நான் இந்தக் கேள்வியைப் பல முறை சந்தித்திருக்கிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கும் என்பார்கள். அதை போல் தான் என் மீசைக் கதையும்.
சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது சங்கடப்பட்டும் போய் இருக்கிறேன்.
“என்ன வயசாகுது தம்பி உனக்கு”
“24”
“ஆமாவா? நம்ப முடியல, சின்னப் பையன் மாறி இருக்க”.
இதற்காக நான் என் பிறப்புப் பத்திரத்தையா எடுத்துக் காண்பிக்க முடியும். அடப் போங்கய்யா என சொல்லி அமைதியாக இருந்துவிடுவேன்.
பல தருணங்களில் என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள், “டே மீசை வச்சி பாருடா. மெச்சூர்ட் லுக் வரும்”. என் நண்பர் வட்டதிலும் சிலருக்குதான் என் சோகக் கதை தெரியும். தெரியாத ஜந்துக்கள் அடிக்கடி இப்படிச் சொல்லித் தொலையும்.
அப்பொழுது 16 வயது இருக்கும். நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம். மீசை அரும்பாக மலர்ந்துக் கொண்டிருந்த்து. சீராக இருந்தது. ‘ஆட்டோகிராப்’ பட்த்தில் வரும் சேரனை போல் அதை பார்த்து மகிழ்ந்து இருக்கிறேன்.
அந்தச் சமயம் என் பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர் ஒரு சீனர். பெரும்பாழும் சீனர் மற்றும் மலாய்கார்களை பார்த்தோமானல் மீசை வைக்க மாட்டார்கள். மீசையும் வளராது இதில் விதிவிளக்காக இருப்பவரும் உண்டு.
பள்ளியில் இருக்கும் இந்திய மாணவர்களுக்கு தான் இந்த மீசை பிரச்சனை வரும். ஒரு வாரந்திரப் பரிசோதனையின் சமயம், அந்தக் கட்டொழுங்கு ஆசிரியர் மீசையை வழிக்கச் சொல்லிவிட்டார்.
நானும் அடி வாங்காமல் இருக்க மறுநாள் மீசையை வழித்துவிட்டு வந்தேன். (அந்த வாத்தி நல்லா இருக்கட்டும்). அப்போது ஆரம்பித்த்து பிரச்சனை. மீசை சீராக வளர மறுத்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வளரும். கட்டையும் நெட்டையுமக வளரும். இதனால் பல முறை நெந்து போய் இருக்கிறேன்.
இப்பொழுதெல்லாம் மீசையை வழிப்பதில்லை. அளவாகக் கத்தரித்துவிடுவேன்.
25 comments:
\\
“என்ன வயசாகுது தம்பி உனக்கு”
“24”
“ஆமாவா? நம்ப முடியல, சின்னப் பையன் மாறி இருக்க”.
\\
same dialogue
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு
குறிச்சொல்லில் சோகம் எனும் சொல்லை சேகம் என தவறாக போட்டுவிட்டேன் மன்னிக்கனும்...
என்சொகக் கதையைக் கேளுதாய்க்குலமே! தங்கள் கதையைப்படித்தவுடன் அப்பாடல்தான் எனக்கு நினைவிற்கு வந்தது
மீசை புராணம் ரசிக்கும்படியா இருக்கு. :) இருந்தாலும் கடைசி வரில இல்லாததைக் கத்தரிப்பேன்னு சொல்லியிருக்கே பாரு... குசும்பு ! ;)
//இதற்காக நான் என் பிறப்புப் பத்திரத்தையா எடுத்துக் காண்பிக்க முடியும். அடப் போங்கய்யா என சொல்லி அமைதியாக இருந்துவிடுவேன்.//
ic காட்டுனாலே போதுமே விக்னேஸ். ;-)
//same dialogue
எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு//
உங்களயுமா??? அவ்வ்வ்வ்வ்
//அகரம்.அமுதா said...
என்சொகக் கதையைக் கேளுதாய்க்குலமே! தங்கள் கதையைப்படித்தவுடன் அப்பாடல்தான் எனக்கு நினைவிற்கு வந்தது//
நக்கல் பன்றீங்களே....
//சேவியர் said...
மீசை புராணம் ரசிக்கும்படியா இருக்கு. :) இருந்தாலும் கடைசி வரில இல்லாததைக் கத்தரிப்பேன்னு சொல்லியிருக்கே பாரு... குசும்பு ! ;)//
அண்ணே கேப்புல நீங்களும் ஒரு பிட்ட போட்டுடிங்க பார்த்திங்களா... 2010ல கேப்டன் விசயகாந்தே இப்படி தான் இருப்பர்... மீசை இல்லாமல்... நீங்க வேணூம்னா பாருங்க...
