Friday, August 22, 2008

சோறு தின்னே சாவுங்கடா!

காலை வேளையில் பணக்காரனைப் போலவும், மதியம் ஏழையை போலவும், இரவு பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிட வேண்டும் என்பார்கள். இன்றய அவசர உலகினில் நமது உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டுவிட்டன எனக் கூறினால் அது மிகை இல்லை.

காலையில் வேலைக்குத் தாமதமாக எழுபவன் காலைப் பசியாறலைத் தவறவிடுகிறான். மதியம் மூக்கு பிடிக்க சாப்பிடுகிறான். மதியம் தேனீரைப் பருகி இரண்டொரு பலகாரங்களைத் தினித்துக் கொள்கிறான். இரவில் மட்டுமே உணவை மனதார ருசி பார்க்கும் தருணம் கிடைக்கிறது. இதன் காரணமாக இரவு வேளைகளில் அளவிற்கு அதிகமாகவே சாப்பிட்டுவிட்டு தூங்கிப் போகிறான்.

உணவு உட்கொண்டப் பிறகு உறக்கம் கொள்வது மிகவும் தகாத பழக்கம் என்பார்கள். உணவு செரிமானம் ஆகாது. வயிற்றில் இருந்தபடி பாழ்பட்டுப் போகும். சிலர் காலையில் எழுந்தவுடன் அவர்களின் வாய் துர்நாற்றம் வீசுவதற்கு இது தான் காரணம். செரிமானம் ஆகாத உணவினால் மலச்சிக்கலும் உண்டாகிறது.


சீனர்களிடையே ஒரு பழக்கம் உண்டு. மாலை ஆறு அல்லது ஆறரை மணி வாக்கில் உணவை உட்கொள்வார்கள். பிறகு பிள்ளைகளை விளையாட விடுவார்கள். பெரியவர்கள் நடை போடுவார்கள். இது உணவு செரிமானத்திற்குச் சிறந்த வழி. இரவு பசியெடுத்தால் கனமில்லா உணவு வகைகளை கொஞ்சமாய் சாப்பிடுவார்கள். இது அவர்களின் காலாச்சாரத்தில் உண்டு. இன்றைய நாட்களில் சீனர்களும் இவ்வுணவு முறையைப் பின்பற்றுகிறார்களா என்பதும் கேள்வியே.

மனித வாழ்க்கைக்குக் காலை உணவு அத்தியாவசிமானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காலை உணவை உட்கொண்ட பிறகே அன்றய நாட்களுக்கான வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட வழி செய்கிறது. நேரம் தவறி எடுத்துக் கொள்ளப்படும் காலை உணவு உடற் சோர்வையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.

குழந்தைகள் சரியான உணவு முறையை பேன சிறு வயது முதல் கற்பித்துக் கொடுத்தல் நலம். பெற்றோர்களும் முறையான உணவு வழக்கத்தை பின்பற்றுவாராயின், குழந்தைகளுக்கு அப்பழக்கம் இயல்பாக அமைந்துவிடும். நாம் உண்ணும் உணவானது உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அறிவாற்றலின் வளர்ச்சிக்கும் வித்தாக அமைய வேண்டியது அவசியம். வாயோடு மணக்க குடலோடு கடுக்கவும் இருப்பின் அது சரியான உணவாகாது.



காலம் தவறாமலும், நினைத்த நேரங்களில் கண்டதை சாப்பிடாமலும், செரிவான உணவு வழக்கைத்தை அமல்படுத்துவோர் மிகவும் சொற்பமே. இதற்கு பெருமளவில் நாம் சொல்லும் பதில் தான் என்ன? கால ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மனித வாழ்க்கையே ஆகும்.

காலை உணவு மூளைக்கு சாப்பாடு என்பது அறிவியல் அறிஞர்கள் கூற்று. உதாரணமாக ரொட்டி வகைகளில் இருக்கும் ஊட்டச்சத்து மூலையில் துரித செயல்பாட்டுக்கும் உடல் உற்சாகத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.

