Wednesday, July 30, 2008

தங்க விலை யார் காரணம்?


தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம்.

தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கின்றார்கள். மனிதனின் உயர்ந்த குணத்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமான மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்ற தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிமம் என்பதனாலா? உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு யார் காரணம்?

மேற் காணும் கேள்விகளுக்கு மனிதனும் அவனது பேராசை போக்கும் தான் காரணம் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதுதான் உண்மை. தங்கம் என்பது பூமியில் இருக்கும் மண், கல், மரம், செடி கொடி போன்ற வரிசையில் வரும் ஒரு சாதாரண பொருளே. தங்க விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வழி மட்டுமே தங்க விலை குறைய திறவு கோலாக அமையும்.

தங்கத்திற்கு மவுசு ஏற்பட்ட சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். மனித நாகரீக வளர்ச்சிக்கு வியாபரம் முக்கிய வர்த்தமானமாக அமைந்திருக்கிறது. வியாபார மாற்றுக்கு தங்கத்தையும் அதனை அடுத்து வெள்ளியையும் உயயோக படுத்தி இருக்கிறார்கள்.

அக்காலகட்டங்களில் யுத்தம் ஏற்படுவது பொதுவான ஒன்று. வெற்றிக் கொண்ட நாடு தோல்வியடைந்த நாட்டை தன் வசமாக்கிக் கொள்ளும். அந்நாட்டில் கிடைக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்வதில் தங்கம் தான் முதலிடம் வகிக்கும். இது தான் மனிதன் தங்கத்திடம் அடிமையான முதல் படி. அரச குலத்தில் தங்கத்தின் உபயோகம் அதிகம் இருந்தது. இதன் வழி தங்கத்தை வைத்திருப்பவர்கள் உயர்ந்தவர்கள் எனும் போக்கு ஏற்பட்டது. முக்கியமாக இந்தியர்களிடையும், எகிப்தியர்களிடையும் தங்கத்தின் மவுசு அதிகமாக இருந்தது. தனது நாட்டின் செல்வச் செருக்கை காட்டவும், வளம் பெற செய்யவும் தங்கம் அதிகமாக தேவைபட்டது.

பின்னாட்களில் தங்கத்தின் தாக்கம் நாம் தற்சமயம் புழகத்தில் பயன்படுத்தும் பணமென உருவெடுத்தது. நாகரீகத்தின் வளர்ச்சி வியாபாரத்தை பெருக்கியது. மக்கள் நாணய மாற்று வியாபாரத்தை பரவளாக அமல்படுத்த ஆரம்பித்தார்கள். தங்க நாணயமே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.

இம்மாறுதல் தங்கத்தை பத்திரபடுத்த உற்படுத்தியது. இக்காலகட்டத்தில் மக்களிடையே திருட்டு அதிகரித்தது. அதை தடுக்க தங்க வியாபரிகளும் அடகு கடைகளும் உருவாக்கப்பட்டன. மக்கள் தங்கத்தை அடகு கடைகளில் பத்திரப்படுத்தி வைத்து அதில் பெரும் சான்றிதழை நாணய மாற்றுக்கு பயன்படுத்தினார்கள்.

நாளடைவில் ஒரு குறிபிட்ட நபர்களிடையே தங்கம் அதிகரித்தது. தங்க விலையை அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொண்டார்கள். தங்கத்தின் மேல் இருக்கும் அலாதி பிரியத்தில் மக்களும் அதனை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அதன் விலையும் செல்லில் அடங்க ஏற்றத்தை நாடிக் கொண்டிருக்கிறது.




முக்கியமாக நம் இந்தியர்களிடையே தங்க ஆபரணம் அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஒரு நற்காரியங்களுக்கு வருபவர்கள் புது புது வடிவில் தங்க ஆபரணங்களை அணிந்து வருகிறார்கள். அதை பார்க்கும் மற்றோர் நபர் தானும் அப்படிபட்ட அணிகலனையோ இல்லை அதைவிட அழகான ஆபரணத்தை வாங்க ஆசைக் கொள்கிறார்கள். தங்கத்தின் விலை அடாது ஏகிறினாலும் நம்மவர்கள் விடாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?

15 comments:

Athisha said...

நிச்சயமாக தங்கத்ததின் விலையேற்றத்திற்கு நாம்தான் காரணம் விக்கி

அது சரி இந்த பதிவுக்கும் சுரேயா படத்திற்கும் என்ன தொடர்பு

வால்பையன் said...

//அது அழிந்து வரும் கணிமம் என்பதனாலா? உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு யார் காரணம்?//

அழியும் அளவுக்கு நாம் அதை பயன்படுத்துவதில்லை.
பழைய ஆபரணங்கள் ரீசைக்கிள் முறையில் மீண்டும் ஆபரணமாக மற்ற படுகிறது.
உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு காரணம் முதலீட்டாளர்களின் பதுக்குதலே

//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும்.//

இன்று, நேற்றல்ல பல நூற்றாண்டுகளாகவே தங்கம் ஒரு மதிப்பு மிக்க உலோகமாக தான் பார்க்கப்படுகிறது. புதிதாக பிளாட்டினம் வந்தாலும் அதில் தங்கத்தின் அளவுக்கு ஈர்ப்பு இல்லை

//அந்நாட்டில் கிடைக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்வதில் தங்கம் தான் முதலிடம் வகிக்கும்.//

இல்லை, தங்கத்தின் முன்னர் செம்பு தான் முதலிடம் பிடித்தது, தங்கத்தின் கவர்ச்சியே அதை முன்னிலை படுத்தியது

//இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?//

நானும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா

வால்பையன்

Anonymous said...

