Friday, August 08, 2008

ஒலிம்பிக் போட்டி: ஓர் உலகம், ஒரு கனவோடு

1896-ஆம் ஆண்டு கிரேக்க தலைநகர் எத்தென்சில் முதல் முறையாக தொடங்கப்பட்டது தான் உலக நாடுகளின் போட்டியாளர்கள் பங்கேற்று தங்களின் திறனை வெளிபடுத்தி பதக்கங்களை குவிக்கும் ஒலிம்பிக் போட்டி.
இன்று 08.08.08 தேதி இரவு 08.08 மணிக்கு உலகமே அதிர்ந்து கவரும் வண்ணம் தொடங்க உள்ளது 29-ஆவது ஒலிம்பிக் போட்டி.

ஓர் உலகம், ஓர் கனவு எனும் சுலோகத்துடன் இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது. உலக நாடுகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட சுலோகங்களில் இருந்து மிக சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. முன்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. 1916, 1940, மற்றும் 1944 ஆகிய ஆண்டுகளில் உலகப் போர் காரணமாக இப்போட்டி நிறுத்தப்பட்டது.

இருப்பினும் இப்போட்டி கைவிடப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட்டது. தெர்ந்தெடுக்கப்படும் உலகின் சிறந்த நாடு இப்போட்டியை நடத்தும்.
1896-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டி தற்போது 29-வது தவனையை எட்டியுள்ளது. இம்முறை போட்டியை சீனா ஏற்று நடத்துகிறது.

இவ்வாண்டின் போட்டியை ஏற்று நடத்துவதற்கான தேர்தலில் தேர்வு பெற்ற பெய்ஜிங்கிற்கு பாரிஸ், ஒஸாகா, இஸ்தான்புல், டொரெண்டோ ஆகிய நகரங்கள் பெரும் போட்டியை கொடுத்தன. இருப்பினும் இருதியில் சீனாவின் பெய்ஜிங் நகரம் இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக் சுடர் ஓட்டம்:

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடத்தப்படும். உலக நாடுகளை வலம்வந்தப்பின் இச்சுடர் இறுதியில் போட்டி தொடங்கும் நாளில் உபசரனை நாட்டின் அரங்கில் ஏற்றப்படும்.
‘ஒருங்கிசையின் பயணம்’ என்ற கருப்பொருளில் உலகம் முழுவதும் வலம் வந்து. கிட்டதட்ட 130 நாட்களுக்கு நடைபெற்ற ஒலிம்பிக் சுடர் ஓட்டம் மொத்தம் 137,000 கிலோ மீட்டர் தூரமாகும். உலக நாடுகளை சுற்றி வந்த ஒலிம்பிக் சுடர் நாளை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்றப்படும்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டதிற்கான அறிகுறியாக இந்தச் சுடர் விளங்கும் என்பது குறிப்பிடதக்கது.
போட்டியின் தொடக்கம்:

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 28 போட்டிகள். 302 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. கடந்த 2004-ஆம் ஆண்டின் கிறீஸ் போட்டியை காட்டினும் ஒரு போட்டி எண்ணிக்கை இவ்வாண்டு அதிகரித்துள்ளது.

உலக நாடுகளிலிருந்து 10000 மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று பதக்கத்திற்காக போராட உள்ளனர். உலகம் முழுவதிலுமிருந்து 400 கோடி ரசிகர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை கண்டு ரசிக்க போகிறார்கள்.

பறவைகள் கூண்டு அரங்கங்கள்:

இவ்வருட ஒலிம்பிக் போட்டியை சிறப்பான முறையில் நடத்துவதற்கு பிரதான தேசிய அரங்கமான ‘பெர்ட் நெஸ்ட்’ எனப்படும் பறவைகள் கூண்டு பிரமாண்டமான விளையாட்டு அரங்கம் பெய்ஜிங்கில் கட்டப்பட்டுள்ளது.

175கோடி செலவில் கட்டப்பட்ட இந்தப் பறவைகள் கூண்டு அரங்கின் வேலைகள் கிட்டதட்ட ஆறு ஆண்டுகள் நடந்தன. இதுவரையில் ஒலிம்பிக் போட்டி கண்டிராத அரங்கமாக இது விளங்குகிறது.

258,000 சதுரமீட்டர் பரப்பலவை கொண்ட இந்தப் பறவை கூண்டு அரங்கத்தில் சுமார் 80 ஆயிரம் ரசிகட்கள் அமர்ந்து போட்டியை கண்டு களிக்க முடியும்.

இந்த அரங்கத்தை தவிர்த்து போட்டிகள் நடை பெருவதற்காக மற்றும் பல அரங்குகளை சீன அரசாங்கம் கட்டியுள்ளது. போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் செய்து கொள்வதற்காக மொத்தம் 59 பயிற்சி மையங்கள் உலகத் தரத்துடன் கூடிய நவீன கருவிகள் மற்றும் களங்களோடு உருவாக்கப்பட்டுள்ளன.
அமேரிக்கா நடப்பு சாம்பியன்:
எதென்சில் கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமேரிக்க குழிவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர். இக்குழுவினர் 36 தங்கம், 39 வெள்ளி 27 வெங்கலம் என மொத்தம் 102 பதக்கங்களை வென்று சாதனைபடைத்தனர்.


