"ஆயா.... பையனுக்கு பொஸ்தகம் வாங்கனும், ஐயா கிட்ட கேட்டிருந்தேன்",
தலையை சொரிந்தபடி நின்றிருந்தான் குப்புசாமி.
தலையை சொரிந்தபடி நின்றிருந்தான் குப்புசாமி.
குப்புசாமி அந்த கிராமத்தில் தோட்ட வேலை பார்ப்பவன். இது போக மதிய வேளைகளில் கிராமத்தார்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து கைகாசு வாங்கிக் கொள்வான். கஷ்டபடும் குடும்பம்.
அவன் ஆயா என அழைத்தது சின்ன தாயி எனும் கிழவியை. கிழவியின் குடும்பம் வசதிபடைத்தது. கிழவி குப்புசாமியை நீசனை பார்ப்பது போல பார்த்தாள்.
"மாச கடைசி ஆனா ஆளாளுக்கு வந்துடுங்கடா, சண்டால பசங்களா, நாங்க என்ன காச மரத்துலயாடா நட்டு வச்சிருக்கோம்", கடுகடுவென வார்த்தைகளை கொட்டினாள் கிழவி.
"எல்லாம் இந்த குணா பையன சொல்லனும். அவனவன வைக்க வேண்டிய எடத்துல வச்சாதானே, கண்டவனுங்ககிட்ட பழகுறது, இப்ப என்னடானா வீட்டு வாசல்ல வந்து நிக்குறானுங்க" கிழவி முனங்கிக் கொண்டே பணம் எடுக்க போனாள்.
குப்புசாமியின் காதில் அது கேட்காமல் இல்லை. கிழவியின் புத்தி அவன் அறிந்தது தான். அதுவும் இல்லாமல் தற்சமயம் பணம் அவனுக்கு முக்கியம். யார் என்ன சொன்னால் என்ன. பயனுக்கு புதிய நோட்டு புஸ்தகம் வாங்க வேண்டும்.
வேண்டா வெறுப்பாக குப்புசாமியிடம் பணத்தை நீட்டினாள் கிழவி. அதை வாங்கிய குப்புசாமியின் கை அவள் மீது பட்டது. கிழவி ஆத்திரமடைந்தாள்.
"எட்டி நின்னு வாங்கிக்க முடியாதாடா எடுபட்ட பயலே" ஏசியவாரு கையை சேலையில் துடைத்தாள்.
குப்புசாமி முகம் சுளிக்காமல் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.
அவன் கிளம்பியதும் துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள் கிழவி.
"என்ன பாட்டி, இன்னிக்கு இவ்வளோ சீக்கிரம் குளிக்க போற?" கிழவியின் பேத்தி கண்மணி கேட்டாள்.
"அந்த கீழ் சாதிக்காரப் பய கை என் மேல பட்டுறிச்சுடீ".
"நீ திருந்த மாட்ட பாட்டி".
"அடி போடி தீட்டு பட்டுறிச்சுனு சொல்றேன். இப்பதான் பேச வந்துட்டா".
வேகமாய் குளியலறையை நோக்கிச் சென்றாள் கிழவி. எதிர் பாரா விதமாக தடுக்கி விழுந்து தலையில் பலமான காயம் பட்டது. சற்று நேரத்தில் கிழவி உயிரை விட்டாள்.
****
"டேய் குப்பு! பெரியவர் வீட்டு கிழவி மண்டய போட்டுறிச்சி. உன்ன பந்தல் போட கூப்பிடுறாங்க".
குப்புசாமி மறுபடியும் கிழவி வீட்டை நோக்கி ஓடினான். பந்தல் போட்டு மற்ற வேலைகளை முடித்து திரும்புவதற்குள் அவனுக்கு சோர்ந்துவிட்டது. வீட்டுக்குள் நுழைந்த குப்புசாமியிடம் அவனது மகன் கேட்கிறான்.
