Tuesday, April 28, 2009

பொருளாதார மந்தம் - பாதிப்புகள் என்ன?

உலகப் பொருளாதார மந்தத்தின் தாக்கத்தைப் பற்றிய செய்திகளை நாளிகைகளில் தினமும் காண முடிகிறது. நாளொரு செய்தியாக அவல் கிடைத்த வாயை மென்று வருகிறது பத்திரிக்கை உலகம். சமீபத்தில் சுஜாதாவின் சிறுகதை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் சொல்லி இருப்பார். பொய்யை எதுக்கு காசு கொடுத்து படிக்கனும் என்று. இன்றய செய்தி நேற்றய செய்தியோடு முரண்படுவதை அவர்கள் உணர்ந்து தான் எழுதுகிறார்களா என தெரியவில்லை.

சரி அந்தக் கூத்து தான் அப்படி என்றால். அதை விட பெருங்கூத்தாக இருக்கிறது இந்தப் பதிவுலக செய்திகள். கழுதைனு ஒரு சி.ஐ.டி சிங்காரம் அவரைப் பார்த்தா சிரிப்பு வரும்னு பதிவுல சொல்லி இருக்காரு. இந்த மாதம் 2-ஆம் தேதி துப்பறியும் சிங்கம் மனித இரத்தம் குடிக்கும் மலேசியாஎனும் தலைப்பில் ஒரு செய்தி எழுதி வைத்திருக்கிறார்.

//மலேசியர்கள் யாரும் 5 மணி நேரத்திற்கு மேல் எங்கும் வேலை செய்ய மாட்டார்கள். மலேசியா கடும் நஷ்டத்தைச் ச‌ந்தித்தது. நிறைய கடைகள் மூடப்பட்டன. பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்தது. பணவீக்கத்தில் நாடு மூழ்கிய போது மீண்டும் அன்னியத்தொழிலாளர்களை நோக்கி அழைப்புவிடுத்தது மலேசியா.//

இவ்வளோ நுணுக்கமாக எப்படி ஆராய்ச்சி செய்தார் என தெரியவில்லை. 5 மணி நேரம் மட்டும் வேலை கொடுக்கும் கம்பெனி எதுன்னு அண்ணன் கொஞ்சம் டிடெய்ல் கொடுத்தா நானும் வேலைக்கு விண்ணப்பம் போட வசதியாக இருக்கும். ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேனு சொன்னக் கதையா இல்ல இருக்கு.
====================================

பொருளாதார மந்தத்தினால் பொதுவாக ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் யாவை?

குற்றச் செயல்கள் அதிகரிப்பு

இது தவிர்க்க முடியாத நிலையாகவே இருக்கிறது. வருமானம் இழந்தவன் தனது தன்மானத்தையும் இழந்தவாக மாறிவிடுகிறான். மின்சாரம் மற்றும் டொலிக்கோம் செம்புகள், கல்வாய் மூடிவைத்த இரும்புகள் என உலோக பொருட்களை சீண்டுவதைக் குறைத்துக் கொண்டார்கள். காரணம் உலோக பொருட்களின் விலை படுமோசமாக சரிந்துள்ளது. மாறாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதும், வழிபறியும் ஆங்காங்கு வாடிக்கையாகிவிட்டது.

இரு நாட்களுக்கு முன் எனது உறவினரின் இரும்பு கம்பெனியின் 30 திருடர்கள் நுழைந்துவிட்டார்கள். எல்லோரும் தமிழர்கள் தாம். சனிக்கிழமை என்பதால் கம்பெனியில் எல்லோரும் சீக்கிரம் கிளம்பிவிட்டார்கள். 3 தமிழ் நாட்டு தமிழர்கள் அங்கு தங்கி வேலை செய்கிறார்கள் மற்றும் எனது மாமா இரவில் பாதுகாப்புக்காக அங்கு தங்கி இருப்பார். வந்தவர்கள் நான்கு பேரையும் கட்டி போட்டு அடித்தது மட்டுமில்லை வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்திவிட்டார்கள். லட்ச ரிங்கிட் பெருமானமுள்ள பொருட்கள் மற்றும் இரு லாரிகளையும் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். இதை எல்லாம் எழுதினால் தமிழன் மட்டும் தான் திருடுகிறானா என சில தமிழ் நலம் விரும்பிகள் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் திருடர்கள் நலம் வாழட்டும் என செல்லிக் கொள்கிறேன்.
கடன் வசதிகள் குறைவடையும்

வங்கிகள் கடன் வசதி கொடுப்பதை குறைப்பது மட்டுமில்லாமல் கடன் விண்ணப்பங்களை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு தேர்வு செய்ய முற்படுவார்கள். இதனால் வீடு மற்றும் கார் வாங்கும் கனவுகளை கொஞ்ச காலம் தள்ளி வைப்பதே சிறந்தது. இருப்பினும் நாங்கள் உங்களுக்கு கடன் கொடுக்கிறோம் எனும் சில சேல்ஸ் கனவான்களின் தொலைபேசி தொல்லை ஓயமாட்டேன் என்கிறது.

