Monday, June 22, 2009

நீயும் என் தோழனே! –சேகுவாரா.

உறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளிபடும் இளமை, பச்சை நிறத்திலான தொள தொளத்த காற்சடை, பூட்சுகளும், கருப்பு தொப்பியும் அதில் சிகப்பு நட்சத்திரமும் அவரோடு ஒட்டி பிறந்த அம்சங்கள் போல தோன்றின. யார் இவர்? இவர்தான் பல புரட்சிகளை உருவாக்கியவர். உலகெங்கும் உள்ள இளைஞர்களை வசீகரித்து, திரும்பிப் பார்க்க வைத்தவர். அவருடைய ஏதோவொன்று மனிதர்களின் இதயத்துக்குள்ளும், மூளைக்குள்ளும் கலந்துவிட்டிருக்கிறது.

அவர்தான் சே குவாரா அல்லது சே என்று அழைக்கப்படும் எர்னெஸ்டோ குவாரா. 1928 ஜூன் 14-ஆம் நாள், அர்ஜெண்டினா ரோசாரியோவில் பிறந்த சே, வசதியான நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆஸ்த்துமா நோயால் அவதி பட்டாலும், உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்டார். 1952-இல், பியூனோஸ் எய்ரஸ் பல்கலைகழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு மருத்துவ மாணவரான இவர், பிற்காலத்தில் இலட்சிய வீரர் என்று உலகளவில் பேரெடுத்தார். மாணவர் பருவத்திலேயே, பெரோண் ஆட்சியை எதிர்த்து, அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

பட்டம் பெற்ற பிறகு, தனது மோட்டார் சைக்கிளிலேயே குவாதமாலாவிற்கு சென்று, அங்கு கம்யூனிச ஆதரவாளராகிய ஜெக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில் (1951-54), அரசாங்க மருத்துவ சேவகனாக பணிபுரிந்தார். அதோடு அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்து வந்தார். அர்பென்ஸ் ஆட்சி வீழ்ந்த பிறகு, சேகுவாரா மொக்சிகோவிற்கு சென்று, மார்க்சிஸ்ட் பாப்புலர் சோசலீஸ்ட் கட்சித் தலைவர் வின்செண்ட் லொம்பர்டொவுடன் தொடர்பு கொண்டார். அங்கு சேவிற்கு, அரசு மருத்துவமனையில் டாக்டர், மற்றும் தேசிய பல்கலைகழக மருத்துவ ஆசிரியர் என்று இரண்டு பொருப்புகள் கொடுக்கப்பட்டது.

1956-இல், சே, காஸ்ட்ரோவை எதெச்சையாக சந்தித்தார். காஸ்ட்ரோவின் கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்டசேகுவாரா, மருத்துவ சேவையின் பேரில் அப்படையில் இணைந்தார். ஜூலை 1956-இல், மெக்ஸிகன் காவலாளிகளால் பிடிக்கப்பட்ட சேகுவாராவும், தோழர்களும் விடுவிக்கப்பட்டபின், டிசம்பர் 1956-இல் கிரான்மா இலட்சியப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு போராளியாகவும், பின் இராணூவ தளபதியாகவும், அதன் பின் கமாண்டராகவும், காஸ்ட்ரோவிற்கு அடுத்த மனிதராகவும் இருந்த மனிதராகவும் இருந்த சேகுவாராவின் தலைமையில் 1958-இல் சாந்தா கிளாராவை கைப்பற்றினார்கள். 1959 கியூபா புரட்சிக்குப்பின், சேவிற்கு கியூபா குடியுரிமை அளிக்கப்பட்டதோடு, ஹவானாவில் லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தார். பிறகு இராணூவ உத்தரவு பிறப்பிற்கும் துறையின் தலைவராக இருந்து கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் நடத்தி வந்தார்.