இப்போது நீங்க என்னத்தான் சொல்ல வறீங்க? எனக்குத்தான் ஒன்றும் புரியல !

கிரி said...

//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும்.//

குறைந்த பட்சமா இந்தியாவில் யாரும் வாங்காமல் இருந்தாலே போதும் :-))))

//முக்கியமாக நம் இந்தியர்களிடையே தங்க ஆபரணம் அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள்//

கண்டிப்பாக..

//தங்கத்தின் விலை அடாது ஏகிறினாலும் நம்மவர்கள் விடாமல் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்/

வாங்குவது நிற்காது வேண்டும் என்றால் வாங்கும் அளவு குறையும்.

உங்கள் பதிவில் இருக்கும் படங்கள் அருமை..இதை பார்த்தே வாங்கும் ஆசை வந்து விடும் போல உள்ளதே.

குறிப்பு: எனக்கு தங்கம் மீது ஆசை இல்லை. மோதிரம் கூட, எங்காவது போனா பணத்தை எவனாவது லவட்டிட்டானா என்ன பண்ணுறதுன்னு ஒரு பாதுகாப்பிற்கு வைத்து இருக்கிறேன் :-)

வெங்கட்ராமன் said...

மலேசிய ஸ்ரேயா நற்பனி மன்ற விக்னேஷ் வாழ்க.

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதிஷா said...
நிச்சயமாக தங்கத்ததின் விலையேற்றத்திற்கு நாம்தான் காரணம் விக்கி
அது சரி இந்த பதிவுக்கும் சுரேயா படத்திற்கும் என்ன தொடர்பு//

எல்லோரும் ஸ்ரேயா படத்தை மட்டும் தான் பார்க்கிறிங்க... அவர் காதுல போட்டிருக்கும் தோடு தங்கமென சொல்லி நான் தப்பிகலாம்னு இருக்கேன்... என்ன சொல்றிங்க... :))

VIKNESHWARAN ADAKKALAM said...

//நானும் ஒரு காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா

வால்பையன்//

சுவாரசியமான சில தகவல்கள் கொடுத்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி நண்பரே... நீங்கள் மட்டும் காரணம் இல்லை... இதை எழுதிய நானும் தான். :))

VIKNESHWARAN ADAKKALAM said...

// இனியவள் புனிதா said...
இப்போது நீங்க என்னத்தான் சொல்ல வறீங்க? எனக்குத்தான் ஒன்றும் புரியல//

ஒருவர் படித்து புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு நான் எழுதி இருக்கேன் என்றால் மிகவும் வருந்துகிறேன்.என்னை மன்னிக்கவும்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//கிரி said...
குறைந்த பட்சமா இந்தியாவில் யாரும் வாங்காமல் இருந்தாலே போதும் :-))))//

இதை படித்துவிட்டு நாலு பேரு நம்மை கும்மால் இருந்தால் சரி... இந்த விளையாட்டுக்கு நான் வரல சாமி..

ஆம் சிறு ஆபரணங்களை அணிந்துக் கொள்வது ஆபத்து அவசர நேரங்களில் பெரிதும் உதவுகிறது. இதுவும் மறுக்க முடியாத உண்மைதான்.. கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி... மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

//வெங்கட்ராமன் said...
மலேசிய ஸ்ரேயா நற்பனி மன்ற விக்னேஷ் வாழ்க.//

ஏன் இப்படி ஒரு கொலை வெறி...

சின்னப் பையன் said...

//இப்போது சொல்லுங்கள் தங்க விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?//

எதுவாயிருந்தாலும் எங்க பொதுக்குழுவில் கேட்டுத்தான் சொல்வோம்...

வெண்பூ said...

//மனித குலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக்காமல் அதை விலை கொடுத்து வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வழி மட்டுமே தங்க விலை குறைய திறவு கோலாக அமையும்.//

அப்துல் கலாம் சிஷ்யரா நீங்க..அட்டகாசமா கனவு காண்றீங்க..

உண்மையில் நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கோவை விஜய் said...

மேலை நாட்டு பெண்களுக்கு(சீமாட்டிகள்) தங்கத்தின் மேல் அன்பு

வட இந்தியப் பெண்களுக்கு(நாகரீக அம்மணீகள்)
தங்கத்தின் மேல் சிறு காதல்

நம் தமிழ் நாட்டிலோ!

********* ******* ******



(திருமண சீர்வரிசைகளில் தங்கம் எத்தனை பவுண்/கிலோ என்பதே அடிப்படை விசயம் போலுள்ளதே)

ஆண், பெண் இரு பாலருக்கும்.

என்று தணியும் இந்த தங்க மோகம்.
அன்று குறையும் அதன் விலையின் வேகம்.

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

புகைப்படப் பேழைக்கு தங்கள் வருகைக்கு நன்றி.

மங்களூர் சிவா said...

ச்ச ஷ்ரேயா படம் போட்டிருக்கறத பாத்து ஒருவேளை ஷ்ரேயா செல்லம்தான் காரணமோன்னு நெனைச்சிட்டேன்!!

:))))