குவிக் கன் முருகனின் மொக்கை காமெடிகளை இரசித்தவர்களுக்கு நிச்சயமாக இரும்புக் கோட்டை முரட்டு சிங்கத்தில் எதிர்ப்பார்ப்புகள் அதிகமாக இருந்திருக்கக் கூடும். மிக சாதாரண கதையம்சத்தை கையில் எடுத்திருக்கும் சிம்பு தேவன், இம்சை அரசன் மற்றும் அறை எண் 308-ல் கடவுள் என தனது முந்தய படங்களை காட்டினும் சற்றே சறுக்கி விழுந்திருக்கிறார். மிகச் சாதாரண கதையம்சம் எனினும் அதில் புகுத்தப்பட்டிருக்கும் செய்திகள் யதார்த்தமானவை மற்றும் சம காலத்தில் இருக்கும் அரசியல் பின்புலன்களின் மீதான வெறுப்பும் கூட.
இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியில் வரும் ஒரு காட்சி. ‘அக்காமாலா ஜிப்சி’ எனும் ’ஆரோக்கிய பானத்தை’ வெள்ளையர்கள் தமிழகத்தில் அறிமுகம் செய்கிறார்கள். அதற்கு அக்கால ஆட்சியாளன் இலாப நோக்கில் துணை போகிறான். கதையின் பிற்பகுதியில் புரட்சி கதாநாயகன் வெளிநாட்டு விளம்பரங்களுக்கு துணை போவது சரியா தவறா என அவ்விளம்பரங்களில் நடித்த நடிகர்களை நையப் பிழிவதாக காட்டி இருப்பார்கள்.
கோக்ககோலா மற்றும் பெப்சி (அக்காமாலா ஜிப்சி) போன்ற ஆரோக்கிய குறைவான பானங்களை அல்லது வெளிநாட்டு பொருட்களை மூன்றாம் உலக நாடுகளில் அறிமுகம் செய்து, விளம்பரங்களை அதிகரித்து கோடிக் கோடியாக இலாபம் ஈட்டும் மேற்கத்திய நாடுகளின் போக்கினை சித்தரித்திருப்பார் சிம்பு தேவன். தற்காலத்தில் அதிகமான வெளிநாட்டு விளம்பரங்கள், பரிட்சயமான நடிகர்களை கைக்குள் போட்டுக் கொண்டு இயங்குகின்றன. அப்படத்தில் இயக்குநரின் குட்டு அவர்களுக்கு புரிந்திருப்பினும் துடைத்து தூக்கியெறிந்து போய்க் கொண்டிருப்பார்கள் என்பதில் வியப்பில்லை.
இம்சை அரசனின் முக்கிய நோக்கம் தமிழக அரசின் மெத்தன போக்கான ஆட்சி முறையை சாடுவதாக இருப்பினும் முதலாம் உலக நாடுகளென அறியப்படும் மேற்கத்தியத்தின் மீதிருக்கும் தனது கடுப்பை தயங்காமல் காட்டி இருப்பார். வெளிநாட்டு பொருட்களுக்கு விளம்பரம் கொடுப்பதை தவிர்த்து உள்நாட்டு பொருட்களின் வியாபரத்தை அதிகரித்து நாட்டை வளப்படுத்த வேண்டும் எனும் பொருளாதார சிந்தனையை சரியான கோணத்தில் காட்சிபடுத்தி இருப்பது நிச்சயமாக பாராட்டக் கூடிய ஒன்றே.
மீண்டும் அரசியல் பேசுவதற்கும் சமூகத்தின் மீதான தமது பார்வையை முன் வைப்பதற்கும் இயக்குநருக்கு தேவைப்பட்டிருப்பது புலிக்கேசி போன்ற மற்றுமொரு தளமே. மக்கள் மத்தியில் பரவலாக உழன்று கிடக்கும் கடவுள் மற்றும் சமயத்தின் போர்வையிலான கேப்மாறிதனம் மொள்ளமாறிதனம் பொறுக்கிதனம் முடிச்சவிக்கிதனம் போன்ற செயல்களையும் கடவுள் எனும் மாய பிம்பத்தையும் உடைக்கும் கருவியாக கடவுளை பயன்படுத்தி அறை எண் 308-ல் நிகழ்காலத்திற்கு திரும்பிய சிம்பு தேவன் மீண்டும் 17-ஆம் நூற்றாண்டிற்கு தனது திரைக்கதையை தூக்கிக் கொண்டு குதிரை சவாரி செய்திருக்கிறார்.
