Monday, February 02, 2009

இது ஹைக்கூ இல்லை!!

குழந்தை& மனிதன்
காலையில் அழுதது!
மாலையில் அழுதது!
பசிக்கு உணவு!

காலையில் அலைந்தான்
மாலையில் அலைந்தான்
செலவுக்கு பணம்!

கண்கள்
வான்
கருமை தாழாது!
உன்
முகத்தில் விழுந்த
இரு விண்மீன்கள்!

அபசகுனம்!
நெடுக்கே வந்தான்
மனிதன்!
சாலையில்
மடிந்தது பூனை!

முத்தம்
உதடு வேர்க்குமா!
என்ற ஆராய்ச்சியில்
இரு இதழ்களின் முயற்சி!


கற்பு!
மனதில் இருந்தால் போதும்!
தீர்மானிக்கப்பட்டது
இரு மாணவர்களின்
படுக்கையறை பட்டிமன்றத்தில்!

காதல்!
மன்மதனின்
அம்புகளாய்
காதலியின்
நினைவுகளின் கிளர்ச்சி!

பாலியல் தொழில்!
சூரியன்
மறைந்ததும்
பொழுது விடிந்தது
அவளுக்கு!

பொய் சரித்திரம்!

எதிர்கால முட்டாள்களுக்கு
நிகழ்காலத்தில் சாயம்பூசப்படும்
இறந்தகாலம்!

இரவு!
தூக்கம் வரவில்லை
கண் சிமிட்டுகிறாள்
காதலி!

போதை!
வாயின் புதைகுழியில்
ஊற்றுகிறான்
குடும்ப குதூகலத்தை!

இணைய சேட்டை!
விரல்களுக்கு காமம்!
கணினித் திரையில்
நீலப்படம்!

26 comments:

’டொன்’ லீ said...

அருமை..விக்கி...இதுதான் ஹைக்கூவா..எனக்கும் இப்படி அடிக்கடி ஐடியா வாறது...இனிமேல் நானும் ஹைக்கூ கவிதை போடிறன்..:-)

நிஜமா நல்லவன் said...

அருமை!

viji said...

hey yenna ithu...poonthu velayadi irukkinga... i mean vartaigalil. LOL

ehmm..ehmmm...

VIJI is me.. NAN THAAN. okey?

viji said...

###முத்தம்
உதடு வேர்க்குமா!
என்ற ஆராய்ச்சியில்
இரு இதழ்களின் முயற்சி!###

aahakk..aahakk..aaaahkzz..

hehhe..

Anonymous said...

plz vote on thamilbest

ஹேமா said...

விக்கி.ம்ம்ம்...நீங்களும் சேவியர் அண்ணாவோடு சேர்ந்து சேர்ந்து இப்போ எல்லாம் நிறையச் சிந்திக்கத் தொடங்கிட்டீங்க.அருமையான சிந்தனைச் சிதறல்கள்.அத்தனையும் முத்துப்போல.

ச்சின்னப் பையன் said...

ஹைக்கூவுக்கு எதிர்க்கூ:

நினைத்ததும் அடித்ததும்:
-----------------------

முடியல...
தாங்கல...
ங்கொய்யாலே...

அட்டகாசம்..
அருமை..
கொன்னுட்டீங்க...

A N A N T H E N said...

தமிழிஷ்ல வாக்களிச்சாச்சு

படங்கள்... ஹைய்யொ ஹய்யோ ஜில்ப்பானா குஸ்வேத்தா... கிஸ்மோனி ஜாந்துக்கு (சின்னி ஜெயந்த் ஸ்டைல்ல சொல்லிப் பார்த்தேன்)

//அபசகுனம்!
நெடுக்கே வந்தான்
மனிதன்!
சாலையில்
மடிந்தது பூனை!//

-- நேத்து ச்சாட்டுல ச்சாட்டினது போல, இதுதான் ரொம்ப புடிச்சிருக்கு!

//இணைய சேட்டை!
விரல்களுக்கு காமம்!
கணினித் திரையில்
நீலப்படம்!//
-- காம சுரப்பி விரல்களிலும் பாயுதா இப்போ? என்ன கலிகாலமய்யா!

VIKNESHWARAN said...

