காபி வெள்ளையாக இருக்குமா என கேட்கின்றீர்களா? வேள்ளைக் காபி சமைக்க பயன்படுத்தும் காபி கொட்டைகளை வெண்ணையில் நன்கு ‘ரோஸ்ட்’ செய்துவிடுவார்கள். இந்த செய்முறை, காபியின் இயற் தன்மையான கருப்பு நிறத்தை மாற்றி வெண்மை நிறமாக காட்டுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பேராக் மாநிலம் ஈய மண் உற்பத்தியில் பெயர் போனதாக திகழ்ந்தது. அச்சமயத்தில் ஈப்போ நகரின் ஈய ஆலை சீன தொழிலாளர்கள், காபி கொட்டைகளை வெண்ணையில் ‘ரோஸ்ட்’ செய்து பருகும் வழக்கத்தை கொண்டவர்களாக இருந்தார்கள். இதனால் வெள்ளை கபி என்றால் ஈப்போ என்றாகிவிட்டது.
நான் கெடா(கடாரம்) மாநிலத்தில் இருக்கும் வட மலேசிய பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் வெளி மாநிலங்களில் வெள்ளை காப்பி அறிமுகம் ஆனது. ஆனால் அதன் இயற்கையாக வசனைத் தன்மையும் சுவையும் குறைந்தே காணப்பட்டது. தற்சமயம் சிறிய பாக்கெட்டுகளில் வெள்ளை காபி விற்பனைக்கு உள்ளது. சீனி, கிரிமர் என கலவையை சேர்த்து விற்க்கப்படும் வெள்ளை காபி இயற்கையான சுவையோடு இருக்கிறது. சாதரன THREE-IN-ONE MIX கலவை காபியை குடிப்பதற்கும் வெள்ளை காபி THREE-IN-ONE MIX கலவைக்கும் நிறய மாறுபடுகள் உள்ளதை குடிப்பவர்கள் உணரலாம்.
எனக்கு அதீத இனிப்பு பிடிக்காது. முன்பு காபி போடும் சீனக் கிழவனுக்கு உடல் நலம் இல்லையாம். அதனால் புதிய ஆள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறான். புதியவனிடம் சீனியை குறைத்து போட சொல்லியிருக்க வேண்டும். புதியவன் கலக்கும் முறையில் வெள்ளை காபியின் பழைய சுவை இல்லாமல் இருக்கிறது. இனி வெள்ளை காபி எனக்கு பிடிக்காமல் போகலாம்.
நேற்று வெள்ளை காபி குடிக்க தொன்றிற்று. ‘ஸ்ட்ராங்கா’ ஒரு வெள்ளை காபி வெண்டும் என சொல்லிவிட்டு அமர்ந்திருந்தேன். வெள்ளைக் காபியும் வந்தது. கொஞ்சம் தான் குடித்தேன். பாதி கிண்ண காபியை அப்படியே வைத்துவிட்டேன். புதிதாக வந்திருந்த காபி கலக்கும் ஆள் அதிகமாக சீனியை சேர்த்துவிட்டிருந்தான்.
எனக்கு அதீத இனிப்பு பிடிக்காது. முன்பு காபி போடும் சீனக் கிழவனுக்கு உடல் நலம் இல்லையாம். அதனால் புதிய ஆள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறான். புதியவனிடம் சீனியை குறைத்து போட சொல்லியிருக்க வேண்டும். புதியவன் கலக்கும் முறையில் வெள்ளை காபியின் பழைய சுவை இல்லாமல் இருக்கிறது. இனி வெள்ளை காபி எனக்கு பிடிக்காமல் போகலாம்.
