கவிதை. நீங்கள் தூண்டியதால் எழுதியது. சுடர் விளக்காயினும் தூண்டு கோள் அவசியம் அல்லவா. உங்கள் வாழ்த்திற்கு நன்றி.. இதை இப்படி மாற்றி போட்டால் நல்லா இருக்குமே.. என சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்.
அருமை... அட்டகாசம்... கவித கவித.... சூப்பர்...:-)))
Post a Comment