அதைத் தொடர்ந்து, தொழிற்துறை தலைவராகவும், பின் தேசிய வங்கியின் தலைவராகவும், 1961-இல் வர்த்தக அமைச்சராகவும் பதவியேற்றார். தேசியமாக்குவதில் கவனம் செலுத்தி, இறக்குமதிகளைக் குறைத்து, தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார். கியூபாவின் பொருளாதாரம் வெகுவாக மேம்பாட்டைக் கண்டது. இராணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும் சேகுவாரா இராணுவ உடையில், நட்சத்திரம் கொண்ட தொப்பியில், புரட்சிகரமான எழுத்துகளை பிறருக்கும் வாசித்து காட்டும் அந்த காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.

சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம். அந்த இதயத்தைச் சுட்டுக் கொன்றது அமேரிக்க தலைமையிலான பொலிவிய நாட்டு இராணுவம். அவரது மரணத்தின் தடயங்களையும், அவர் உடலையும் புதைத்து மறைத்தாலும், சேகுவாரா மக்களின் மனதில் இன்னும் எழுந்துக்கொண்டே இருக்கிறார்.

சே குவாரா புரியாதவனுக்கு புதிர். புரிந்தவனுக்கு புரட்சிக்காரன். ஏழைகளை அன்போடு அரவனைப்பான். எதிரிகளை கண்டால் அடியோடு அழித்திடுவான்.

சேகுவாரா இவன் வாழ்க்கை ஏடுகளை படித்தால், படிப்போர் இதயங்களில் போராட்ட குணங்களை விதைப்பான். மருத்துவனான இவன் மனதில் மக்கள் விடிவுக்கு, சமூக மருந்து எது? என்ற கேள்வி எழுந்தது.

பணக்காரர்களுக்கு மருந்தும் மருத்துவ வசதிகளும் பரவலாக கிடைக்கிறது. ஏழைக்கோ, அது ஏன் எட்டாக் கனியாகிறது? ஏழைகள் என்ன மரண தண்டனைக் கைதிகளா?

எதிரிகள் யார் என ஆராய ஆரம்பித்தான். ஓரே சமுதாயத்தில் ஏன் ஏற்ற தாழ்வு? ஆட்சி முறையின் கேடா? சமுதாய அமைப்பு முறையில் கேடா?

உழைக்கும் வர்கத்துக்கு இந்த உலகமே உயில்! என்று எழுதிய நம் பாட்டன், கார்ல் மார்க்ஸ் சொன்ன புத்தியை புத்தகத்தில் படித்தான். அது புதிராக இருந்தது. புரிய தொடங்கியது. புத்தி அது பொழிவடைந்தது.

உலகத்தையே உறுவாக்கும் உழைக்கும் வர்கம், உரிமை இழந்து கிடக்கிறது. உண்மையை மறந்து உழைத்துக் கொண்டிருக்கிறது. உட்கார்ந்து திண்ணும் உளுத்துப்போன முதலாளிவர்கம் ஆட்சியமைத்து ஆட்டிப்படைக்கிறது.

வர்க போருக்கு வக்காலத்து வாங்க துணிந்தான் வக்கீலாய் வந்த பிடேல் காஸ்த்ரோவோடு இணைந்தான். சொர்க பூமியை சொர்ப்ப பூமியாக்கிக் கொண்டிருக்கும் பத்திஸ்தாவின் கொடுங்கோலை எதிர்த்து, அமேரிக்க ஏகாதிபத்தியத்தை விரட்ட முடிவு செய்தனர்.

ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன், ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.

கியூபா மக்கள் விடியலுக்காக சிறிய படையோடு சீரிபாய்ந்து கலம் இறங்கினார். போராட்டத்தில் மக்களின் ஆதரவை வென்றனர், கியூபாவில் புரட்சி செய்தனர், அதில் வெற்றி கொண்டனர். அமேரிக்க குள்ள நரிகளையும். முதலாளித்துவ ஓநாய்களையும் விரட்டியடித்தனர்.

