Friday, August 01, 2008

நாசி லெமாக் எனும் உணவு

மலாய்காரர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் நாசி லெமாக் மிக பிரசித்திப் பெற்றது. நாசி என்பது சோறு. லெமாக் என்றால் கொழுப்பு என அர்த்தம் கொள்ளும். இவ்வுணவிற்கான சோற்றை கொலுப்புச் சத்து நிறைந்த தேங்காய் பாலில் நிரை கட்டிச் சமைப்பதால் நாசி லெமாக் என அழைக்கப் படுகிறது.

மலேசியா மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கபூர் மற்றும் புருனய் போன்ற நாடுகளிலும் இவ்வுணவு கிடைக்கிறது. இதை தவிர்த்து கிளாந்தான் திரங்கானு போன்ற வட மலேசிய மாநிலங்களின் இதனை ‘நாசி டகாங்’ என அழைக்கிறார்கள். அவர்கள் ஊதா நிறம் மற்றும் பழுப்பு நிறத்திலான புழுங்கள் அரிசியை இவ்வுணவிற்கு பயன்படுத்துகிறார்கள். இநதோநேனேசியவில் இதனை நாசி ஊடுக் என அழைப்பதாக கேள்வி.அக்காலகட்டங்களில் மலாய்காரர்கள் அதிகமாக விவசாயம் மற்றும் மீன் பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். வருமானமும் நிலையற்றதாய் இருந்தது. கொழுப்புச் சத்து நிறைந்த நாசி லெமாக் உணவு அவர்களை நீண்ட நேரம் பசியை கட்டுபடுத்த உதவியது.
நாசி லெமாக் பெரும்பாலும் காலை உணவாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. மிதமான வேலை செய்பவர்களுக்கு நாசி லெமாக் சிறந்த உணவல்ல. அது சோர்வையும் தூக்கத்தையும் உண்டு பண்ணூம். ஆனாலும் அதை கணக்கில் கொள்ளாமல் காலையில் மூக்கு பிடிக்க வெட்டிவிட்டு அலுவலகத்தில் தூங்குபவர்களும் உண்டு.
முன்பு நாசி லெமாக் ஒரே வகையாக தான் இருந்தது. கால மாற்றத்தில் இந்த உணவிலும் மாற்றம் உண்டாகிவிட்டது. தற்சமயம், நாசி லெமாக் டாகிங், நாசி லெமாக் ஆயாம், நாசி லெமாக் ரெண்டாங் என பல பிரிவுகளாக பிரிந்து ஒரு நாவலை படைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. காலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களிலும் நாசி லெமாக் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்.

நாசி லெமாக், கார நெத்திலி பிரட்டல், வெள்ளரி, வெக வைத்த அல்லது பொரித்த முட்டை, பொரித்த நெத்திலி, மற்றும் வருத்த நிலக் கடலை எனும் கலவைகளைக் கொண்டு செய்யப்படும். இடத்திற்கு தகுந்தாற் போல் இதன் விலையும் மாறுபடும். நாசி லெமாக் சாப்பிடும் போது குளிர் பானங்களை குடிப்பதை விட சூடான காபி அல்லது தேனீர் வகைகளை அருந்த எடுத்துக் கொண்டால் கூடுதல் சுவையை உணர முடியும்.

சீன தேச பயணத்தின் போது விமாத்திலும் நாசி லெமாக் விற்கக் கண்டேன். அதன் விலை ரிங்கிட்15 ஆக இருந்தது. அது முடிந்து போன பட்சத்தில் விமான பணியாளர்களை கடிந்துக் கொண்ட பயணிகளையும் கண்டேன். நாசி லெமாக் துரித உணவு வகையை சேர்ந்த பண்டமாக்க் கருதப்படுகிறது. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் நாசி லெமாக் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மரடைப்பு உள்ளவர்கள் நாசி லெமாக் சப்பிடுவது மிகுந்த பங்கத்தை விளைவிக்கும்.

நாசி லெமாக் சாலையோர கடைகள் முதற் கொண்டு நட்சத்திர விடுதிகள் வரை சுலபமாக கிடைக்கும் உணவு. சாலையோரங்களில் வாழை இலையில் மடித்து விற்பனை செய்வார்கள். சமைக்கும் போது சேர்க்கப்படும் “செண்டோல்’ எனப்படும் இலையின் வாசனை வாழை இலையோடு சேர்ந்து மூக்கை துளைக்கும், நாக்கில் எச்சில் ஊறும். அதன் சுவை சமைப்பவரின் கைவண்ணத்திலும் சாப்பிடுபவர்களின் நாக்கிலும் அடங்கி இருக்கிறது.

சிலருக்கு நாசி லெமாக் ஒவ்வாது. முக்கியமாக நாசி லெமாக் ரெண்டாங் வயிற்றை கலக்கிவிடும். சிலருக்கு ரெண்டாங் சேர்த்து சாப்பிடுவதில் அலாதிப் பிரியம். எனக்கு நாசி லெமாக் ஈக்கான் பிலிஸ் (கார நெத்திலி பிரட்டல்) சாப்பிட விருப்பம். சில நேரம் அதுவே காலை உணவாகவும் அமையும்.

