Monday, February 08, 2010

ஒரு கல்லறையின் கதை

நியூ யார்க் மாநிலத்தில் தேண்டுவதும் சமன் படுத்துவதுமென கட்டமைப்பு பணிகள் செவ்வனே நடந்துக் கொண்டிருந்தது. அது 1991-ஆம் ஆண்டாகும். மந்திய அரசின் புதிய அலுவலகத்தை அவ்விடத்தில் நிறுவும் பொருட்டே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்பணிகள் திடீரென தடை கண்டது. கட்டுமான இடத்தில் தோண்டுதல் வேலைகளின் போது இங்குமென கொஞ்சம் கொஞ்சமாக மனித எழும்புக்கூடுகள் வெளிபட்ட ஆரம்பித்தன.

ஆழமான தோண்டுதலின் பொழுது அவர்களின் வியப்பு மேலும் அதிகரிக்கவேச் செய்தது. கண்ணாடியில் செய்யப்பட்ட முத்துமணிகள், துருபிடித்த இருப்புச் சங்கிலிகள் என அவ்விடத்தில் சில பொருட்கள் காணப்பட்டது. சுமார் ஆறு மீட்டர் ஆழத்தில் ஏறத்தாழ 400 மனித கூடுகளை கண்டெடுத்தார்கள். அடையாளமின்றி இப்படி மர்மமாக புதைக்கப்பட்டவர்கள் யாராக இருக்கக் கூடும்.

இச்சம்பவம் தொடர்பாக வாசிங்டனின் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவினர் மேற்பணியினை எடுத்துக் கொண்டார்கள். இவ்வாராய்ச்சி சுமார் 9 ஆண்டுகள் நடத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவுகள் சில திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டன.

ஆரம்பத்தில் கூறப்பட்ட அக்கட்டுமான பகுதியானது பல காங்களுக்கு முன் மயான பகுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. கட்டுமான பணிக்காக எடுத்துக் கொண்டது சுமார் 5 ஹக்டர் நிலபரப்பு. அதாவது மயானம் எனக் கூறப்படும் இடத்தின் ஒரு பகுதி மட்டுமே. மொத்தமாக அங்கு எடுக்கப்பட்ட எழும்புக் கூடுகளின் எண்ணிக்கை சுமார் 10000 முதல் 20000 வரையிலும் அடங்கும்.

மருத்துவ பரிசோதனையின் போது எழும்புக்கூடுகளில் முதுகுத்தண்டு பகுதிகளில் விரிசல் கண்டும், எழும்புகள் உடைந்தும் இருந்தது. கடுமையான, பலமான அல்லது கடினமான வேலைகளில் ஈடுபட்டதால் இப்பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக காரணம் காட்டப்படுகிறது. மேலும் நோய்வாய்பட்டவரின் எண்ணிக்கையும் பட்டினியால் வாடி இறந்தோரும் கணிசமாக இருந்திருக்கிறது. 40 விழுக்காட்டிக்குற்கும் அதிகமான எழும்புக்கூடுகள் 12 வயதிற்கு குறைவானவர்களுடையது என்பது இங்கு வருந்ததக்கச் செய்தியாக அமைகிறது.

சரித்திர சுவடுகள் புரட்டப்பட்டன. ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தினர் அவை ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகள் புதைக்கப்பட்ட இடமென கண்டறிந்தார்கள். த்ரினிட்டி Trinity" தேவாலைய கட்டுமான பணிகளுக்கும், எதிரிகளிடம் இருந்து தாக்குதலை குறைக்கும் பொருட்டு தடுப்புச் சுவர்களை கட்டும் பணிக்கும் அவர்கள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

