நாமெழுதும் விடயத்தை நான்கு பேர் படிக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறோம். திறமையைக் காட்டுகிறேன் பேர்வழி என்று எதுவுமே புரியாமல் ஒரு ஜந்துவைப் பிடித்து (கவனிக்க, எழுதி எனக் குறிப்பிடவில்லை) போட்டு வைப்பது படிப்பவர்களைத்தான் மன உளைச்சலுக்குள்ளாக்கிறது.
எழுத்து வெறியும் ஒழுக்கு நிலையும்: ஏராளமாய் எழுதுவதன் பின்னணி என்ன?
சமீபத்தில் இக்கட்டுரையைப் படித்தேன். ஒரு முறை இல்லை. இரண்டு மூன்று என்று மீண்டும் மீண்டும் வாசித்தேன். ஒரு சில இடங்களில் நிறுத்தி நிதானித்துதான் வாசித்தேன். எதனால் அந்நிலை? சரி மனிதன் ஏதோ வாசிப்பு சம்பந்தமாக எழுதி இருக்கிறாரே, நல்ல விசயமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கைதானே? ஒவ்வொரு வாசகனுக்கும் இந்த எண்ணம் நிச்சயமாக இருக்கும் தானே. ஆனால் அக்கட்டுரையை வரிக்கு வரி மீள் வாசிப்பு செய்தும் எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
//எழுத்தாளன் குறைவாக, மெலிதான அளவில்தான் எழுத வேண்டும் என்றொரு தரப்பு தமிழில் உள்ளது.//
இந்த வாக்கியத்தைப் பாருங்கள். குறைவாக, மெலிதான இவ்விரு சொற்களுக்களையும் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தி இருக்கிறார் எனும் குழப்ப நிலை ஏற்படுகிறது. குறைத்து எழுத வேண்டும் என்கிறாரா? எதைக் குறைத்து எழுத வேண்டும். வாக்கியத்தையா? சொற்களையா? அல்லது இரண்டு கட்டுரைகளைக் குறைத்து ஒரே கட்டுரையாக எழுத வேண்டுமா? சத்தியமாக புரியவில்லை.
இன்னும் பல வாக்கியங்களை இப்படி உதாரணப்படுத்த முடியும். எதனால் இப்படி எழுதுகிறார்கள்? மற்றவர்களுக்கு புரியக் கூடாது என்பதற்காகவா? இல்லை இதுவும் ஒரு வகை பின்னவீனத்துவ எழுத்தா? சில எழுத்தாளர்கள் உனக்குப் பிடிக்காவிட்டால் என்னைப் படிக்காதே என சொல்வது நாம் அறிந்ததே. மேலும் சிலரைக் கண்டிருக்கிறேன். நான் தமிழில் தானே எழுதி இருக்கேன். உனக்கு இது கூடவா புரியவில்லை. நீ தமிழ் துரோகி என்பார்கள்.
வார்த்தைகளை மடக்கிப் போட்டுத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதமாக எழுதுவதில் யாருக்கு என்ன பயன்? எழுதியவர் மனத் திருப்தி அடைந்ததாய் நினைக்கலாம். எதற்காக எழுதினார்? வாசகன் படிக்க வேண்டும் என்பதற்காக தானே? அந்த எழுத்தாளர் எழுதிய செய்தி வாசகனுக்கு புரியாமல் போகுமானால் அவர் எழுதிய வார்த்தைகள் விரயமானது தானே? இதில் அவருக்கு என்ன லாபம்.
நீண்ட நெடு வாக்கியங்கள் எழுதுவதால் படிப்பவர்கள் “ஆஹா என்னமா எழுதி இருக்கிறான் என மெச்சிவிடப் போவதில்லை”. சொல்ல வந்த செய்தி வாசகனுக்கு முழுமையாகப் பிடிபட்டதா என்பது தான் முக்கியம்.
நண்பரே, கொஞ்சம் புரியும்படியாக எளிய நடையில் தான் எழுதுங்களேன். நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன். இந்தப் பதிவை உங்களுக்கும் புரியும் படியாகவே எழுதி இருக்கிறேன் என நம்புகிறேன். “நான் என்ன எழுதுறதுனு எனக்குத் தெரியும், நீ உன் வேலையப் பார்த்துகிட்டு போடா”, என நீங்கள் சொல்வதாக இருந்தாலும் மனவ்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.
