Schleimann தனது நண்பர்களை காணும் போது சொல்கிறான், ஒரு நாள் நிச்சயமாக நான் Troy கோட்டையை தேடிச் செல்வேன் என்று. அவனது பேச்சு எல்லோருக்கும் நகைப்புக்குள்ளாகிறது. schleimann-னின் பெற்றோரும் அவனது எண்ணத்தை அறிகிறார்கள்.
அவனை அழைத்துச் சொல்கிறார்கள். Trojan போர் என்பது ஒரு புனைவு மட்டுமே. அதில் வரும் பல கடவுளர்களும் புரட்டு விடயமே. ஒரு ஆப்பிளுக்காகவும், பெண்ணுக்காகவும் 10 வருட போர் நடந்தது என்பது கேலிக்குறியது. கதையை கதையாக மட்டுமே பார்க்க வேண்டுமெனவும் மனதை குழப்பிக் கொள்ளாமல் இருக்கவும் சொல்கிறார்கள்.
இளைஞனான பிறகு, Schleimann வியாபரம் செய்தும் மாலுமியாக பணி புரிந்தும் பணம் தேடுகிறான். அவனது பல தேச பயணங்களின் வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் துர்க்கிய மொழிகளை பயின்று கொள்கிறான். St.Pettersburg எனும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவணத்தில் பணி புரியும் சமயம் ரஷ்ய மொழியும் கற்றும் கொள்கிறார். வியாபாரமும் நல்ல விதமாய் அமைந்ததால் இளம் பருவத்திலேயே நன்கு பணம் ஈட்டுகிறார்.
தனது இலட்சியங்களையும் மறக்காமல் அதற்கான ஆதாரங்களையும் கேமிக்கிறார்.
அதில் ஈடுபடும் முயற்சியை பொருட்டு முதல் வேளையாக Minnaவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்.அக்கடிதம் கிடைப்பதற்கு ஒரு மாதத்திர்கு முன்னமே Minna வேறொரு ஆடவரை திருமணம் செய்து கொண்டுவிடுகிறாள். Minna-வின் நேர்மையின்மையினால் Schleimann மிகவும் வருந்துகிறார். பிறகு ஒரு ரஸ்ய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் நீடிக்காமல் விவாகரத்தில் முடிகிறது.
1863-ஆம் ஆண்டு Schleimann தனது 41வது வயது நிறைவடையும் சமயம் கோடிஸ்வரன் எனும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். சரித்திர வல்லுனர்களும் ஆய்வாளர்களும் Troy கோட்டை இல்லை என்பதையே அச்சமயம் உறுதியோடு சொன்னார்கள். அவை Scheleimann-னின் எண்ணத்தை சற்றும் சிதறடிக்கவில்லை. அதே ஆண்டு தனது கனவுகளை உறுதிபடுத்திக் கொள்ள துர்க்கி நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஒரு சிலரே Troy நகரம் இருந்திருக்கக் கூடும் என்பதை நம்பினார்கள். அது Aegean எனும் கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் Bunarbashi எனும் மலையில் அமைந்திருக்கலாம் என கருத்துரைக்கிறார்கள். Schleimann, Bunarbashi மலைக்குச் செல்கிறார். அவ்விடம் Homer இலியட்டில் சொன்னதை போல் இல்லாதிருப்பதைக் கண்டு வருத்தமடைகிறார்.
Homer தனது கதையில் சொல்லிய புவியியல் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தனது ஆராய்ச்சியில் முற்படுகிறார். அதன் அடிப்படையில் Troy கோட்டையானது Hissarlik அருகே இருக்கும் ஒரு மலையில் இருப்பதாக அறிகிறார். அந்த மலையில் இருந்து Ida மலையைக் காண முடிந்தது. அங்கே சமமான மணல் பரப்பும், எதிரியை துரத்துவதற்கு வசதியான இடமும், கடற்கறையில் இருந்து சற்று தூரத்திலும் அமைந்திருந்தது.
அவரது முயற்சிகள் வீண் போகாமல் இருக்கும் பொருட்டு தன்னை நன்முறையில் தயார்படுத்திக் கொள்ள திட்டமிடுகிறார். தொல் பொருள் ஆராய்ச்சி துறையில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெறுகிறார்.