ஃப்பியூடல் சிஸ்டத்தின் அரசியல் மிகவும் குழப்பகரமானது. இதில் அரசர்களுக்கும் தேவாலய பாதிரியார்களுக்கும் ஏற்படும் பிணக்குகளால் அரசியல் மாற்றங்கள் வெகு எளிதாக நடைபெற்று வந்தன. நாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய அங்கமென அரசினால் தேவாலயங்கள் நிறுவப்பட்டு வந்தன. இதன் கட்டுப்பாடுகள் முழுக்க முழுக்க தேவாலய பிரபுக்களிடையே இருந்ததால் சில பல பிரச்சனைகள் நடந்தபடி இருந்தன. சில கட்டுப்பாகளின் வழி தேவலயம் நில அபகரிப்பு செய்யும் யுக்திகளையும் வைத்திருந்தன. அதை இங்கு குறிப்பிடுவது செய்தியை நீட்டித்துவிடும்.

1712-ஆம் ஆண்டு அடிமைகள் Trinity தேவாலயத்திற்கு சொந்தமான மயானப் பகுதியில் அடக்கம் செய்யக் கூடாது எனும் உத்தரவை பிறப்பித்தது. அதனால் கொல்லப்பட்ட அடிமைகளும் கொடுமையினால் இறந்தோரும் ஒரு பிரத்தியோக இடத்தில் புதைக்கப்பட்டனர். மணற் பரப்பினால் அவ்விடம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

1865-ஆம் ஆண்டு அமேரிக்கா அடிமைகள் வியாபாரத்தை தனது நாட்டில் தடை செய்தது. இத்தடை விதிகளால் மேற்கத்தியர்கள் தங்களது அடிமை வியாபரத்தை நிறுத்திக் கொண்டவர்களாக தெரியவில்லை.

ஆராய்ச்சி தொடர்ந்தாற் போல் சினிகல் நாட்டிற்கு பயணிக்கிறது. கோரி சினிகல் நாட்டில் அமைந்திருக்கும் சிறிய தீவு. 1444-ஆம் ஆண்டு முதற் கொண்டு இங்கு அடிமைகள் வியாபாரம் தொடங்கியதாக கூறப்படுகிறது. அச்சமயம் கோரி தீவு போர்த்துகீசியர்களின் ஆளுமையில் இருந்திருக்கிறது.

பிடிபடும் அடிமைகள் அவர்கள் உடைமைகள், வீடு, நிலம் என அனைத்தையும் இம்முதலாளி வர்கத்தினரிடையே இழக்க நேரிடும். எதிர்ப்பவர்களை கொன்று வீட்டோடு எரித்துவிடுவார்கள். 1544-ஆம் ஆண்டு முதல் அடிமைகள் கொள்முதல் மையத்தை போர்த்துகீசியர்கள் கோரி தீவில் நிறுவினார்கள். வெளிநாடுகளில் விற்பனை செய்வதற்கு முன் அடிமைகள் இங்கு கொண்டு வந்து சேர்க்கப்படுவார்கள்.

இதன் தொடர்பாக கோங்கோ நாட்டின் அரசர் போர்த்துகீசிய ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார். 18-ஆம் தேதி அக்டோபர் மாதம் 1526-ஆண்டில் எழுதபட்ட கடிதம் அது. அதில் தனது நாட்டில் இருந்து போர்த்துகீசிய ஆட்சியாளர்களை வெளியேறும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடிமை வியாபரத்தை முற்றிலும் ஒழிக்கவும், நாட்டு மக்கள் அடிமை தொழிலினால் வெகுவாக குறைந்து போய்விட்டதாகவும் அவர் கோடிட்டுள்ளார். இப்படி செய்வதில் கிருஸ்துவ மதம் சார்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது வேதனையளிப்பதாகவும். அப்படி இருப்போர் உலகெங்கினும் மதப் பிரச்சாரம் செய்வதில் நன்மை இல்லை என்பதனையும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து 1588-ஆம் ஆண்டு துர்க்கியும், அதன் பின் 1677 முதல் 1815-ஆம் ஆண்டு வரையிலும் அத்தீவு பிரான்சு மற்றும் ஆங்கிலேயர்களாலும் ஆட்சி செய்யப்பட்டிருக்கிறது. வெளிநாட்டவரின் ஆதிக்கத்தில் இருந்த வரையிலும் கோரி தீவு அடிமைகளின் பட்டுவாடா இடமாகவே விளங்கியது.