வேலையை விட்டு விட பயம்

வேலை வாய்ப்புகள் குறைந்துள்ள காரணத்தால் வேறு வேலைகளுக்கு மாற்றம் செய்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பாதுகாப்பு பெரிதும் பாதிப்படையச் செய்யும் என்பதால் சீட்டில் பசைப் போட்டு அமர்ந்து கொள்ள விருப்பம் காட்டுகிறார்கள்.

முதலீடு செய்வதில் பிரச்சனை

வீடு மற்றும் நில விலை குறைந்துள்ளது. ஆகையால் இவ்வேளையில் முதலீடு செய்வது கொள்ளை லாபத்தை ஈட்டி கொடுக்கும் என்பதாக நாம் கருதக் கூடும். பணம் அதிகம் வைத்திருப்பவர்கள் சுலபமாக முதலீடு செய்துவிட்டு காத்திருக்கலாம். சம்பலத்துக்கு வேலை செய்யும் என்னைப் போன்ற பரம ஏழைகளின் நிலை நாளைக்கு வேலை நிறுத்தம் செய்யப்பட்டால் என்னாவது?

செலவு செய்ய பயம்


சொவ்வுலின் சொக்கரில் வரும் கதாநாயகன் கிழிந்து போன காலணியை போட்டுக் கொண்டு திரிவது போல் நானும் கிழிந்து போன என் காலணியை பல காலமாக மாற்றாமல் வைத்திருக்கிறேன். புதிய காலணி வாங்க பணத்தைச் செலவு செய்ய மரண பயமாக இருக்கிறது. ஓவர் டைம், பயண செலவு, சாப்பாட்டு காசு என வெட்டி தீர்த்தது போக மூன்று நாள் நான்கு நாள் வேலை கொடுத்து பேசிக் சம்பளத்திலும் கை வைத்தால் வேலையாட்களின் நிலைபாடுகள் என்ன என்பதை நான் சொல்லி விளக்க வேண்டியதில்லை. இது எல்லா இடங்களிலும் சகஜமாகவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
நண்பர்களை இழக்க நேரிடும்

தூரத்தில் இருந்து பட்டணம் வந்து பணி புரியும் நண்பர்கள் சிலர் பணக் கட்டுபடியாகாமல் மீண்டும் அவர்கள் இடத்துக்கு கிளம்பிவிட மூட்டைக் கட்டிவிடுகிறார்கள். வேலை நேரத்தில் மாற்றம். வெளியே போனால் செலவு பயம் எனும் கணக்கில் பலரும் வீட்டில் முடங்கிக் கிடக்க எத்தனிக்கிறார்கள். பழைய புன்னகையும், மன மகிழ்ச்சியும் நோய்பட்டுக் கிடப்பதை உணர முடிகிறது.


மன அழுத்தம் மற்றும் மன நோய் பிரச்சனைகள்


சமீபத்திய செய்தி ஒன்றில் கடன் வாங்கிய சீனக் குடும்பம் ஒன்று மீண்டும் பணம் கட்ட முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டதை பார்த்தோம். பொருளாதார நெருக்கடியான காலத்தில் சிலர் தவிர்க்க முடியாமல் கடன் வாங்கி வட்டி முதலைகளிடம் இப்படியும் மாட்டிக் கொள்கிறார்கள். கடந்த 97/98-ஆம் ஆண்டைக் காட்டினும் இன்றய நிலையில் தற்கொலைச் செய்திகள் குறைந்தே இருக்கின்றன. தற்கொலை பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துவிடுவதில்லை என்பதை உணர்தல் நன்று.

