Friday, September 25, 2009

எனக்கு சில அடிமைகள் வேண்டும்

அச்சமயம் எனக்கு 25 வயது இருக்கலாம். வாழ்க்கை இயந்திரத்தை விட வேகமாக‌ ஓடிக் கொண்டு இருந்த பொழுது இக்கதை நடந்தது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 2518-ஆம் ஆண்டு நடந்த கதை. 2012ல் பூமி அழிந்து போய்விடவில்லையா என கேள்வி கேட்க நினைப்பவர்கள் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரவும். அது வரை நான் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

எங்கே விட்டேன்... ஆம், 25 வயதாக இருந்த போது ஒரு ஆரோக்கிய உணவு உற்பத்தி நிறுவனத்தில் 'ரிசர்ச் & டெவெலப்மெண்ட்' டிப்பார்ட்மெண்டில் ஆராய்ச்சியாளனாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். நான் வேலை செய்த பகுதியில் மொத்தம் 4 பேர். நான், நளினா மேலும் 2 ரோபோக்கள்.

"மிஸ்டர் பாரி, 'அல்பேர்ட்டோ' கம்பேனி வெளியீடு செய்திருக்கும் இந்த ஆரோக்கியா மாத்திரையால் நமது 'ப்ரோடாக்' பாதிக்கப்படலாம்னு 'பாஸ்' மிகவும் கவலைபடுவதை போல் இருக்கிறது. நமது வர்க்கிங் ப்போகிரஸ் தொடர்பாக அவர் திருப்தி அடைந்ததாக தெரிய வில்லையே.."

மார்கெட்டிங் போட்டிகள் உச்ச நிலையில் இருந்த சமயம் அது. ஒரு நிறுவனத்தின்
தயாரிப்பை மற்றொரு நிறுவனம் தாக்கிப் பேச முடியும். வித்தியாசங்களை காட்டும் முறையில் பல நிறுவனங்கள் தங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருந்தன.

எங்களுடைய வேலை மற்ற நிறுவனங்களின் வெளியீடுகளை ஆய்வு செய்து அதன் குறைகளை பட்டியலிட்டு விளம்பரத் துறைக்குக் கொடுப்பது. இந்தப் பகுதியில் வேலை செய்யும் போது இரகசியம் காப்பது மிக முக்கியமாக இருந்தது. கண்டறியபட்ட குறைபாடுகளை எதிராளிகள் விரைவாகத் தெரிந்து கொண்டால் அதை தகர்த்தெரியும் வகையில் விளம்பரம் தயாரித்துவிடுவார்கள்.

நளினாவை பற்றி சொல்ல மறந்தேன். நளினா எனக்கு ஜூனியர். படபடவென பேசுவாள். பார்த்தாலே பத்திக்கொள்ளும் அழகு. இப்படி நிறைய சொல்லலாம். பெரிய பெரிய விசயங்கள் அவளிடம் இருந்தன என சுருக்கமாகவும் சொல்லலாம்.

"மிஸ்.நளினா, நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொள்கிறேன். நான் மிகவும் திறமையானவன். என்னை உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்".

" மன்னிக்கனும். இப்படி ஒரு கேவல‌மான 'அப்ரோச்' என் வாழ்க்கையில நான்
எதிர்ப்பார்க்கலை......" என அவள் ஆரம்பித்து பேசிக் கொண்டு போன மறுப்பு
அறிக்கையால் மனம் உடைந்து போனேன். எழு நாட்களுக்கு வருடாந்திர ஓய்வு எடுத்துக் கொண்டு ராக்கெட் பிடித்து செவ்வாய்க் கிரகம் சென்று என் நண்பனை சந்தித்து வந்தேன். அவனோடு அமுத பானம் அருந்தி ஆனந்தம் அடைந்தேன். கவலைகளை தெளிவித்துக் கொண்டு வேலைக்கு திரும்பினேன்.

அன்று மேலிடத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. ரோபோக்களை ப்ரோகிரமிங் வழி ஆப்டேட் செய்தேன். கடைசி நிமிட குறிப்புகளை ரிப்போட் எடுத்துக் கொண்டு
மேலதிகாரியை சந்திக்க கிளம்பினேன்.

