(தந்தையின் பாசம்)
தமிழ்ப் பள்ளி ஒன்றில், ஆசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு செலுத்துதல் சம்மந்தமான தலைப்பை ஒட்டி விவாதித்த சமயத்தில், வகுபிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை கேட்டான்.
மாணவன்: ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாலம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாரு அவர்களின் பாசத்தை நீடிக்கச் செய்வது?
ஆசிரியர்: உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.
மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.
ஆசிரியர்: நம் பள்ளி தோட்டத்திற்குச் செல். அங்கு இருக்கும் பூக்களை பார்த்துக் கொண்டு நட. அதில் மிக அழகாக காட்சியலிக்கும் ஒரு பூவை தேர்வு செய்து கொண்டுவா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் பூவை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.
மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு பூவையும் காணவில்லை.
ஆசிரியர்: நான் கொண்டு வரச் சொன்ன பூ எங்கே?
மாணவன்: ஐயா, நான் பூக்களை பார்த்தபடி நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான பூக்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான பூவை அல்லவா. ஆகயால் நான் தொடர்ந்து நடந்தேன். பின் இருந்த பூக்கள் சில அழகாக இருந்தன ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது. இறுதியில் என்னால் எந்தப் பூவையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.
ஆசிரியர்: அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில்.
மாணவன்: விளங்கவில்லை ஐயா.
ஆசிரியர்: நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்தை மாரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துக்கங்களை பகிர்துக் கொண்டு நம் மீது பாசம் காட்டுபவருக்கு, நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.
Wednesday, April 16, 2008
பூவும் பாசமும்- குட்டிக் கதை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஒரு சின்ன மலர் வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக இதழ் மலர்ந்து சொல்லியிருக்கிறது .அருமையான கருத்து.இது போல் நிறைய சொல்லுங்கள் படிக்க க் காத்திருக்கிறோம்
நன்றி கோமா... தொடர்ந்து வாங்க...
great story.......... i think many are losing good heart people cuz of TAMAK.
Post a Comment