Wednesday, August 27, 2008

காமத்தை வெல்வது எப்படி?


சமீபத்தில் படித்த வல்லினம் மாதிகையில் ஒரு துணுக்குத் தோரணம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதை எழுதிய ம.நவினுக்கு வாழ்த்துக்கள்.


காமம் வெல்வது பற்றி

காதலி சொல்லிக் கொண்டிருந்தாள்


முதலில் தன் முகம் மறக்கச் சொன்னாள்

அதில் துளைக்கள் அதிகமிருப்பதாகவும்

அவற்றில் அழுக்குகள் வெளியேறக்கூடுமென்றாள்


உதடு பற்றி கேட்டேன்

சுரக்கும் எச்சில் பற்றியும்

கிருமிகள் பற்றியும் நினைவுபடுத்தினாள்


என் பார்வையை விளங்கிக்கொண்டவளாக

மார்பை பசு மடியுடன் ஒப்பிட்டாள்

அத்தனையும் ஊளை சதையென்றாள்


என்னைத் தொடரவிடாமல்

தனது மூத்திரம் பற்றியும்

அதன் துர்வாடை ஒரு பிணத்திற்குச் சமமானது என்றாள்


எனது பார்வையில் நம்பிக்கை இழந்தவள்

பிரத்தியோக திரவம் ஒன்று தடவி

தனது தோலை சுருங்கச் செய்தாள்

ஒரு தீக்குச்சியில் தன்னை எரித்து சாம்பலாக்கினாள்


நான் பத்திரமாக விழுந்து கிடந்த

அவள் காமத்தை கையில் ஏந்திச்சென்றேன்.

18 comments:

வால்பையன் said...

ஏன் ஏன் இப்படி
மாறனும் எல்லாமே மாறனும்

இந்த கவிதை எப்படி இருக்கு?

ஹீ ஹீ

கவிதை நல்லாருக்கு
ஆனா காமம்னா என்னான்னு தான் தெரியல!
கடைசியா வேற அள்ளிட்டு போனதா சொல்லியிருக்கிங்க!
அது எப்படி இருக்கும்?
உருண்டையாவா? சதுரமாவா?
இல்ல மாவு மாதிரி நைஸா இருக்குமா?
யாராவது கொஞ்சம் சொல்லுங்களேம்பா

விஜய் ஆனந்த் said...

நல்லா இருக்கு...

;-)))...

ஹேமா said...

உற்று யோசித்தால் நிதர்சனமான உண்மை.எல்லாம் மாயைதானே.

VIKNESHWARAN ADAKKALAM said...

@வால்பையன்

பி.எச்.டி முச்சவங்க எல்.கே.ஜி மாணவன் கிட்ட கேட்குற கேள்விக்கு கொடுக்கப்படும் பதில் திருப்தியா இருக்குமா சொல்லுங்க.

@விஜய் ஆனந்த்

நன்றி

@ஹேமா

மாயா சாயா.

ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையான பதிவு விக்கி.
நிதர்சனமான உண்மைகள். ஆனாலும் யாருக்கு புரியுது? ( நான் உட்பட)

Anonymous said...

திரு. வின்னேஸ்வரன் அவர்களே,

காமம் என்பது ஓர் அற்புதமான இயற்கையின் நியதி. இதை நீங்கள் இப்படி அசிங்கப் படுத்தியிருப்பது மிகவும் வருத்தத்திற்கு உறியது. காமம் என்பது ஒரு தெய்வீகம், ஒரு ஓட்டம், வாழ்க்கையின் சுகம். காமம் இல்லையேல் நாம் இங்கு இல்லை. காமத்தை வெறுப்பவன் ஒரு முட்டாள். அதை வெறுக்க தூண்டுபவன் ஒரு அயோக்கியன் அல்லது ஒரு கையாலாகதவன். இந்த உலகில் வாழ தகுதியற்றவன். பரவாயில்லை, அவன் பங்கை அனுபவிக்க வேறுபலர் நிறையவே இப்பூவுலகில் இருக்கின்றனர்.

உணமையான தமிழன் காமத்தை போற்றுபவன்.
அதை தூற்றுபவனல்ல!!!

Anonymous said...