19 comments:
சம்பந்தபட்டவரை கொஞ்சம் மரியாதையாக விளிகலாமே விக்னேஷ்...கண்களை உறுத்துகிறது...அப்புறம் இந்த White Coffeeயை விட எனக்கு Black Coffeeத்தான் அதிகம் பிடிச்சிருக்கு. அதிலும் ஈப்போ பெரிய சந்தையின் இரண்டாம் தளத்தில் விற்கும் காப்பிக்கு ஏக கிராக்கி. அதிலும் நாமே தேர்வு செய்யலாம். நான் பெரும்பாலும் அரபிக்காவும் ரோபஸ்த்தாவும் சேர்ந்த கலவையைத்தான் வாங்குவேன்.ஆனால் இங்கு தலைநகருக்கு வந்தப் பிறகு ப்ரு காப்பி என்னைப் பிடித்துக்கொண்டது :)
பதிவை படித்ததும் வெள்ளை கொட்டை வடிநீர் (அட.. காப்பிதாங்க!) குடிக்கணும் போல ஆசையா இருக்கு..
//இனி வெள்ளை காபி எனக்கு பிடிக்காமல் போகலாம்//
அந்த சீனக் கிழவன் போல நீங்களே வீட்டில் வெள்ளை காபி போட பழகி கொண்டால் போச்சு..
சுவை பட எழுதியிருக்கிறாய் தம்பி. மறக்காம இந்தியா வரும்போ அண்ணனுக்கு ஒரு பாக்கெட் வெள்ளை காபி பொடி வாங்கிட்டு வா. :D
old Town White coffee கூடத்தான் பிரபலம். நிறைய தடவை நண்பர்களை அங்கே அழைத்து சென்றிருக்கிறேன். ஆனால் நான் குடித்தாதில்லை. எனக்கும் காப்பிக்கும் ரொம்ப ரொம்ப தூரம். :-))
முன்பு காபி போடும் சீனக் கிழவனுக்கு உடல் நலம் இல்லையாம்.
அந்த சீனக் கிழவர் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்.
//இனியவள் புனிதா said...
சம்பந்தபட்டவரை கொஞ்சம் மரியாதையாக விளிகலாமே விக்னேஷ்...கண்களை உறுத்துகிறது...அப்புறம் இந்த White Coffeeயை விட எனக்கு Black Coffeeத்தான் அதிகம் பிடிச்சிருக்கு. அதிலும் ஈப்போ பெரிய சந்தையின் இரண்டாம் தளத்தில் விற்கும் காப்பிக்கு ஏக கிராக்கி. அதிலும் நாமே தேர்வு செய்யலாம். நான் பெரும்பாலும் அரபிக்காவும் ரோபஸ்த்தாவும் சேர்ந்த கலவையைத்தான் வாங்குவேன்.ஆனால் இங்கு தலைநகருக்கு வந்தப் பிறகு ப்ரு காப்பி என்னைப் பிடித்துக்கொண்டது :)//
:)) ஐயய்யோ மரியாதை இல்லாமல் பேசிவிட்டேனா... மன்னிச்சுடுங்க... ப்ரு காப்பி பிடித்துக் கொண்டதா.. போலிஸில் புகார் கொடுக்கட்டுமா?
//PPattian : புபட்டியன் said...
பதிவை படித்ததும் வெள்ளை கொட்டை வடிநீர் (அட.. காப்பிதாங்க!) குடிக்கணும் போல ஆசையா இருக்கு..//
வெள்ளை கொட்டை வடிநீர் ஆஹா அர்புதம் ஆனந்தம் பேரானந்தம்... நீங்கள் ஒரு ஞானி... விஞ்ஞானி... நல்ல வார்த்தையை சொல்லி இருக்கிங்க...
//அந்த சீனக் கிழவன் போல நீங்களே வீட்டில் வெள்ளை காபி போட பழகி கொண்டால் போச்சு..///
பழகினேன்... நான் போட்டால் சினக் கிழவனை விட சிறப்பாக இருக்குங்க ஹரி... என்ன பன்னலாம்...
//சேவியர் said...
