மனிதனின் அட்டகாசம் நிறைந்து காணும் இவ்வுலகில் எது வேண்டுமானாலும் ஏற்படலாம். அவனாக கண்டு பிடித்துக் கொண்ட எண்ணுக்கும் எழுத்துக்கும் கடவுளர்கள் எனும் உருவங்களுக்கும் பயப்படுவதைப் போல் பாசாங்கு செய்து பசப்புகிறான். உருவ சிலைகளுக்கு முன் வேறு முகம், சிலைகளுக்கு அப்பால் வேறு முகமும் அவனுக்கு ஏற்படுகிறது. சுயநலம் அவனை சிறு நொடி பொழுதுகளினும் மாற்றிக் கொண்டிருக்கச் செய்கிறது.
தன்னையும் மீறிய சக்தி என்பது அவனுடைய தற்காலிக தேவைகளுக்கான போர்வை. தனது தோல்விகளை, அவமானங்களை, பொய்களை, திருட்டுத்தனம் எனும் குணங்களை மறைத்து வைத்துக் கொள்ள அச்சக்தி அவனுக்கு தேவைப்படுகிறது.
மனிதனே உலகின் மிகப் பெரும் சக்தி என கருத முடிகிறது. அவனெடுக்கும் முடிவும் மனிதத்தை சார்ந்ததாகவே இருக்க முற்படுகிறான். இந்த முடிவுகள் நன்மையை மட்டுமே நேக்கியவையா என கேட்பின், நிச்சயமாக இல்லை. அவன் வாழ்வதும் நீதி கொண்ட வாழ்க்கை என சொல்லிவிடலாகாது.
கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் யானைகளின் இனப் பெருக்கம் அதிகரித்ததால் அதன் எண்ணிக்கையை குறைக்க அவை கொல்லப்பட வேண்டும் என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியான தகவலாக இருந்தது. இது நடக்குமேயானால் பிற நாடுகளும் இது போன்ற செயல்களை பின் தொடர கூடும் என தீவிரமாக மறுக்கப்பட்டது.
அதே போன்ற மற்றோரு சம்பவம் அமேரிக்காவில் நடந்தது. அங்கிருக்கும் ஓநாய்களை கொல்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இனவிருத்தியால் ஓநாய் இனம் அதிகரித்துவிட்டதே இதற்கு காரணமென சொல்லப்பட்டிருந்தது. இனவிருத்தியால் அதிகரித்துவிட்ட மனித இனம் தன் ஆதிக்கத்தை பாரபட்சமின்றி ஏனைய உயிரினங்களின் மீது மேற்கொள்கிறது. இதை இயற்கையின் மீதான மனிதனின் சீற்றமென்றே சொல்ல முடிகிறது.
எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் WWF எனப்படும் உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்தேன். இதன் வழியே பண்டா எனப்படும் கரடி இனத்தின் புரிதல்கள் கிட்டியது. WWF-ன் சின்னத்தில் பண்டா கரடியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் காரணம் வினவிய பொழுது இவ்வினம் பாதுகாக்கக் கூடிய விலங்கினத்தின் கீழ் இருப்பதாக கூறப்பட்டது.
பாண்டா வகை கரடிகள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே குட்டி போடும். இனவிருத்தி காலம் அதிக அவகாசம் கொண்டிருப்பதும் இதன் இன விரிவாக்கம் பெருக முட்டுக்கட்டையிட்டுள்ளது. தற்சமயம் 1000க்கும் குறைவான பாண்டா கரடிகளே உலகில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனா போன்ற நாடுகளில் பாண்டா கரடிகள் பேனப்படுகின்றன. இதன் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. மூங்கில்களை முக்கிய உணவாக கொள்ளும் இக்கரடி வகைகள் குறிப்பிட்ட சீதோஷன நிலை கொண்ட பிரதேசங்களில் மட்டுமே வசிக்கக் கூடியவையாகும்.அதே போன்ற மற்றோரு சம்பவம் அமேரிக்காவில் நடந்தது. அங்கிருக்கும் ஓநாய்களை கொல்வதற்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இனவிருத்தியால் ஓநாய் இனம் அதிகரித்துவிட்டதே இதற்கு காரணமென சொல்லப்பட்டிருந்தது. இனவிருத்தியால் அதிகரித்துவிட்ட மனித இனம் தன் ஆதிக்கத்தை பாரபட்சமின்றி ஏனைய உயிரினங்களின் மீது மேற்கொள்கிறது. இதை இயற்கையின் மீதான மனிதனின் சீற்றமென்றே சொல்ல முடிகிறது.
எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் WWF எனப்படும் உலக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பினால் ஈர்க்கப்பட்டிருந்தேன். இதன் வழியே பண்டா எனப்படும் கரடி இனத்தின் புரிதல்கள் கிட்டியது. WWF-ன் சின்னத்தில் பண்டா கரடியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். இதன் காரணம் வினவிய பொழுது இவ்வினம் பாதுகாக்கக் கூடிய விலங்கினத்தின் கீழ் இருப்பதாக கூறப்பட்டது.
அதே நிலை புலிகளுக்கும் ஏற்பட்டிருப்பது வருந்ததக்க ஒன்றே. உலகின் சில நாடுகளில் மட்டுமே புலி இனங்கள் வசித்து வருகின்றன. மலேசியா, இந்தியா, இந்தோனோசிய சுமத்ரா கடுகளிலும் புலிகள் வசித்து வருகின்றன. இதன் அழிவுக்கு புலி வேட்டைகளுக்கு அதிக வருமானம் கிட்டுவதே காரணம் என அறிய முடிகிறது.
புலிகள் ஒவ்வொன்றிற்கும் 20ஆயிரம் முதல் 25ஆயிரம் ரிங்கிட் வரையிலும் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கரும்புலிகள் 12ஆயிரம் ரிங்கிட் வரையிலும் கொடுக்கப்படுகிறது. வேட்டையாடப்படும் புலிகள் உடனடியாக வெளிநாடுகளுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டுவிடுகின்றன. புலிகளை சரியான அளவில் இறைச்சிகளாக வெட்டி, சீனா, தாய்லாந்து, தய்வான் கொஇயா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள்.
கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதனன்றி இவ்வனவிலங்கினங்களை காப்பாற்றுவது சாத்தியமாகாது. புலிகளின் பாதுகாப்பு தொடர்பாக பல முகாம்கள் மும்முற படுத்தப்பட்டுள்ளன. சுயநலத்தின் பேரில் நம்மை சுற்றியிருப்பதை நாம் அழித்துக் கொண்டிருப்போமானால் நம்மை நாம் அழித்துக் கொள்ளும் காலம் வெகு அருகில் என அர்த்தப்படும்.
உங்கள் பார்வைக்கு:
NDTV CHANNEL
WWF நடத்தும் புலிகள் பாதுகாப்பு முகாம்

11 comments:
//புலிகளை பாதுகாப்போம் - SAVE OUR TIGERS//
புலிகளை பாதுகாப்போம் - SAVE (Y)OUR TIGERS !!
:)
பல ஆண்டுகளாய் முன்னிறுத்திக்கொண்டிருக்கும் - புலிகளை காப்போம் - இப்பொழுது சற்று வலுப்பட்டு வருகின்றது!
எதிர்பார்ப்புக்கள் நிறைவேறட்டும் இருக்கும் புலிகள் காட்டில் நிம்மதியாய் திரிந்திருக்கட்டும் !
மிக நல்ல ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள் விக்கி...
எழுத்தின் மொழியும் மிக மேம்பட்டிருக்கிறது.
நானும் பதிவு போட்டு ஓட்டு போட்டுட்டேன் விக்கி. உங்க பதிவு ரொம்ப அருமை
@ கோவி.கண்ணன்
நன்றி அண்ணா.
@ ஆயில்யன்
உங்கள் கருத்துக்கு நன்றி.
@ பரிசல்காரன்
நன்றி பரிசல்.
@ புதுகை தென்றல்
நன்றி.
புலிகளை முற்றாக அழிக்க முற்படுபவன் அதிமுட்டாள். புலிகளைத் தேடிக் கொல்பவர்களுக்கு எதிராக சர்வதேச அளவில் சட்டம் இயற்றப் படவேண்டும்.தீவிர அழுத்தமும் கொடுக்கப் பட வேண்டும். புலிகளை பாதுகாத்து வளர்த்திட நாமும் உதவிட வேண்டும்.
//புலிகளை பாதுகாப்போம்//
வழிமொழிகின்றேன்
வன விலங்குகளை நாம் ஒன்றும் செய்ய வேண்டாம் - அவைகள் அதுவாகவே வளரும் - பெருகும் - நாம் புலி வேட்டையை நிறுத்தினாலே போதும். இயற்கையை விலங்குகளை அழிப்பது தவறான செயல்
நல்வாழ்த்துகள் விக்கி
நல்ல தகவல் நண்பா. உண்மையில் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.
@ தமிழ்வாணன்
நன்றி...
@ ஜெய்சங்கர்
நன்றி
@ சீனா ஐயா
நன்றி...
@ பிரபா
நன்றி...
தமிழ்ப் புலிகளைப் பாதுகாக்க ஏதாவது எழுதுங்கள் ஐயா! தமிழர் மிக மகிழ்ச்சி அடைவர்.
Post a Comment