புகைப்பிடிப்பவர்கள் அதிகரிக்கிறார்கள்


பொருளாதார நெருக்கடியில் இலாபம் ஈட்டி கொடுக்கும் தொழிலாக அமைந்திருக்கிறது வெண்சுருட்டு (சிகரட்டுக்கு தமிழ் பெயர், தமிழ் புத்தகத்தில் படித்தது:-) ) தயாரிப்பு தொழில். தோழி ஒருவர் சொன்னார். சிகரட்டு வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறப்பதால் அவர் வேலை செய்யும் கம்பெனியில் ஓவர் டைம் முதல் கொண்டு புதிய இயந்திரங்களும் வாங்கி போட்டு வைத்திருக்கிறார்களாம். மலேசிய வியாபாரத்துக்கு மட்டுமில்லை ஆசியா நாடுகளில் பலவற்றிலும் இருந்தும் அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளனவாம்.

நிலமை சீரடைய இலச்சி மலை ஆத்தாளை வேண்டிக் கொள்கிறேன். பொருளாதாரம் சீரடையும் பொருட்டு சாணியடி சித்தர் கடும் தவத்தில் இருப்பதால் கொஞ்ச காலத்துக்கு கொசுறு எழுதுவதை தவிர்த்துவிட்டேன். :-)

28 comments:

cheena (சீனா) said...

பொருளாதார மந்தம் - பாதிப்புகள் விவரமாக கூறப்பட்டிருக்கிறது. உண்மை நிலையினை இயல்பாக ஏதிர் கொள்ளூம் தைரியமும் திறமையும் வேண்டும்

நல்ல பதிவு நல்வாழ்த்துகள்

வால்பையன் said...

அண்ணே
பொருளாதார சீரிழிவால உலகமே இப்போ நீங்க சொல்ற பிரச்சனையில தான் இருக்கு!

நண்பர் டாஸ்மாக் கபாலி நண்பர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் அந்த பதிவு எழுதியிருக்கார்! தகவலை அவர் சரியா என பார்த்திருக்கலாம்

மனோ said...

இன்றைய பொருளாதார சுழ்நிலையில்
குடும்பதை வழிநடத்துவது கடினமாகத்தான் இருக்கிறது.இந்த நேரத்தில் திருடர்கள் தொல்லை வேறு...உருப்பட்டா போலாதான் நம்மா தமிழர்கள்....நல்ல கருத்துகள் நன்றி தலைவா!.......

தமிழ்நெஞ்சம் said...

உங்கள் கருத்துகளில் உண்மை கொப்பளிக்கிறது.

இன்னும் 2 மாதங்களில் என்னுடைய நிலைமை - இப்போதிருப்பதைவிட மோசமாகத்தான் ஆகப்போகிறது. கண்டிப்பாகத் தெரிகிறது.

யாராச்சும் ஒரு வருங்கால முதல்வரை நல்ல வழிக்குத் திருப்புவதற்கு ஒரு நடவடிக்கை எடுங்கப்பா!

tamilvanan said...

பொருளாதார மந்தத்தின் தாக்கத்தினை எதிர்கொள்ள குறுகிய நேரத்தில் என் சிந்தனையில் உருவான சில வழிகள்.

1) சிக்கனமாக வாழ பழகிக்கொள்ளாம்
2) இதுவரை ஒரு வேலை மட்டும் செய்து மி்குதி நேர ஒய்வு எடுத்தவர்கள் இனி பகுதி நேர வேலை / சிறு வியாபாரம் செய்ய முற்படலாம்.
3)ஒய்வு நேரம் ஆரோக்கிய உடற் பயிற்சி விளையாட்டுகள் மேற்க்கொள்ளாம். மன அழுத்தம் மற்றும் மன நோய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
4) சிறு வியாபாரம் மற்றும் விளையாட்டுகள் நல்ல நண்பர்கள் / தொடர்புகளை ஏற்படுத்தும்.
5) குடும்ப உறுப்பினர்களிடம் அதிக நேரம் உறவாடி இணக்கத்தை ஏற்படுத்த முற்படலாம்.
6) வாரத்தில் 2/3 நாள் விடுமுறை உள்ளவர்கள் மேற்கொண்டு மேற்படிப்பை படிக்கலாம்.

இது தொடர்பான பதிவுகள், கருத்து அல்லது மாற்று கருத்துக்களை அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன்.

Krishna Prabhu said...

உலக பொருளாதாரம் சீராவது என்றால், அமெரிக்க பொருளாதாரம் சீராவது என்று பொருள். அமெரிக்கர்கள் அது போல பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டார்கள். நீங்கள் கவனித்தீர்கலென்றால் உங்களுடைய கட்டுரை-செலவு செய்யும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது(மூலதனம் என்ற பெயரிலாவது).