"உங்கள் செயல்பாட்டில் சுனக்கம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் கருதுகிறது. நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நீங்கள் திருப்திபடுத்த தவறி இருக்கிறீர்கள். உங்கள் ஆய்வுகளின் தொய்வு நிலை காரணமாக விளம்பர துரையின் வீரியம் குறைந்துள்ளது. மக்களின் கவனம் புதிய வெளியீடுகளின் பக்கம் திரும்பி இருக்கிறது. மெத்தனப் போக்கு, கவனக் குறைவு, சோம்பல் என இதை எப்படி வேண்டுமானாலும் அடையாள‌ப்படுத்திக் கூற முடியும். நிர்வாகம் உங்களை எச்சரிக்கை செய்கிறது. உங்களை மேம்படுத்திக் கொள்ள தகுந்த நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போது நீங்கள் போகலாம்".

அன்று மித மிஞ்சிய மன வருதத்துடன் வீடு திரும்பினேன். அலுவலகக் கட்டிடத்திலேயே வீடு இருந்தது. வீட்டுக்குப் போக மூன்று கிலோ மீட்டர் உயரம் பயணிக்க வேண்டும். குளித்துவிட்டு வந்த போது 3 புதிய தகவல்கள் உள்ளதாக தபால் பெட்டி அறிவிப்பு செய்தது.

