கண்களில் நீர் பெருக, Priam அரசனும் அவனது துணைவியான Hecuba அரசியும் அவர்களுக்கு பிறந்த குழந்தையை Ida மலையில் விட்டுச் செல்கிறார்கள். ஏன் அப்படி செய்தார்கள்? அதற்கான பதில் ஜோதிடனின் கணிப்பு. அவர்களுக்கு பிறந்த அக்குழந்தை அரண்மனையில் இருக்கும் பட்சத்தில் Troy அரசாங்கத்திற்கு பெறும் பாதிப்பு உண்டாகும் என ஜோதிடன் கூறுகிறான்.
ஒரு இடையனின் அரவணைப்பில் Paris எனப் பெயரிடப்பட்டு அக்குழந்தை வளர்கிறது. காலம் கழிகிறது. அவனும் வீரனாய் வளர்கிறான்.
ரோமானிய புகைக்கதைகளில் காணும் ஒரு தேவதையின் பெயர் Eris. ஒரு சமயம் அவளுக்கு கடுங்கோபம் உண்டாகிறது. கோபத்தின் காரணம் என்ன? Thetis எனப்படும் கடல் தேவதை தனது திருமணத்திற்கு Eris தேவதையை அழைக்காமல் போகிறாள். இதனால் அவள் சினம் கொள்கிறாள்.Thetis எனும் அக்கடல் தேவதையை கேவலப்படுத்தவும், திருமணத்தை நிலைகுழையச் செய்யும் பொருட்டும் Eris திருமண நிகழ்வின் போது கலகம் உண்டாக்கத் திட்டமிடுகிறாள். திருமண நிகழ்வின் போது ஒரு ஆப்பிளைத் தூக்கி எறிகிறாள். தேவதைகளுள் சிறந்த தேவதைக்கே அந்த ஆப்பிள் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி.
ஆதலால் அந்த ஆப்பிள் யாரைப் போய்ச் சேர வேண்டும் என்பதில் திருமண நிகழ்வின் போது பெருங் குழப்பம் ஏற்படுகிறது. பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு அந்த ஆப்பிளுக்கு தகுதியானவர்கள் என மூன்று தேவதைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் முறையே Athena, Aphrodite மற்றும் Hera எனப்படும் தேவதைகள்.
Zeus கடவுளரின் ஆலோசனைபடி Paris எனும் அவ்விளைஞன் சிறந்த தேவதையை தேர்ந்தெடுக்கப் பொறுப்பாகிறான். அம்மூன்று தேவதைகளும் Paris தன்னை சிறந்தவனாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் நோக்கில் ஆளுக்கு ஒரு வரம் அவனுக்கு கொடுக்கிறார்கள்.
Athena அவன் கலந்துக் கொள்ளும் எல்லா போர்களிலும் வெற்றி பெற வரம் கொடுப்பதாக சொல்கிறாள். Hera பல இடங்களை அவன் ஆட்சி செய்ய வரம் கொடுப்பதகச் சொல்கிறாள். Aphrodite உலகில் மிகச் சிறந்த அழகியை அவனுக்கு கொடுப்பதாகச் சொல்கிறாள். Aphrodite-ன் வரத்தை ஏற்கும் Paris அவளையே சிறந்த தேவதையென அறிவிக்கிறான்.
யார் அந்த உலகின் மிகச் சிறந்த அழகி? துரதிஷ்டவசமாக (போகூழ்) அவள் கிரேக்க நாட்டின் Sparta நகர அரசனின் மனைவியான Helen என அறியப்படுகிறது. சில பல சதிவேளைகளால் Helen வெற்றிகரமாக Troy நகருக்கு அழைத்துச் செல்லப்படுகிறாள்.
இதன் வினையாக Troy-க்கும் Spartaவில் இருக்கும் Achaea இனத்துக்குமிடையிலான Trojan போர் உண்டாகிறது. சுமார் 10 வருட காலத்தை விழுங்கிய இப்போரில் கிரேக்கர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவும் போர் நிறுத்தம் காண்கிறது. Troy நகரிலிருந்து கிளம்பும் முன் கிரேக்கர்கள் கடற்கரையோரமாக பூதகரமான மரக் குதிரை ஒன்றை விட்டுச் செல்கிறார்கள்.
வெற்றி வாகைச் சூடியதாக எண்ணம் கொண்டு Priam அரசனும் அவனது இராணுவமும் அன்றய தினம் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். அந்த இரவு யாரும் அறியா வண்ணம் கிரேக்கர்கள் மீண்டும் கடற்கரைக்கு வருகிறார்கள். மேலும் மரக் குதிரையில் மறைந்திருக்கும் வீரர்களும் வெளியேறி Troy அரசை எதிர்க்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் Troy அரசு அழிந்து போகிறது.
இலியட் எனப்படும் இக்கதை Homer எனும் ஒரு கிரேக்க குருடனால் எழுதப்பட்டது. இலியட் உலகப் புகழ் வாய்ந்த புத்தகம் என்பதை நமது பள்ளிக் காலங்களில் படித்திருப்போம்.
இலியட் புனைக் கதை மட்டும் தானா?
23 comments:
//இலியட் புனைக் கதை மட்டும் தானா?//
புனைக்கதையாகவும் கூட இருக்கலாம் அல்லது அந்த காலகட்டத்தில் நடைப்பெற்ற சம்பவங்களின் தாக்கதினாலும் கூட உருவாகியிருக்ககூடும்!
