நண்பர் பரிசல்காரர் அவியல் எழுதுவது போல நானும் புதைந்த நினைவுகளை எழுதலாம் என்றிருக்கிறேன்.
இதை இங்கு எழுதும் போது கூட திரு.சுஜாதா சொல்லிய வரி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. உயிர் என்பது என்ன? நம் நினைவுகள் தான் உயிர். எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்.
********
அன்று கொஞ்சம் உடல் நலம் இல்லாமல் போனது. மருந்தகத்திற்கு போயிருந்தேன். மருந்தகங்களையோ, மருத்துவ நிலையங்களையோ பார்த்தால் ஒரு நினைவு சட்டென மின்னல் வெட்டும். இப்படியெல்லாம் இருக்காங்கய்யா என நினைத்துக் கொள்வேன்.
வட மலேசிய பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த சமயம். ‘i-robot’ படம் வெளிவந்தது. யாரும் படம் பார்த்துக் கதையை சொல்லும் முன் நாம் பார்த்துவிட வேண்டும் என எண்ணினேன். வார விடுமுறையில் திரையரங்கு போக திட்டமிட்டேன்.
சரியாக நான் திரையரங்கு போக நினைத்திருந்த நாளில் business ethic பாடம் சம்மந்தமாக ஒரு கட்டொழுங்கு கருத்தரங்கு நடக்கவிருப்பதாகவும் கலந்துக் கொள்பவர்களுக்கு மொத்தத்தில் 5 புள்ளிகள் வழங்கப்படும் என கூறிவிட்டார்கள். என்னடா இது விடுமுறை நாட்களில் கூட இப்படி எதையாவது சொல்லி உயிரை வாங்குகிறார்களே என கருவிக் கொண்டேன்.
சரி நம்மிடம் தான் ‘டிசிப்பிலின்’ கொட்டிக் கிடக்கிறதே. ஏன் கருத்தரக்கிற்கெல்லாம் போய் நேரத்தை வீனாக்க வேண்டும். ‘பட்டையை போட்டுவிடலாம் என முடிவு செய்தேன். ஆனாலும் 5 புள்ளிகள் வேண்டும் அல்லவா. வேண்டும் என்றால் வருகை பதிவேட்டில் கையெப்பமிட வேண்டும்.
கருத்தரங்குகளின் போது ஒவ்வொருவரும் வந்தார்களா என அதிகம் கவனிப்பார்கள். நண்பர்களிடம் சொல்லி கையெழுத்து போட சொன்னால் பிரச்சனையாகிவிடும். ஒரே வழி மருத்துவர்கள் கொடுக்கும் ஓய்வு நாள் சான்றிதழ் தான். ஆனாலும் அரசாங்க அங்கிகாரம் இருக்கும் சான்றிதழைத் தான் எடுத்துக் கொள்வார்கள். இந்த பாடத்தின் பேராசிரியர் கொஞ்சம் நல்லவர். எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வார்.
என் மலாய்கார நண்பன் ஒருவன் வட மலேசிய மாநிலத்தைச் சேர்ந்தவன். மருத்துவ சான்றிதழ் எங்கே சுலபமாக கிடைக்கும் என சொன்னான். அந்த ஊரிலேயே இருப்பவர்களுக்கு அதிகம் தெரியும் அல்லவா. நானும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.
அந்த நண்பன் சொன்னபடியே பழைய கட்டிடம் அது. அந்த ‘கிளினிக்’கின் பெயர் போட்டு இருந்தது. உள்ளே போனேன் வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சீனக் கிழவன் இருந்தார். டாக்டர் இருக்கிறாரா என கேட்டேன். உள்ளே போய் அமரச் சொன்னார்.
உள்ளே அமர்ந்திருந்தேன். அந்தக் கிழவன் தான் வந்தார். என் நண்பன் சொன்னது நினைவுக்கு வந்தது. “அந்த ‘கிளினிக்கில்’ ஒரு சீன கிழவன் இருப்பான், அவன் தான் டாக்டர், அவன் தான் நர்ஸ், அவன் தான் மருந்து கொடுக்கிறவன்.” ஆஹா அவன் தான இவன் என நினைத்துக் கொண்டேன்.