ஆனால் நம்முடைய பாரம்பரியமான சேமிப்பு முறையிலான பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டால் பிரச்சனையே இல்லை. (கடன் அட்டைகள் இருக்கும் வரை சேமிப்பு என்பது இயலாத காரியம் தான்).

ஆரோக்கியமான பதிவு...

VIKNESHWARAN said...

@ சீனா

வருகைக்கு நன்றி சீனா ஐயா.எதையும் எதிர்கொள்ளும் திடமும் தன்னம்பிக்கையும் மனிதனுக்கு வேண்டும் என அழகாக சொல்லி இருக்கிங்க. நம்மக்கள் சுலபத்தில் நம்பிக்கை இழந்தவர்களாகிவிடுவது வருத்தமாக அமைகிறது.

@ வால்பையன்

சரியா சொன்னிங்க வால். இருந்தாலும் நம்ம கபாலி அண்ண கிடைச்ச கேப்புல ஏர்ப்போட் கட்டி ஏரோப்பிலேனே ஓட்டிடாரு. முடியல பாஸ். :)

@ மனோ

:) பணம் மனிதனை பித்தனாக்கிவிட்டது. அதற்காக தான் இப்படி பேயாக அலைந்து திருடி அடுத்தவன் குடியை கெடுக்கிறார்கள். வருகைக்கு நன்றி மனோ.

VIKNESHWARAN said...

@ தமிழ்வாணன்

முத்தான சிந்தனைகளை அழகாக சொல்லி இருக்கிங்க. இவற்றை தொகுத்தால் சிறப்பான கட்டுரையை கொடுக்க முடியும் நண்பரே. எழுதினீர்கள் என்றால் பலரும் பயனடைவார்கள்.

//6) வாரத்தில் 2/3 நாள் விடுமுறை உள்ளவர்கள் மேற்கொண்டு மேற்படிப்பை படிக்கலாம். //

முடியலைங்க. டவுசர கிழிக்கிறானுங்க. நானும் எப்படியாவது எம்பி எம்பி எம்.பி.ஏ படிச்சிருளாம்னு முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். கட்டணத்தை கேட்டாவுடன் என் கண்ணைக் கட்டுகிறது. :(

@ கிருஷ்ண பிரபு

செரிவான கருத்து நண்பரே. வளர்ந்த நாடுகள் பொருளாதார முயற்சிக்கு நல்ல திட்டங்களை அமல்படுத்தி செயல்பட்டு வருக்கிறார்கள். மலேசியாவில் அப்படி ஏதும் தெரியவில்லை. அரசிடம் பண புலக்கம் மெலிந்துள்ளது. பண்ட்(BOND)விற்பனைகள் செய்து மக்களிடம் இருந்து பணத்தை பெற முற்படுகிறார்கள். சில அரசுகளின் தவறான நடவடிக்கைகள் இன்னும் கொஞ்ச நாளில் வண்டவாலம் ஏறும் என நம்பப்படுகிறது.

வியா (Viyaa) said...

நல்ல ஒரு ஆய்வு..
நல்ல பதிவும் கூட விக்கி..
வாழ்த்துக்கள்

’டொன்’ லீ said...

பொருளாதாரம் கலங்குகின்றது...

ஆய்வுகள் கலக்குகின்றன...

:-)
:-(

vasantarao appalasamy said...

Our leaders failed terribly in building a strong economy for all Malaysians..

the world economy crisis furthermore attacked and effected Malaysia severely and making us suffer alot..

VIKNESHWARAN said...

@ வியா

ஆய்வா.... ஆஹா... அது சரி. வருகைக்கு நன்ரி வியா.

@ டொன் லீ

அண்ணே ஆய்வு செய்யல... சும்மா ஒரு டமாஸ்க்கும் கடுப்புக்கும் போட்டது. என்ன நெம்ப நாளா காணும். பிசியா?

@ வசந்தராவ்

மக்களாட்சியை பழுதடையச் செய்யும் பலமான நடவடிக்கைகள் நாட்டின் நிலையைச் சீர் குழையச் செய்யும் என்பதை அவர்கள் உணர்தல் நன்று. :) வருகைக்கு நன்றி.

Subash said...

ஏற்கனவே பணம் சேமிப்பில் உள்ளவர்களுக்கு சிக்கலிலிலைதான்.
மற்றவருக்குத்தான் சிக்கல்.
நல்ல பதிவு நண்பா

K.USHA said...

