நாம் வாசிக்கும் எல்லா புத்தகங்களும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் படிக்கும் சில நூல்கள் வெறும் சக்கையாக போவதும், எதிர்பாராமல் படிக்கும் சில நூல்கள் ஆழ்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன என்பது மறுக்கமுடியாது.
ஏன் அப்படி? என்ற கேள்விக்கு விடை தேடினால் தரமின்மை என்போம். அதையே அகிலன் தமது முன்னுரையில் இப்படிக் கூறுகிறார்.
1943 முதல் 1945 வரை இடைப்பட்ட காலத்தில் அதாவது இந்திய தேசத்தின் விடுதலைக்கு முன் கதை ஆரம்பமாகிறது. இரண்டாம் உலகப் போரின் போது வெறி பிடித்துப் போன மனிதனின் குணத்தால் பலரும் பாதிப்படைகிறார்கள்.
பாதிப்பின் பிடியில் சிக்கியவனாக சித்தரிக்கப்படுகிறான் கதையின் நாயகன். வாசுதேவன் படிப்பை முடித்து தனது மாமாவின் சுருட்டுத் தொழிற்சாலையில் குமாஸ்தா பணியில் அமர்கிறான். மாமன் என்றாலும் பொருளாதார வேறுபாடு அவர்களிடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது.
வறுமையும் குடும்ப பாரமும் வாசுதேவனை பிழிந்தெடுக்கும் போது செல்வச் செழிப்பில் குளிர் காய்கிறார் அவனது மாமா தர்மலிங்கம். தர்மலிங்கத்தின் மகள் கனகம். கனகம் வாசுவின் மீது காதல் கொள்கிறாள். இவர்களது காதல் தர்மலிங்கத்திற்குத் தெரியவரவும் வாசுவின் வேலை பறிபோகிறது.
சில காலத்தில் வாசுதேவன் இராணுவத்தில் சேர்கிறான். அதன் பின், இந்திய விடுதலைப் போரில் இரண்டாவது போர்முனையை ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவதில் பெரும் பகுதியினர் தமிழர்களே எனும் கூற்றை சற்றும் பிசகாமல் நமக்குச் சமர்ப்பித்துள்ளார்.
புஷ்பா எனும் கதாபாத்திரம் நெஞ்சை கனக்கச் செய்யும் விதமாய் அமைகிறது. ரங்கூனில் இராணுவ வீரனாக வாசு சந்திக்கும் குடும்பத்தில் ஒருத்தி தான் புஷ்பா. அதற்கு நேர் எதிராக அறுவருப்பைக் கொடுக்கும் கதாபாத்திரம் பசுபதி எனும் தர்மலிங்கத்தின் மைத்துனன்.
இக்கதையை பலரும் படித்திருக்கலாம். படிக்காதவர்களுக்கு நான் குறிப்பிடுவது சிறு அறிமுகமாக அமையட்டும். ஆதலால் கதைச் சுறுக்கத்தை எழுதுவதை தவிர்க்கிறேன். ஒவ்வொரு இடங்களிலும் கதாசிரியரின் எழுத்துக்கள் நமக்கு உணர்ச்சி பூர்வமாய் அமைவது திண்ணம்.
நீலக் கடலலையே! - உனது
என வாசுவின் காதலை தொடக்கும் பாரதியாரின் கவிதை வரிகளே நாவலின் முடிவாகவும் அமைகிறது.
நெஞ்சினலைகள் யுத்த களத்தில் பூத்த காதல் மலர்.
7 comments:
இவ்வளவு சுருக்கமான விமர்சனத்தை எதிர்ப்பார்க்கவில்லை...:-(
என்னை மிகவும் பாதித்தது அந்த சயாமிய மரண இரயில் தண்டவாள நிர்மாணிப்புக்காக உயிர்விட்ட தமிழர்கள்.. இரண்டாம் உலக போர்!!!
தமிழுலகில் ஐயா அகிலன் அவர்கள் செய்த தமிழ் பணிகளுக்கு சிரம் தாழ்த்தி தாழ்மையுடன் வணங்குகிறேன்.
அவரை நினைவுப் படுத்திய விக்கி, உங்களுக்கு நன்றி.
@ இனியவள் புனிதா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ மு.வேலன்
வருகைக்கு நன்றி
இன்னும் நான் சமூக நாவல்கள் படித்த்தில்லை, சரித்திர நாவல் தான் என்னமோ எனக்கு பிடிக்கும், இருந்தும் இந்த படித்துப்பார்க்கிறேன் விக்னேஷ்
நம்ம ஊர் எழுத்தாளர் திரு சண்முகம் அவர்கள் எழுதிய "சயாம் மரண ரயில்" படித்துப்பார்த்திருக்கிறீர்களா?
¯¥Å ‡òñÅ þºÏÒ´—°‘¿»ò º±Éèã³. °ò
…ϯ€¥ צØò °ò€À Øã™ÃÅ, ×íêò ã™Ã¦Æ‘° °ò€ÀÉÅ ×ãÀ‘î —ºÍÆ ‘ªÉÅ,Šòì™—‘òì —°‘¥Ñ¹³ Øã›Å ‡ÞÕÅ, —œ‘ÖÒ¿º¨Åþº‘³....°í—ÖÒ‘Å ¥› À‘ª¥‘ÀÖ ¸–íì ŠÏ þ‘¦™Å
þÀíº¥ ±À‘ €× Ø͹³ —œÖŽòéî. Ü×ãÚ —ºÍÆ€×; ‡¯¬™€Æíé€×.
@ ஜவஹர்..
கண்டிப்பாக படித்துப் பாருங்கள்... வருகைக்கு நன்றி...
@ கடாரம்
வணக்கம் ஐயா... உங்கள் எழுத்துக்கள் ஜிலேபியை பிட்டு போட்டு வைத்தது போல் உள்ளது. யூனிகோட்டில் எழுதவும்...
Post a Comment