"அப்பா நோட்டு புஸ்தகம் வாங்கிட்டியா?"
"டேய், செத்து போன கிழவி கொடுத்த காசு டா, பொஸ்தகம் வாங்கினா தீட்டாகிடும், அடுத்த சம்பளதில் அப்பா வாங்கி கொடுக்கிறேன் சரியா".
உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி.
27 comments:
காலையில் போட்ட இப்பதிவு internet explorerரில் திறக்க முடியாமல் போனது. இதை சரி செய்தற்காக பழைய பதிவை அழித்துவிடேன் அதனால் பின்னூட்டங்களும் அழிந்துவிட்டன. நண்பர்கள் மன்னிக்கவும்... :( இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்..
கதை மிகமிக அருமை நண்பா
வாழ்த்துக்கள்
மாசிலா has left a new comment on your post "தீட்டு பட்டுவிடும்":
அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாப்போல சரியான சாட்டை அடி கொடுத்து கதைய முடித்து இருக்கீங்க. பலே பலே! நல்ல திறமை. கொஞ்சமும் எதிர்பாராத முடிவுதான் போங்க. மனதில் நிற்கும் கருத்தாழம் உள்ள கதை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி திரு.விக்னேஷ்வரன்.
//நன்றி மாசிலா அவர்களே... உங்கள் பின்னூட்டம் ஜி-மெயிலில் இருந்ததால் காப்பி பேஸ்ட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.//
நாமக்கல் சிபி has left a new comment on your post "தீட்டு பட்டுவிடும்":
வெல் நரேட்டிங்க்
உங்க பின்னூட்டத்தையும் காப்பாற்றிவிட்டேன்... என்ன சொல்லவறிங்க
/இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்../
இதுக்கு என்ன அர்த்தம்?
இதுக்கு முன்னாடி என்னா வாத்து மாறியா நடந்துகிட்டு இருந்தீங்க.. இப்ப என்னமோ புதுசா நடக்காம பாத்துகுறேங்குறீங்க..
இந்த கதையில வர ஸ்ரேயாதான் அந்த கிழவின்னு, நான் சொல்லலே.. விக்கி உங்க எல்லார்கிட்டயும் சொல்ல சொன்னாரு..
நல்லா கதை எழுதறீங்க..கவிதை எழுதறீங்க..கட்டுரை எழுதறீங்க
வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்
ஜாதி வெறியைப்பற்றியும், தமிழர்களை பிடித்திருக்கும் மூட நம்பிக்கைகளைப்பற்றியும் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். 3 முறை படித்தேன். வாழ்த்துக்கள்!
//அதிஷா said...
கதை மிகமிக அருமை நண்பா
வாழ்த்துக்கள்//
நன்றி அதிஷா...
//இதுக்கு என்ன அர்த்தம்?
இதுக்கு முன்னாடி என்னா வாத்து மாறியா நடந்துகிட்டு இருந்தீங்க.. இப்ப என்னமோ புதுசா நடக்காம பாத்துகுறேங்குறீங்க..//
நக்கல் தான்யா...
// சதீசு குமார் said...
இந்த கதையில வர ஸ்ரேயாதான் அந்த கிழவின்னு, நான் சொல்லலே.. விக்கி உங்க எல்லார்கிட்டயும் சொல்ல சொன்னாரு..//
என்ன தைரியம் இருந்தா ஸ்ரேயாவ பார்த்து இப்படி ஒரு வார்த்தைய விடுவிங்க... ஸ்ரேயா என் ஆளு.. இனி யாராவது தப்பா பேசுனா அவுங்கள பற்றி கண்டன பதிவு போட்டிருவேன் ஜாக்கிரதை...
// கிரி said...
நல்லா கதை எழுதறீங்க..கவிதை எழுதறீங்க..கட்டுரை எழுதறீங்க
வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்//
எனக்கு கவிதை வராதுங்க... எப்போதாவது அப்படி தோன்றினா சட்டுனு எழுதிடுவேன். அவ்வளோதான்...வாழ்த்துக்கு மிக்க நன்றி...