நல்லா இருக்கு :)
வருகைக்கு நன்றி ஆயில்யன்... ம்ம்ம் நமது சரித்திர நாவலை போல என நினைக்கிறேன்...
இந்த கதையிலிருந்து தாங்கள் கூற வரும் கருத்து என்ன?
பெண் ஆசையால் அன்று அரசாங்கம் மட்டும் தான் அழிந்தது. ஒரு நாடே அழிந்த கதை கூட நடந்துள்ளதே! இராமாயணத்தை தான் கூறுகிறேன்.
வரலாற்று கதையை அருமையாக அளித்துள்ளீர்கள்.
@ ஜவஹர்
எனது கருத்து என எதுவும் இல்லை.. இலியட் பற்றி சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்... நாளைக்கு எழுதவிருக்கும் பதிவுக்கு புரிந்து கொள்ள இப்பதிவு உதவும் எனும் நோக்கில் எழுதினேன்...
@ குரு
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
நல்ல தகவலைக் கொண்ட பதிவு!!!
புனைக்கப்பட்டது.
வழக்கம் போல் அருமை டாக்டரே!!!
THis is the Story Of the flim TROY
இலியட் புனைக் கதை மட்டும் தானா?
வெளி நாடு என்றால் புனைவு மட்டுமே....
இந்தியா என்றால் வாழ்ந்த மனிதர்கள்... இன்றும் வணங்கப்படுவார்கள்.....
/*Expatguru said...
பெண் ஆசையால் அன்று அரசாங்கம் மட்டும் தான் அழிந்தது. ஒரு நாடே அழிந்த கதை கூட நடந்துள்ளதே! இராமாயணத்தை தான் கூறுகிறேன். */
அழிந்து கொண்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.... அந்த நாட்டின் பெயர் இந்தியா என்றும் சொல்லுங்கள்.
//இனியவள் புனிதா said...
நல்ல தகவலைக் கொண்ட பதிவு!!!
//
ரிப்பீட்டே :))
எனது ஆர்வத்தை தூண்டும் அளவிற்கு தங்கள் வலைப்பதிவு அமைந்துள்ளது.
@ புனிதா
வருகைக்கும் தருகைக்கும் நன்றி..
@ ஆட்காட்டி
பல பதிவுகளில் உங்கள் பின்னூட்டங்களை காண்கிறேன். மிக சுருக்கமாக இருக்கிறது... சில வேளைகளில் இரட்டை அர்த்தம் கொண்டுள்ளதை போலவும் உள்ளது...வருகைக்கு நன்றி
@ குசும்பன்
நன்றி... மீண்டும் வருக...
@ அனானி
வருகைக்கு நன்றி
@ நையாண்டி நைனா
வருகைக்கும் உங்கள் உண்மை கருத்துக்கும் நன்றி...
@ சென்ஷி
நன்றி...
@ தாய்மொழி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
நல்ல தகவலைக் கொண்ட பதிவு!!!
பெண்களிடமிருந்து ஏகப்பட்ட வரவேற்ப்பு,எப்படி விக்னேஷ் உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க தோனுது...சரி...ஏன் பெண்னை பற்றியே...(எழுத்தால்)கையால் அல்ல...எழுத காரணம்.
@ ச்சின்னப் பையன்
மிக்க நன்றி... என்ன பின்னூட்டம் சீரியஸாக இருக்கே?
@ வம்பான நண்பன்
போயாங்ங்ங்...
வணக்கம்.
இது புனைக்கதையா அல்லது நிஜக்கதையா என்று தெரியாமல் இருக்க, தாங்கள் இதனை எழுதியதின் நோக்கம் என்ன? "பெண் ஆசையால் அழிந்த அரசாங்கம்!" என்ற தலைப்பே பெண்களுக்கு எதிராக அமைந்துள்ளதே! "ஆணின் ஆசையால் விளைந்த விபரீதம்" என்றும் தலைப்பிட்டிருக்கலாமே?
@ து.பவனேஸ்வரி
இது நிஜமான கதையா அல்லது புனைக்கதையா என தெரியாமல் நான் எழுதவில்லை... இந்த பதிவு இலியட்டை பற்றி அறியாதவர்களுக்கு ஒரு அறிமுகம் அதனால் தான் இதை எழுதிய பிறகு troy நகரை கண்டிபிடித்தவரின் கதையை எழுதினேன். எனது கடைசி வினாவின் அர்த்தம் எனக்கு தெரியாதென்றில்லை... தெரிந்தவர் சொல்லட்டும் என்றே எழுதினேன்...
"ஆணின் ஆசையால் விளைந்த விபரீதம்"
உங்கள் கருத்தை ஏற்கிறேன்... தலைப்பை உங்கள் விருப்பத்திற்கேற்று மாற்றி படித்துக் கொள்ளுங்கள்... வருகைக்கு நன்றி..
:)
வணக்கம்,
தலைப்பை நானே மாற்றிப் படித்துக் கொள்கிறேன். இப்பொழுதுதான் கதை இன்னும் நன்றாக இருக்கிறது. ஹஹஹா...
/
குசும்பன் said...
வழக்கம் போல் அருமை டாக்டரே!!!
/
ரிப்பீட்ட்டே
@ தூயா
வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...
@ பவனேஸ்
ஹம்ம்ம் என்னா ஒரு வில்லத்தனம்...
@ மங்களூர் சிவா
இங்கயூமா.....
Post a Comment