ஜீவாவின் படங்களில் காட்சி அமைப்புகளுக்கு குறை சொல்ல இயலாது. இரம்மியமான காட்சிகளின் வழி இரசிகர்களின் மனதை படத்தில் இட்டுச் செல்வதில் அவர் திறமை பாராட்டத்தக்கது.
ஜீவாவின், பசுமையும் இளமையும் கொஞ்சும் காட்சிகளுக்காகவும், மனதை கவரும் வகையில் இருந்த இசைக்காகவும் இத்திரையை காண எண்ணி இருந்தேன். குசேலன் மற்றும் சத்யம் திரைப்படங்களின் ஏமாற்றத்தை தாம் தூம் தீர்த்து வைக்கிறது எனச் சொன்னால் அது மிகை இல்லை என்றே நினைக்கிறேன்.
அதிகப்படியான காட்சியமைப்புகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ ஆய்வு மாநாட்டிற்காக ரஷ்யா செல்லும் ஜெயம் ரவி எதிர்பாராதவிதமாக ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே கதையாக அமைகிறது.
உள்ளம் கேட்குமே மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் மென்மையான காதல் சித்திரத்தை உலாவவிட்ட ஜீவா, தாம் தூம் திரையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்தும் கொடுத்திருப்பது சிறப்பாகவே இருக்கிறது. கட்டிடத்திற்கு கட்டிடம் தாவுவதையும், இளநீரை எட்டி உதைத்து கற்சுவரை உடைக்கும் வண்ணமும் இருக்கும் காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம். இவற்றை செய்ய கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது ஜெயம் ரவி அந்த ஏரியாவில் கை வைப்பது தவறு என்பதை உணர்ந்தால் நன்று.
தெனாலி படத்திற்கு அடுத்தபடியாக ஜெயராமிற்கு இப்படம் ஒரு நல்ல மைல்கல்லாக அமையும் என தெரிகிறது. அவரது பாத்திரத்தைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். எப்படிபட்ட முக பாவனையையும் தன்னால் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக வரும் கங்கனாவை விட லஷ்மி ராய் அழகாக இருக்கிறார். கிராமத்து காட்சி அமைப்புகள் காதலை மையமாகக் கொண்டிருக்கிறது. முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை காட்சிகள் அசத்தல். "உன் அப்பன் உன்ன பொண்ணு பார்க்க அனுப்பி வச்ச மாப்பிள்ளை இப்பதான் வந்து சேர்ந்திருக்கான்" என ஜெயம் ரவியை பார்த்து இரு கிழவிகள் அடிக்கும் லூட்டி இரசிக்கும்படி உள்ளது.
கங்கனாவின் நடிப்பு ஒவ்வாமலே இருக்கிறது. கிராமத்தைச் சுற்றி ஓடி ஆடி திரியும் பெண் மைதா மாவை போல் வெளிச்சமான கலரில் இருக்கிறார். கிராமத்து பெண்கள் இப்படி சுட்டித் தனம் செய்து திரிவார்களா எனச் சிந்திக்க வைக்கிறது.
தாம் தூம் திரை பாடல்கள் குசேலனை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. ஆடியிலே முக்குளிக்கும் அழகே எனும் பாடல் கலக்கல். இப்பாடல் இரட்சகன் திரையில் வரும் கனவா இல்லை காற்றா எனும் பாடலை நினைவு கூரும் வகையில் உள்ளது. 'உன் இடையோடு நடமாடும் உடையாக நான் மாறி முந்தானை படியேறவா' எனும் வரி 'டச்'.
இப்படத்தில் எனக்குப் புரியாத சில விடயங்கள்:
1) ஒரு மாடல் எதற்காக போதை பொருள் கடத்துகிறாள், அக்கும்பலோடு தொடர்பு வைத்திருக்கிறாள்?
2) 'சின்னது சின்னது' என கேலி செய்யப்படுவதற்கான காரணம் தெரியாமலேயே போவது எதனால்?
3) சிறையில் அடைக்க கொண்டுச் செல்லப்படும் ஜெயம் ரவி இருவரால் தாக்கப்படுகிறாரே அவர்கள் யார்? பாதுகாப்பில்லாத சிறையா? போலிஸாரின் திட்டமா?
4) ஒரு நாட்டின் தூதர் குண்டர் கும்பலோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் நிலை எதனால் வந்தது?