//இதை எல்லாம் எழுதினால் தமிழன் மட்டும் தான் திருடுகிறானா என சில தமிழ் நலம் விரும்பிகள் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் திருடர்கள் நலம் வாழட்டும் என செல்லிக் கொள்கிறேன்.//
தமிழன் திருடன் தான் என்று சாட்ச்சியங்களுடன் உண்மையைத்தான் எழுதுகிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறீர்கள், பின் ஏன் தமிழ் நலம் விரும்பிகள் சொல்வதைப் பற்றி கவலை உங்களுக்கு, விக்கி. உங்கள் சமுதாய நற்பணியை தொடருங்கள். வாழ்க உங்கள் தமிழ் தொண்டு...

VIKNESHWARAN said...

@ சுபாஷ்

நன்றி சுபாஷ்.

@ உஷா

உஷா நான் தமிழ் தொண்டு செய்கிறேனே? :)) டமாஸா பேசுறிங்க போங்க...

என்னங்க பண்றது உண்மை சில சமயம் கசக்கத் தான் செய்யும். ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

கே.பாலமுருகன் said...

பொருளாதார மந்தகதி அடிதட்டு முதல் மேல்தட்டு மனிதர்கள்வரை எல்லோர் மத்தியிலும் மனநிலை- வாழ்க்கைமுறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
இது தமிழன், சீனன் என்கிற மத அடையாளங்களைத் துறந்துவிட்டு, மூன்றே வகையான கட்டுக்குள் வந்துவிட்டால், நலம். கீழ்தட்டு-மேல்தட்டு, கூடுமானால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மார்க்க்சியம் கற்பிக்கும் முக்கியமான சித்தாத்தங்களில் பொருளாதார இடைவெளியும், அதன்பால் உருவாகும் சமூகமும் முக்கியமாக கருதப்பட வேண்டியது.

சமூகம் வரையறுத்திருக்கும் மனித ஒழுக்க நெறிகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும் பொருளாதார சரிவில் சாத்தியமே. தமிழர்கள் என்று மட்டுமில்லாமல் பொதுவான பார்வையில் எல்லோரிடத்திலும் ஒழுக்க மாற்றங்களைக் காணலாம். இன்னமும் புக்கிட் காயு இத்தாம் எல்லையில் துப்பாக்கி, போதை பொருள் கடத்தல் நடந்து கொண்டுத்தான் இருக்கிறது என்பதற்கு பொருளாதார வீழ்ழ்சி ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால், அதே எல்லையில் பாலியல் தொழிலாளிகளைத் தேடிப் போகிம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் சமமான போட்டியுடன் நடந்து கொண்டிருக்கிறதே! (எல்லையில் வேலை செய்யும் நண்பர்காளின் வழியாகவும் எல்லையில் உள்ள பேராங்காடியில் வேலை செய்யும் நண்பர்களினூடாகவும் எங்கள் மத்தியில் வந்து சேரும் தகவல் இது)

மேல்தட்டு மக்களின் பொருளாதார கட்டமைப்பில் பாதிக்கப்படும் கீழ்தட்டு எளியா மக்களின் அன்றாடங்கள் பெரும் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கையில், அவர்கள் யாராக இருந்தால் என்ன? அவர்களின் வாழ்வை சரி செய்து கொள்ல அவர்காள் எடுத்துக் கொள்ளும் பெய்ருக்கு, அரசு குற்றச்செயல்கள் என்கிற அடையாளத்தை அளிக்கின்றது. இதன் வேரை தேடி தர்க்க ரீதியில் புறப்பட்டால், நாம் கண்டடைவது என்னவோ பொருளாதார இடைவெளியும் அதன் வீழ்ச்சியும் பெரும் கற்பிதமாக இருக்கும்.

கே.பாலமுருகன்

Anonymous said...

பொதுவாக மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்பது கேள்வி. எனது அனுபவமும் அதுவே.
அதிலும் மலேசியாவில் இருக்கும் தமிழர்கள்(பலர்) தமிழ் படிக்கக் கடினம் என்று மலாய் படித்தார்களாம். ஆங்கிலேயன் உருவாக்கிய மொழி. ஒருவர் சீனம்.( எனக்குத் தெரிந்து) நிறையப் பேர் மேல்ப்படிப்பு படித்ததில்லை. காரணம் சோம்பல். அதை விடுங்க. சும்ம பொய் சொல்லுறவங்களை தூக்கிப் பிடித்தால் தினம் ஒரு செதி வரத் தான் செய்யும். உலகுக்கு எது முக்கியம்? ஈழத்தில் தினம் 100 பேர் செத்தாலும் செய்தியில் பொருளாதர எழுச்சி பற்றி அரை மணி நேரம் பேசி விட்டு குசு விட்டுட்டு போவார்கள். நடப்பது எதுவுமில்லை. தப்பு அதை நம்புகிறவர்கைன் மீது.