ஓர் ஊர்ல அப்பா, அம்மா, கணவன், மனைவி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, அந்தை, மாமா, தாத்தா, பாட்டி, தம்பி, தங்கச்சி, அக்கா, அண்ணன், அண்ணி, பன்னி என ஒரு பெரீரீரீரீய கூட்டமே இருந்ததாம். அவர்களுக்கு கக்கூஸ் போவதென்றாலும் கூட அதான் நம்ம ஹீரோ இருக்காரே மலச்சிக்கல் ஒன்றும் ஏற்படாது அப்படிக்கிற ஒரு அசாத்தியமான நம்பிக்கை இருந்தது. ஒரு நாள் தீடீடீடீர் என ஹீரோ காணாமல் போய்விடுகிறார். அந்த மக்களுக்கு ஏற்கனவே பக்கத்து ஊர்காரர்களின் தொந்தரவு வேறு. அவற்றை ஹீரோதான் சொம்பு தூக்கி கொண்டு வந்து பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பார். அதை அந்த ஊர் மந்தை பவ்வியமாக ஏற்றுக் கொள்ளும். ஹீரோவை காணவில்லை என்றதும் மாரில் ஆட்டுக் கல்லை தூக்கி போட்டதை போல் சுச்சா காக்கா போகாமல் அமர்ந்துவிடுகிறார்கள். தீடீடீடீரென ஹீரோ மறுபடியும் எண்ட்ரி ஆகிறார். பகைவர்களை அழித்து மக்களை காப்பாற்றுகிறார். சுபம். அவ்வளோ தான் கதை.
ஹீரோயிசத்துக்கான அத்தனை அம்சங்களையும் இம்மி பிசகாமல் புகுத்தி இருக்கும் இயக்குநர் சிம்பு தேவனின் முயற்சிகள் யாவும் இத் திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது எனினும் திரைக்கதையின் நாயகனான இராகவேந்திர லாரன்ஸிடம் இருக்கும் கதாநாயகன் எனும் பிம்பம் அதை சிந்திச் சிதறி எடுத்துச் சென்றிருக்கிறது. இன்றய நிலையில் தமிழ் மக்களின் மனோ பாவம், தமிழ் ஈழ பின்னனி, அமேரிக்க ஏகாதிபதியம் என ஒன்றுக்கும் அதிகமான செய்திகள் கதையில் தொகுக்கப்பட்டுள்ளது.
நிழலை விட வேகமாக செயல்படும் வீரன், தன் நிழலை விட அதிகமாக பயப்படும் கோழை என இரு பரிமாணங்களில் கதாநாயகன். மக்களுக்காக போராடும் புரட்சி கதாநயகன் வில்லனை அடித்து துவைத்து கசக்கி பிழிந்து காயப்போடுவதற்கு முன் கதாநயகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான் வில்லன். நெய் மனம் படைத்த நாயகன் வில்லனை விட்டு விலகி ஸ்லோ மோசனில் நடக்கும் போது பின்னிருக்கும் வில்லன் அவனை சுட்டு விடுகிறான். இதில் தமிழ் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளின் பின்ணனி அப்பட்டமாகவே தெரிகிறது.
ஒரு மனிதன் உயிர் வாழ காற்றையும் நீரையும் காட்டினும் மிக முக்கியமானது உணர்வும் சுதந்திரமும். போராட்ட குணம் மக்களின் மனதில் நிலைக்க வேண்டுமாயின் அதை வழி நடத்த மக்களுக்கு சிறந்த தலைவன் இருக்க வேண்டும், தலைவன் இல்லையேல் மக்கள் துவண்டு விடுவார்கள், ஆதலால் ஒரு தலைவனின் மரணம் மக்களுக்கு தெரியாமல் இருப்பதே சிறந்தது என மரணப் பிடியில் இருக்கும் நாயகன் ஏகவசனம் பேசுகிறார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம் சமத்துவம் என்பது பொதுவானது எனும் பட்சத்தில் தலைமைத்துவம் மட்டுமே ஒரு இலக்கின் அடைவு நிலைக்கு முக்கியம் எனதில்லை. அடைவு நிலைக்கான தலைமைத்துவம் தான் இங்கு முக்கியம் என்பதாக இருக்குமானால் தலைவன் ஒருவனால் மட்டுமே இருக்க முடியும் என்பது இல்லை.