ஒரு ஆய்வின்படி காலை பாசியாறையை சாப்பிடமல் பள்ளி வரும் மாணவர்களை விட சாப்பிட்டு வரும் மாணவர்களே படிப்பில் சிறந்து விளங்குவதாகக் குறிபிட்டுள்ளார்கள். இவ்வாய்வின் மற்றுமோர் தகவலின்படி காலை உணவு அத்தியாவசியம் இல்லாதது எனும் போக்கு மக்களிடையே அதிகரித்து வருகிறதாம். இது மிக வேதனையளிக்கக் கூடிய விடயமாய் அமைகிறது. ஏன் இப்படி? காலையில் உட்கொள்வதைவிட ஒரே வேலையாக மதியம் சாப்பிட்டுவிட்டால் போதும் என நினைக்கிறார்கள்.

பள்ளிச் செல்லும் மாணவர்களில் பெருவாரியானவர்கள் காலை பசியாறுவது இல்லை. 10 மணி வாக்கில் பள்ளியில் கொடுக்கப்படும் ஓய்வு நேரத்தில் உணவு எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித் தேர்வு செய்யும் உணவு வகைகளில் ருசி மிகுந்தவற்றை தேர்வு செய்கிறார்களே தவிர அவை ஆரோக்கியமான உணவு வகைகள் தானா என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

இதனால் மாணவர்களின் அறிவாற்றல் பாதிப்பிற்குள்ளாகிறது. பால் மற்றும் பழச்சாறு வகைகளில் காலை உணவாக உட்கொள்ளுதல் நலம். ஆனால் சிலருக்கு பால் குடித்தால் வாந்தி வரும் என்பார்கள். காலை உணவு ஒவ்வாது எனவும் சொல்வார்கள். தொட்டில் பழக்கம் இடுகாடு மட்டும் என்பதை போல் கடைசி காலம் வரை இப்படிபட்ட பழக்கங்களோடு இருப்பவர்களும் உண்டு.

அதை விடக் கொடுமையாக எந்நேரமும் சோறு மட்டுமே உணவாக கொள்ளும் ஆட்களும் உண்டு. சோறு சாப்பிட்டால் மட்டுமே இவர்களுக்கு வயிறு நிறையும்.

Food Facts Asia நடத்திய ஆய்வின்படி, காலம் தவறி காலை உணவை எடுப்பவர்களின் உடல் எடை அதிகரிப்பதாகவும். நேரப்படிக் காலை உணவைக் கொள்பவர்களின் எடை சீரான முறையில் இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனையடுத்து காலை உணவை தவிர்த்து நேரடியாக மதிய உணவை உட்கொள்ளும் பிறிவினர் உடல் எடையால் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். காலை உணவை தவிர்த்தவர்கள் மதிய உணவு வேலைக்குக் காத்திருப்பார்கள். பசியும் அதிகபடியாக இருக்கும். இதனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடும் எண்ணம் எழும். அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடையும் கண்மண் தெரியாமல் எகிறிவிடுகிறது. அதை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் அவஸ்தைக்குள்ளாகிறது.

உணவு மனிதனின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்று. மனித வாழ்க்கையின் அச்சாணியாக விளங்குகிறது. சரியான உணவு முறையைத் தேர்ந்தெடுத்து சிறப்பான முறையில் வாழ்வது நம் கையில்.

35 comments:

வெண்பூ said...

அருமை விக்கி. நல்ல கருத்துக்கள். நன்றி.

//உணவு உட்கொண்டப் பிறகு உறக்கம் கொள்வது மிகவும் தகாத பழக்கம் என்பார்கள். உணவு சரிமானம் ஆகாது. வயிற்றில் இருந்தபடி பாழ்பட்டுப் போகும். சிலர் காலையில் எழுந்தவுடன் அவர்களின் வாய் துர்நாற்றம் வீசுவதற்கு இது தான் காரணம். சரிமானம் ஆகாத உணவினால் மலச்சிக்கலும் உண்டாகிறது.//

அட ஆமாம். எனக்கு காலையில் வாய் துர்நாற்றம் பிரச்சினை இருந்தது. இப்போது ஒரு வாரமாக டயட் கண்ட்ரோலில் (சரியான நேரத்தில் சரியான அளவு சாப்பிடுவது) இருப்பதால் இந்த பிரச்சினை முற்றிலும் இல்லை. ஆச்சரியம், நான் கவனிக்கவில்லை..