அனைத்தையும் தெரிவு செய்க எனும் பச்சை பொத்தானை அழுத்தினேன்.
தகவல் ஒன்று:
"பாரி, அம்மா பேசுகிறேன். எப்போது வீட்டுக்கு வரப் போகிறாய். உன‌து திருமணம் சம்பந்தமாக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துவிட்டாயா ? உனது திருமண வயது காலாவதியாக இன்னும் 3 வருடங்களே எஞ்சியுள்ளன என்பதை கவனத்தில் கொண்டாயா...?"
"ஸ்கீப்", எனது ஒலி கட்டளையை ஏற்றுக் கொண்டு அடுத்த தகவலுக்கு தாவியது.
தகவல் இரண்டு:
"வணக்கம். திரு.பாரிதாசன் அவர்களுக்கு. கரு: செவ்வாய் கிரகத்தில் குடியுரிமை விண்ணப்பம். செவ்வாய் கிரகத்தில் குடியுரிமைக்கான விண்ணப்ப கடிதம் கிடைக்கப் பெற்றோம். எங்கள் அரசிடம் உள்ள தங்களின் நம்பிக்கைக்கு நன்றி. குடியுரிமை தேர்வுக்கான திகதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும். நன்றி."
தகவல் மூன்று:
உங்க திறமைகளை பத்த வைக்கனுமா?
அடுத்தவங்கள அசர வைக்கனுமா?
இன்றே வாங்குங்கள் 'அல்பேர்ட்டோ' நிறுவனத்தின் 'பிரெண்டோமினோ' .
ஒரு மடக்கு தண்ணி போதும், ஒரு சொடுக்குல உங்க வாழ்க்கையே மாற்றியமைத்திடும் ஓர் உன்ன‌த கண்டுபிடிப்பு. இப்போதே வாங்குங்கள் இன்றே பயன்பெறுங்கள்.
இரண்டாம் தகவலை மட்டும் எனது கணக்குப் பெட்டியில் சேமித்து வைத்துக் கொண்டு படுக்கச் சென்றேன். எனது கையடக்கக் கணினியை படுத்திருந்ததபடி வெறுத்து நோக்கினேன். ஏனோ கைவிரல்கள் சடசடவென 'அல்பேர்ட்டோ' நிறுவனத்தின் 'பிரெண்டோமினோ' எனும் வார்த்தைகளைத் தட்டச்சு செய்து தேட ஆரம்பித்தது.
சுவாரசிய விளம்பரம். மேலும் தெரிந்து கொள்ள இன்றே அழைக்கவும் என்றிருந்த எண்களை என் கணினியில் அழுத்தினேன். தொடர்பு கிடைத்தது.
முகம் முழுக்க பல் இலித்து ஓர் அழகிய மாடல் கணினி திரையில் தோன்றினாள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு. அவள் நிறுவனத்தின் பணியாளர் எண்ணை குறிப்பிட்டாள்.
"எங்கள் வெளியீடுகள் பற்றிய உங்களின் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி அடைகிறோம். மேலதிக தகவலுக்கு உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்" என இரசம் இழக்காத அதே சிரிப்புடன் சிற்றுரையை முடித்தாள்.
"உங்களின் 'பிரெண்டோமினோ' ப்ரொடாக் பயன்பாட்டினை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்"
"ஈசி, உங்களுக்கு தேவையான சிந்தனையை எவ்வளவு விரைவாக அடையனும்னு நினைக்கிறிங்களோ அதைவிட பலமடங்கு விரைவாக அடைய உங்களுக்கு இது உதவியாக இருக்கும்".
"உங்கள் விளம்பரத்தில் கூட இத பற்றி எழுதி இருக்கிங்க, பட் எனக்கு சரியாக புரியவில்லை பெண்ணே...".
"சரி. ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு சங்க கால பாடல்களை எல்லாம்..."
"இல்லை... வேற உதாரணம் கொடுங்களேன்... மனம், லவ், பீலிங்ஸ், இப்படி ஏதாவது..."
"மனிதர்களின் மனம் தொடர்பான ஒரு செய்தியை எடுத்துக்கலாம். 'எமோஷனல் இண்டிலிஜன்ஸ்' என்ற சித்தாந்த்தை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?"
"இல்லை..."
"சில நூற்றாண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தம் இது. மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது. எல்லா மனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமா அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காண முடியுமா?"
"பாடம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே. யூ சில்லி கர்ல். கொஞ்சம் புரியும் படியாக சொல்லேன்".
"தர‌ மேம்பாட்டை துரிதப் படுத்த இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதினை நினைவு படுத்த விரும்புகிறேன்".
"ஓஹ்... சாரி... மேலும் விளக்கப்படுத்துங்கள் பெண்ணே..."
"சிந்தனை பூர்வமான உணர்ச்சி, உணர்ச்சி பூர்வமான சிந்தனை, என மனிதர்களின் சிந்தனையை பாகுபடுத்த முடியும்".
"அப்படியா?"
"ஆமாம்... சிந்தனை பூர்வமான உணர்ச்சி நெடுங்கால நோக்கு கொண்டது, உணர்ச்சி
பூர்வமான சிந்தனை குறுகிய கால அல்லது உடனடி தீர்வில் தொடர்புடையது".
"எப்படி..."
"ஒருவர் உங்களை அடித்துவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்".
"எதிர் தாக்குதல் செய்வேன்".
"இது உணர்ச்சி பூர்வமான சிந்தனை. உங்கள் சிந்தனை உடனடி தீர்வை நாடுகிறது என அர்த்தம்".
"சிந்தனை பூர்வ உணர்ச்சி கொண்டவன் எப்படி செயல்படுவான்?"
"அவனை அடிக்க மாட்டான், நட்பு பாராட்டுவான், ஆனால் நெடுங்கால நோக்கம் கொண்டு அவனை தாக்குதல் செய்வான், கஷடங்கள் கொடுப்பான், அதில் அவன் சம்பந்தப்பட்டிருக்காதபடி இருப்பான். இது ஒரு நெகட்டிவ் அப்ரோச். இந்த சித்தாந்தம் நல்ல காரியங்களுக்கும் பயன்படும்'.
"புரிகிறது... புரிகிறது... நீங்கள் நெகடிவ் முன்னுதாரணத்தை எடுத்துரைக்க காரணம்...?"
"இதுவும் மூளை சம்பந்தமான விசயம்தான்... தவறான விசயங்களை உடனடியாக தெரிவு செய்து கொள்ளும் பழக்கம்..." கண்களை சிமிட்டி தனது இரப்பர் சிரிப்பை உதிர்த்தாள்.
"ஓ... இட்ஸ் இன்ட்ரஸ்டிங்... இதை உபயோகிக்கும் முறையை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்..."
"ஈஸி.... இதற்காக பிரத்தியோகமாக பானம் தாயாரிக்கும் இயந்திரத்தின் வழி உங்களுக்கு வேண்டியதை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்..."
"நான் உங்கள் வியாபார இடம் வந்து இதை பெற்றுக் கொள்ள விருப்பப்படுகிறேன்". எனது ஆர்வாம் மேலோங்கியது. வேண்டிய தகவல்களை வாங்கிக் கொண்டு அவ்விடம் விரைந்தேன்.
அதே பெண். கண்ணாடியில் செதுக்கியதை போல் அவ்விடம் இருக்கக் கண்டேன். இரம்யமான அலங்கரிப்பு. சுகந்த மணம் என் சுவாசப்பையை நிறப்பிக் கொண்டிருந்தது. அந்நிறுவனத்தின் பல வெளியீடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
"நான் அந்த இயந்திரத்தைக் காண வேண்டுமே..."
"ஓ... நிச்சயமாக... எங்களின் சிறந்த கண்டுபிடிப்பாக இதை அரசு அறிவிப்பு செய்துள்ளது", முழங்கை அளவு இருந்த அந்த இயந்திரம் பிரத்தியோக ஜோடிப்புகளுடன் இருந்தது.
"இட்ஸ் நைஸ்..."
"உங்களுக்கு தேவையான பானத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சுவையுடன் தயார் செய்து அருந்திக் கொள்ளலாம். சாக்லட், ச்டாபெரி, புலுபேரி, மில்க், கோஃபி, இப்படி பல சுவைகள் இருக்கின்றன."
"இந்த பொத்தான்கள்..."
"இவை உங்களின் அறிவாற்றலை பெறுக்கிக் கொள்வதற்கான பிரிவுகள். இது வரை மொத்தம்12 பிரிவுகளாக துரை சார்ந்த தகவல்களோடு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. அறிவியல், சமூகம், பொருளாதாரம், விளையாட்டு, சரித்திரம்.... இப்படி இன்னும் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா விசயங்கள்...."
"ஓ..."
"நீங்கள் அறிவியல் துறைக்கான பொத்தானை தேர்ந்தேடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், அதன் உப பிரிவுகள் நூற்றுக் கணக்கில் இந்த சின்ன திரையில் வெளிபடும். அதில் உங்களுக்கான பிரிவை விரல் நுனியில் அழுத்தி அதற்கான பானத்தை தேர்வு செய்யலாம்..." பானம் எடுத்துக் கொள்ள கோப்பை வைக்கும் இடத்திற்கு அருகில் இருந்த திரையை காண்பித்தாள்.
"டெக்னிக்கல் கோளாறு ஏற்பட்டால்..."
"பயனிட்டாளர்களின் பாதுகாப்பே எங்களின் முக்கிய கோட்பாடு. இதன் கணினி செயல்பாடுகள் மெயின் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டு நீங்கள் பயன்படுத்தும் சமயங்களில் சிரத்தை எடுத்து கவனிக்கப்படும். தர மேம்பாட்டின் பொருட்டு துறை சார்ந்த விசய‌ங்களும் மேம்படுத்தப்பட்டபடி இருக்கும். கவலை வேண்டாம்".
"இது என்ன விலை பெண்ணே?"
"மேலும் ஒன்றை நீங்கள் அறிந்துக் கொள்வது நலம். முதல் இயக்கத்திற்காக உங்களின் மூளையின் செயல்பாட்டுத் திறனை நான் பரிசோதித்து மெய்ன் சிஸ்டத்தின் நினைவகத்தில் பதிவு செய்ய வேண்டும்".
"ஓ எஸ்... ஐம் ரெடி..."
"இங்கே படுத்துக் கொள்ளுங்கள்"
அவள் நெறுங்கினாள். என்னை சரிபடுத்துகையில் அவளின் ஸ்பரிசத்தில் சிலிர்த்தேன். சரித்திரத்தில் அடிமைகள் இருந்ததாக படித்திருக்கிறேன். இவள் என்
அடிமையாகிவிட்டால் நன்றக இருக்கும் அல்லவா. நான் என்னை மெய் மறக்க ஆரம்பித்தேன். அவள் என் மீது படுத்திருப்பதாக உணர்ந்தேன்...
அடுத்த பாகத்தில் நிறைவடையும்...

