Thursday, July 03, 2008

நூல் நயம்: சாண்டில்யனின் ராஜ யோகம்


உடையார் நாவல் வந்து சேரும் இந்தத் தறுவாயில் சாண்டில்யனின் ”ராஜ யோகம்” எனும் நாவலை வாசித்து முடித்தேன். கடல் புறாவைப் போல வளவளவென இழுவையாக இல்லாமல் கனகச்சிதமாகச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்திருக்கிறார் சாண்டில்யன்.

பொன்னியின் செல்வனைப் படித்து முடித்த போது, சரித்திர நாவல் என்றால் சோழர் கதைகளை மட்டுமே படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். தவிர்க முடியாத காரணத்தின் பேரில் மற்ற நூல்களையும் படிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியனை போட்டியை மையமாகக் கொண்டு இந்நாவல் தொகுக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியன் மணிமுடியைத் தன் இளய மனைவியின் மகனான வீரபண்டியனிடம் கொடுக்க நினைக்கிறான். பட்டத்து ராணியின் முதல் மகனானவன் சுத்தரபாண்டியன். பதவியாசையின் பேரில் தந்தையையும் கொல்லத் துணிகிறான். பாரபட்சம் பார்க்காமல் பல கொடூரங்களை புரிகிறான்.

இக்கதையின் நாயகன், நாயகி எனும் கற்பனைப் பாத்திரங்கள் அவசியத்தின் பேரில் படைக்கப்பட்டிருந்தாலும், அப்துல்லா வாஸப் எனும் சரித்திர ஆசிரியன் தான் உண்மையான நாயகன்.

வாஸப் தனது சரித்திர ஆராய்ச்சிக்காகப் பாரசீகத்திலிருந்து பாண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறான். பாண்டிய நாட்டில் காலடி வைக்கும் வாஸப் எதிர்பாரா விதமாக அரசியல் சிக்கலில் அகப்பட்டுக் கொள்கிறான்.
பல முயற்சிகள் செய்தும் கடைசியில் பண்டிய நாட்டு மன்னனை காப்பாற்ற முடியாமல் போகிறது. அரியணை மீது இருந்த பேராசையில் மகனே தன் தந்தையை குத்திக் கொல்கிறான். நாட்டில் தாயாதிச் சண்டை எற்படுவதற்கு முன் பாண்டிய மண்ணிலிருந்து கிளம்புகிறான் வாஸப்.

கடல் புறாவில் இருந்ததைவிட இந்நாவலில் சிருங்கார ரசமும், பெண் வர்ணனையும் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறது. ஒரு அத்தியாயத்தில் சாண்டில்யன் ராஜ யோகத்தை எழுதுவதை மறந்து காம சூத்திரத்தை எழுதுகிறாரா என்ற எண்ணமும் உண்டானது.

இந்நாவலை படித்து முடித்த போது சில வரிகள் என்னுள் நீங்காமல் இருந்தது அவை:

ஒரு கட்டத்தில் நாயகனான இளம்பிரிதி வாஸப் தொழுகை புரியும் சமயத்தை காத்து நிற்கிறான். அப்போது எதிரியிடம்:

“தொழுகை ஆண்டவனை பற்றியது. அவனுக்குப் பெயர்கள் பல இருக்கலாம். அவன் ஒருவன் தான். நதிகள் பல உற்பத்தியானாலும் கடைசியில் கடலைச் சேருவது போல, தொழுகை யார் செய்தாலும் அது ஒருவனான ஆண்டவனைச் சேர்கிறது. இது இந்து மதம் சொல்லும் தத்துவம். தொழுகை- அதை யார் செய்தாலும் அதை காப்பது இந்துவின் கடமை”.