அமேரிக்க நாட்டின் ஏகாதிபதியத்தை நேரடியாகவே நகைச்சுவை படுத்தி இருக்கிறார்கள். அணுவாயுத ஒப்பந்தம் எனும் பெயரில் ஏனைய நாடுகளுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அமேரிக்க தனத்தை மறுக்க இயலாது. நான் குசு போட்டா கூட பர்மீஷன் வாங்கனுமா என அப்பாவிதனமாக கேட்கும் கிழவனிடம் வாயூ தொல்லை கொடுக்கும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள் என்கிறது ஏகாதிபதியம். வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நாசருக்கு நகலெடுத்ததைப் குவிக் கன் முருகனில் வரும் வில்லனை போலவே ஒரு கதாபாத்திரம். சுருங்க கூறுவதெனில் சிம்பு தேவனின் நகைச்சுவையில் முக்கி எடுக்கப்பட்ட உலக பார்வையிலான கருத்துகள் லாரன்ஸ் எனும் கதாநயகனின் பிம்பத்தால் விரிசல் கண்டுள்ளது.
எவ்வளோதான் சொல்லுங்க, லஷ்மிராயின் லெக் பீஸ் காலுக்காகவே பாடத்தை 4 தடவ பார்க்கலாம். பார்வட் பண்ணி தான்.

11 comments:
படம் அவ்வளவாக கவரவில்லை. :-)
ப்டம் குழந்தைகளுக்கானது
//எவ்வளோதான் சொல்லுங்க, லஷ்மிராயின் லெக் பீஸ் காலுக்காகவே பாடத்தை 4 தடவ பார்க்கலாம். பார்வட் பண்ணி தான்.//
அது அப்படி ஒன்னும் அழகா இல்லை
பாஸ் இது சிரிப்பு படம்
அதான் மிரட்டவில்லை :)
24ம் புலிகேசியுடன் இதையெல்லாம் ஒப்பிட கூடாது
அது வேற டைப் இது வேற டைப்பு :)
"முரட்டு சிங்கம் மிரட்டவில்லை"
கண்டிப்பாய் சிரிப்பை மூட்டும்
விமர்சனம் மிக அருமை
வாழ்த்துக்கள்
@ டொன் லீ
நிச்சயமாக... நமது எதிர்ப்பார்ப்புகள் அதிகம். முன்னுரையில் மட்டும் கௌபாய்களின் வரலாற்றை சொல்கிறார்கள்... ஆனால் படத்தில் அவர்களின் வாழ்வியல் முறையின் சிறப்பம்சங்களை காட்சிபடுத்த தவறியிருக்கிறார்கள்.
@ ஜெய்சங்கர்
எது?? அரசியல் பேசுவது குழந்தைகளுக்குனு சொல்றிங்களா... சிம்பு தேவன் தனது நூதன அறிவாற்றலின் வழி நன்றாக கவர் பண்ணி இருக்கார்...
அழகா இல்லைங்கரத ஏன் இவ்வளோ கடுப்பா சொல்றிங்க பாஸ்...
@ மின்னுது மின்னல்
மின்னல் சிரிப்பு படமா? எனக்கு சிரிப்பு வரலை பாஸ்... பாகவதர் காலத்து மொக்கை ஜோக்ஸ் எல்லாம்.
அது 23தானே? :) என்ன டைப்பு?
@ உலவு
சிறுவர்களுக்கு சிரிப்பு வரலாம்... கருத்துக்கு நன்றி...
அண்ணே, நீங்க பெரிய கலை ஞானி அதான் உங்களுக்கு மொக்கையா தெரியுது.
it nice movie..comedy movie
அழகான அலசல்... ஆழமான அலலும். அக்காமாலாவுக்கு தந்த அரசியல் விளக்கம் நன்று. படம் பார்க்க ஆசை இன்னும் இருக்கு... கடவுள் படம் கூட இன்னமும் முழுசா பார்த்து முடிக்கல... சிம்பு கதையில நகைச்சுவையும் இருக்கும், மேசஜும் இருக்கும்... பாக்கனும்
குத்து பாட்டு இருக்கா? அதுல லஷ்மிராய் ஆட்டம் இருக்கா...
ஸ்மார்ட், அனந்தன், வியா: கருத்துக்கு நன்றி...
Post a Comment