சுவை பட எழுதியிருக்கிறாய் தம்பி. மறக்காம இந்தியா வரும்போ அண்ணனுக்கு ஒரு பாக்கெட் வெள்ளை காபி பொடி வாங்கிட்டு வா. :D//
ஒரு பாக்கொட் எதற்கு... கேட்பதை பெருசா கேட்க்க வேண்டாமா?
//.:: மை ஃபிரண்ட் ::. said...
old Town White coffee கூடத்தான் பிரபலம். நிறைய தடவை நண்பர்களை அங்கே அழைத்து சென்றிருக்கிறேன். ஆனால் நான் குடித்தாதில்லை. எனக்கும் காப்பிக்கும் ரொம்ப ரொம்ப தூரம். :-))///
எல்லாம் ஒரு ரகம் என தெரிந்தும் பின்னூட்டம் போட்ட உங்களை நான் மதிக்கிறேன்...
//அந்த சீனக் கிழவர் சீக்கிரம் குணமடைய வேண்டிக்கொள்ளுங்கள்.//
அவர் நல்லா இருந்த எல்லோருக்கும் நல்லது தானே...
விக்ணேஷ், நானும் நன்றாக காப்பி போடுவேன். குடித்து பார்கிறீர்களா? ஆனால் நான் சார்ஜ் பன்னுவேன்....சரியா? நானும் பலமுறை நண்பர்களோடு Old town coffee house க்கு சென்றுள்ளேன். அது ஒரு தனி ருசிதான்...
//ப்ரு காப்பி பிடித்துக் கொண்டதா.. போலிஸில் புகார் கொடுக்கட்டுமா?//
அது கொஞ்சம் கஷ்டம்தான்...நானாக ஏற்றுக் கொண்ட சுகமான தொல்லைகள்....
//:)) ஐயய்யோ மரியாதை இல்லாமல் பேசிவிட்டேனா... மன்னிச்சுடுங்க...//
மன்னிப்பெல்லாம் எதற்கு? :)
//கு.உஷாதேவி said...
விக்ணேஷ், நானும் நன்றாக காப்பி போடுவேன். குடித்து பார்கிறீர்களா? ஆனால் நான் சார்ஜ் பன்னுவேன்....சரியா? நானும் பலமுறை நண்பர்களோடு Old town coffee house க்கு சென்றுள்ளேன். அது ஒரு தனி ருசிதான்...//
ஏன் இந்த கொலை முயற்சி உஷா அவர்களே.... அதற்கு நான் காசு வேறு கொடுக்கனுமா...
//அது கொஞ்சம் கஷ்டம்தான்...நானாக ஏற்றுக் கொண்ட சுகமான தொல்லைகள்....//
அது சரி...
நேக்கும் ஒரு பாக்கெட் வெண்காபி கிடைக்குமா
அந்த சைனா தாத்தாக்கு எப்ப குணமாகும்
நம்மூர்ல சைனா டீதான் பேமஸ்
இப்பதான் சைனா காபி கேள்வி படறேன்
பாம்பின் கால் பாம்பறியும்...
வெண்ணைக்குத்தான் வெண்ணை காபி பிடிக்கும்... ( நான் என்னை சொன்னேன்!!!!)...:-)))
//ஒரு பாக்கொட் எதற்கு... கேட்பதை பெருசா கேட்க்க வேண்டாமா?//
நான் "சின்ன" பாக்கெட்டுன்னு சொல்லவே இல்லையே ;)
--
சேவியர்
உங்க பதிவு பார்த்த உடன், உடனே ஒரு கப் காபி எடுத்து வந்து விட்டேன். காபி க்கு இருக்கும் சுவையே தனி தான்!
//புனித் கைலாஷ் said...
உங்க பதிவு பார்த்த உடன், உடனே ஒரு கப் காபி எடுத்து வந்து விட்டேன். காபி க்கு இருக்கும் சுவையே தனி தான்!//
ம்ம்ம் உண்மைதாங்க... வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...
Post a Comment