மீண்டும் துர்க்கிக்குச் சென்று ஆராய்ச்சியை தொடரும் முன் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார். தன் நண்பருக்கு கடிதம் எழுதி தனக்கு ஒரு இளம் மனைவியை தேடும்படியும் அவள் Homer மற்றும் Troy ஆராய்ச்சியின் மீது பற்று கொண்டிருப்பவளாகவும் இருக்க வேண்டுமெனவும் சொல்கிறார்.
Schleimann-னின் கடிதத்தை ஏற்ற அவரது நண்பன் Sophia Engastromoners எனும் 17 வயது நிறம்பிய நங்கையை அவருக்கு அறிமுகப் படுத்துகிறார். பிறகு அவர்களிருவரும் Athens-ல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
துர்க்கிய நாட்டு அரசாங்கத்தின் அனுமதியோடு Troy நகர ஆராய்ச்சி தொடங்குகிறது. Schleimann-னின் ஆராய்ச்சிக்கு ஆதரவளித்த சுல்த்தான் கிடைக்கும் பொருட்களில் ஒரு பங்கு துர்க்கி நாட்டு அரசாங்கத்திற்கு சேர வேண்டுமென விதியிடுகிறார்.
1871-ஆம ஆண்டு Hissarlikகில் ஆராய்ச்சி வேலைகள் தொடங்கப்படுகிறது. Schleimann-னின் பாலிய வயது கனவும் நிறைவடைகிறது. அவர் Troy கோட்டையை கண்டுபிடித்தார். அடுக்கடுக்காய் இடிந்து விழுந்தும், தீவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருந்த கோட்டையை கண்டுபிடிக்கிறார். இந்த வெற்றி அவரை உலகப் புகழ் பெற செய்தது.
Schleimann-க்கு மன நிறைவு கிடைக்கவில்லை. Priam அரசனின் ஆட்சியின் போது சொல்லப்பட்டிருப்பதை போல் அந்த கோட்டை இல்லாமல் இருந்ததுவே காரணம். இலியடில் சொல்லப்பட்டிருக்கும் Troy கோட்டையின் வடிவம் கிடைக்கும் வரை தனது ஆராய்ச்சியை மேற் கொண்டார்.
வெறித்தனமாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட Schleimann-னுக்கு பேராசையும் பற்றி கொண்டது. Hissarlik-க்கு வந்த தனது இலட்சியத்தை மறந்தார். மாறாக புதயலை தேடுவதிலேயே அதிக கவனம் செலுத்தினார். கிரேக்க இராணுவத்திற்கு பயந்து Priam அரசன் தனது செல்வங்களை எங்கேனும் பதுக்கி வைத்திருக்க வேண்டுமென யூகித்தார். ஆராய்ச்சியின் முதல் குறியாக புதையல் பதுக்கிய இடத்தை அறிவதிலேயே இருந்தது.
160 வேலையாட்களுடன் இவ்வாராய்ச்சி தொடரப்பட்டது. 14 ஜூன் 1873-ஆம் ஆண்டு தொண்டப்பட்டிருந்த சுவற்றினூடே மினுமினுப்பு கதிர்களை கண்டார். ஒளி வந்த இடத்திர்கு அங்கே இருந்த குழியின் வழியே இறங்கிச் சென்று கண்ட போது அவ்வொளிக்கதிர் அங்கிருந்த பீப்பாயில் இருந்து வந்ததைக் காண்கிறார்.
மூடப்பட்டிருந்த பீப்பாய் லேசாக உடைந்திருந்ததினால் அதன் வழியே அதற்குள்ளிருந்த தங்கத்தைக் காண முடிந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு அவர் எழுதிய புத்தகத்தில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் Schleimann. "எனது வேலையாட்கள் தூங்கிக் கொண்டிருந்த சமயம், ஒரு பெரிய கத்தியின் துணை கொண்டு அந்த பீப்பாயை வெளியாக்கினேன். அது கடினமாகவும் பேராபத்து நிறைந்த வேலையாகவும் இருந்தது. எந்த நேரத்திலும் அந்த பாழடைந்த தூண்கள் என் மீது விழுந்திருக்கக் கூடும். ஆனல் பீப்பாயில் இருந்து வெளிவந்த தங்க ஒளி அந்த சமயத்தில் என்னை எது வேண்டுமானாலும் செய்ய தூண்டிற்று. ஆகவே அச்சமயத்தில் ஆபத்தை நான் கருதவில்லை".