இப்படி அடிமைகளாக கொண்டு வரப்பட்டவர்களின் பெரும்பாலானோர் அந்நாட்டின் பூர்வகுடி மக்களென அறியப்படுகிறார்கள். கணவன், மனைவி, பிள்ளைகளென அனைவரும் மொத்தமாக அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்கள் நிர்வாணமாகவும் அரை நிர்மாணமாகவும் 3 மீட்டர் அளவைக் கொண்ட அறையினுள் ஒவ்வொன்றிலும் 30 பேர்கள் வரையிலும் திணிக்கப்படுவார்கள்.

சுவாசத்திற்கு சிறியதொரு ஓட்டை வழியாக காற்று வரவும், கழிவு அகற்ற இடம் மற்றும், நாள் விகிதத்திற்கு ஒரு வேளை சாப்பாடு எனக் கொடுக்கப்பட்டும். இதனால் பலரும் ஊட்டச்சத்தின்றி நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார்கள். அச்சமயங்களில் கோரி தீவில் கடுமையான நோய்கள் பரவவும் செய்தன.

சிறு பிள்ளைகள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு தாய்மார்கள் கூண்டிற்கு வெளியே விடப்படுவார்கள். அவர்கள் பிள்ளைகள் அழுவதை மட்டுமே கண்டிருக்க முடியும். அதிகமான பிள்ளைகள் உணவு பிரச்சனையால் மரணமடைந்தார்கள். நிதி கட்டுப்பாட்டை குறைக்கும் பொருட்டு ஆட்சியாளர்கள் குழந்தைகளை கொன்றுவிடுவதும் உண்டு.

அடிமைகளாக்கப்பட்டவர்களின் பிணங்கள் கடலில் சுறாவுக்கு இறையாக தூக்கி எறியப்படும். வெள்ளையர்களுக்கு சுறாவுக்கு இறையிடுவது ஒரு பொழுது போக்கான நிகழ்வு என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எஞ்சியவர்கள் கியூபா, கொரேபியன் தீவுகள், பிரேசில், அமேரிக்கா என பல நாடுகளுக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அனுப்பப்படுவார்கள். ஒன்றரை மீட்டர் அகளமும் 20 மீட்டர் நீளமும் கொண்ட கப்பலில் இவர்கள் அடைத்து ஏற்றிச் செல்லப்படுவார்கள். பயணம் சுமார் மூன்று முதல் நான்கு மாத காலத்தை எடுத்துக் கொள்ளும். கப்பலில் இறந்து போனவர்களை பரபட்சமின்றி கடலில் தூக்கி எறிந்துவிட்டு பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருப்பார்கள்.

இலக்குகளை அடைந்தவுடன் அடிமைகள் வெள்ளையர்களுக்கு விற்பனை செய்யப்படுவார்கள். தங்கள் செல்வ வசதிகளுக்கு ஏற்றபடி அடிமைகள் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வாங்கிக் கொள்ளப்படுவார்கள். எஜமானர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கும் அப்பின் துளிப்பகுதி கூட அடிமைகளுக்கு மறுக்கப்பட ஒன்றென அவர்களை நடத்துவார்கள். இப்படி வாங்கப்படும் அடிமைகளில் வலுத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்பது இங்கு விதியாக அமைந்திருந்தது.

