மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை எனும் புத்தகம் ஜானகிராமன் ஐயா அவர்களால் எழுதப்பட்டது. இதில் வரும் கவிதை ஒன்றை என்றேன்றும் என்னால் மறக்க முடியாது. இன்றும் கூட இப்புத்தகம் என் கண்ணில் படுகையில் இக்கவிதை வரிகள் என் எண்ண அலைகளை ஆக்கிரமிக்கும். லேசான சோகம் ஒன்று என்னை ஆட்கொள்ளும்.
மலாயாவின் பொருளாதாரம் முப்பதுகளில் படுவீழ்ச்சி கண்டிருந்தது. இரப்பரின் விலை மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருந்ததால், அதன் உற்பத்தியை அதிகமாகவே குறைத்துவிட நேர்ந்தது. அதனால் தமிழ்த் தொழிலாளர்கள் பலர் திரும்ப இந்திய நாட்டிற்கே கட்டாயமாக அனுப்பி வைக்க நேர்ந்தது.
அந்நிலையில் பால்மரம் சீவும் தொழிலாளி ஒருவன் துரையையும் கிராணியையும் கங்காணியையும் மக்களையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் சிந்துவதாக ஒரு தொழிலாளியின் நோக்கு நிலையில் ரா.சுப்பிரமணி ஐயர் என்பவர் ஒரு கவிதையை இயற்றியுள்ளார். இக்கவிதையில் தோட்டபுற பின்னனி, வாழ்வியல் கூறுகள், மண்ணின் மனம் ஆகியன சிறப்பாக வெளிபடுத்தப்பட்டுள்ளன.
போய்வாரேன் பால்மரமே போய்வாரேன் பால்மரமே
போய்வாரேன் பால்மரமே போய்வாரேன் பால்மரமே
கண்ணாடித்துரையும் போனார்
கங்காணி வீரன் போனார்
பின்னாடி கிராணி போனார்
தாங்காமல் நானும் போரேன்
என்னமோ பின்னாலே எப்போதூன்னை
காணப்போரேன்
(போய்)
பவுனுக்கு பவுன்விலையாய்
பாலுவித்தக் காலம் போச்சே
புளிவிலைக்கும் தோற்றுப் போச்சே
பாலுவெட்டும் நிறுத்தலாச்சே
யார்செய்த மோசம் பாராய்
எவரிட்டசாபம் கூறாய்
(போய்)
ரொட்டிப்பால் ஒருவிலையும்
ஒட்டுப்பால் ஒருவிலையும்
பட்டைக்கு ஒருவிலையும்
(பாலு) கொட்டைக்கு ஒருவிலையும்
தங்கம்போல் விலைதந்தாய்
பங்கமாய் நிலைகுலைந்தாய்
(போய்)
தீபாவளி படியென்றும்
பொங்கலுக்குப் பொடியென்றும்
சீராய்கொடுத்த எந்தன்
சிரித்தமுகத்துத் துரை
கையைத்தான் விரிகிறாரே
காசென்று கேட்டாலிப்போ
(போய்)
கற்பகமென்று சொல்வார்
கண்டதில்லை இவ்வுலகில்
கற்பகம் என்று சொல்ல
கண்கண்ட மரமும் நீயே
காலமே கோலமோ
காப்பாற்றுவார் இல்லையே
(போய்)
உன்னைநம்பி வாழ்ந்தவர்கள்
எத்தனை பேர்களுண்டு
அத்தனை பேர்களுமே
அழுதுகொண்டு போகுறாரே
உயிரளவும் மறக்கமாட்டேன்
ஊருக்குப் போய்வாரேன்
(போய்)
ஆதாரம் மலேசியத் தமிழ் கவிதை மாநாடு
மலர் 2000 பக்கம் 153
நன்றி : திரு.ஜானகிராமன் (மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை)
14 comments:
கவிதை மனதை கனக்கச் செய்கிறது.
nice book ...........
every indian(?) need to read this book....
Dr.Sintok
நெஞ்சு பொறுக்குதில்லையே, எம் முன்னோர்கள் பட்டத் துன்பங்களைக் கேட்டால்... !
//வெங்கட்ராமன் said...
கவிதை மனதை கனக்கச் செய்கிறது.//
வாங்க வெங்கட்ராமன்... ம்ம் கவிதை வரிகள் சூப்பராக இருக்கிறது இல்லையா...
//nice book ...........
every indian(?) need to read this book....
Dr.Sintok//
நன்றி முரளி... சிறந்த ஆய்வு புத்தகம்...
//சதீசு குமார் said...
நெஞ்சு பொறுக்குதில்லையே, எம் முன்னோர்கள் பட்டத் துன்பங்களைக் கேட்டால்... !//
முன்னோர்கள் என்ன பின்னோர்களும் அப்படிதான் துன்பப்பட போகிறார்கள் போல.. :(
சட்டென்று படித்தவுடன் மீண்டும் பிரச்சனை வந்துவிட்டதோ என்று நினைத்துவிட்டேன்..
ஃஃஃஃஃஃஃ
அருமையான கவிதை வரிகள்..
எளிமையான, அதே சமயம், நெஞ்சை உலுக்கும் வரிகள்...
தமிழர்கள் புலம் பெயர்ந்து இருக்கும் எல்லா இடங்களில் இது போல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது. அந்த கவிதை வரிகள் உணர்வை பிரதிபலிக்கின்றன.
//TBCD said...
சட்டென்று படித்தவுடன் மீண்டும் பிரச்சனை வந்துவிட்டதோ என்று நினைத்துவிட்டேன்..
ஃஃஃஃஃஃஃ
அருமையான கவிதை வரிகள்..
எளிமையான, அதே சமயம், நெஞ்சை உலுக்கும் வரிகள்...//
நன்றி நண்பரே...
//தமிழ் பிரியன் said...
தமிழர்கள் புலம் பெயர்ந்து இருக்கும் எல்லா இடங்களில் இது போல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது. அந்த கவிதை வரிகள் உணர்வை பிரதிபலிக்கின்றன.//
நன்றி... தோழரே
மலாயாவுக்கு சஞ்சிக்கூலியாக வந்து தமிழகத் தாய்மண்ணுக்குத் திரும்பும் ஓர் தொழிலாளியின் கண்ணீர்ப் பாட்டு மனதை உருக்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்த தமிழரின் வரலாற்றுப் பதிவு இது. காடாக இருந்த மலாயா மண்ணை நாடாக மாற்றிய நமது முன்னோர்களின் ஈர வரலாறு இது. இன்றைய இளையோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பாடல் இது.
//சுப.நற்குணன் - மலேசியா said...
மலாயாவுக்கு சஞ்சிக்கூலியாக வந்து தமிழகத் தாய்மண்ணுக்குத் திரும்பும் ஓர் தொழிலாளியின் கண்ணீர்ப் பாட்டு மனதை உருக்குகிறது. தமிழ்நாட்டிலிருந்து மலாயாவுக்கு வந்த தமிழரின் வரலாற்றுப் பதிவு இது. காடாக இருந்த மலாயா மண்ணை நாடாக மாற்றிய நமது முன்னோர்களின் ஈர வரலாறு இது. இன்றைய இளையோர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பாடல் இது.//
வருகைக்கும் கருத்திக்கும் நன்றி ஐயா...
நல்ல கவிதை... பதிவு...
இன்றைக்குத்தான் இந்தப் புத்தகம் கையில் கிடைத்தது....முழுதும் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்
Post a Comment