VIKNESHWARAN said...

@ புகழினி

’’மலேசியாவில் இருக்கும் தமிழர்கள்(பலர்) தமிழ் படிக்கக் கடினம் என்று மலாய் படித்தார்களாம். ’’

உங்களின் இக்கூற்று சரியாகாது. தமிழ்ப் பள்ளியில் படித்தால் கோவிலில் மணியாட்ட மட்டும் தான் பிள்ளை லாக்கி படும் எனும் மாயை நம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டது. தமிழ்க் கல்வியின் தரம் அப்படி மெலிந்துவிட்டது. ஆனால் இன்றய நிலையில் பல தமிழ் மக்களும் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.

மேலும் ஒரு விடயம். இங்குள்ள மலாய் பள்ளிகளுக்கு கிடைக்கும் அரசின் முழு உதவிகள் தமிழ் பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை. மலாய் பள்ளிகளில் பிள்ளைகள் வசதியாக படிக்கக் கூடும் என பெற்றோர் கருதுகிறார்கள்.

VIKNESHWARAN said...

@ பாலமுருகன்

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

ச்சின்னப் பையன் said...

ஹிஹி. அப்படியே எனக்கும் ஒரு வேலை...

VIKNESHWARAN said...

@ ச்சின்னப் பையன்

:) சரி கேட்டிடுவோம். வருகைக்கு நன்றி.

வெங்கட்ராமன் said...

நல்ல ஆராய்ச்சி

K.USHA said...

//சமூகம் வரையறுத்திருக்கும் மனித ஒழுக்க நெறிகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும் பொருளாதார சரிவில் சாத்தியமே. தமிழர்கள் என்று மட்டுமில்லாமல் பொதுவான பார்வையில் எல்லோரிடத்திலும் ஒழுக்க மாற்றங்களைக் காணலாம்.//

சரியாக சொன்னிங்க சார். இதை அனைவரும் நன்கு உணர வேண்டும்.

VIKNESHWARAN said...

@ உஷா

நன்றி.

@ வெங்கட்ராமன்

வருகைக்கு நன்றி நண்பரே.

செல்வேந்திரன் said...

மலேசியாவில் சில தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது என்ற தகவலை அங்கு வாழ தலைப்பட்டுவிட்ட நண்பர்கள் வாயிலாக அறிந்து பெருவேதனை கொண்டேன். டொராண்டா நகரத்திலும் இந்நிலை நீடிப்பதாகவும் தகவல்.

திரைகடல் ஓடி திரவியம் தேடத்தான் சொன்னார்கள். திருடச் சொல்லவில்லை.

நல்ல பதிவு. ரசித்தேன்.

VIKNESHWARAN said...

@ செல்வேந்திரன்

வருகைக்கு நன்றி. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. பெரிய அளவில் திருடிய பொருட்கள் உடனடியாக நாடு கடத்தப்பட்டு விடுகிறது. முக்கியமாக தாய்லாந்து எல்லைப்பகுதிக்கு அனுப்பப்படுகிறது. அரசு கெடுபிடி இருந்தும் சாத்தியமாவது எப்படி? :)

முன்பு 6 கோடி கம்பியூட்டர் சிப்ஸ் திருடப்பட்டு 24 மணி நேரத்தில் சீனாவில் பிடிப்பட்டது. நெட்வர்க் எவ்வளவு விரைவென்ரு பார்த்தீர்களா?

viji said...

huh..ivalo piracanaigala? i'm still under the roof of parents. IDK all this. :P

One more thing also, nowadays lot offers in 'saham's. aahahaha

'anaiya pogum vilakku kolunthu vitthu eriyum nu sollrathu' ithu thaano?

:D

VIKNESHWARAN said...

@ விஜி

:) உண்மை தான். திடுப்பென முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அமனா சஹாம் கொடுப்பதை அறிவித்ததும் பலரும் அடித்துக் கொண்டு வாங்க முற்படுகிறார்கள் இல்லையா... ஹம்ம்ம்.... இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்ல வரல... :))