==============================
1. சிறு சிறு வாக்கியமாக எழுதுங்கள்.
2. எழுத்தில் எளிய சொற்களே இருக்கட்டும்.
3. புரியும் சொற்களில் மட்டுமே எழுதுங்கள்.
4. தேவையற்ற சொற்களை கட்டாயமாக நீக்குங்கள்.
5. வாசகர்களைக் கவரும் வகையில் சொற்களில் துடிப்பு இருக்க வேண்டும்.
6. வாசகர்களுடன் நேரில் பேசுவதுபோல எழுதுங்கள்.
7. படம் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து இருக்க வேண்டும்.
8. உங்கள் எழுத்து வாசகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
9. உங்கள் எழுத்தில் தரம் இருக்க வேண்டும்.
10. வாசகர்களுக்கு விளக்குவதற்காக எழுதுங்கள்.
நன்றி: செல்வேந்திரன்
33 comments:
நானும் வாசித்தேன் .நமக்கு அதைப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லையா அல்லது பொறுமை இல்லையா என்று தெரியவில்லை.அவர் இன்னும் தெளிவாக,சுருக்கமாக விளக்கியிருக்கலாம்
உங்களுக்குப் புரியவில்லையா; பிடிக்கவில்லையா?
தாண்டிப்போய்க்கொண்டே இருங்கள். யாரும் யாருக்கும் எதற்கும் அறிவுரைகள் தரவேண்டியதில்லையே..!
//தருமி said...
உங்களுக்குப் புரியவில்லையா; பிடிக்கவில்லையா?
தாண்டிப்போய்க்கொண்டே இருங்கள். யாரும் யாருக்கும் எதற்கும் அறிவுரைகள் தரவேண்டியதில்லையே..!
//
தருமி அய்யாவின் கருத்தினை வழிமொழிகிறேன்...!
@ கோமா
வருகைக்கு நன்றி. தெளிவாக இல்லை என்பதே என் கருத்தும்..
@ தருமி
வருகைக்கு நன்றி ஐயா. நான் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. புரியவில்லை என்று தான் சொல்லி இருக்கிறேன். தமிழில் எழுதிய கட்டுரை புரியாமல் போனது என் தவறு இல்லையே.
நான் அறிவுரைக் கூறவில்லை. எப்படி ஒரு திரைப்படத்தை பார்த்து ஒருவர் விமர்சனம் எழுத உரிமைக் கொள்கிறாரோ அதே வகையில் நானும் என் கருத்தை சொல்லி இருக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை என்று தாண்டிப் போய்க் கொண்டு இருந்தால் யாரும் எதையும் பேசக் கூடாது என்று அர்த்தம். யாரும் கருத்துச் சொல்லவோ பதிவெழுத வேண்டிய அவசியமோ ஏற்படாது.
//உங்களுக்குப் புரியவில்லையா; பிடிக்கவில்லையா?
தாண்டிப்போய்க்கொண்டே இருங்கள். யாரும் யாருக்கும் எதற்கும் அறிவுரைகள் தரவேண்டியதில்லையே..!//
நச்சுன்னு சொன்னீங்க தல...!
@ ஆயில்யன்
வருகைக்கு நன்றி.
@ ஆதவன்
உங்களுக்கு பதிவு பிடிக்கலனா ஏன் தாண்டி போகலை. ஒருவர் கருத்தை வழிமொழிந்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? உங்கள் கருத்தை சொல்ல விருப்பப்படும் நிலை தானே?
vicks,
பழைய பாடப் புத்தங்கள் எல்லாம் படிச்சதில்லையா, தமிழில்.
நான் நினைக்கிறேன் இப்படி புரியக் கூடாதுன்னு அவங்க எழுதுறதில்ல போல, அதுதான் அவங்க நடையே.