அந்த டாக்டர் வந்தவுடன் என்னிடம் கேட்டார்.
“mau berapa hari cuti?” (உனக்கு எத்தனை நாள் விடுப்பு வேண்டும்?)
“mau berapa hari cuti?” (உனக்கு எத்தனை நாள் விடுப்பு வேண்டும்?)
நிற்க. நீங்களே யோசித்துப் பாருங்கள். நான் இப்போது தான் முதல் முறையாக இங்கே வந்திருக்கேன். என்ன காரணத்திற்கு வந்திருக்கிறேன் என கூட கேட்காமல் எத்தனை நாள் விடுப்பு வேண்டும் என கேட்கிறார். யார் கண்டார்கள். யாரவது உண்மையிலேயே நோய் காரணமாக வர மாட்டார்களா? எடுத்த எடுப்பில் இப்படியா கேட்பார்கள்.
இன்று ஒரு நாள் போதும் என கூறினேன். எழுதிக் கொடுத்தார். கிளினிக் வெறிச்சேடிக் கிடந்தது. இரண்டு பழைய வானொலிகள் ஒரு ஓரமாக இருந்தது. இப்படி ‘எம்.சி’ எழுதிக் கொடுத்து தான் இந்த கிளினிக் ஓடுகிறது என புரிந்துக் கொண்டேன். அவருடன் பேச்சுக் கொடுத்தேன்.
“இந்த இடம் உனக்கு போரடிக்கவில்லையா? ரொண்டு ‘ரேடியோ’ இருக்கு அதையும் திறந்து வைக்கவில்லை”.
“இல்லை நான் எப்போதும் பிசியா இருப்போன். ஆட்கள் வந்து போய் கொண்டு இருப்பார்கள்”, என்றார்.
அடப்பாவி. நாக்கு கூசாம பொய் சொல்றியே என நினைத்துக் கொண்டேன்.
“சரி அடையாள அட்டையைக் கொடு, யாராவது போன் செய்து கேட்டால் சொல்ல வசதியாக இருக்கும்” என்றார்.
நான் எங்கிருந்து வருகிறேன். அப்படி போன் செய்தால் யார் செய்வார்கள் என்றேல்லாம் கேட்கவில்லை. அடையாள அட்டையை வாங்கிக் குறித்துக் கொண்டார்.
விலையை கேட்டேன்.
“ஒரு நாள் விடுப்பு என்றால் 5 ரிங்கிட்”.
“ஒரு நாள் விடுப்பு என்றால் 5 ரிங்கிட்”.
இதில் நாள் கணக்கு ஒரு கேடு என நினைத்துக் கொண்டேன். கிளினிக்கிற்கு வரும் முன் லேசான இருமல் இருந்தது, இருமல் மருந்து வாங்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த கிளினிக்கின் நிலமையைப் பார்த்து நொந்து போனேன்.
இங்கே மருந்து வாங்கி சாப்பிட்டு ஏதாவது நோய் வந்து தொலைந்தலும் தொலையலாம். மருந்து வாங்காமல் அங்கிருந்து கிளம்பினேன். ஆனால் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டேன். இனி ‘எம்.சி’ எடுப்பதென்றால் இங்குதான் வர வேண்டும். நண்பர்களிடமும் செல்லி வைக்க வேண்டும். ஆபத்து அவசர கால மருத்துவ விடுப்பு எடுக்க இந்த இடம் வசதியாக இருக்கும்.
அங்கிருந்து திரையரங்கிற்கு போனேன். நான் பார்க்க நினைத்த படம் திரையிடப்படவில்லை. சோகத்தின் உச்சகட்டமாய் இரண்டு ‘டின் பியர்’ வாங்கி அடித்து விட்டு அறைக்கு போய் படுத்து உறங்கிப் போனேன்.
31 comments:
மலரும் நினைவுகள் நன்றாக இருக்கு.. அட இந்த மாதிரி கிளினிக் தலைநகரில் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்
//நண்பர் பரிசல்காரர் அவியல் எழுதுவது போல //
ஹி..ஹி...