பிரான்சு நாடு நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்த சமயம், ‘சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம்’ என்பதே அவர்களின் புரட்சி முழக்கமாக இருந்தது. இருப்பினும் நெப்போலியனின் ஆட்சியின் கீழ் அதிகமான கருப்பின அடிமைகள் இருந்திருக்கவே செய்கிறார்கள். தமது வல்லிய படைகளை நிலைகொள்ள அடிமைகள் நெப்போலியன் இராணுவத்தினருக்கு தேவைபட்டனர். ஆக மொத்தத்தில் புரட்சி முழக்கம் என்பது பெயருக்கு மட்டுமே இருந்ததே அன்றி முற்றிலுமாக அடிமைத் தனத்தை அகற்றும் செயல்பாடுகள் அங்கு நடந்தேறவில்லை என்பதே உண்மை.

1848-ஆம் ஆண்டு புதிய ஆட்சி மாற்றத்தின் போது கோரி தீவு அடிமை வியாபாரத்தில் இருந்து விடுபட்டது. அடிமைகளின் சேகரிப்பு மையங்கள் அகற்றப்பட்டன. தற்சமயம் அத்தீவினில் ஓரே ஒரு சீரானா மையம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அது துர்க்கியர்களின் ஆட்சியின் போது 1776-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வரலாற்று குறிப்புகள் இது வரையிலும் கோரி தீவில் 3கோடி அடிமைகள் வியாபார பொருட்களாக்கப்பட்டுள்ளதாக காட்டுகின்றன. அத்தீவையும் அதன் ஆதார பத்திரங்களும் UNESCOவினால் பாதுகாக்க வேண்டிய சரித்திர சுவடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக 1991-ஆம் அண்டு நியூயார்க்கில் நடந்த ஆய்வுகள் பல செய்திகளை வெளியிட்டுள்ளது. நாகரீகமடைந்த, தான் உயர்ந்தவன், புனிதமானவன் என்றும் கடவுளின் ஆசி பெற்றவன் என்றும் கூறி கொள்ளும் ஓர் இனத்தினர், இழிவானவர்களென்றும், தீய ஆன்மா கொண்ட கருப்பு சாத்தான்களென்றும் கருதும் அறியாமை குறைந்த மற்றோரு இனத்திடையே மேற்கொண்ட ஆதிகங்கள் இன்னும் பல இடங்களின் நம் கண்களுக்கு தெரியாமலே உறக்கிக் கொண்டிருக்கிறது.

அடிமை வியாபாரங்கள் இந்நாட்களில் இல்லாமல் போய்விடவில்லை. திரவியத் தேடலில் அகப்பட்டோர் இடம் அறியாது சிக்கிக் கொண்டு படும் அல்லல்கள் பலவிடங்களிலும் எழுந்திருக்கின்றன. வலுக்கட்டாயமான பலியல் தொழில், சிறுவர் தொழிலாளார்கள், குறைந்த வருமானத்தில் வேலை, காட்டுபாடற்ற வேலை நேரம் என சிக்கல்கள் தொடர்ந்து கொண்டிருக்கவே செய்கிறது.

13 comments:

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

நீண்ட ஆய்விற்குப் பின்னர் எழுதப்பட்ட கட்டுரை என நினைக்கிறேன். பல்வேறு தகவல்கள் தேடிப்பிடித்து இடப்பட்ட இடுகை.

படிக்கும் போதே மனம் வலிக்கிறது.

நன்று நல்வாழ்த்துகள் விக்கி

goma said...

மனதை கலங்கடிக்கும் ஆய்வு....இது போல் இன்னும் எத்தனை விஷயங்கள் புதைந்து கிடக்கின்றனவோ..

pudugaithendral said...

மனதை கலங்கடிக்கும் ஆய்வு....இது போல் இன்னும் எத்தனை விஷயங்கள் புதைந்து கிடக்கின்றனவோ..//

கணத்த மனதுடன் வழிமொழிகிறேன்

பனித்துளி சங்கர் said...

ஆஹா அற்புதமான தொகுப்பு . வாழ்த்துக்கள் நண்பரே .

Unknown said...

