Monday, October 18, 2010

சமயம் எனும் சாக்கடை உலகம் (2)


"We shall not believe anything unless there is reasonable cause to believe that it is true" -- Ingemar Hedenius

பாகம் 1: படிக்க இங்கே சொடுக்கவும்

இதை இப்போது இங்கே படித்துக் கொண்டிருக்கும் உங்கள் கஷ்டங்கள் 3 நாட்களில் விலகும், நினைத்தக் காரியம் கை கூடும், சின்ன வீடு ஒன்று செட் ஆகும் உடனடியாக இப்பதிவினை எட்டு பேருக்கு மின்னஞ்சவும் என எழுதினால் என் வலைப்பதிவினை தப்பித்தவறி படிக்கும் பத்து நபர்களில் இரண்டு பேராவது செவ்வனே அக்காரியத்தை செய்வார்களென சீக்ரட் சர்வே ஒன்று தகவல் அனுப்பியுள்ளது. இவற்றை ஸ்பாம் என அடையாளப்படுத்தலாம். அதாவது எரிச்சலூட்டும் ஒரே வகை தகவல்கள். இதற்கு தமிழில் எரிதம் என செல்லமாக பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த ஸ்பாம் மின்மடல்கள், எஸ்.எம்.எஸ்கள், மற்றும் துண்டு பத்திரிக்கைகள் என நீளும் பட்டியல் வளர்ந்த கதைக்கு தனி வரலாறு எழுதிவிடலாம். எனக்கு மின்மடலில் முகம் தெரியாத அன்பர் ஒருவர் வாரத்திற்கு இரண்டு மூன்று மடல்களாவது இப்படி அனுப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார். நானும் கடுப்பேறி கெட்ட வார்த்தைகளில் திட்டியும் பார்த்துவிட்டேன். ம்ம்... திருந்துவதாக தெரியவில்லை.

இப்படி எரிதங்களை அனுப்பும் புண்ணியவானுக்கு வாழ்க்கையில் முதலிரவே நடக்க கூடாது என்று காசு வெட்டி போட்டு இருக்கிறேன். பெரிய கடவுள் தான் காக்க வேண்டும். எனக்கு மட்டும் தான் இப்படி என்றால் இன்னும் சில வலைப்பதிவர் நண்பர்களுக்கும் இப்படி நிகழ்வதாக கூறப்படுகிறது. இப்படி தொந்தரவு கொடுப்பவர்கள் மீது சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதனை தெரிந்தவர்கள் கூறவும்.
மீடியாக்களில் மதத்தின் பெயரால் செய்யப்படும் நாசவேலைகள் எக்கச்செக்கம். அன்பர்களேஏஏஏ... என தொடங்கி கழுத்தில் கத்தி வைக்கும் கதை நெடுநாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுப்படையாக நாம் கவனிக்க முடிந்த சங்கதி யாதனெனின் இவை அனைத்தும் வியாபர நோக்கம் கொண்டவை. நமது பாக்கெட்டில் உள்ள பணத்தை அழுங்காமல் வெளியே கொண்டு வரும் யுக்திகள். எங்களை கண்டு கொண்டு கொஞ்சம் முதலீடு செய்யுங்கள் பிறகு உங்கள் பிரச்சனை சூரியனைக் கண்ட பனி போல் பின்னங்கால் பிடரிபட ஓடிவிடும் என வானொலிகளில் திருவாய் மலர்வார்கள்.

இந்த பிரச்சனை கண்ட புண்ணியவான்களும் பவ்வியமாக கைகட்டி நிற்க, இந்த கல்லை போட்டுக் கொள்ளுங்கள் இமய மலை உச்சியில் ஆயிரமடி தோண்டி எடுத்தது. இதோ இது இருக்கிறதே சீதா பிராட்டியை இராவணன் கடத்திக் கொண்டு போனபோது தவறி விழுந்து வாணரங்கள் கண்டறிந்தது என கற்களை அடுக்கி வைத்து புராண பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வகை விளம்பரங்களுக்கு பல வகை காலகட்டங்கள், சிறப்பு பூஜை செய்யப்பட்டது, ஸ்பெஷல் ப்ரோமோஷன் என தனி சலுகைகளும் உண்டு. இடையிடையே சமய சாங்கிய புத்தகங்களையும் வெளியிட்டு பணம் தேடிக்கொள்கிறார்கள். இன்னமும் நம் மக்களின் இலக்கிய சிந்தனை சிவன் பார்வதிக்கு அருளிய கனவுகளின் பலனில் தான் உள்ளது.