21 comments:

cheena (சீனா) said...

அறிவியல் முன்னேற்றம் - கற்பனை அபாரம் - தொடர்க விக்கி

இச்சம்பவங்கள் இயல்பாக நடக்கும் 2025ல் - ஐயமே இல்லை

நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்

எங்கே தொடரும் போட வேண்டும் எனத் தெரிந்திருக்கிறது

Athisha said...

சூப்பர் மச்சி..!

மனோவியம் said...

wow விக்கி!. அற்புதம்.இரண்டு வார ஒய்வுக்கு பிறகு ஒப்பாற கதை.வர்ணிக்க வார்த்தைகளை இல்லை.ந்ண்பரே,வாழ்க உங்கள் சிந்தனை திறன்.அருமையான படைப்பு.அற்புதம்! அற்புதம்! அற்புதம்!

மனோவியம் said...

//அலுவலகக் கட்டிடத்திலேயே வீடு இருந்தது. வீட்டுக்குப் போக மூன்று கிலோ மீட்டர் உயரம் பயணிக்க வேண்டும்.// @@//உனது திருமண வயது காலாவதியாக இன்னும் 3 வருடங்களே எஞ்சியுள்ளன என்பதை கவனத்தில் கொண்டாயா...?" "ஸ்கீப்",//அழகிய மொழி ந்டை.உயிறோறமான கதை அமைப்பு.கதைக்கு ஏற்றார் போல் எளிய ஆங்கில உச்ச்ரிப்பு.வாழ்க்கை சிந்தனை.வருங்கால இயல்.விரசம் இல்லை.வீவேகம் தெரிகிறது உங்கள் கதையில்.