ஒரு ச்சின்ன கருத்து. நான் எழுதும் அவியல, பல சம்பவங்கள், கண்டது, கேட்டது, பார்த்தது என்று கலவையாக இருக்கும். உங்களது ஒரே ஒரு சம்பவம் மட்டுமே இருக்கு. இது, உங்க தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளது! (நல்ல தலைப்பு!)
அருமை!
தொடருங்கள்!
உங்கள் நினைவுகளில் புதைய நாங்களும் ரெடி!
//அங்கிருந்து திரையரங்கிற்கு போனேன். நான் பார்க்க நினைத்த படம் திரையிடப்படவில்லை. சோகத்தின் உச்சகட்டமாய் இரண்டு ‘டின் பியர்’ வாங்கி அடித்து விட்டு அறைக்கு போய் படுத்து உறங்கிப் போனேன்.//
;-)
நல்ல வேளை அந்த ஆஸ்பத்திரில உங்க கிட்னிய எடுக்காம உட்டாங்கலே
//இனி ‘எம்.சி’ எடுப்பதென்றால் இங்குதான் வர வேண்டும். நண்பர்களிடமும் செல்லி வைக்க வேண்டும். ஆபத்து அவசர கால மருத்துவ விடுப்பு எடுக்க இந்த இடம் வசதியாக இருக்கும்//
tak pernah bagitahu i pun..........
Dr.Sintok
விக்கி,
புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்லா வந்துருக்கு. மேல் ஆலோசனைக்கு பரிசலிடமே கேட்கவும். அது சரி, இப்போ ஆபிசுக்கு சிக் லீவ் எடுப்பது இப்படித்தான?
அனுஜன்யா
//இனியவள் புனிதா said...
மலரும் நினைவுகள் நன்றாக இருக்கு.. அட இந்த மாதிரி கிளினிக் தலைநகரில் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்//
என்னை மாதிரி நல்ல பையன் இருக்கும் ஊரில் தப்பான சிலர் வேண்டும் என்றே விடுப்பு எடுப்பதால் தான் பல இடங்களில் அந்த மாதிரி கிளினிக்குகள் இருப்பதில்லை... ஆமாம் உங்களுக்கு எதற்கு வசதியாக இருக்கும்... விடுப்பு போடவா...? நோ... நோ... அது தப்பு அப்படிலாம் செய்யக் கூடாது...
//ஹி..ஹி...//
ஆண்பாலில் ஒரு சிரிப்பா?
//அருமை!
தொடருங்கள்!
உங்கள் நினைவுகளில் புதைய நாங்களும் ரெடி!//
அடடே... என்ன ஒரு உற்சாகம்...
//;-)//
இவ்வளவு பெரிய பின்னூட்டமா? நன்றி பிரபா அவர்களே...
// அதிஷா said...
நல்ல வேளை அந்த ஆஸ்பத்திரில உங்க கிட்னிய எடுக்காம உட்டாங்கலே//
ஆஹா.... எப்படிங்க... நிஜத்த சொல்லுங்க... இவன சும்மா விட்டதுக்கு கிட்னிய எடுத்துட்டு விட்டிருக்கனும்னுதானே நினைக்கிறிங்க...
//tak pernah bagitahu i pun..........
Dr.Sintok//
படிக்கிற பசங்க கெட்டு போக கூடாதுன்னுதான் சொல்லல...
//அனுஜன்யா said...
விக்கி,
புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நல்லா வந்துருக்கு. மேல் ஆலோசனைக்கு பரிசலிடமே கேட்கவும். அது சரி, இப்போ ஆபிசுக்கு சிக் லீவ் எடுப்பது இப்படித்தான?
அனுஜன்யா//
இல்லைங்க நான் திருந்திட்டேன். லிவ் போடுவதில்லை... பரிசலிடம் எப்பவோ சொல்லியாச்சுங்க...
உங்களுக்கே ஓவரா இல்லையா? நாங்க ஏதோ புதைந்து போன காதல் கதை ஏதாவது சொல்வீங்கன்னு பாத்த டின் பீர் அடிச்ச கதையைச் சொல்றீங்களே.... ;))))
///அதிஷா said...