மலேசியாவில் எம்.எல்.எம்(MLM) கார்ப்ரேட் சாமியார்களின் திட்டம் ஆரம்பித்த காலகட்டத்தை அறியவில்லை. ஆனால் இடைபட்ட காலத்தில் அதிகமாக கேள்விப்பட நேர்ந்தது. இந்த சாமியாருக்கென ஒரு விசிலடிச்சான் குஞ்சுகளின் கூட்டம் உண்டு. இவர்களுக்கு கீழ் ஒரு கூட்டத்தை சேர்த்து. அந்தக் கூட்டம் இன்னொரு கூட்டத்தை சேர்த்து என சேர்ந்துக் கொண்டே போகும் ஒரு நவீன மார்கெட்டிங் ஸ்டைல். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த குறிப்பிட்ட சாமியாரை முதலில் பார்க்க இவ்வளவு பணம், கொஞ்சம் நெருக்கத்தில் பார்க்க இவ்வளவு, தொட்டுப்பார்க்க இவ்வளவு, படுத்துக் கொள்ள இவ்வளவு என லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். நித்தியானந்த தரிசனத்திற்கு எவ்வளவு எப்படி என்பதெல்லாம் விவரங்கள் தெரியாதபட்சத்தில் எனக்கு தனி மடல் அனுப்பி தொந்தரவு செய்ய வேண்டாம். சீடி விற்பனைக்கு வந்தால் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை உறுதியளிக்கின்றேன்.

இந்த வகை சாமியார்களுக்கு வரி விதிகள் இருப்பதாக தெரியவில்லை. காரணம் சமயத்தின் பேரில் செய்யப்படும் காரியங்கள் மக்கள் நலனுக்கென கருதப்படுகிறது. உண்மையில் மதம் என்பதை நன்னெறிகளுக்கு பதிலாக நச்சு கிருமிகளை ஆப்லோட் செய்யும் முளைச் சலவையாகவே இந்த கார்ப்ரேட் வகை சாமியார் இயக்கங்கள் இயங்குகின்றன.மக்களுக்கு நலன் செய்ய விரும்பும் சாமியாருக்கு எதற்கு நூற்றுக்கணக்கில் பணமும் பாதுகாப்பிற்கு சில நெருங்கிய பக்தர்களும்.
இந்த கால்பிரிட்களால் மூளை சலவை செய்யப்பட்ட சல்லடைகளிடம் எதற்காக இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமென வினவியதற்கு சாமியை நம்பி செலவழிக்கும் பணம் பன்மடங்கு பெருகி நம்மிடம் திரும்பி வருமென சொல்லி என் கபாலத்திற்கு உஷ்ணத்தை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள், இனி யாராவது ‘எந்த சாமி காசு கேட்டுச்சு, காலை கழுவி நக்க சொன்னிச்சு’ என கேட்டால் அவர்களை நீங்கள் தைரியமாக செருப்பால் அடிக்கலாம். காசு கேட்கும் சாமிகளை நீங்கள் விரும்பிய பக்கம் விரல் நீட்டி காட்டும் காலத்தில் நாம் இருக்கின்றோம்.

சும்மா இல்லை. படகு கார்களில் வந்திறங்குகிறார்கள். சொகுசு மாளிகைகளில் குளிரூட்டியில் படுத்துறங்குகிறார்கள். சாமிகள் இப்படி கொகுசாகதான் இருக்க வேண்டுமெனும் சாத்திரங்கள் உள்ளதா? இவர்களுக்கு தான் கடை நிலை மனிதனின் வாழ்க்கை வருத்தங்கள் புரியப் போகிறதா. சிரமப்படும் மனிதர்கள் அனுபவிப்பது கர்ம வினை ஊழ்வினை என புருடாவிட்டால் இவர்களும் பொத்திக் கொண்டு சமாதியாகி போகலாம் இல்லையா. தின்று கொழுத்த நரிக்கு நாட்டுக் கோழியின் ருசி அடங்குவது சுலபமல்ல. இவர்களின் செயல்பாடுகள் இன்னும் அதிகரிக்குமே அன்றி குறைய போவதில்லை. விபச்சாரியிடம் செல்வதற்கு தான் மனிதன் காசு கொடுத்து செல்வான். அப்படியென்றால் இந்த கார்ப்ரேட் சாமியார்களும் நிச்சயமாக விபச்சாரம் தான் செய்கிறார்கள் என்பதில் மறுபதற்கில்லை.