இரண்டாவது இடத்தை சீனா, மூன்றாவது இடத்தை ரஷ்யா, நான்காவது இடத்தை அஸ்திரேலியா, ஐந்தாவது இடத்தை ஜப்பான் ஆகிய நாடுகள் கைபற்றின.

இவ்வாண்டு போட்டியின் உபசரனை நாடாக விளங்கும் சீனா குழுவினர் இவ்வாண்டு போட்டியில் அதிக பதக்கங்களை வென்று பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சீனாவிற்கு அமேரிக்க குழுவினர் பெரும் சவாலாக இருப்பார்கள் என கருதப்படுகிறது.
அதிர்ச்சி:
ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது எனும் மகிழ்ச்சியில் உலகலாவிய மக்கலும் , சீன நாட்டினரும் மூழ்கி இருந்தாலும் மறுபக்கம் அதிர்ச்சியும் கவலையும் இருந்துதான் வருகிறது.

இதில் முதன்மையாக தீபத் தனிநாடாக பிரகடனம் செய்யக் கோரி அங்குள்ள புத்த மதத்துறவியர்கள் தீபத் தலைநகரில் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இது சீனாவிற்கு முதல் அடியாக இருந்தது.

கடந்த மே மாதம் 12-ஆம் தேதி சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிகழ்ந்த பூகம்பத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மரணம் அடைந்தது சீனாவை தவிர்த்து உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நேற்று முந்தினம் மீண்டும் சிசுவானில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் யாரும் மரணமடையவில்லை என்றாலும் காயமடைந்து இருக்கிறார்கள்.

இது போன்ற பல பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் தொடர்ந்து வெற்றிகரமாக போட்டியை நடத்தவுள்ளனர் சீன நாட்டினர். சிறப்பான முறையில் பாதுகாப்பு அளிப்பதற்கு சீன போலிஸ் படையினருக்கு கடந்த காலங்கள் தொடங்கி பிரத்தியோக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சுடர் தொடங்கியது முதல் அவ்வோட்டங்களுக்கு எந்த நாடும் ஆதரவு தரக்கூடாது என்று தீபத் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இருப்பினும் அந்த ஓட்டம் வெற்றிகரமாக் முடிவடைந்து இன்று பெய்ஜிங்கிற்கு வந்தடைந்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் வெற்றிகரமாக தொடங்கட்டும்.



பி.கு: பதிவில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. தமிழ்மண கருவிபட்டை மாயமாய் மறைந்துவிட்டது. அதானல் மீள் பதிவு செய்திருக்கிறேன். நண்பர்கள் மன்னிக்கவும்

8 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஆயில்யன் said...
அருமையான தகவல்கள்!

ஏனோ தெரியவில்லை இந்த சீனா ஒலிம்பிக் அந்தளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லையே என்ற எண்ணம் ஏற்படுக்கிறது!

முன்பெல்லாம் ஒலிம்பிக் போட்டிகள் என்றால் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிறைந்திருக்கும் !
August 8, 2008 12:34 AM

VIKNESHWARAN ADAKKALAM said...

கோவை விஜய் said...
சீனாவில் ஒலிப்பிக் பற்றிய தகவ்ல்கள் சிறப்பு படங்களுடன்.

விளையாட்டு கொண்டாடங்கள் ஒரு புறம்

இயற்கையின் கோபச் சீற்றம் மறுபுரம்

திபேத்தியரின் போராட்டம் இடயே
August 8, 2008 8:04 AM

VIKNESHWARAN ADAKKALAM said...

தமிழ் பிரியன் said...
நல்ல தகவல்கள்... 80 ஆயிரம் பேர் தான் அமர முடியுமா?... குறைவாகத் தெரிகின்றதே?... :)
August 8, 2008 11:13 AM

VIKNESHWARAN ADAKKALAM said...

அதிஷா said...

@பின்னூட்ட சுட்டித்தனம்

மீ த பஸ்ட்

@பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்

@மிக அருமையான பதிவு

சிரத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து போட்டிருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்

@ பின்னூட்ட கும்மித்தனம்

Sathis Kumar said...

இம்முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மலேசிய இந்தியர்கள், மலேசியாவைப் பிரதிநிதித்து ஒருவர்கூடச் செல்லவில்லையாமே.. உண்மையா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஆயில்யன்
மிக்க நன்றி ஆயில்யன், ஆம் இந்த ஒலிம்பிக் அமைதியாய் போய்க் கொண்டிருக்கிறது.

@கோவை விஜய்

நன்றி.. மீண்டும் வருக

@தமிழ் பிரியன்

அங்கு அமர்ந்து பார்ப்பதை விட தொலைக்காட்சியில் அருமையாய் தெரியுமே.

@அதிஷா

ஆராய்ச்சியெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. வருகைக்கு நன்றி மாமு.

@சதீஷ்

ஆம் ஒருவர் கூட இல்லையாம்...

Anonymous said...

விக்கி அசத்திட்டே போ !

VIKNESHWARAN ADAKKALAM said...

@சேவியர்
நன்றி :)