இப்படி ஒண்ணு, ரண்டுன்னு போட்டு கையேடு கொடுத்து அடைச்சு வைச்சிட்டா, எல்லாம் ஒரே மாதிரி சப்புன்னு இருக்குமில்ல... வெரைட்டி இல்லாம.
பிடிச்சா படிக்கிறோம், போர் அடிச்சா மூடி வைச்சிட்டு போயிட்டே இருக்கப் போறோம்.
//நான் அறிவுரைக் கூறவில்லை. எப்படி ஒரு திரைப்படத்தை பார்த்து ஒருவர் விமர்சனம் எழுத உரிமைக் கொள்கிறா//
அது ஒரு பெரிய காமெடிங்க..
நீங்க சொல்றதை நான் ஏத்துக்கறேன் சகா. வாசகனுக்கு புரியனும் என்பது மட்டுமல்ல எழுத்தாளனின் பணி. மொழியின் அழகையும் அவனுக்கு தெரிவிப்பது.ஆனால் நீங்க சொல்ற அந்த கட்டுரை அப்படி பட்டதல்ல.. அதை ஒத்துக்கறேன்..
ஆனா சிலர் கவிதைகளில் வார்த்தை ஜாலம் நடத்துவது மொழியின் அழகால். அதை நான் ரசிக்கிறேன்..
மன்னிக்கவும் விக்னேஷ்வரன். நீங்கள் பல முறை படித்தும் புரிய வில்லை என்று சொன்ன கட்டுரையை புரிந்துக் கொள்வதில் எனக்கு அதிக சிரமம் ஏற்பட வில்லை.
செல்வேந்திரன் சொல்லி இருப்பது என்பது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால் பத்தி எழுத்துக்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்வது என்பது கட்டுரை எழுத்துக்களின் பன்முகத் தன்மையைக் குறைக்கும் ஒரு முயற்சியாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.
வாசகனைப் போய் சேர வேண்டும் என்று நீங்கள் சொல்வது என்பதோடு வாசகனின் இலக்கிய அல்லது வாசிப்புத் தன்மையை அடுத்த தளத்திற்கு நகர்த்த முயற்சிப்பதும் எழுத்தாளனின் வேலை என்று சொல்லலாம் அல்லவா? இதை ஏன் அப்படிப்பட்ட முயற்சிகளாய் வரவேற்கக் கூடாது.
எளிய உதாரணம் சொல்கிறேன். ராஜேஷ்குமார் வகை மாத கிரைம் நாவல்கள் மற்ற எவருடைய எழுத்துக்களையும் விட வெகு எளிதில் வாசகனைப் போய் சேரும். அதற்காக அதைத் தாண்டி ஏன் வாசகனை நகர்த்த வேண்டும் என்று நவீனத்துவங்களோ, இஸங்களோ இல்லாத எளிய வகை எழுத்துக்கள் மட்டும்தான் எழுத வேண்டும் என்று நாம் நினைக்க முடியுமா?
ஆகையால் பன்முகத் தன்மை கொண்ட எழுத்துக்கள் அல்லது அடர்த்தி எழுத்துக்கள் தவறு இல்லை என்பது என் எண்ணம்.
சொல்லணும்னு தோணுச்சு. :)
@ thekkikattan
வருகைக்கு நன்றி. தெளிவாக இல்லை என்று தான் சொல்கிறேன். அது முழுக்க தவறாக இருக்கிறதாக சொல்லவில்லை. பட்டியல் போட வேண்டிய அவசியம் இல்லை நண்பரே.
நான் போர் அடித்ததால் பதிவிட்டுவிட்டேன். இரவாகிவிட்டதால் வெளியே சொல்லவில்லை :))
@ கார்க்கி
வருகைக்கு நன்றி சகா. நாம் மொழியின் அடுத்த கட்டத்துக்கு நகராத தற்குரி தமிழன் என்று அடர்தியாகிவிட்ட மொழியியல் கழகம் சொல்வதாக செய்திகள் வருகின்றன.