இளம்பிரிதி வாஸப்புடன் உரையாடுகையில்:

“வாஸப்! மரணம் நகைப்புக்கு இடமானதா”

“ஆம் இளம்பரிதி, நிரந்தரமானது அது ஒன்றுதான். நிச்சயமாய் எந்த மனிதனுக்கும் இன வித்தியாசம் இன்றி வருவது அது ஒன்றுதான். அதை நினைத்து மனிதன் நடுங்குகிறான். நடுங்குவதற்காக அது விடுவதில்லை. ஆகவே அதை அலட்சியப்படுத்துவது தான் விவேகம். நகைப்பதுதான் அறிவின் அடையாளம்.”

அடுத்ததாக:

“இனப்பற்று, மொழிப்பற்று இல்லாத சமுதாயம் சக்தியுடன் வளர முடியாது”

ஒரு கட்டத்தில் இளம்பிரிதி நாயகியான அல்லியுடன் காதல் மொழி பேசுகிறான். அது வாஸப் காதில் விழவும் வாஸப் நினைக்கிறான்:

“மண்ணாசையும் பெண்ணாசையும் யாரை விட்டது. பெண் அருகில் இருக்கும் போது எந்த ஆண்மகன் ஆபத்தை பற்றி நினைக்கிறான்”.

இப்படி இன்னும் பல சுவாரசியமான வரிகள்.
அடுத்த்தாக அரசர்களுக்கு ஜாதகத்தில் கூறப்படும் ராஜ யோகங்களை பற்றியும் ஒரு கட்டத்தில் விவாதிக்கிறார்கள்:

அவையனது, அபவாத ராஜயோகம், அனுபவ ராஜயோகம், ஸ்வத ஸித்த ராஜ யோகம், சாமான்ய ராஜயோகம், விஷய போக ராஜயோகம், அதிகார ராஜயோகம் மற்றும் பகுமான ராஜயோகம்.

இது மட்டும் இல்லாமல் பல பரிமாணங்களில் அலசி ஆராய்ந்து பண்டிய நாட்டில் அந்நாளய சூழலை நமக்கு ராஜ யோக விருந்தாகப் படைத்திருக்கிரார் சாண்டில்யன்.

7 comments:

Anonymous said...

நீங்க பதிவு போட்டதால் சாண்டில்யனையும் படிக்க வேண்டிவருமோ
....முயற்சி செய்து விட்டு சொல்கிறேன்

Unknown said...

இந்த நாவல் நான் படிக்கலை . படிச்ச அப்புறம் பின்னூட்டம் தரேன்

சின்னப் பையன் said...

மேலே இருக்கிற ரெண்டு பின்னூட்டங்களையும் ஒரு தடவை படிங்க...

ரிப்பீட்டேய்ய்ய்ய்

VIKNESHWARAN ADAKKALAM said...

//இனியவள் புனிதா said...
நீங்க பதிவு போட்டதால் சாண்டில்யனையும் படிக்க வேண்டிவருமோ
....முயற்சி செய்து விட்டு சொல்கிறேன்//

ம்ம்ம் கண்டிப்பாக படித்துப் பாருங்கள். வருகைக்கு நன்றி..

VIKNESHWARAN ADAKKALAM said...

//jaisankar jaganathan said...
இந்த நாவல் நான் படிக்கலை . படிச்ச அப்புறம் பின்னூட்டம் தரேன்//

சரிங்க பாஸ்

VIKNESHWARAN ADAKKALAM said...

//ச்சின்னப் பையன் said...
மேலே இருக்கிற ரெண்டு பின்னூட்டங்களையும் ஒரு தடவை படிங்க...

ரிப்பீட்டேய்ய்ய்ய்//

காப்பி பேஸ்ட் செய்து ரீப்பீட்டேய் போட்டிருக்கலாமே...

ஆ.கோகுலன் said...

நன்றி விக்னேஸ்வரன்,

நாவலில் உள்ள நீங்கள் குறிப்பிட்ட வரிகள் சுவாரசியமாக இருந்தது.

நானும் இந்நூலைப்படித்திருக்கவில்லை.