கியூபா புரட்சி மட்டும் போதுமா? கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் எல்லை போடனுமா? காஸ்த்ரோ கியூபாவை வழிநடத்தட்டும். தன் வழி உலக வழி. ஒரு புரட்சி போதுமா உலகம் மாற? ஒவ்வொன்றாய் வெடிக்கட்டும் புரட்சிகள் ஆயிரம். மக்கள் தான் விடுதலையின் விழுதுகள். அடிமை சங்கிலியை அருத்தெடுத்து விடியலை வீதிக்கு கொண்டுவரும் விடிவெள்ளி.

எங்கெல்லாம் மக்கள் அடிமைபட்டிருக்கிறார்களோ அங்கெல்லாம் புரட்சி வீரன் உறுவாக வேண்டும்.

சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது…

"சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"

இன்றும் சே போராடும் ஒவ்வோரு இளைஞனின் இதயத்தில் புரட்சி விதையாய் முளைக்கிறான்.

சே காங்கோவிற்கு புறப்பட்டான். போராடும் போதனைகள் அங்கே போதவில்லை. மீண்டும் கியூபாவிற்கு வந்து புரட்சியை உலகிற்கு கொண்டு சொல்ல முற்பட்டான்.

போலி வேடத்தில் பொலிவியா காட்டிற்கு புகுந்தான். புரட்சி படை அமைத்தான். கொரில்லா போரை துவங்கினான். அமெரிக்கா இவனை அழித்துவிட கங்கனம் கட்டியிருந்தது.

கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியது. சேகுவாராவை விடிய விடிய தேடியது. பொலிவிய இராணுவத்தின் உதவியோடு சேகுவாராவை உயிரோடு பிடித்தது. மறுநாள் உயிரை உடலிலிருந்து பிரித்தது. இறந்தான் சே என முதலாளித்துவம் இன்புற்றது. இணையில்லா புரட்சிவீரன் இறந்துவிட்டானா என்று மக்கள் உறைந்து போனார்கள்.

அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா.

55 comments:

Manikanda Prabhu said...

mikka nanru viki avargalae, Che guevera pathi neraya noolgal irunthalum, ungaludaya pathivil avara pathi neenga sonnathu, unga vasakargaluku avara pathi thernjika vaipaga irukum.

Todarataum umathu sevai,

Appadiyae , en thalaivar Pirabhakaran pathiyum eluthuneenganna nalla irukum

ஹேமா said...

அருமை....அருமையான பதிவு விக்கி.மனம் கனக்கும் மாவீரன்.எங்கள் நினைவோடு வாழும் மனிதத்தின் குரல்.நன்றி விக்கி.

//"சுடு கோழையே! நீ கொள்ளப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!"//
இந்த வரிகளின் எழுத்துப் பிழையைச் சரி செய்து விடுங்கள்.

Thamira said...

வாழ்த்துகள் விக்கி. அருமையான பதிவு. சிற்சில இடங்களில் எழுத்துப்பிழைகளை தவிர்ப்பீர்களானால் மிக நன்று.

superlinks said...

வணக்கம் உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்

Gunalan87 said...

sirandha dhor manidanin valkaiyai enakku eduthu kaattia ungalaukku en manamarndha nanrigal

Sathis Kumar said...

சிறப்பான கட்டுரை.. முடிந்தால் 'ஃபிடேல் காஸ்ட்ரோ' பற்றியும் கட்டுரை எழுதுங்கள், அவர் அமெரிக்க உளவாளிகளிடமிருந்து உயிருக்குத் தப்பி வந்த கதைகள் மிக சுவாரசியமாக இருக்கும்..

tamilraja said...

பொலிவிய கடைசி நிமிடங்களை இன்னும் சொல்லி இருக்கலாம்!

"சே" வை புரிந்து கொண்ட இன்னும் ஒரு பதிவர்!
நன்று!

Anonymous said...

Excellent article abt Che.

Thank you

Anonymous said...

//அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா//


Its Real.

RAHAWAJ said...

அருமையான செய்தி

Anonymous said...

எனக்கும் இவருடைய போராட்டம் பிடிக்கும். நல்லதொரு பதிவு... பாராட்டுகள்!