5) ஒரு ஆபத்தில் இருந்து தப்பி வரும் போது காதலின் நினைவு வந்து கைகளை தூக்கி பறப்பார்களா? (என்ன கொடுமை இது)
பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் ஜெயம் ரவிக்கு முக்கியப் பிரச்சனையாய் அமைவது மொழி. ரஷ்யர்கள் மொழி பற்று மிக்கவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு தமிழ் எழுத்தாளர் கையெப்பமிடும் சமயம் ரஷ்யர் ஒருவர் கேட்டாராம். உங்களுக்கு எழுத்து கிடையாதா ஏன் ஆங்கிலத்தில் கையெப்பமிடுகிறீர்கள் என? அவர்களின் மொழி பற்று பாராட்டுதலுக்குரியது. நம்மில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறோம்?
ஜெயம் ரவியின் எம்.குமரனுக்கு பிறகு தாம் தூம் சிறப்பாகவே இருக்கிறது. தைரியமாக பார்க்கலாம்.
21 comments:
நல்ல தரமான விமரிசனம் தம்பி. அப்டியே இந்த விமர்சனத்துக்கு ஒரு மதிப்பெண்ணும் குடுத்து, விகடனுக்கும் அனுப்பி வையுங்க.
இந்தப் படம் முழுக்க முழுக்க ஜீவாவால் இயக்கப்பட்ட படம் அல்ல. ரஷ்யாவில் படப்பிடிப்புக்கு சென்ற போது, எதிர்பாராத விதமாக மாரடைப்பால் மரணமடைந்ததால் அவரது உதவியாளர்கள்தான் இந்த படத்தை முடித்தார்கள். இது முழுக்க முழுக்க ஜீவாவின் படம் அல்ல.
நாந்தான் ஃபர்ஸ்டா?
இன்னும் படிக்கல.
தலைப்பை மாத்தச் சொல்ல வந்தேன்.
விரு விருப்பில்ல.. விறு விறுப்பு!
உங்களைப் பாராட்டி ஒரு தனிமடல் அனுப்பியுள்ளேன்.
பார்க்கவும்!
வாழ்த்துக்கள்!!!
good review abt the movie,nice
//ஜெயம் ரவியின் எம்.குமரனுக்கு பிறகு தாம் தூம் சிறப்பாகவே இருக்கிறது. தைரியமாக பார்க்கலாம்.//
நன்றி தல, டிக்கட் எடுத்து வச்சிட்டுட்டு குசேலன் மேனியாவால் ரொம்பவே பயந்துகொண்டிருந்தேன். இன்னும் அரை மணியில் பார்க்கப் போவேன் ;)
படத்தில் விறுவிறுப்புக்கு குறைவில்லை. ஒரு சில காட்சிகளை தவிர.
1.மாடல் அழகி கமிஷனரின் மகளாம். அவள் ஏன் கடத்தலில் ஈடுப்பட்டாள் என்ற விவரம் தெரியவில்லை.
2. ஹோட்டலில் எவ்வாறு இரண்டு மது புட்டிகள் வந்தன என்பதற்கும் விளக்கம் இல்லை.
3. ஒரு பாடல் ஏதோ மேகம் என்ற பாடலை ஞாபகப்படுத்துகிறது.
4. விஜயகாந்த் படக்காட்சிகள் இந்த படத்திற்கு தேவையில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
5. இனிமையான கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் பல உள்ளன.
6. ரஷ்யாவின் சந்து பொந்துகளும் இந்தியா மட்டும் பல நாடுகளை போன்றவையே என தெரிகிறது.
7. லக்சுமி ராய் அழகு. கதாநாயகி கிராமத்து பெண்ணாக பொருந்தவில்லை என்பது உண்மையே
குசேலன், தசாவதரம் இருபடங்களுடன் ஒப்பிடுகையில் இது பரவாயில்லை.
அப்ப படம் டக்கரா!!!
ஐ ஜாலி
ஜெயம் ரவி படமா?... இது ரீமேக் இல்லையா?
விமர்சனத்திற்கு நன்றி நண்பா :))
இயக்குனர் ஜீவாவின் கடைசிப் படம் இது.
நீங்க சொல்ர சில விஷயங்கள், எடுத்து முடிக்கரதுக்கு முன்னாடியே போய் சேந்துட்டாரோ?
நல்ல இயக்குனரை இழந்து விட்டோம் :(
//ஒரு முறை ஒரு தமிழ் எழுத்தாளர் கையெப்பமிடும் சமயம் ரஷ்யர் ஒருவர் கேட்டாராம். உங்களுக்கு எழுத்து கிடையாதா ஏன் ஆங்கிலத்தில் கையெப்பமிடுகிறீர்கள் என? அவர்களின் மொழி பற்று பாராட்டுதலுக்குரியது.//
சூப்பர்....நீங்கள் எப்படி விக்ணேஷ்?