//நாகரீகமடைந்த, தான் உயர்ந்தவன், புனிதமானவன் என்றும் கடவுளின் ஆசி பெற்றவன் என்றும் கூறி கொள்ளும் ஓர் இனத்தினர், இழிவானவர்களென்றும், தீய ஆன்மா கொண்ட கருப்பு சாத்தான்களென்றும் கருதும் அறியாமை குறைந்த மற்றோரு இனத்திடையே மேற்கொண்ட ஆதிகங்கள் இன்னும் பல இடங்களின் நம் கண்களுக்கு தெரியாமலே உறக்கிக் கொண்டிருக்கிறது.
//

இது யாரைப்பற்றி நீங்கள் எழுதுனீர்கள்

கோவி.கண்ணன் said...

//அடிமை வியாபாரங்கள் இந்நாட்களில் இல்லாமல் போய்விடவில்லை. திரவியத் தேடலில் அகப்பட்டோர் இடம் அறியாது சிக்கிக் கொண்டு படும் அல்லல்கள் பலவிடங்களிலும் எழுந்திருக்கின்றன.//

அடிமை வியாபாரம் இப்போது படு டீசண்ட், அதற்கு ஆங்கிலத்தில் பாடி ஷாப்பிங் என்ற பெயரும் உண்டு

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

நன்றி ஐயா

@ கோமா

நன்றி...

@ புதுகை தென்றல்

நன்றி.

@ சங்கர்

நன்றி.

@ ஜெயசங்கர்

நான் பொதுபடையாகவே எழுதி இருக்கின்றேன். இந்த உதாரணம் மேல்மட்டம் கீழ்மட்டம் எனும் பிரிவு நிலை கொண்ட எல்லா இடங்களிலும் காண முடியும்.

@ கோவி.கண்ணன்

பாடி ஷார்பிங் என்றால் பாலியல் தொழிலை குறிப்பிடுகிறீர்களா அண்ணா?

Kalaiyarasan said...

மீண்டும் இரை மீட்கப்பட வேண்டிய பதிவு. இப்போதெல்லாம் வெள்ளையர்கள் அடிமைகளை பிடித்து செல்ல வேண்டிய அவசியமில்லை. பலர் தாங்களாகவே மேற்குலக நாடுகளுக்கு சென்று அடிமை வேலை செய்கிறார்கள். இது உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கட்டம். ஒரு சிறு திருத்தம்: senegal என்ற நாட்டின் பெயரை செனெகல் என்று உச்சரிக்க வேண்டும்.

Tamilvanan said...

அடிமையாக‌ உள்ள‌ன‌.

//அடிமை வியாபாரங்கள் இந்நாட்களில் இல்லாமல் போய்விடவில்லை.//

ம‌னித‌ நாக‌ரீக‌ம் முழுமை பெற‌ இன்னும் ஆயிர‌ம் ஆண்டுக‌ள் ஆகும் போலிருக்கிற‌து.ந‌ல்ல‌ ப‌திவு.

butterfly Surya said...

அவசியமான பதிவு.

நிறைய தகவல்கள்.

நன்றி.

மின்னுது மின்னல் said...

நல்ல கட்டுரை

உங்கள் உழைப்பு தெரிகிறது

கார்த்தியாணி said...

சஞ்சிக்கூலிகளாக இந்த நாட்டிற்கு வந்த நம் முன்னோர்கள் கூட இதே மாதிரியான கொடுமைகளை அனுபவித்துள்ளனர்....அவை நம் நாட்டின் சரித்திரத்திலிந்து அழிக்கப்பட்டிவிட்டது... நாம்மில் பலர் நம் இனத்தின் வரலாறே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...இது போன்ற ஆதரப்பூர்வமான பதிவுகள் நம் இனத்திற்கு மிகவும் அவசியம் தோழரே1 உங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கின்றேன்.......உங்கள் முயற்சி மென்மேலும் தொடர என் வாழ்த்துகள் தோழரே!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கலையரசன்

நன்றி

@ தமிழ்வாணன்

நன்றி

@ சூரியா

நன்றி

@ மின்னல்

நன்றி

@க் கார்த்தியாணி

நன்றி