அறம் செய விரும்பு said...

///ஓர் அர்ஜெண்டீனா மருத்துவன், ஒரு கியூபாவின் வக்கீல். மக்களின் மைந்தன் சேகுவாரா. மன்னின் மைந்தன் பிடேல் காஸ்த்ரோ. மக்களின் நலன் மீட்க போராளியானார்கள்.///

மனிதன் எங்கிருந்து வந்தாலும் !! என்ன செய்தான் என்பதே வரலாறு.

////சேகுவாரா இறக்கும் தருவாயில் (09.10.1967) இறுதிவார்த்தையாய் சொன்னது…

"சுடு கோழையே! நீ கொல்லப்போவது ஒரு மனிதனை மட்டும்தான்!///

இங்கு பூவை விட அது விட்டுச் செல்லும் வாசம் மதிக்கப்படும் என்று புரிந்து கொள்ளசொன்னவர் " சே".

அதனால் தான் வேதனைப்படும் மனிதனின் துக்கத்தை கண்டு வருத்தப் படும் மனிதனை ஒரு கு(ரலில்)டையில் அழைக்கிறார் இப்படி...

./////அநியாயங்களையும் அக்கிரமங்களையும் கண்டு உன் மனம் கொதித்தால் நீயும் என் தோழனே! –சேகுவாரா////

நல்ல பதிவு!!!

வாழ்த்துகள். (க் முக்கியமா?)

அன்புடன்
நம்பி

Kalaiyarasan said...

சே மீண்டும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருவதையிட்டு மகிழ்ச்சி.

INFOSHAAN said...

ஒரு சமுதாய மாற்றத்திற்கான விதை உலகின் ஏதோ ஒரு மூலையில் தான் விதைக்க படுகிறது அப்படிதான் புரட்சி வீரன் சேகுவராவும் . நன்றி விக்கி

SHANKAR
RWANDA
EAST AFRICA

கோபிநாத் said...

நல்லதொரு பதிவு...சகா ;)

R. பெஞ்சமின் பொன்னையா said...

hai vikneshwaran,

how to publish my blog in Tamilmanam, I tried everything as explained in Tamil manam, but nothing works out. I do not know where I am doing any mistakes.

Could you please explain to me how to do this?

Thanks.

R.Benjamin

Anonymous said...

Date: Sat, 28 Jul 2001 19:34:49 +0800
To: "agathiyar@yahoogroups.com"
Subject: Sila vindhaikaL....
From: jaybee
X-Yahoo-Message-Num: 11120


அன்பர்களே,

சிலநாட்களுக்கு முன்னர் scanner ஒன்றைப்பொருதுவதற்காக
இரு இளைஞர்கள் வந்தார்கள். தமிழர்கள். அவர்களில் ஒருவர் கறுப்பு
நிறத்தில் டீ-ஷர்ட் போட்டிருந்தார். அதில் செ கெவாராவின் படம் போட்டிருந்தது.
ஆச்சரியமாக இருந்தது. மார்க்ஸிஸம் சம்பந்தமான எதுவுமே
மலேசியாவில் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. ' ரெவலூ¡ஸி', 'ரிஃபார்மஸி',
போன்ற சுலோகங்கள் இங்கு மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுபவை.