//கயல்விழி said...
ஜாதி வெறியைப்பற்றியும், தமிழர்களை பிடித்திருக்கும் மூட நம்பிக்கைகளைப்பற்றியும் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். 3 முறை படித்தேன். வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி கயல்விழி... என் பதிவையும் 3 முறை படிச்சிருக்கிங்களே அதுக்கு மீண்டும் ஒரு நன்றி...
கதையை அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
கணனி மக்கர் செய்வதற்கு காரனம் internetல் உலாவரும் ஹேக்கர்ஸ் மற்றும் அவர்கள் விடும் வைரஸ் அம்புகள்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com
விக்கி,
அருமை அருமை..
ஃஃஃ
இது இந்தியாவில் நடக்கின்றதா..மலேசியாவில் நடக்கின்றதா..??
மலேசியாவில் இதுப் போன்று உணமையில் இன்னும் நடக்கிறதா...??
புதசெவி...??
//
உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி. //
1. எடுபட்ட சாதிக்காரப் பயலுகளுக்கு என்ன பட்டாலும் பொறுப்பு இல்லை என்றும், பிள்ளையின் படிப்பை விட கள்ளுக்கடைதான் முக்கியம் என்ற கீழ் புத்திதான் எப்போதும் இருக்கும் என்பதையும் உணர வைத்த அருமையான கதை!
2. கீழ்ச்சாதிக் காரர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்று உயர்சாதிக் கார வழக்கம் இருக்கிறது. ஆனால் சாவதற்கு முன் கொடுத்த பணம் தீட்டாகிப் போகும் என்ற வழக்கம் எந்த ஊரில்? சாவதற்கு முன் உயில் எழுதி வைக்கும் சொத்துக்கள் எல்லாம் தீட்டா என்று யோசிக்க அந்த கீழ்சாதிப் பயல் குப்புசாமிக்கு அறிவில்லையா?
3. கீழ்சாதிக் காரர்களைக் குடிகாரர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் தொடர்ந்து காட்டும் கலைநயத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள் அல்லது கைவிடப் போகிறீர்கள்?
//கோவை விஜய் said...
கதையை அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
கணனி மக்கர் செய்வதற்கு காரனம் internetல் உலாவரும் ஹேக்கர்ஸ் மற்றும் அவர்கள் விடும் வைரஸ் அம்புகள்.
கோவை விஜய்//
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழரே...
//சுந்தரவடிவேல் said...
//
உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி. //
1. எடுபட்ட சாதிக்காரப் பயலுகளுக்கு என்ன பட்டாலும் பொறுப்பு இல்லை என்றும், பிள்ளையின் படிப்பை விட கள்ளுக்கடைதான் முக்கியம் என்ற கீழ் புத்திதான் எப்போதும் இருக்கும் என்பதையும் உணர வைத்த அருமையான கதை!
2. கீழ்ச்சாதிக் காரர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்று உயர்சாதிக் கார வழக்கம் இருக்கிறது. ஆனால் சாவதற்கு முன் கொடுத்த பணம் தீட்டாகிப் போகும் என்ற வழக்கம் எந்த ஊரில்? சாவதற்கு முன் உயில் எழுதி வைக்கும் சொத்துக்கள் எல்லாம் தீட்டா என்று யோசிக்க அந்த கீழ்சாதிப் பயல் குப்புசாமிக்கு அறிவில்லையா?
3. கீழ்சாதிக் காரர்களைக் குடிகாரர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் தொடர்ந்து காட்டும் கலைநயத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள் அல்லது கைவிடப் போகிறீர்கள்?//
வருகைக்கு நன்றி நண்பரே... உலகில் இப்படி நடக்கவில்லை என்பதை உங்களால் நிருபிக்க முடிந்தால் கதையை மாற்றியமைக்க நான் தயார்...
