Friday, September 12, 2008

இது தான் தொப்புள் கொடி உறவோ?

(மு.கு: இது எனது 50வது பதிவு. அன்னைக்கு காணிக்கை.)

ஈனும் முன்னே கருவில் சுமந்தவள்
ஈன்ற பின்னும் இதயம் தாங்கியவள்
வானின் அளவு அன்பில் கனிந்தவள்
வண்ணம் பேனி வாழ்வு தந்தவள்!

பாலை ஊட்டி பாசம் பொழிந்தவள்
படிப்பும் அறிவும் பகிர்ந்து கொடுத்தவள்
நாளை எண்ணி நடையாய் நடந்தவள்
நன்றாய்ப் பணிகள் நயமாய்ச் செய்தவள்!

இரவும் பகலும் விழித்துக் காத்தவள்
இறைவன் அடியைப் பார்த்து வணங்கி
வரவும் செலவும் பாரா வண்ணம்
வாழ்வு முழுதும் மகனுக் குழைத்தவள்!

பிள்ளை இளைஞன் ஆன உடனே
பெண்ணை பேசி திருமணம் முடித்தவள்
நல்ல மகனும் நல்ல மகளும்
நட்புடன் வாழ நாளும் உழைத்தவள்!

வயது போக கிழவி ஆனாள்
வறுமை நோயும் வந்து சேர்ந்தது
தயவு காட்ட உறவு இன்றி
தனிமை கொடுமை வாழ்வில் நலிந்தாள்!

ஊதியம் தேடா தாய்க்கு மகனும்
ஒதுப்புறம் ஒன்றே தேடிக் கண்டான்
நாதியற்ற நடை பிணம் ஆனாள்
நல்ல நாளே மரண நாளே!

ஊரார் கூடி பிரார்த்தனை செய்வர்
உறவார் கூடி கட்டி அழுவர்
தேரா உலக தெய்வ மாந்தரே
தெளிந்து நோக்க திருவருள் உணர்வீர்!

(பி.கு: எதுகை மோனை வைத்து எழுதிப் பார்த்த கவிதை முயற்சி. பிழை இருப்பின் சுட்டவும்)


25 comments:

கிரி said...

வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன். தொடர்ந்து நல்ல பதிவுகள் எழுதுங்க

வெண்பூ said...

50க்கு வாழ்த்துக்கள். அதை அன்னைக்கு பரிசளித்ததற்கு பாராட்டுகள்

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள்! விக்கி!

அன்னைக்கான கவிதை அருமை!

அனுஜன்யா said...

வாழ்த்துக்கள் விக்கி. சீக்கிரமே சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஜோசப் பால்ராஜ் said...

ஐம்பதாவது பதிவை எழுதியுள்ள அன்புத் தம்பிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அம்மாவின் அன்பை அழகாய் வெளிப்படுத்தும் கவிதை இனிமை.

வாழ்த்துக்கள். மென்மேலும் இனிமையான பலப் பதிவுகள் எழுத என் வாழ்த்துக்கள்.

தமிழ் பிரியன் said...

50க்கு வாழ்த்துக்கள். அதை அன்னைக்கு பரிசளித்த விதத்திற்கு பாராட்டுகள்.. :)

தமிழ் பிரியன் said...

நல்ல கவிதை தேர்ச்சி தெரிகின்றது.. இது போல் இன்னும் முயற்சித்து வெற்றி காண வாழ்த்துக்கள்!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் விக்கி

அன்னைக்கு அர்ப்பணமாக்கிய பதிவுக்கும் நன்றி

பரிசல்காரன் said...

கவிதை நன்றாக உள்ளது!

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் என்பதைவிட சந்தோஷங்கள்!!!

இன்னும் பல நல்ல பதிவுகளை எழுதி சீனியராக வாழ்த்துக்கள்!

அன்னைக்கு அர்ப்பணித்த உங்கள் பண்பிற்கு சல்யூட்!

Tamil Short Film said...

50க்கு வாழ்த்துக்கள். Congrats dear dude

வடகரை வேலன் said...

விக்கி,

50 பதிவுக்கு வாழ்த்துக்கள்.

உன் எழுத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

நல்ல கவிதை.

விஜய் ஆனந்த் said...

:-)))...

நண்பா!!! 50-வது பதிவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!

கவிதை அழகு...

அன்னைக்கு காணிக்கை அதைவிட அழகு!!!!

சீக்கிரம் 100 அடிக்கவும்...சார் பார்ட்டிக்கு வெயிட்டிங்!!!

RATHNESH said...

அன்னையைப் பற்றிய கவிதையில் யாராவது சீரும் தளையும் பார்ப்பார்களா விக்னேஸ்வரன்?

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ஹேமா said...

விக்கி,அம்மாவைப் பற்றி எப்படி எழுதினாலும் அருமை....இனிமைதான்.
வாழ்த்துக்கள்.

ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!!

laksh said...

rombha nalla iruku.

VIKNESHWARAN said...

@கிரி

நன்றி கிரி. எனது அலுவலக கணினியில் இருந்து உங்கள் தளம் வந்தால் இணையம் தொடர்பறுந்து போகிறது. ஏன் என்று பார்க்கிறீர்களா :(.

@வெண்பூ

நன்றி அண்ணே.

@ஆயில்யன்

நன்றி, நன்றி.

@அனுஜன்யா

நன்றி. கவிதை காதலரே கவிதையை பற்றி ஒன்னும் சோல்லவில்லையே?

@ஜோசப்பால்ராஜ்

நன்றி அண்ணே.

@தமிழ் பிரியன்

நன்றி அண்ணே.

@கானா பிரபா

நன்றி

@பரிசல்காரன்

நன்றி பரிசல்

@தமிழ் குறும்படம்

நீங்க கேபில் சங்கரா?

@வடகரை வேலன்

நன்றி அண்ணாச்சி

@விஜய் ஆனந்த்

நண்றி நண்பா. சிங்கையில் மிதக்கலாமா. கோவி அண்னன் 6000 டாலருக்கு ட்ரீட் கொடுக்குறாராம்.

@ரத்னேஸ்

நன்றி தலைவரே.

@ஹேமா

நன்றி. மீண்டும் வருக.

@ஜோதிபாரதி

உங்கள் தளம் கண்டேன். கவிதைகள் இனிமை. மீண்டும் வருக ஐயா. நன்றி.

@லக்ஸ்

நன்றி

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள். :-)

புதுகை.அப்துல்லா said...

வாழ்த்துகள் விக்னேஷ்வரன்

தொடர்ந்து கலக்குங்க

சேவியர் said...

தாமதமாய் வாசிக்கிறேன். அருமை !!!! அருமை !!!!

அப்படியே, வெண்பா எழுதப் பழகலாமே !

mani said...

அருமை! அருமை!
ஐம்பது பதிவுகள் பதித்தமைக்கு வாழ்த்துக்கள்

VIKNESHWARAN said...

@மை பிரண்டு

நன்றி...

@புதுகை அப்துல்லா

நன்றிங்க... என்ன கலக்கனும்... யாரும் இல்லாத கடையில் டீ யா?

@சேவியர்

நன்றி அண்ணா... இன்னும் வெண்பா எழுதும் பக்குவம் இல்லை...

@மணி
நன்றிங்க...

தாமிரா said...

50க்கு வாழ்த்துகள் விக்கி.! கவிதையும் அருமை.! (கொஞ்சம் பாஸிட்டிவான கவிதையாக அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ?)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்.

VIKNESHWARAN said...

@தாமிரா

மிக்க நன்றி

@மங்களூர் சிவா

நன்றி