எதுக்கும் இன்னும் ஒரு நாலு பேர் விமர்சனம் எழுதட்டும் அப்புறமா பாக்கலாமான்னு யோசிப்போம் அதுதான் நம்ம உடம்புக்கு நல்லது!!
எவ்ளோதான் தாங்கறது!?!?
:))))))))))
@ஜோசப் பால்ராஜ்
நன்றி அண்ணே. விகடனுக்கு அனுப்ப தெரியாது. அது போக அந்த அளவுக்கு எனக்கு தகுதி இல்லை என்றே நினைக்கிறேன். தகவலுக்கும் முதல் வருகைக்கும் மீண்டும் நன்றி.
@பரிசல்காரன்
நன்றி பரிசல். என் கவனக் குறைவிற்கும். ஓட்டை தமிழுக்கு மன்னிபுக் கேட்டுக் கொள்கிறேன்.
@அனானி
நன்றி
@கானா பிரபா
வாங்க தல. படம் பார்த்தாச்சா? வருகைக்கு நன்றி.
@மஞ்சூர் ராசா
நன்றி ஐயா, மீண்டும் வருக.
@அதிஷா
நீங்க இன்னும் பார்க்கலயா?
@ச்சின்னப் பையன்
ரீமேக் இல்லைனு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறிங்க?
@சென்ஷி
வாங்க அண்ணாச்சி. ரொம்ப நாளைக்கு அப்புரம் வந்திருக்கிங்க. நீங்களும் இன்னும் பார்க்கலயா?
@சர்வேசன்
நன்றி அண்ணாச்சி. ஜீவாவின் கதையை மாற்றிடாங்கனு சொல்ல வரிங்களா?
@கு.உஷா
நன்றி உஷா. நான் ஆங்கிலத்தில் கையெப்பமிட்டு பழகிவிட்டேனே? :(
@மங்களூர் சிவா
அண்ணாச்சி பாதிப்பு ரொம்ப அதிகமோ... பாவம் நீங்க... :))))
விக்கி,நான் இன்னும் பாக்கல.
விமர்சனம் அருமையா இருக்கு.
அப்போ சீக்கிரமா பாக்கச் சொல்றிங்க.
@ஹேமா
நன்றி ஹேமா. மீண்டும் வருக.
//இவற்றை செய்ய கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது ஜெயம் ரவி அந்த ஏரியாவில் கை வைப்பது தவறு என்பதை உணர்ந்தால் நன்று//
சூப்பர் :) மிகவும் ரசித்தேன் :)
//
ஆடியிலே முக்குளிக்கும் அழகே எனும் பாடல் கலக்கல்.//
ஒவ்வொரு வரிகளுமே இந்த பாடலில் அசத்தல். மோகத்தை இலக்கியமாக்கிய கவிதை இந்த பாடல் :)
//நம்மில் எத்தனை பேர் தமிழில் கையெழுத்து போடுகிறோம்?
//
எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் பற்றாளர் தமிழில் கையெழுத்துப் போட்டபோது அமெரிக்க போர்ட் ஆஃப் எண்ட்ரியில் நிற்க வைக்கப்பட்டார்.
'உன் கையொப்பம் எனக்குப் புரியவில்லை" என அவன் சொல்ல
'கையொப்பம் புரியவேண்டுமென்பதில்லை" என இவர் பதில் சொன்னதாக என்னிடம் ஒரு முறை கூறினார்.
விமர்சனம் நன்றாக உள்ளது.
//தைரியமாக பார்க்கலாம்//
நன்றி நண்பா...இனி போய் பார்த்துவிடுவேன்...
//ஆடியிலே முக்குளிக்கும் அழகே எனும் பாடல் கலக்கல்.//
ஆமா, ரொம்ப நல்லா இருந்தது!
@சேவியர்
நன்றி அண்ணே தகவலுடன் கூடிய பின்னூட்டம்.
@மலர்விழி
நன்றி.
உங்கள் ஆய்வு ,ஒரு படத்தைப் ,பார்க்கலாமா கூடாதா என்று ,உங்கள் விமரிசனம் படித்தே ,முடிவு செய்யலாம் போல் இருக்கிறது.
@கோமா
நன்றி அம்மா
Post a Comment