நல்ல வேளை அந்த ஆஸ்பத்திரில உங்க கிட்னிய எடுக்காம உட்டாங்கலே///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
//நண்பர் பரிசல்காரர் அவியல் எழுதுவது போல நானும் புதைந்த நினைவுகளை எழுதலாம் என்றிருக்கிறேன்//
அண்ணனுக்கு ரெண்டு கடப்பாரை பார்சல்!!!!!!!!!!!!!!!
//தமிழ் பிரியன் said...
உங்களுக்கே ஓவரா இல்லையா? நாங்க ஏதோ புதைந்து போன காதல் கதை ஏதாவது சொல்வீங்கன்னு பாத்த டின் பீர் அடிச்ச கதையைச் சொல்றீங்களே.... ;))))//
நான் மதுவை பற்றிச் சொல்லி இருக்கிறேன்... நீங்கள் மாதுவை பற்றி எதிர்பார்த்து இருக்கிங்க.... இரண்டும் போதை தரும் விசயம்தான்...
//அண்ணனுக்கு ரெண்டு கடப்பாரை பார்சல்!!!!!!!!!!!!!!!//
அவ்வ்வ்... நக்கல் ஜாஸ்திங்க உங்களுக்கு...
ம்ம்ம்ம்ம்.. நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா????
//வெண்பூ said...
ம்ம்ம்ம்ம்.. நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா????//
ஆச்சு
புதைந்த நினைவுகளின் எண்ணச் சிதறல்களை புதுமையாய் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்
.தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
Vikki
aanaalum unga profilela
ungalai patri "sollamaaatten"nu
solrathu romba thaaan over.
"kandathai Padippen"nu
solreenga."Kandathu"nna unga
blogposts maaathiriyaaa???
இதை படித்ததும் நான் பண்ண கூத்தும் ஞாபகம் வருது விக்னேஷ், டைம் இருந்தா அதை பதிவா போடுறேன்.. இங்கே எழுதினா என் பின்னூட்டம் பதிவு சைஸுல இருக்கும். :-)
//இனியவள் புனிதா said...
மலரும் நினைவுகள் நன்றாக இருக்கு.. அட இந்த மாதிரி கிளினிக் தலைநகரில் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்//
புனிதா.... அப்படிப்பட்ட கிளினிக் நம்ம தலைநகரத்துலேயும் இருக்கு. ஆனால், ஒரு எம்.சி RM 10. :-)
//தமிழ் பிரியன் said...
உங்களுக்கே ஓவரா இல்லையா? நாங்க ஏதோ புதைந்து போன காதல் கதை ஏதாவது சொல்வீங்கன்னு பாத்த டின் பீர் அடிச்ச கதையைச் சொல்றீங்களே.... ;))))//
ரிப்பீட்டேய்.. ;-)
@நன்றி விஜய்
@நன்றி அனானி
@மைபிரண்டு நீங்களும் எழுதுங்க... வருகைக்கு நன்றி
நாங்க எல்லாம் என்ன சிரமப்படுறோம் தெரியுமா?
பொறாமையா இருக்கு, அழுகாச்சி அழுகாச்சியா வருது.
//அங்கிருந்து திரையரங்கிற்கு போனேன். நான் பார்க்க நினைத்த படம் திரையிடப்படவில்லை. சோகத்தின் உச்சகட்டமாய் இரண்டு ‘டின் பியர்’ வாங்கி அடித்து விட்டு அறைக்கு போய் படுத்து உறங்கிப் போனேன்.//
:)
:)
:)
புதைந்த நினைவுகள் (1)
:)
:)
:)
///அதிஷா said...
நல்ல வேளை அந்த ஆஸ்பத்திரில உங்க கிட்னிய எடுக்காம உட்டாங்கலே///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
நன்றி எம்.எஸ்.கே
ம் படமும் பாக்கல, வகுப்புக்கும் போகலை அடபோங்கய்யா
:))))
Post a Comment