@ நந்து
சரி நந்து. நல்ல ஐடியா. நாளையில் இருந்து நான் கொஞ்சம் மலாய் மொழியிலும் சேர்த்து எழுதுகிறேன். வாசகனை மொழியின் அடுத்த தளத்துக்கு அழைத்துச் செல்லலாம். யாராவது புரியவில்லை என்று சொன்னால் உங்கள் பதிலை சொல்லிவிடலாம் :)
தருமி ஐயாவின் பின்னூட்டத்தையும், அதற்கு விக்கியின் மறுமொழியையும் வழி மொழிகிறேன்.
:)
@ கோவி.கண்ணன்
ஒரு பழமொழிக்கு அர்த்தம் தெரியலை. விளக்கம் பிலிஸ்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்றால் என்ன?
(தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பிலிஸ் என்ற வார்த்தையை உபயோகித்து இருக்கிறேன்)
பி.கு: உங்கள் பின்னூட்டத்துக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் (மறுமொழி இல்லை :P) சம்பந்தம் இல்லை.
நீண்ட நெடு வாக்கியங்கள் எழுதுவதால் படிப்பவர்கள் “ஆஹா என்னமா எழுதி இருக்கிறான் என மெச்சிவிடப் போவதில்லை”. சொல்ல வந்த செய்தி வாசகனுக்கு முழுமையாகப் பிடிபட்டதா என்பது தான் முக்கியம்.///
நல்ல விமரிசனம்!!
இதில் மாற்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். எனினும் நீங்கள் சொல்வது ஏற்புடையதே!!
@ தேவன்மயம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்.
டெரரான பதிவுப்பா!
மொழி நடை ஒவ்வொருக்கும் ஆகி வருவது. உங்களைப் போல் நானோ, என்னைப் போல நீங்களோ எழுத முடியுமா?
நீ ஏன் தவறு செய்கிறாய் என்று கேட்கலாம். ஆனால், நீ ஏன் அழகாக இல்லை என்று கேட்கலாமா? அதுவும், சொல்வார்கள்: beauty is in the eyes of the beholder.
@ அதிஷா...
வருகைக்கு நன்றி மாம்ஸ்
@ தருமி
நான் அவர் பதிவை நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் அது நீங்கள் சொன்ன அழகா இல்லை என்பதற்கு உவமை.
நான் அவர் தவறு செய்கிறார் என்றும் குறிப்பிடவில்லை. இது என் நிலையை வைத்தே என் கருத்தினை சொல்லி இருக்கிறேன்.
என் கருத்தை யாரும் ஏற்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இது ஒரு வேண்டுகோள் அவ்வளவே....
anna unggalukku adathavargalukku vali kattaa urimai irukkirathu.en endral unggal katturai yum kataigalum padipavargalai athigam kavargindrathu. Unggal uyarvu thodaravum! ......Viknesvary......
முன்பெல்லாம் கம்ப ராமாயணம் போன்றவற்றை படித்து விட்டு அதற்கு அறுபது விளக்கம் கூறி மகிழ்வார்கள். புரியாத தமிழில் உள்ள கம்ப ராமாயனத்தால் மக்களுக்கு என்ன லாபம் கிடைத்தது? ஒரு சிலர் தம்மை புத்திஜீவிகள் என்ற தரத்தை நிலை நாட்ட மட்டுமே அது உதவியது. அது போலத் தான் இன்றைக்கும் சில எழுத்தாளர்கள் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டும் படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு எழுதுகிறார்கள். அப்போது தானே அந்த எழுத்தாளர்கள் தமது மேதாவித் தனத்தை காட்டிக் கொள்ள முடியும். மேலும் அவர்களின் நூல்களுக்கான சந்தை வாய்ப்பும் நன்றாக இருப்பதால், சமூகத்தில் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இவர்களை விமர்சித்தால், பின் நவீனத்துவம் என்று புரியாத சொல் எல்லாம் போட்டு எம்மை குழப்புவார்கள்.
தமிழில் மட்டுமல்ல எந்த மொழியாக இருந்தாலும் அதில் எப்படி எழுத வேண்டும் என்று யாரும் வரையறை செய்ய முடியாது; கூடாது.
காரணம், ஒரு படைப்பின் தரம் என்பது அதனை எழுதும் எழுத்தாளனின் மொழி அறிவு, மொழி ஆளுமை, மொழிக் கொள்கை, எழுத எடுத்துக்கொண்ட கரு, எழுத்துக்குரிய இலக்கு(வாசகன்) ஆகியவற்றைப் பொருத்தே அமையும்.