கண்ணை மூடிக்கொண்டால் உலமே இருண்டு விட்டது என ... அதேபோல்தான் காமத்தை வெறுக்க கற்றுக்கொள்வதும். காமத்தை வெல்வதென்பது, உடலையும் உணர்வுகளையும் தன் வசம் அடக்கி நீண்ட நேரம் சுகம் கொடுத்து சுகமெடுக்கும் புணர்தலாகும்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ அன்புள்ள அனானிக்கு

காமத்தை வெறுக்கும் கோனத்தில் இக்கவிதையை நீங்கள் படித்திருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

உண்மையான தமிழன் தன்னை யார் என அடையாளம் காட்டிக் கொள்வான். இப்படி பெயர் சொல்லாமல் பின்னூட்டும் கோழையாக இருக்க மாட்டான்.

ஜோசப் பால்ராஜ் said...

வர வர இந்த அணாணிங்க தொந்தரவு தாங்கவே முடியலப்பா.
ஒழுங்கா பதிவ படிச்சு தொலைக்க மாட்டேங்குறாய்ங்க, ஆனா நீளமா கருத்து சொல்லமட்டும் மூஞ்சிய மறைச்சுக்கிட்டு வந்துர்ராய்ங்க.

விக்கி வெளியிட்டுருக்க இந்த பதிவுல, தம்பி தெளிவா சொல்லியிருக்காரு அது ம.நவினன் என்பவர் வல்லினம் எனும் இதழில் எழுதியிருப்பது என்று.
ஆனால் அணாணி என்னமோ எழுதியதே விக்கிதான்கிறதுமாதிரி இருக்கு.

அடுத்து நவினன் எழுதியதிலும் காமமே வேண்டாம் என்று இல்லையே. காமத்தை வெல்வது எப்படி என்றுதானே இருக்கின்றது? காமத்தை வெல்வது என்பதற்கு காமத்தை இல்லாது ஒழிப்பது என்று மட்டும்தான் அர்த்தமா? காமத்தை கட்டுக்குள் வைத்திருப்பது என்றும் அர்த்தம் உண்டல்லவா? அதையெல்லாம் நோக்காது எழுதியிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

இதில் உண்மைத்தமிழர்களை வேறு துணைக்கு அழைக்கிறார் இவர். உண்மைத்தமிழன் சொல்ல வந்ததை ஏன் இப்படி முகமில்லாதவராய் வந்து சொல்ல வேண்டும்? காமம் ஒரு உன்னதமான உணர்வுதான். ஆனால் காம‌ம் ம‌ட்டும‌ல்ல‌ வாழ்க்கை. காத‌ல் இல்லாது காம‌ம் ம‌ட்டுமே இருந்தால் அதை ஏற்றுக்கொள்வாரா அணாணி ?

காத‌ல் என்ப‌து அன்பா ? அல்ல‌து காம‌மா என்ற‌ கேள்விக்கு வைர‌முத்து அவ‌ர‌து க‌விதையில் அழ‌காய் சொல்லியிருப்பார்.

காத‌ல் என்ப‌து வெறும் அன்பு ம‌ட்டும்தான் என்றால் அத‌ற்கு ஒரு நாய்குட்டி போதும்.
காத‌ல் என்ப‌து வெறும் காம‌ம் ம‌ட்டும்தான் என்றால் அத‌ற்கு ஒரு விலைமாது போதும்.
காத‌ல் என்ப‌து அன்பும், காம‌மும் க‌ல‌க்கும் ஒரு புள்ளி
என்று.

அதுதான் உண்மை. காத‌ல் இல்லாத‌ காம‌மும் , காம‌ம் இல்லாத‌ காத‌லும் வெறும் தாள்க‌ளை ப‌த்திர‌மாய் வைப்ப‌து போல்தான். வெறும் தாள்க‌ள் ம‌ட்டும் க‌விதை ப‌டைக்க‌ உத‌வாது. காத‌லும் காம‌மும் சேர்ந்துதான் க‌விதை ப‌டைக்க‌ முடியும். அதை இந்த‌ அணாணிக்க‌ள் புரிந்துகொள்ள‌ட்டும்.

Anonymous said...

திரு. விக்னேஷ் தயவு செய்து அமைதி இழக்காதீர்! அநாநியாக வந்திருப்பது நான் மாசிலாவேதான். உங்களது "குப்புசாமியின் இழவு வீட்டு காசு" பற்றிய சிறுகதையை படித்து எந்த அளவு வியந்தேனோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது இங்கு இப்போதைய என் மனநிலை. காமத்தை பற்றிய என் கருத்து உங்களை தனிப்பட்ட வகையில் தாக்குவதற்காக எழுதப்பட்டதல்ல. இதற்கு உங்கள் மனம் வருந்தினால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது.