வால்பையன் said...

//பெரிய பெரிய விசயங்கள் அவளிடம் இருந்தன என சுருக்கமாகவும் சொல்லலாம்.//


சுஜாதா பாணி இருக்கே!

வால்பையன் said...

இது தொடர்கதையா!

நல்லாப்போகுது தல

Prabhu said...

நல்லாருக்கு!

சுஜாதா ஸ்டைலோ!

A N A N T H E N said...

//2012ல் பூமி அழிந்து போய்விடவில்லையா என கேள்வி கேட்க நினைப்பவர்கள் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரவும்//

டீ குடிச்சிட்டு அப்புரமா வரேன்

A N A N T H E N said...

//நளினாவை பற்றி சொல்ல மறந்தேன். நளினா எனக்கு ஜூனியர். படபடவென பேசுவாள்.//
நளினாத்தான் தெரியுமே, பாரி கலியாணத்துக்கு அப்புறமும் ஏமாத்திக்கிட்டு இருக்கிற பாவ பட்ட ஜென்மம்! அதுவும் இதுவும் ஒரே கதை தானே?????

A N A N T H E N said...

//பாடம் ரொம்ப கஷ்டமாக இருக்கிறதே. யூ சில்லி கர்ல். கொஞ்சம் புரியும் படியாக சொல்லேன்". "தர‌ மேம்பாட்டை துரிதப் படுத்த இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதினை நினைவு படுத்த விரும்புகிறேன்". "//

அடிக்கடி கஸ்டமர் செர்வீசுக்கு போன் பண்ணி திட்டு வாங்கின அனுபவமா

A N A N T H E N said...

//சரித்திரத்தில் அடிமைகள் இருந்ததாக படித்திருக்கிறேன். இவள் என்
அடிமையாகிவிட்டால் நன்றக இருக்கும் அல்லவா. நான் என்னை மெய் மறக்க ஆரம்பித்தேன்.//

இப்போத்தான் கதைக்கே வந்திருக்கிங்களா? சரி எழுதுங்க... படிக்க்கிறோம்!

(செவ்வாய் கிரகம், குடியுரிமைன்னு கற்பன மிரளுது... பலே!)

A N A N T H E N said...

//" மன்னிக்கனும். இப்படி ஒரு கேவல‌மான 'அப்ரோச்' என் வாழ்க்கையில நான்
எதிர்ப்பார்க்கலை......"//

Nalina cekap!!!!! சொந்த அனுபவம் இல்லையே?

A N A N T H E N said...

//"சிந்தனை பூர்வமான உணர்ச்சி, உணர்ச்சி பூர்வமான சிந்தனை, என மனிதர்களின் சிந்தனையை பாகுபடுத்த முடியும்". //

எங்கம்மா அப்பவே சொன்னாங்க, ரொம்ப படிச்ச புள்ளைங்க கிட்ட பழகாதேன்னு!

Unknown said...

// மொத்தம் 4 பேர். நான், நளினா மேலும் 2 ரோபோக்கள். //


நளினா.... வாவ்வ்..... ச்வீட் நேம்.....!! அவிங்குளுக்கு என்ன வயசு இருக்கும்....???






// மார்கெட்டிங் போட்டிகள் உச்ச நிலையில் இருந்த சமயம் அது. //

இன்னுமா பண்ணி காய்ச்சல் ஒழியல........???






// படபடவென பேசுவாள். //

அவ என்ன காக்கா ரெக்கையா... படபடன்னு பேசுறதுக்கு......??






// பார்த்தாலே பத்திக்கொள்ளும் அழகு. //

மண்ணெண்ணையா....? கிருஷ்னாயிலா...? அட ரெண்டும் ஒன்னுதானே......!!!






// பெரிய பெரிய விசயங்கள் அவளிடம் இருந்தன என சுருக்கமாகவும் சொல்லலாம். //


நீங்க பாக்கியராஜ் சாருகிட்ட கொஞ்ச நாளா அசிச்ட்டென்ட் டையரெக்டரா வேல பாத்த எபெக்ட்டா.....?






// நான் மிகவும் திறமையானவன். //

ம்ம்க்க்ம்ம்....!! தம்பி...!!! எங்க....!! காள மாட்ட அடக்கி காட்டு பாப்போம்...!!!