1878-ஆம் ஆண்டு Schleimann மீண்டும் Troy-க்கு வருகிறார். ஆரம்பத்தில் தேடிய அதே இடத்தில் மேலும் சில புதயல்கலைக் கண்டெடுக்கிறார். இடிந்து போன பல அடுக்குகளை அக்கோட்டையில் காண்கிறார். அவற்றில் ஒன்று Priam அரசனின் ஆட்சியின் போது உள்ள கோட்டையென சொல்லப்படுகிறது. Schleimann-னின் தேடலும் ஒரு நிறைவிற்கு வருகிறது.
Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் கிடைத்த முதல் புதையல் அது. அவர்கள் மகிழ்ச்சிக் கடலில் திலைத்தார்கள். அந்த புதையலுள் இரண்டு கிரிடங்கள் இருக்கக் கண்டணர். அது அரசர் மற்றும் அரசியால் உபயோகப் படுத்தியதாக இருக்கக் கூடும் என நம்பினார்கள்.
மேலும் தோண்டவும் அவ்விடத்தில் இருந்து பீங்கான் தட்டுகள், பொத்தான்கள், கயிறு மற்றும் தங்கத்திலான நூல்களும் கிடைத்தது. இது பொக கை வளையல், வெள்ளிக் கின்னங்களும், வெங்கலத்திலான ஆயுதங்களென பல பொருட்களும் கிடைத்திருக்கிறது. பேராசையின் மிதப்பில் இருந்த Schleimann எல்லா பொருட்களையும் ஜெர்மனிக்கு கடத்திச் சென்றுவிடுகிறார்.
பெருந்திருடனென கூறப்படும் Schleimann
இந்த விடயமறிந்த துர்க்கிய நாட்டு அரசாங்கம் Schleimann-னுக்கு 2000 பவுண்ட்ஸ் ஸ்தெர்லிங் அபராதம் விதித்தது. Schleimann விதிக்கப்பட்ட அபராதத்தைக் காட்டினும் 5 மடங்கு அதிகமான பணத்தை துர்க்கிய நாட்டு அரசாங்கத்திற்குக் கொடுத்தார். துர்க்கிய அரசாங்கம் அவருக்கு மீண்டும் ஆராய்ச்சியை தொடர வாய்ப்பளித்தது. அவரது நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ளும் நிபந்தனையோடு.
ஆனால் Schleimann அதில் ஆர்வம் கொள்ளாமல் இம்முறை தமது ஆராய்ச்சியை கிரேக்க நாட்டில் இருக்கும் Mycenaeகின் மீது செலுத்தினார். Troy மீது படையெடுத்த Agamennon அரசனின் கோட்டையை தேடினார். அவரது அயராத முயற்சியின் பேரில் அந்தக் கோட்டையில் இருந்த புதயலைக் கண்டு பிடிக்கிறார். அவை Troy கோட்டையில் கிடைத்த புதயலை விட அதிக மதிப்பு கொண்டவையாக இருந்தது.
1878-ஆம் ஆண்டு Schleimann மீண்டும் Troy-க்கு வருகிறார். ஆரம்பத்தில் தேடிய அதே இடத்தில் மேலும் சில புதயல்கலைக் கண்டெடுக்கிறார். இடிந்து போன பல அடுக்குகளை அக்கோட்டையில் காண்கிறார். அவற்றில் ஒன்று Priam அரசனின் ஆட்சியின் போது உள்ள கோட்டையென சொல்லப்படுகிறது. Schleimann-னின் தேடலும் ஒரு நிறைவிற்கு வருகிறது.
Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த செல்வங்களையும் பொருட்களையும் நன்கு புணர்ந்த Schleimann 1880-ஆம் ஆண்டு தனது 58வது வயதின் போது அவற்றை ஜெர்மனில் இருக்கும் பெர்லின் பொருட்காட்சி சாலைக்கு கொடுக்கிறார். அதன் பின் 26.12.1890-இல் மரணமடைகிறார்.
இரண்டாம் உலகப் போரின் போது அவை இரஸ்ய இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகிறது. தற்சமயம் Troy மற்றும் Mycenac-கில் கிடைத்த பொருட்கள் யாவும் ரஸ்யாவின், Pushkin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
Sophia- இவர் அணிந்திருக்கும் நகைகள் TROY கோட்டையின் கண்டெடுக்கப்பட்டது
Troy ஒரு கற்பனையல்ல என்பதை நிருபித்த Schleimann-னுக்கும் Sophia-வுக்கும் உலகமே நன்றி கூறியது. ஒரு சில தரப்பினர் Schleimann-னை தொள் பொருள் ஆய்வாளர் என ஏற்க மறுத்தனர். மாறாக அவரை உலகளாவிய பெருந் திருடன் எனவும் பட்டம் சூட்டினர்.