யார் என்ன எழுதினாலும் வாய் கிழிய கத்தினாலும் மக்களின் விழிப்புணர்வின்றி இந்த சமய சாக்கடைகளை துப்புரவு செய்ய முடியாது. திண்ணமாக செல்வதென்றால் சமூகத்தின் குப்பைகளாக மக்களை குறுகிய சிந்தனைக்கு இட்டுச் செல்லும் இவர்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இல்லையென்றால் காமம் என்பது கடவுளை காண தடை போடும் உணர்வென பக்தர்களுக்கு கூறி ஆசிரம பெண்களை இவர்கள் கட்டிலுக்கு அழைத்துச் செல்லும் கதைகளை எதிர்காலத்தில் கணிசமான எண்ணிக்கையில் எதிர்ப்பார்க்கலாம்.
இன்றைய தினத்தில் லாட்டரி சீட்டில் பணம் விழுவதற்கு கூட சமயம் வழி செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். லாட்டரி அடிக்கனுமா பாபாவை பாருங்கள் ஷகிலாவை பாருங்கள் என முக்கிய பத்திரிக்கைகள் வாரம் தவறாமல் விளம்பரம் கொடுத்துவிடுகின்றன. கூடவே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் சீரியல் எண்களோடு வெற்றி கண்ட லாட்டரி சீட்டுகளின் படம். இந்த அளவுக்கு எண்களை கணித்து கொடுக்கும் ஆசாமிகள் அத்தோடு நிறுத்திவிடுவதில்லை. சக்கரம், முக்கோணம், சதுரம் என வேறு வகை வஸ்துக்களையும் சேர்த்து தலையில் கட்டி பில் அடித்து அனுப்பிவிடுகிறார்கள். இவர்கள் மீதுள்ள பக்தியில் வருட கணக்கில் நம்பிக்கை இழக்காதவர்களையும் கண்டது உண்டு.
இப்படிபட்ட நம்பிக்கைகள் மனிதனுக்குள் ஏற்படும் ’டிஸாடர்’களால் விளைவதாக மேற்கத்திய ஆராய்சிகள் கூறுகின்றன. இதை நாம் உணராமல் போவதன் காரணம் ஆரம்பத்தில் இருந்து ஊட்டப்பட்டுவிடுகிறது. அதன் நிஜதன்மையை உணர முடியாமலும் புரியாமலும் குழப்ப நிலையில் வாழ்ந்து முடித்தவர்கள் எண்ணிக்கையில் அடங்காமல் இருக்கலாம். கடவுளின் நிருபனத்திற்கான புத்தகங்கள் அறிவியல் சிந்தனைகளோடு எக்கச்செக்கமாய் வந்துள்ளன. தமிழில் இதன் அளவு குறைவு தான். கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட கடவுளின் துகளைத் தேடும் பிக் பேங் ஆராய்சிகள் விழுங்கிய பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள்.

கடவுள் அல்லது இறை என்பது மனித உருவம் கொண்டதென்றால் அதன் தோன்றலை எத்தனை மனிதர்கள் நம்பப் போகிறார்கள். கோவில், குளம், மட்டையென நாடுபர்களின் எத்தனை பேர் பொதுநலம் கொண்டு இங்கு இயங்குகிறார்கள். என்னை மன்னித்துவிடு, எனக்கு இதை கொடு, எனக்கு இந்த பிரச்சனைக்கு நிவர்த்தி செய் எனும் சுயநலவாதிகளையே சமய வழிபாடு எனும் சலவைத் தொழிற்சாலைகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

வளரும்...

(பி.கு: திருவிழாக்காலங்களில் என்னை கோவில் குளங்களில் காண்பவர்கள். நான் ஃபிகர் பார்க்க வந்தவன் என்பதை அறிக).

10 comments:

கிரி said...

விக்னேஸ்வரன் அந்த நபரின் மெயில் ஐடி க்கே திரும்ப போகும் படி ரூல்ஸ் செட் செய்து விடுங்கள். இந்த ஐடியில் வந்தால் இந்த ஐடிக்கு போகும் படி மாற்றி வைத்து விடுங்கள். அவ்வளோ தான்! :-)

பல மெயில் ஐடி ல் இருந்து அனுப்புகிறார் என்றால் ஸ்பாம் என்று கிளிக் செய்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் சைபர் க்ரைமில் புகார் செய்யலாம் எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள்... பெரிய விசயமே அல்ல. அதற்கு உங்களுக்கு பொறுமை தான் வேண்டும் :-)

Anonymous said...

read this

இந்து மதம் எங்கே போகிறது?

RAHAWAJ said...

சாமியோவ் நம்ப கையில ஒரு தாயத்துகீது சாமி அத மட்டும் நீ கட்டிக்கின்ன வைச்சிக்கோ இந்தமாதிரி நிறைய பதிவு போடலாம் ஒரு usd 1500 நம்ப அக்கொண்ட போடு சாமி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது தம்பி!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கிரி

உங்கள் தகவலுக்கு நன்றி நண்பரே... நல்ல ஐடியா.. நீங்க சொன்ன பிறகு தான் அந்த செட்டிங் வழிமுறைகளை பார்த்தேன் :)

@ அனானி

படிச்சிட்டேன். இப்போ என்ன சொல்லப்வரிங்க?

@ ஜவஹர்

உங்க அக்கவுண்ட் டீடெய்ல்ய்ம் கார்ட்டும் கொடுத்திங்கனா மொத்தமா போட்டுறேன் பாஸ்... நோ பிராப்லம் :)

@ ஜோதிபாரதி

உங்க கதை ஏதும் இல்லையா? :))

Unknown said...

இந்த பின்னூட்டதை 10 பேருக்கு அனுப்பினால் நீங்க தான் அடுத்த மலேசிய பிரதமர்

VIKNESHWARAN ADAKKALAM said...

அனுப்பிட்டேன்...

Unknown said...

//அனுப்பிட்டேன்...//
அடுத்த எலக்‌ஷன்ல நில்லுங்க

param said...

பி.கு: திருவிழாக்காலங்களில் என்னை கோவில் குளங்களில் காண்பவர்கள். நான் ஃபிகர் பார்க்க வந்தவன் என்பதை அறிக).
இது ரொம்ப நல்லாயிருக்கு விக்னேஷ்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ பின்னூட்டங்களுக்கு நன்றி...