சுருக்கமாக எழுத வேண்டும்; சின்னதாக எழுத வேண்டும்; சுருக்கமாக எழுத வேண்டும்;
என்பன போன்ற வாதங்கள் "நடக்க முடியாதவன் சித்தப்பன் வீட்டில் பெண் எடுத்த கதை"க்கு ஒப்பானது.
இனி வருகின்ற எவரும் தொல்காப்பியரை விட செப்பமாக எழுதிவிட முடியாது.. வள்ளுவரை விட செறிவாக எழுதிவிட முடியாது.. ஔவையைவிட சுருங்க எழுதிவிட முடியாது..!
இப்போதுதான் புதிதாய் கண்டுபிடித்ததைப் போல இப்படி எழுத வேண்டும்.. அப்படி எழுத வேண்டும் என்பவர்கள் தமிழ்மொழி எழுத்துநடை வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது.
இன்றையப் புதியத் தமிழனுக்கு, பழந்தமிழ் படைப்பெல்லாம் புரியாமல் போனது.. மறைமலை அடிகள் மொழிநடை புரியாமல் போனது.. இலக்கண மரபுக்கு உட்பட்ட நடை புரியாமல் போனது.. நல்லதமிழ் நடை புரியாமல் போனது.. கண்டிப்பாக தமிழின் குறைபாடல்ல.. தமிழனின் குறைபாடு.
தன்னுடைய குறைபாட்டை மறைத்து அதனை தமிழ்மொழியின் குறைபாடாகக் காட்டுவதில் தமிழர்கள் வல்லவர்கள்.
எந்த அளவுக்குத் தமிழும் தமிழ் எழுத்து நடையும் புரியாமல் போகிறதோ அந்த அளவுக்கு மொழியைவிட்டு மிகத் தொலைவுக்கு.. அடிப் பாதாளத்துக்குத் தமிழன் கீழிறங்கி வந்துவிட்டான் எனபதே பொருள்.
உலகத்தில் நூற்றாண்டு வாரியாக பிரித்துவைத்து, இது இந்த நூற்றாண்டுத் தமிழ் என்று அடையாளப்படுத்தக்கூடிய ஒரே மொழி தமிழ்தான் என்பதில் முதலில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
நான் இன்னும் வாசிக்கவில்லை. இது என் மறுமொழிக்கான ஒரு முயற்சி.
ஐயோ, ஐயோ உயிர்மைப் பதிப்பகம், மனுஷ்ய புத்திரன், சாரு...... நல்ல கூட்டணியப் பத்தித் தான் எழுதக் கெளம்பீட்டீங்க்க.. அவங்க்கள் எல்லாருமே விபரமானவர்களோ இல்லையோ விவகாரமானவர்கள். வேண்டுமென்றால் 0 டிகிரி, ராஸ லீலா தருகிறேன் படித்துப் பாருங்க்கள்.
@ விக்னேஷ்வரி
உங்கள் வருகைக்கு நன்றி... எனக்கு எல்லாம் தெரியும் என்ற இருமாப்பு எனக்கு இல்லை. அறிந்தது கொஞ்சமே. இக்கட்டுரை எனது பார்வையில் சொல்லப்பட்டதே.
@ கலையரசன்
எந்தக் கலையாக இருந்தாலும் அது மற்றவருக்கு புரியும் படி இருந்தால் தான் இரசிக்க முடியும். அப்படி இல்லை என்றால் சமஸ்கிருதம் புரியாதவன் ஐயர் சொன்ன மந்திரத்தைக் கேட்டுக் கெண்டிருக்கும் கதையாக தான் இருக்க முடியும். வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி நண்பரே.
@ சுப.நற்குணன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ வெயிலான்
நன்றி :)
@ கரு சந்திரன்
உங்கள் சோதனை முயற்சி வெற்றி :)
@ புகலினி
//வேண்டுமென்றால் 0 டிகிரி, ராஸ லீலா தருகிறேன் படித்துப் பாருங்க்கள்.//
சரி கொடுங்கள் படித்துப் பார்க்கிறேன் :)
உங்கள் கருத்தை உரைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு நண்பரே... தேவையான சூடான விடயத்தை முன்நிறுத்தியதற்கு வாழ்த்துகள்...