'இதோ ஒரு பையன் கெவாராவின் படத்தைத் தன் நெஞ்சத்தின்மீது
காட்டிக்கொண்டிருக்கின்றானே!', என்ற அதிர்ச்சி.
அவனுடைய தைரியம் இன்னும் வியக்கவைத்தது. தற்சமயத்து
மலேசிய இளைஞர்கள் சற்றுத்தீவிரமான சிந்தனையுடைவர்கள். பெரும்பாலும்
மலாய்க்கார இளைஞர்கள் அப்படி. தமிழ் இளைஞர்களின் விருப்புகள்
முற்றிலும் வித்தியாசமானவை. அரசியல் ஈடுபாடு அறவே கிடையாது.
எதைப்பற்றியும் எந்தவிதக் கருத்தும் கிடையாது. வீடியோ, மெல்லிசைக் கலைநிகழ்ச்சி,
கோயில்களில் அபிஷேகம் போன்றவை ஒரு பக்கமும், இன்னொரு பக்கத்தில்
gangsterism, சிறு/பெரும் குற்றங்கள், கிராமதேவதைகளின் ஆர்ப்பாட்ட
வழிபாடு போன்றவையும் அவர்களிடம் காணப்படக்கூடிய சில பொதுத்தன்மைகள்.
மிகப்பெரும்பான்மையினர், 'வெந்ததைத்தின்று, விதி வந்தால் சாவது'
என்ற சௌகரியமானதொரு வாழ்வியல் கோட்பாட்டுடன் சம்பாத்தியத்தில்மட்டுமே
குறியாக உள்ளவர்கள்.

இப்படிப்பட்ட மூடுபனியில் ஒரு ஒளி விளக்கா?!!!
அதுவும் கெவாரா என்றாலேயே சிம்மசொப்பன்னமாக உலகநாடுகளில்
பல கருதுகின்றனவே! மலேசிய தமிழ்ச்சமுதாயத்தில் இப்படியாப்பட்டதொரு
விழிப்புணர்ச்சியா!

மெதுவாக விசாரித்தேன்.

"இந்த ஆளை உனக்கு மிகவும் பிடிக்குமா?",என்று கேட்டேன்.

மென்னகை.
சிரிப்பில் எட்டுவகைகளாகப் பகுத்திருக்கிறார்களே, அதில் ஹசிதம்,
விஹசிதம் போன்றவற்றின் கலப்படமாக ஒருவகை மந்தஹாசமாக விளங்கியது.

எனக்குச் சந்தேகம்.

"அந்த ஆள் யார்?", என்றேன், தெரியாததுபோல.
.
"Rock singer?", என்றான்.

ஏதோ ஒன்று சுக்கு நூறாக நொறுங்குவது போன்றதொரு உணர்ச்சி.

அன்புடன்

ஜெயபாரதி

========================================

Anonymous said...

thank you viki..

Anonymous said...

நல்ல ஒரு அறிமுகம் ( எழுத்துப் பிழைகள் தவிர்த்து). :)

தாய்மொழி said...

தங்களின் வலைப்பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. உங்களின் நட்சிறப்பு மென் மேலும் வலம் பெற எங்களின் ஆதரவு என்றும் நிலைக்கும். தங்களின் ஒவ்வொரு இடுகைகளும் மிக சிறப்பு.

Anonymous said...

நல்ல பதிவு..உங்களின் பதிவுகள் அனைத்துமே நல்ல விபரங்களை கொண்டவை [very informative]

Anonymous said...

கண்ணீரை வரவழைத்த பதிவு...

அற்புதம்...!!!

VIKNESHWARAN ADAKKALAM said...

@மணிகண்ட பிரபு

நன்றி மணிகண்ட பிரபு

@ ஹேமா

நன்றி

@சிவா

நன்றி

@தாமிரா

நன்றி... திருத்திவிடுகிறேன்

@சூப்பர் லிங்

மிக்க நன்றி

@தினேஸ்

நன்றி... மீண்டும் வருக..

@சத்தீஸ்

நன்றி..

@ தமிழ் ராஜா

மிக்க நன்றி... எனது பல பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள் நன்றி...

@திராவிடன்

நன்றி..

@ஜவஹர்

நன்றி

@புனிதா

நன்றி

@நம்பி

நன்றி ஐயா. கூடவே நல்ல தகவல் கொடுத்திருக்கிங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

@கலையரசன்

முதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி..

@ சங்கர்

நன்றி

@ கோபிநாத்

நன்றி

@ பென்ஜமின்

வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுங்கள்..

@ ஜேபி

நன்றி ஐயா

@ சேவியர்'
நன்றி அண்ணா

@தாய் மொழி

நன்றி. மீண்டும் வருக.