இளம் வயதின‌ரிடையே காமத்தை பற்றிய வெறுப்பு மனப்பான்மையை உருவாக்கும் சில தீவிரவாதிகளையே நான் சாடுகிறேன். நான் அநாநியாக இருந்தாலும், கருத்திற்கு மரியாதை கொடுத்து வாதிப்பதே சிறந்தது.

மங்களூர் சிவா said...

எதுக்கய்யா அதை வெல்லனும்????

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜோசப்

வருகைக்கு நன்றி அண்ணே.

@ மாசிலா,

அன்பின் மாசிலா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. என்னை அமைதி இழக்க வேண்டாம் எனக் கூறி நீங்கள் அமைதி இழக்கிறீர்களே? ஜோசப் அண்ணனின் பதில் உங்களுக்கு நிறைவைக் கொடுக்கும் என நினைக்கிறேன். அப்படி இல்லையெனில் நான் விளக்கம் கொடுக்க தயார். மீண்டும் வருக. நன்றி.

@சிவா.

வாங்க அண்ணாச்சி. அதை ஏன் வெல்லக் கூடாது.

மங்களூர் சிவா said...

@விக்கி

ஒருத்தன் எதிர்பாராத ஒரு விபத்துல இறந்து மேல போயிட்டான் அங்க சித்ரகுப்தன்கிட்ட சண்டை எனக்கு வயசே 25 தான் ஆகுது எதுக்காக என் உயிர எடுத்துட்டீங்க அப்படின்னு!

சித்திரகுப்தனும் ரொம்ப யோசிச்சு அடடா தப்பு பண்ணீட்டோமேன்னு (இருந்தாலும் காட்டிக்கப்பிடாதுல்ல )சரி உனக்கு என்னென்ன கெட்ட பழக்கம் இருக்கு அத சொல்லு அப்படிங்கிறார்

தம்மடிப்பியா - ம்ஹூம்
தண்ணி - இல்லை நோ வே
பொண்ணுங்ககிட்ட - ஐய்யய்யோ இல்லை

அதுக்கு சித்திரகுப்தன் சொன்னாராம் அட பரதேசிநாயே எந்த சுகத்தையுமே அனுபவிக்காத நீ வாழ்ந்தா என்ன செத்தா என்ன அப்படின்னு!

வாழ்வே மாயம்தான் அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் ஆனா அந்த இடைப்பட்ட காலத்தில சந்தோசமா வாழனும் அதுதான் வாழ்க்கை!!

Anonymous said...

என்னவோ ஒண்ணும் புரியல :)

- சேவியர்

பரிசல்காரன் said...

அனானிகளிடம் இருந்து பதிவர்களைக் காக்கும் தளபதி ஜோசப் பால்ராஜ்..

வாழ்க..வாழ்க!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@சிவா

ஒருத்தன் எதிர்பாராத ஒரு விபத்துல இறந்து மேல போயிட்டான் அங்க சித்ரகுப்தன்கிட்ட சண்டை எனக்கு வயசே 25 தான் ஆகுது எதுக்காக என் உயிர எடுத்துட்டீங்க அப்படின்னு!

சித்திரகுப்தனும் ரொம்ப யோசிச்சு அடடா தப்பு பண்ணீட்டோமேன்னு (இருந்தாலும் காட்டிக்கப்பிடாதுல்ல )சரி உனக்கு என்னென்ன கெட்ட பழக்கம் இருக்கு அத சொல்லு அப்படிங்கிறார்

தம்மடிப்பியா - ம்
தண்ணி - அது இல்லாமலா
பொண்ணுங்ககிட்ட - தினமும்

அதுக்கு சித்திரகுப்தன் சொன்னாராம் அட பரதேசிநாயே எல்லா சுகத்தையுமே அனுபவிச்ச நீ வாழ்ந்தா என்ன செத்தா என்ன அப்படின்னு!

வாழ்வே மாயம்தான் அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான் ஆனா அந்த இடைப்பட்ட காலத்தில ஒரு கட்டுபாடோடு வாழனும் அதுதான் வாழ்க்கை!!

@சேவியர்

உங்களுக்கா புரியல.... ஆண்டவா... என் கண்களை என்னால் நம்ப முடியல... இது ஏதும் சூனியம் இல்லையே...

VIKNESHWARAN ADAKKALAM said...

@பரிசல்காரன்

ஆஹா...

Anonymous said...

நன்னா இருக்கு...ஒரு வித்தியாசமான பதிவு... தொடர்க>>>