Schleimann-னின் பேராசை போக்கினால் இன்றளவும் துர்க்கி, ஜெர்மன், ரஸ்யா, மற்றும் கிரேக்க நாட்டினருக்கிடையே ஓர் உள் புகைச்சல் இருந்த வண்ணமே இருக்கிறது. தற்சமயம் இருக்கும் சொத்துக்கள் யாவும் தன்னுடையது எனும் எண்ணம் இந்நாடுகளிடையே இருந்து வருகிறது.
Frank Calvert எனும் பிரிட்டானிய ஆராய்ச்சியாளரின் வாரிசுகள், Schleimann கண்டுபிடித்த அப்புதையளின் ஒரு பகுதி தங்களுக்குறியது எனவும் அவை அவர்களது தாத்தாவின் நில பகுதியில் எடுக்கப்பட்டிருக்கிறதெனவும் சாடியுள்ளார்கள்.
மேலும் தொடரப்பட்ட ஆராய்ச்சியில் Troy கோட்டை குறைந்தபட்சம் ஒன்பது அளவுகளை கொண்டிருக்க வேண்டுமென கூறுகிறார்கள். ஆரம்ப நிலையானது கி.மு 3000 ஆண்டும் இறுதி நிலையானது கி.மு 350 முதல் 400 ஆண்டிற்குட்பட்டதாக இருக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்கள். Trojan போர் கி.மு 1194 முதல் கி.மு 1184 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது.
Schleimann தான் கண்டுபிடித்த பொருட்கள் Agamemmon மற்றும் Priam அரசருடையது என தபது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அந்தத் தகவல் தவறானது என பின்னாளைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
Mycenace கோட்டையில் Schleimannனுக்கு கிடைத்த புதையலானது Agamemmon ஆட்சி காலத்திற்கு 200 வருடம் முற்பட்டது எனவும். Troy நகரில் கண்டெடுக்கப்பட்ட புதையல் Trojan போருக்கு 1000 வருடங்கள் முந்தயது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
(பி.கு:நேற்றய பதிவுக்கும் இக்கட்டுரைக்கும் தொடர்பு உண்டு: பெண் ஆசையால் அழிந்த அரசாங்கம்!! )
24 comments:
அருமை டாக்டர்!!!
நீங்கள் கட்டுரைக்காகத் திரட்டிய தரவுகளின் மூலத்தைக் குறிப்பிட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
மிக அருமையான பதிவு விக்கி.
பாராட்டுக்கள்...
அட்டகாசம் விக்கி. அருமையான நடை மற்றும் தகவல்
//
அருமை டாக்டர்!!!
//
அதுக்குள்ள ஒருத்தர் டாக்டர் பட்டமே குடுத்துட்டாரு... அருமையான ஆராய்ச்சி... தொடரட்டும்...
வாழ்த்துக்கள். சிறப்பான கட்டுரை.
அருமையான தகவல்.
இன்னும் ஒருமுறை பொறுமையாக படிக்க வேண்டும்.
தொடருங்கள். . . .
நல்ல அருமையான பதிவு, நாளிதழுக்கு அனுப்புமாறு பரிந்துரைக்கிறேன்..
இந்த தகவலை ஒரு ஆவணப்படம் ஊடாக நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
கலையரசன்
சூப்பர் பதிவு.. :)
வணக்கம்,
நல்ல முயற்சி. தகவல்களைச் சிரமப்பட்டு சேகரித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. இதனையே மூலதனமாகக் கொண்டு வரலாற்று நாவல் எழுதலாம். (வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாகவே எனக்குள் தோன்றிக் கொண்டிருக்கிறது). உங்களது கட்டுரை எனது எண்ணத்திற்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது.தங்களது மொழி வளமும் சிறப்பாகவுள்ளது. உங்களது கவிதைகளைப் போல் கட்டுரைகளும் படிப்போரைக் கவர்ந்திழுக்கின்றன. உங்களது முயற்சி மென்மேலும் தொடர் எனது வாழ்த்துக்கள்.
@விஜய் ஆனந்த்
நன்றி தலைவரே...
@ அனானி
வருகைக்கு நன்றி...
@ நந்து
பாராட்டுக்கு நன்றி...