/// " மன்னிக்கனும். இப்படி ஒரு கேவல‌மான 'அப்ரோச்' என் வாழ்க்கையில நான்
எதிர்ப்பார்க்கலை......" //


எதிர்பாத்ததுதான்...!! புள்ள ரொம்ப வெவரம்....!!!






// எழு நாட்களுக்கு வருடாந்திர ஓய்வு எடுத்துக் கொண்டு ராக்கெட் பிடித்து செவ்வாய்க் கிரகம் சென்று என் நண்பனை சந்தித்து வந்தேன். //


ஏனுங் சார்.... உங்க ப்ரெண்டு செவ்வாய்க் கிரகத்துல முட்ட போண்டா... சமோசா... வித்துகிட்டு இருக்குராரா...?







// கவலைகளை தெளிவித்துக் கொண்டு வேலைக்கு திரும்பினேன். //

வரும்போது இன்டர்சிட்டியில எக்ஸ்ப்ரெஸ்ல வந்தீங்களா ....?






// அன்று மேலிடத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. //

அம்மாகிட்ட இருந்துங்களா......? ஐயாகிட்ட இருந்துங்களா....?? கட்சியில சேர போறீங்களா...?





// ஆப்டேட் செய்தேன். //


நல்லாவே " ஆப்டேட் " பன்நீருக்குறீங்க........





// அன்று மித மிஞ்சிய மன வருதத்துடன் வீடு திரும்பினேன். அலுவலகக் கட்டிடத்திலேயே வீடு இருந்தது. //


அதுக்கும் ராக்கெட்டுலதான் போவீங்களா.... ???






அட.... சாமீ... முடியல.. கத ரொம்ப தூரம்....



ஆஹா... அருமை... அழகான கதை.... ரொம்ப நல்லாருக்கு.....!! வாழ்த்துக்கள்....!!

பனித்துளி சங்கர் said...

உண்மையில் அற்புதமான சிந்தனை . என்னை மிகவும் ரசிக்க வைத்தது . வாழ்த்துக்கள் தோழரே !

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

நன்றி ஐயா... அடுத்த பாகத்தையும் படித்துவிட்டு முடிவை சொல்லவும் :)

@ அதிஷா

நன்றி மாம்ஸ்......

@ மனோகரன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ வால்பையன்

இரண்டு பாகம் மட்டுமே. கதை நீளமாகிவிட்டதால் இரு பாகமாக்கிவிட்டேன். :)

@ பப்பு

நன்றி...

@ அனந்தன் @ மேடி

ஏன் இந்த முரட்டு கும்மி... :)) சிரித்துக் கொண்டு இருக்கிறேன். மீண்டும் வருக நண்பர்களே,

@ சங்கர்

நன்றி

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

அருமையான கற்பனை.
நல்ல நடை. சரியான இடத்தில் நிறுத்திக் கதையைத் தொடருகிறீர்கள்.
பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
வாழ்த்துகள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

அருமையான கற்பனை.
நல்ல நடை. சரியான இடத்தில் நிறுத்திக் கதையைத் தொடருகிறீர்கள்.
பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
வாழ்த்துகள்.

கிரி said...

//பெரிய பெரிய விசயங்கள் அவளிடம் இருந்தன என சுருக்கமாகவும் சொல்லலாம்.//

:-)))

//வணக்கம். திரு.பாரிதாசன் அவர்களுக்கு. கரு: செவ்வாய் கிரகத்தில் குடியுரிமை விண்ணப்பம். செவ்வாய் கிரகத்தில் குடியுரிமைக்கான விண்ணப்ப கடிதம் கிடைக்கப் பெற்றோம். எங்கள் அரசிடம் உள்ள தங்களின் நம்பிக்கைக்கு நன்றி. குடியுரிமை தேர்வுக்கான திகதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும். //

சூப்பரு!

//சரித்திரத்தில் அடிமைகள் இருந்ததாக படித்திருக்கிறேன். இவள் என்
அடிமையாகிவிட்டால் நன்றக இருக்கும் அல்லவா.//

கலக்கல்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மலாக்கா முத்துகிருஷ்ணன்

நன்றி ஐயா...

@ கிரி

நன்றி...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் said...

நன்றி. அய்யா. உங்களுடைய கதையைப் படித்த பின்னர், சி.கோன் நினைவிற்கு வருகிறார். நல்ல எழுத்துகள். தொடர்க. வெல்க.