@ தூயா

நன்றி..

@செந்தழல் ரவி

உண்மையா அழுதிங்களா?

விழியன் said...

தரமான ஒரு கட்டுரை தோழரே.

கார்க்கிபவா said...

சே..

அருமையான பதிவு சகா...

அநியாயத்தை கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்' -சே

இது இன்னும் கொஞ்சம் கெத்தா இருக்கில்ல சகா?

sivanes said...

எப்பொழுதும் உடனுக்குடன் உங்கள் பதிவுகளை படித்து விடுவேன் , இம்முறை சிறிது காலம் கடந்து விட்டது, மிக மிக அருமையான படைப்பைத்தந்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விழியன்

நன்றி...

@ தமிழ்வாணன்

நன்றி

@ சிவனேசு

நன்றி

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கார்க்கி

அடடா விடுபட்டுட்டிங்க சாரி... நீங்களும் முன்பு சே பற்றி எழுதியதை படித்தேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...

thillesh said...

சொல்லப்பட்ட விதம் நன்றாக உள்ளது நன்றிகள் தொடரட்டும் உங்கள் பணிகள்

Unknown said...

முதலாளித்துவம் ஓளிய இன்னும் பல சேகுவாராக்கள் உருவாக வேண்டும்..

Anonymous said...

seguvara avarakalai patri ariya ninaithen............
avarai patri ariya avar oru manithar alla purachiku vithitta mahan entru unra vaitha viki avarkalku en
karam Thalntha Vanakkankal

vgksan said...

நீயும் என் தோழனே என்னும் அக்கம் படித்தேன் அதன் பிறகு நீயும் என் தோழனே நன்றி.

Anonymous said...

nandri thozala

Anonymous said...

naam ithu mathiriyana oru mika periya pooraliyai kadanthu vanthathil mikavum perumaipadukirane.

bhuvaneswari said...

en kanavu eppodu paliitdhadu che guevera pathi neraya ariya vendum enru asai irrukku en asaikku inru oru doondu kol indha ungglin kaitturai en manadhil irrundha kanvai dundiyadhu indha kaitturai

bhuvaneswari said...

en manadil erunda cheguevera vin ninaivai dhuntoom vidha maaga in thaa kaitturai amainthathu sir nanri unggal karuitthukku naan thalai vainggugrein sir

imman said...

contragts friend. good collections do the same

rajee said...

hi freinds can i come to ur circle


segu is the best

Anonymous said...

SEGUVARA FUL HISTRY TAMIL LA IRUNTHA POST PANNUGA PLZ....

Anonymous said...

PLZ POST SEGUVARA FULL HISTRY TAMIL LA...

Unknown said...

அநியாயத்தை கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்'

Unknown said...

அநியாயத்தை கண்டு உன் ரத்தம் கொதிக்குமென்றால், நீ என் தோழன்' super

Unknown said...

superb

Unknown said...

good one..

VIKNESHWARAN ADAKKALAM said...

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி...

Ever Miss said...

சேகுவாரா என்றால் விடுதலை. சேகுவாரா என்றால் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல். சேகுவாரா என்றால் நசுக்கப்பட்ட மனிதர்களின் இதயம்

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி :
விருந்து சாப்பிடலாம் வாங்க (கண்டிப்பா சமையல்குறிப்பு பற்றி அல்ல ..)

Anonymous said...

Good work

YOKESH RATHNAKUMAR said...

It is interesting.It will be more useful for readers if u give more information.

YOKESH RATHNAKUMAR said...

It is interesting.It will be more useful for readers if u give more information.

surya said...

Ja full history share me

NANBAN RAVICHANDIRAN said...

super brother your creative continue,,,all the best

RAVI KARTHIK said...

THANK YOU

Unknown said...

உலகில் முதலாலித்துவம் எங்கெல்லாம் அகங்காரமாய் தலைதூக்குகின்றதோ அங்கெல்லாம் ஒரு சேகுவாரோ நிச்சயம் இருப்பான்