@ டொன் லீ

இது ஹைக்கூவானு எனக்கு தெரியாது... ஹைக்கூனு தலைப்பு வைக்காமல் எழுதுங்க...

@ நிஜமா நல்லவன்

எது அருமை... கொலைவெறி...

@ விஜி

நன்றி... மீண்டும் வருக...

@ ஹேமா

ஹேமா காமிடி கிமிடி பண்ணலையே... அவ்வ்வ்வ்

@ ச்சின்னப்பையன்

அவ்வ்வ்வ் அண்ணே முடியலை....

VIKNESHWARAN said...

@ அனந்தன்

வாங்க... வாங்க...

A N A N T H E N said...

//@ அனந்தன்

வாங்க... வாங்க...//

எங்க... எங்க...

Neelan said...

unggal kavithai migavum arumai

valtukal............

Ponmani Neelan
(neelan_t@yahoo.com.my)

viji said...

veetu address pls.
p/s: as per ur request.

VIKNESHWARAN said...

@ அனந்தன்

வேணா முடியலை..

@ நீலன்

நன்றி...

@ விஜி

லொல்லு...

பரிசல்காரன் said...

அருமை விக்கி. அதுவும் அந்த முத்தக் குறிப்பு சூப்பர். முத்தக் குறிப்புகள் என்ற பெயரில் தனிப்பதிவாக முத்தங்களைப் பற்றிய நறுக்குகளை எழுதுங்களேன்...

நவீன் ப்ரகாஷ் said...

அனைத்துமே அழகு விக்னேஷ்வரன்...:)) ரசித்துப் படித்தேன்.. !!!

VIKNESHWARAN said...

@ பரிசல்காரன்

ஆஹா... சூப்பர் ஐடியா... செய்திடலாம்...

இதுக்கே கெட்ட வார்த்தையில் ஒரு மின்மடல் வந்துச்சு...

என்னடா *** எழுதுற *********னு... :(((

முத்தக் குறிப்புகள் எழுதினா கொலை மிரட்டல் வருமோனு பயமா இருக்கு...

@ நவீன் பிரகாஷ்

வாங்க நண்பரே... மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு... மீண்டும் வருக...

viji said...

hey someone merataran u also. aahaaakzzz....... need any help???? :D

Anonymous said...

என்ன மகனே,

முத்தக் குறிப்பு எழுதுனா கொலை மிரட்டல் வரும்னு பயப்படுறே. அப்படிப் பாத்தா தபூ ஷங்கர் மாதிரி ஆளுக எல்லாம், கொலை மிரட்டல்ல கண் முழிச்சு, கொலை மிரட்டல்ல பல்லு வெளக்கி, ராத்திரி கொலை மிரட்டலைப் பரப்பித் தான் தூங்கனும்.

இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா?

VIKNESHWARAN said...

@ விஜி

மிரட்டலுக்கு உதவி செய்ய போகிறீர்களா இல்லை மிரட்ட உதவ போகிறீர்களா :))

@ விஜய்கோபால்சாமி

அதானே... பயம் என்று சும்மா சொன்னேன்... இருந்தாலும் அந்த வார்த்தைகள் தேவையானு தோணுது... :(

viji said...

ellam ungal viruppathai poruthathu.. IRUNTHAALUM 2nd option better nu nenaikiren.

AAAhhhaaaaaa...

ராம்சுரேஷ் said...

பின்னுறீங்க பாஸ்!

து. பவனேஸ்வரி said...

அழகான வரிகள்...

VIKNESHWARAN said...

@ விஜி

நன்றி.

@ ராம்சுரேஷ்

நன்றி.

@ பவனேஸ்

நன்றி

ஆதவா said...

ஒவ்வொரு குறுங்கவிதைகளும் அட்டகாசம்... அதிலும் முத்த ஆராய்ச்சி, கற்பு, இணைய சேட்டை போன்றவை அதிரடி என்றால், கண்களும் காதலும், மென்மையடி....

அட்சரமாக தொகுத்திருக்கிறீர்கள்... தொடருங்கள்..

VIKNESHWARAN said...

@ ஆதவா

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பரே... தொடர்ந்து வருகை தாருங்கள் :)