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல பதிவு தம்பி.
நான் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கும் அலுவலகத்திற்கு செல்ல 8 மணிக்குதான் எழுந்திருப்பேன். இதுல காலையில எஙக சாப்பிடுறது? இனியாவது சீக்கிரமா எழுந்திருச்சு சாப்பிட பார்க்குறேன்.

ரகசிய சிநேகிதி said...

நன்று . இது போன்ற பயனுள்ளக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள் விக்னேஸ்வரன்.

விஜய் ஆனந்த் said...

பயனுள்ள பதிவு...நன்றி...

வெண்பூவுக்கு ரிப்பீட்டு...

வெங்கட்ராமன் said...


வாயோடு மணக்க குடலோடு கடுக்கவும் இருப்பின் அது சரியான உணவாகாது.


மிக்க சரி. அருமையான பதிவு.

Anonymous said...

//சீனர்களிடையே ஒரு பழக்கம் உண்டு. மதியம் ஆறு அல்லது ஆறரை மணி வாக்கில் உணவை உட்கொள்வார்கள். பிறகு பிள்ளைகளை விளையாட விடுவார்கள். பெரியவர்கள் நடை போடுவார்கள். இது உணவு சரிமானத்திற்குச் சிறந்த வழி. இரவு பசியெடுத்தால் கனமில்லா உணவு வகைகளை கொஞ்சமாய் சாப்பிடுவார்கள்.//

Americans follow this strrictly even today... Even Canadians I guess.

Anonymous said...

தம்பி,

எனக்கெல்லாம் நல்ல சாப்பாடு கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்சினையே.

ஊரூரா அலையறதுல இது ஒரு பிரச்சினை. நேரத்துக்கு கிடைச்சா நல்லதா இருக்காது. நல்லது நமக்குத் தேவைப்படும் நேரத்துக்குக் கிடக்காது.

சின்னப் பையன் said...

சூப்பரா சொன்னீங்க.... டாக்டர் விக்னேஸ்வரன் வாழ்க!!!

pudugaithendral said...

உபயோகமுள்ள பயனுள்ள பதிவு.

வால்பையன் said...

அட எல்லாமே நல்ல பயனுள்ள தகவல்களா இருக்கே!
ஆனா நீங்க நல்ல சாப்பாட்டு ராமன்

TBCD said...

எந்த வேளையில் சாப்பிட்டாலும் கே.எப்.சி உடம்புக்கு நல்லதில்லையாமே....

கானா பிரபா said...

விக்கி

பயனுள்ள பதிவு, இதைப் பார்த்தாவது புதுகை அக்கா சமையல் குறிப்பை நிறுத்தணும் ;)

Thamira said...

எப்பிடி பின்னூட்டம் போடுறதுன்னே தனியா ரூம் போட்டு யோசிக்கிறதா இருக்குது. 'நன்றி டாக்டர் விக்கி'ன்னு போடலாம்னு நினைச்சேன். பாருங்க ச்சின்னப்பையனை. இணைக்கப்பட்டுள்ள படங்கள் அருமை.

Anonymous said...

நல்ல தகவல்கள்
நன்றி.
சுபாஷ்

Anonymous said...

//அட ஆமாம். எனக்கு காலையில் வாய் துர்நாற்றம் பிரச்சினை இருந்தது. இப்போது ஒரு வாரமாக டயட் கண்ட்ரோலில் (சரியான நேரத்தில் சரியான அளவு சாப்பிடுவது) இருப்பதால் இந்த பிரச்சினை முற்றிலும் இல்லை. ஆச்சரியம், நான் கவனிக்கவில்லை..//
அய்ய!!

Sanjai Gandhi said...