16 comments:

ஆயில்யன் said...

ம்ம் பிரதேச உணவு வகைகள் நல்லா இருக்கு விவரமா சொன்னது :)

Anonymous said...

வெள்ளிக்கிழமையன்று இந்தப் பதிவைப் போட்ட உங்களுக்கு என்னுடைய கண்டணங்கள்.

ஜெகதீசன் said...

மலாய் கடைகளில் எல்லாம் பார்த்திருக்கிறேன்...
ஆனால் சாப்பிட்டதில்லை...
:)

MyFriend said...

சூப்பர் உணவு. மலேசியாவில் இருப்பவர்களும், இங்கு வருபவர்களும் மிஸ் பண்ணகூடாத உணவு. ;-)

Athisha said...

ஆஹா எனக்கு ஒரு பிளேட் பார்சல்

PPattian said...

இது இலங்கையில் செய்யப்படும் "கிரிபத்" (தமிழில் "பால்சோறு") தான் என நினைக்கிறேன். அங்கு இது "கட்ட சம்பொல்" எனப்படும் காரமான வெங்காயச் சட்னியுடன் பரிமாறப்படும்..

நான் "நாசி கொரேங்" நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஆயில்யன் said...
ம்ம் பிரதேச உணவு வகைகள் நல்லா இருக்கு விவரமா சொன்னது :)//

நன்றி ஆயில்யன்.


//இனியவள் புனிதா said...
வெள்ளிக்கிழமையன்று இந்தப் பதிவைப் போட்ட உங்களுக்கு என்னுடைய கண்டணங்கள்.//

ஏன்fக வெள்ளிக்கிழமை போட கூடாது... இலச்சிமல ஆத்தா கண்ண குத்திடுவாளா

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஜெகதீசன் said...
மலாய் கடைகளில் எல்லாம் பார்த்திருக்கிறேன்...
ஆனால் சாப்பிட்டதில்லை...
:)//

ஏன் சாப்பிட்டதில்லை... நீங்களும் சைவமா?...சைவ நாசி லெமாக் கூட இருக்கிறதே...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
சூப்பர் உணவு. மலேசியாவில் இருப்பவர்களும், இங்கு வருபவர்களும் மிஸ் பண்ணகூடாத உணவு. ;-)//

அடெங்கப்பா...

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதிஷா said...
ஆஹா எனக்கு ஒரு பிளேட் பார்சல்//

ஆஹானு இங்க ஒரு ஐட்டமும் இல்லைங்க...


//PPattian : புபட்டியன் said...
இது இலங்கையில் செய்யப்படும் "கிரிபத்" (தமிழில் "பால்சோறு") தான் என நினைக்கிறேன். அங்கு இது "கட்ட சம்பொல்" எனப்படும் காரமான வெங்காயச் சட்னியுடன் பரிமாறப்படும்..

நான் "நாசி கொரேங்" நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.//

நாசி கோரேங் அங்க கிடைக்கிறதா...? கூடவே நல்ல தகவல் கொடுத்திருக்கிங்க... நன்றி...

சின்னப் பையன் said...

//ஆனாலும் அதை கணக்கில் கொள்ளாமல் காலையில் மூக்கு பிடிக்க வெட்டிவிட்டு அலுவலகத்தில் தூங்குபவர்களும் உண்டு//

அப்படின்னா ஓகே!!!

சின்னப் பையன் said...

ஏ என்றால் ஆப்பிள் தொடருக்குக் கூப்பிட்டேனே... தயாராகிட்டிருக்கா????... முயலவும்... மெயிலவும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//அப்படின்னா ஓகே!!!//

எப்படினா?

// ச்சின்னப் பையன் said...
ஏ என்றால் ஆப்பிள் தொடருக்குக் கூப்பிட்டேனே... தயாராகிட்டிருக்கா????... முயலவும்... மெயிலவும்...//

கண்டிப்பாக எழுதுவேன்... நீங்கள் சொல்லி செய்யாமலா....

Thamiz Priyan said...

தாய் ஏர்வேஸில் வரும் போது இதைத்தான் கொடுத்த மாதிரி இருந்தது... நல்லா இருக்கும்ன்னு சொல்றீங்க.... சரி விசாவும் டிக்கெட்டும் அனுப்புங்க... வந்து சாப்பிட்டுப் பார்த்து சொல்கிறோம்... :))

மங்களூர் சிவா said...

ராசா இது வெஜிடேரியனா? நான் வெஜ்ஜா??

சிங்கப்பூரிலும் இதுதான் கிடைக்குமா??

மங்களூர் சிவா said...

/
தமிழ் பிரியன் said...

சரி விசாவும் டிக்கெட்டும் அனுப்புங்க... வந்து சாப்பிட்டுப் பார்த்து சொல்கிறோம்... :))
/

ரிப்பீட்டு

Mahesh said...

அட நீங்க இவ்வளவு சீரீசான ஆளா? எதோ ஆராய்ச்சி கட்டுரை மாதிரி இருக்கு... நெறய எழுதுங்க..