@ கிஷோர்
நன்றி கிஷோர்
@ விஜய்கோபால்சாமி
நன்ரி சித்தப்பு... அந்நியாயம் தாங்கள... எல்லாத்துக்கும் குசும்பனே காரணம்...
@ மு.வேலன்
நன்றி...
@ வெட்கட்ராமன்
வாங்க நண்பரே... உங்களை சந்தித்து நெடு நாட்களாகிறது... கொஞ்சம் பேச வேண்டும் பிறகு போன் போடுகிறேன். வருகைக்கு நன்றி...
@ சதீசு குமார்
வருகைக்கு நன்றி. தமிழக நாளிகை தமிழ் ஓசைக்கு அனுப்பிவிட்டேன். விரைவில் வருவதாக கூறினார்.
@ கலையரசன்
முதல் வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...
@ சென்ஷி
உங்களுக்கு ஒரு சூப்பர் நன்றி...
@ து.பவனேஸ்வரி
வருகைக்கு நன்றி... ஏற்கனவே ஒரு தொடரை தொடங்கி முடிக்க நேரம் இல்லாமல் அல்லாடுகிறேன் :(( சரித்திர தொடர் வேறா... சரித்திர நாவல் வாசிப்பில் எனக்கு அதிக பிரியம் மன்னன் மகள் நாவல் என்னை மிக கவர்ந்தது.
கட்டுரை மிக அருமை.
எளிமையான நடையில் நுணுக்கமான தகவல்களை தந்தமைக்கு நன்றி.
TROY ஒரு பக்கம் இருக்கட்டும்.
மதுரை தெப்பக்குளத்தில் புதையல் புதைந்து இருக்கிறதாமே உண்மையா?
அருமையான வரலாற்றுப் பதிவு..
விக்கி,
இவ்வகை கட்டுரைகள் எழுதும் உங்கள் மாறுப்பட்ட திறமையையும் முயற்சியையும் பாராட்டத்தான் வேண்டும்.
ஓரு கேள்விக்குறி...இரண்டாவது துணைவியார் ஏன் இளம் பெண்ணாக இருக்க வேண்டும் என்று கேட்டார் அந்த "பெருந்திருடர்"?
@ புதியவன்
வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி.. நீங்கள் சொல்லிய விடயம் எனக்கு தெரியாது...
@ டொன் லீ
வருகைக்கு நன்றி...
@ உஷா
ஒரு வேளை முதியவர் அவர் ஆராய்ச்சி பணிக்கு சரி வர மாட்டார் என நினைத்திருக்கலாம்... வருகைக்கு நன்றி...
அப்பாடி, முடிஞ்சுது.
துருக்கி என்று எழுதுங்கள்.
@ ஆட்காட்டி
வருகைக்கு நன்றி... அப்பாட முடிஞ்சுது என்பதன் அர்த்தம் என்ன? தூக்கம் வர வச்சிட்டேனா? சுட்டிகாட்டியதற்கு நன்றி...
வணக்கம்,
மன்னன் மகள் நாவலை நானும் படித்திருக்கிறேன். நீண்ட காலமாகிவிட்டதால் கதையோட்டத்தை மறந்து விட்டேன். கொஞ்சம் ஞாபகப்படுத்த முடியுமா?
நிறையவே இருந்துச்சா, அதுவும் நிறைய இங்கிலீசுல இருந்த்குச்சா அது தான்?
எங்க புடிச்சிங்க இவ்வளவு விசயத்தை!
அசத்தலாகவும், மர்ம நாவல் போலவும் இருக்கு
அருமை டாக்டர்!!!
@ து.பவனேஸ்
கதையை சொல்லி ஞாபகபடுத்திட்டேன். சரி தேர்வுக்கு படிக்கவும். வலைபக்கத்தில் கும்மிகிட்டு இருந்தா என்ன அர்த்தம். வலைபதிவு உலகம் முன்னேற்றத்திற்கு உதவாத உலகம்னு சான்றோர்கள் சொல்லி இருக்காங்க.. GOOD LUCK FOR YOUR EXAM.
@ ஆட்காட்டி
நன்றி...
@ வால்பையன்
வருகைக்கு நன்றி... எல்லாம் புத்தகத்தில் படித்த விடயங்கள் தான்... அங்க கொஞ்சம் இங்க கொஞ்சமாக எடுத்து போட்டு எழுதுகிறேன்.
@ மங்களூர் சிவா
நீங்களுமா?... அவ்வ்வ்வ்
Post a Comment