எங்க ஊர்ல 10 பேருக்கு கூட சர்க்கரை நோயோ அல்லது ரத்த கொதிப்போ அல்லது கொழுப்பு தொடர்பான நோய்களோ இல்லை... அவங்க எல்லாரும் 3 வேளையும் சோறு தான் சாப்பிடறாங்க... அவங்களோட சுறுசுறுப்புக்கு முன்னாடி நாமெல்லாம் சும்மா ஜுஜுபி..

நானும் பாத்துட்டு தான் இருக்கேன்.. ஆளாளுக்கு இந்த சோத்த பாத்தாலே காண்டாகறிங்க...

நான் சொல்றேன் அனுபவத்துல.. சோறு தான் ஆரோக்கியமான உணவு.. 3 வேளையும் சோறு சாப்பிடுங்க..

.. விரைவில் தனிப் பதிவே போடறேன்.. :)

நிஜமா நல்லவன் said...

விக்கி...அருமையான பதிவு....நானும் என்னோட உணவு பழக்கங்களை கொஞ்சம் மாற்ற நினைச்சிட்டு இருக்கும் போது பதிவு போட்டு இருக்கீங்க....ரொம்ப நன்றி!

ஜியா said...

எல்லாம் சரிண்ணே... டைட்டில் ஏண்ணே அப்படி??

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

பதிவு நல்லாருக்கு. ஆதாரங்களுடன் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இரவிலே சோத்தை அடைஞ்சுபோட்டு நித்திரைகொள்வது ஆரோக்கியமானதும் சிறந்த பழக்கமும். நான் இப்போது ஒரு மாதமாக இந்தப் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். அதாவது இரவில் High crab உணவுகளை உட்கொண்டு சீரான தூக்கத்திற்குச் சென்றால் உடல் ஆரோக்கியமாகவும் கவர்ச்சியாகவும் கட்டாகவும் இருக்கும். உதாரணமாக ஜாஸ்மின் அரிசியை பரிந்துரைக்கிறார்கள். சென்ற மாத ரீடர்ஸ் டைஜஸடை பாருங்கள்.

ஆதாரங்களுடன் விரைவில் பதிவொன்று இடமுயற்சிக்கிறேன்.

மதுவதனன் மௌ.

ஹேமா said...

காலத்திற்கு ஏற்றமாதிரி நல்ல பதிவு விக்கி.ஆனாலும் சோறு குவிச்சு நடுவில குழம்பும் கறியும் சாம்பாரும் விட்டுச் சாப்பிட்டாத்தானே சாப்பிட்டாச்சுன்னு சொல்றாங்க.
பாரமில்லாத சாப்பாடு செய்தால் சாப்பாட்டுக்கு முன்னமா பின்னமா என்கிறார்களே!

இப்போ நிறைய உணவு முறைகள் சுலபமாகவும் சத்தாகவும் வயிற்றுக்குப் பாரம் குறைந்ததாகவும் சமைக்க இருக்கிறது.முறையாக கவனித்துச் சாப்பிட்டு வந்தால் நோய்களுக்கு எங்கள் உடம்பில் இடமே இல்லையே!

VIKNESHWARAN ADAKKALAM said...

@வெண்பூ

நன்றி வெண்பூ. பின்னூட்டத்தோடு நல்ல தகவலையும் கொடுத்து இருக்கிங்க.

@ஜோசன் பால்ராஜ்

நன்றி அண்ணே. இனி 6.30 மணிக்கு அலாரம் வச்சிட்டு படுங்க.

@இரகசிய சினேகிதி

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

@விஜய் ஆனந்த்

நன்றி விஜய். மீண்டும் வருக.

@வெங்கட்ராமன்

நன்றி வெங்கட்ராமன்.

@அனானி

நல்ல தகவல். மிக்க நன்றி.

@வடகரை வேலன்

வேலன் ஐயா பாவம் நீங்கள். முடிந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@மங்களூர் சிவா

நன்றி சிவா அண்ணாச்சி. மறுபடியும் வாங்க.