// TBCD said...
விக்கி,
அருமை அருமை..
ஃஃஃ
இது இந்தியாவில் நடக்கின்றதா..மலேசியாவில் நடக்கின்றதா..??
மலேசியாவில் இதுப் போன்று உணமையில் இன்னும் நடக்கிறதா...??
புதசெவி...??//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பரே... மலேசியாவில் நடக்கிறதா என தெரியவில்லை... நடந்திருக்கலாம்...
உங்கள் கதையை மாற்றியமைப்பது என் நோக்கமில்லை. ஆனால் உங்களை யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். "உயர்ந்தோரை" அப்பாவிகளாகவும் நல்லவர்களாகவும் அதே நேரத்தில் "தாழ்ந்தோரை" கயவர்களாகவும், பொறுக்கி, பொறுப்பற்றவர்களாகவும் வலிந்து காட்டும் மேட்டுக்குடி கலை/இலக்கிய/கலாச்சாரக் காவலர்களுக்கு உங்களது இந்தக் கதை ஒத்து ஊதுகிறது என்று உங்களுக்குப் புரிகிறதா புரியவில்லையா என்று மட்டும் சொல்லிவிடுங்கள். இதில் ஒளிந்திருக்கும் ஆதிக்க வன்மம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதா அல்லது உங்களையறியாமலேயே உங்களுக்குள் புகட்டப்பட்டு இப்போது வெளிவருகிறதா என்பதை அறிந்துகொள்ள ஆவல். நன்றி!
//1. எடுபட்ட சாதிக்காரப் பயலுகளுக்கு என்ன பட்டாலும் பொறுப்பு இல்லை என்றும், பிள்ளையின் படிப்பை விட கள்ளுக்கடைதான் முக்கியம் என்ற கீழ் புத்திதான் எப்போதும் இருக்கும் என்பதையும் உணர வைத்த அருமையான கதை!//
இந்த கமென்டைப் பார்க்கும் முன்னேயே இப்படித்தான் நானும் நினைத்தேன்....
விக்ணேஷ்,ரொம்ப நல்லா கதை எழுதுரீங்க! வாழ்த்துக்கள்!
//காலையில் போட்ட இப்பதிவு internet explorerரில் திறக்க முடியாமல் போனது//
Neththu athaan comment poda mudiyalaiyaa??
amaam.. Shreya kkum kathaikkum enna sambantham???
// ஜி said...
காலையில் போட்ட இப்பதிவு internet explorerரில் திறக்க முடியாமல் போனது
Neththu athaan comment poda mudiyalaiyaa??
amaam.. Shreya kkum kathaikkum enna sambantham???//
சும்மாதாங்க... ஸ்ரேயா அழகா இல்லையா...
பதிவ படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்கட்டும்னுதான்...
//சும்மாதாங்க... ஸ்ரேயா அழகா இல்லையா...
பதிவ படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்கட்டும்னுதான்...//
எந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது, எதை விடுவது என்பது உங்களது தனியுரிமை என்றபோதுங்கூட, நீங்கள் கேள்விகளைத் தேர்ந்தெடுத்து பதிலளிக்கும் விதம் அருமை! இது குறித்தும் சுய விமரிசனம் செய்துகொள்வது அவசியம் :))
உங்கள் வருகைக்கு நன்றி... மன்னிக்கவும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு புரியவில்லை..
சுந்தரவடிவேல்,
கதையில் வரும் வசனங்களை இவருடையதாகப் (இவருடைய எண்ணங்களாக) பொருத்திப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
எழுதப் பட்ட நோக்கமும், விவாதமும் வெவ்வேறு திசைகளில் நகர்வதாகவே உணர்கிறேன்!
கதை நல்லா இருக்கு ஷ்ரேயா படம் சூப்பரா இருக்கு.
Post a Comment