//ic காட்டுனாலே போதுமே விக்னேஸ். ;-)//
ஷப்பாஅஅஅஅஅ.... ரவுண்டுகட்டி அடிக்கறாங்களே...
உங்களுக்கு 24 வயசு. நீங்க ஒரு சின்னப் பையன், வாலிபர், இளைஞர் அப்படின்னு காட்டுறதுக்காக இப்படி ஒரு பதிவா? :)))))
//வெண்பூ said...
உங்களுக்கு 24 வயசு. நீங்க ஒரு சின்னப் பையன், வாலிபர், இளைஞர் அப்படின்னு காட்டுறதுக்காக இப்படி ஒரு பதிவா? :)))))//
அவ்வ்வ்வ்... டேய் விக்கி தேவையாட உனக்கு இந்தக் கேள்வி... :))
விக்கி! அதே பீலிங் தான் இங்கயும்... வயசை சொன்ன நம்ம மாட்டேன்கிறாங்க... ஆனா எதிர் மறையா... :))))
ஏன் 20 வருஷம் கழிச்சி இப்போ மீள் பதிவா போடுறீங்க!
நாங்களும் படிச்சித் தெரிஞ்சிக்கணும்னா!
நன்றி விக்னேஷ்!
ஆமா மை ஃபிரண்ட் அக்கா சொன்னா மாதிரி ஐசி நம்பர் சொல்லுங்க போதும்!
அவ்வ்வ்வ்.... வெண்பூ... சின்னப்பையன் நாந்தான்... அவரில்லை... அவரில்லை...
எனக்கு 16 வயசுன்னாவே யாரும் நம்பமாட்டேன்றாங்க...... உங்களுக்கு 24ன்னா யாரு நம்பபோறாங்க...
//தமிழ் பிரியன் said...
விக்கி! அதே பீலிங் தான் இங்கயும்... வயசை சொன்ன நம்ம மாட்டேன்கிறாங்க... ஆனா எதிர் மறையா... :))))//
பாவம் நீங்க....
//நாமக்கல் சிபி said...
ஏன் 20 வருஷம் கழிச்சி இப்போ மீள் பதிவா போடுறீங்க!
நாங்களும் படிச்சித் தெரிஞ்சிக்கணும்னா!
நன்றி விக்னேஷ்!//
//நாமக்கல் சிபி said...
ஆமா மை ஃபிரண்ட் அக்கா சொன்னா மாதிரி ஐசி நம்பர் சொல்லுங்க போதும்!//
நாமக்கல் சிபி நக்கல் சிபி
//ச்சின்னப் பையன் said...
அவ்வ்வ்வ்.... வெண்பூ... சின்னப்பையன் நாந்தான்... அவரில்லை... அவரில்லை...//
இதுல வருத்தம்....
//ச்சின்னப் பையன் said...
எனக்கு 16 வயசுன்னாவே யாரும் நம்பமாட்டேன்றாங்க...... உங்களுக்கு 24ன்னா யாரு நம்பபோறாங்க...//
நக்கல் வேற....
//அப்பொழுது 16 வயது இருக்கும்//
ஆரம்பிச்சாட்டங்கய்யா.. எல்லாருக்கும் இதே வேலையாப்போச்சு!
//எனக்கு 16 வயசுன்னாவே யாரும் நம்பமாட்டேன்றாங்க...... உங்களுக்கு 24ன்னா யாரு நம்பபோறாங்க...//
அதானே!
8 வயசுப் பையன் என்னலயே நம்ப முடியலை!
//பரிசல்காரன் said...
//அப்பொழுது 16 வயது இருக்கும்//
ஆரம்பிச்சாட்டங்கய்யா.. எல்லாருக்கும் இதே வேலையாப்போச்சு!//
அவ்வ்வ்வ்வ்வ்
//நாமக்கல் சிபி said...
//எனக்கு 16 வயசுன்னாவே யாரும் நம்பமாட்டேன்றாங்க...... உங்களுக்கு 24ன்னா யாரு நம்பபோறாங்க...//
அதானே!
8 வயசுப் பையன் என்னலயே நம்ப முடியலை!//
அத ஏங்க 420 வருசம் கழிச்சி இப்ப சொல்றிங்க...
appo intha virumaandi meesai, kaththi meesai, thirisula meesai ithu maathiriyellaam neenga vatchathe illaiyaa??
Aiyo.. Aiyo...
sari vidunga, testerone injection pottaa ellaam sariyaayidum.
aanaa vayasaanappuram, cancer varum vaaippundu!
Post a Comment