@ச்சின்ன பையன்

உங்களுக்கு ஜே.கே.ரித்திஸ் நோய் இருக்கு. ஒரு விஷ ஊசி போடனும். உடனே சிகிச்சை எடுத்துக்குங்க.

@புதுகைத் தென்றல்

மிக்க நன்றி.மீண்டும் வருக.

@வால் பையன்

நன்றி வால் பையன். என்னை பார்க்காமலே கண்டு பிடிச்சிட்டிங்களே.

VIKNESHWARAN ADAKKALAM said...

@தீ.பி.சீ.டி

ஆமாம் ஆமாம். அது உடம்புக்கு ஆகாது. சரியாக சொன்னீர்கள்.

@கானா பிரபா

நன்றி அண்ணாச்சி. ஏன் புதுகை அக்கா மீது இப்படி ஒரு கொலை வெறி.

@தாமிர

நன்றிங்க. ச்சின்ன பையன்கிட்ட விளையாடாத்திங்க. அமேரிக்காவில் நாயன் படம் பார்க்க முடியாத கடுப்பில் இருக்காரு. உங்களை பற்றி கண்டன பதிவு போட்டாலும் போட்டிடுவார்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@சுபாஷ்

நன்றி சுபாஸ்

@அனானி

வெண்பூ மீது என்னக் கடுப்பு.

@சஞ்சய்

அவ்வ்வ். நோ.. கமேண்ட்ஸ். உங்க பதிவை போடுங்க வந்து மொய் எழுதி சோறு சாப்பிடுறேன்.. வருகைக்கு நன்றி.

@நிஜமா நல்லவன்

நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும். மாற்றுங்கள்x2. நன்றி அண்ணாச்சி.

@ஜி

வாங்க ஜி. தலைப்பா சும்மா... கோவிச்சுக்காதிங்க பாஸூ..

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மதுவதனன்

மிக்க நன்றி. மிகவும் நல்ல தகவலை சொல்லி இருக்கிங்க. பதிவைப் போடுங்கள். நிச்சயம் பல தகவல்கள் கொடுப்பீர்கள்.

@ஹேமா

நன்றி ஹேமா. ஆம் பலரும் அந்த நினைப்பில் தான் சுற்றுகிறார்கள். அளவான சாப்பாடு கட்டுப்படி ஆகாதாம். :(.

பரிசல்காரன் said...

விக்கி,

நீங்கள் நல்லதொரு தளத்திலே பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நன்றி பரிசல்...

ஆதவன் said...

உணவே மருந்து என்ற தமிழனின் கொள்கை மறைந்து போய்.. இன்றையத் தமிழன் மருந்தே உணவாக இருக்கிறான்!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ஆய்தன்

நன்றி ஆய்தன் அவர்களே.

Anonymous said...

தேவையான, அனைவருக்கும் பயன் தரும் கட்டுரை...தலைப்புதான் காரசாரமாக இருக்கு!?

VIKNESHWARAN ADAKKALAM said...

@மலர்விழி

மிக்க நன்றி.

கிரி said...

விக்னேஸ்வரன் உணவை வைத்து ஒரு ஆராய்ச்சியே செய்து இருக்கீங்க...

பல பயனுள்ள தகவல்கள் நன்றி

வடகரை வேலன் அவர்கள் கொலை பட்டினில இருப்பாரு போல அவருக்கு இதை எல்லாம் கூறி வெறுப்பேத்திட்டீங்க :-))

உங்கள் கவிதைகளோடு இதை போல பதிவுகளையும் எழுதினால் நன்று

கோவி.கண்ணன் said...

விக்கி,

நாளையிலிருந்து ஒரு தட்டு சோற்றைக் குறைத்துக் கொள்கிறேன் !

:)

kankaatchi.blogspot.com said...

entha unavai undaalum athu serimaanam aagiapiragu undaal oru viyaathiyum varaathu. neram kidaikkumpothellaam thinru kondirunthal nam udambu kozhuppathudan marutthuvargalum nammaaal kozhuppaargal enpathuthaan unmai.