@ குமரன்
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி...
// அந்த எழுத்தாளர் எழுதிய செய்தி வாசகனுக்கு புரியாமல் போகுமானால் அவர் எழுதிய வார்த்தைகள் விரயமானது தானே? இதில் அவருக்கு என்ன லாபம். நீண்ட நெடு வாக்கியங்கள் எழுதுவதால் படிப்பவர்கள் “ஆஹா என்னமா எழுதி இருக்கிறான் என மெச்சிவிடப் போவதில்லை”. சொல்ல வந்த செய்தி வாசகனுக்கு முழுமையாகப் பிடிபட்டதா என்பது தான் முக்கியம்.
//
சூப்பரா சொல்லி இருக்கீங்க
இந்த கம்ப்யூட்டர் எப்படி கரண்டை வாங்கிகொண்டு இவ்வளவு வேலை செய்யுதுன்னு எங்கு புரியவே இல்லை. ஏன்தான் கம்ப்யூட்டர் எல்லாம் தயார் பண்றாங்களோ.
;-)
@ கார்த்திகேயன்
கலாய்க்கறதா நினைச்சிகிட்டு புரியாத மாதிரி ஒரு மொக்கை போட்டு வச்சிருக்கிங்க... அதாங்க எனக்கும் புரியல... ஏன் தான் இந்த பதிவு, பின்னூட்டம்லாம் வந்ததோ... ;-)
//கலாய்க்கறதா நினைச்சிகிட்டு புரியாத மாதிரி ஒரு மொக்கை போட்டு வச்சிருக்கிங்க//
ha ha ha..
enn nenba yenai elutenba avvirandum,
kannenba vaazhum uyirukku.
nandri vanakam. :D
p/s: i guess i write more worst than this in my blog. so no comemnts about the blogger. paavam avangala vitudunga.. eto avangaloda mana tiruptikku etavathu eluthitu pogathumey... :D
@ கார்த்திகேயன்
:)
@ விஜி
//enn nenba yenai elutenba avvirandum,
kannenba vaazhum uyirukku.//
என்ன இது மொக்கை போட்டு வச்சிருக்கிங்க... ஒன்னும் புரியலை... :)) வருகைக்கு நன்றி மேடம் :)
அண்ணே அந்த பதிவையே கொஞ்சமா ஆல்டர் பண்ணி உங்க பதிவுல போடுங்க!
அப்புறம் சாருவுக்கு, நான் உங்கள் வாசகன் இதற்கு உங்கள் கருத்தை சொல்லுங்கள்னு ஒரு மெயில் பண்ணுங்க
அப்புறம் பாருங்க!
நீ யாரடா ஒரு எழுத்தாளனுக்கு ஆர்டர் போட! கேரளாவில் போய் பார் எல்லாம் எப்படி புட்டு சுடுறாங்கன்னு!
கொரிய படம் போல் வருமா!kim ki duk சின்ன வயசுல இல்லைபோலவே பிச்சை எடுத்து வாழ்ந்தார். ப்ரென்சு எழுத்தாளர்கள் ஆளுமை நிறைந்தவர்கள்.
இங்கே எவனுக்கும் எழுத தெரியாது, ஆனா ஒரு ஜட்டி 1100 ரூபா. நல்ல காலமா ஒரு குவாட்டர் 70 ருபாய்க்கு கிடைக்குது
அப்படின்னு தேவையற்ற வார்த்தைகளை இடையில் சேர்த்து பெருக்கி நாலு பக்கத்துக்கு ஒரு கட்டுரை வரும்
வராட்டி ஏண்டா நாயேன்னு கேளுங்க!
@ வால்பையன்
ஹா ஹா ஹா... முடியல... என்ன சொல்றது தெரியலை பாஸ்... அத தான் காலங்காலமா பார்த்துகிட்டு இருக்கோமே...
Post a Comment