தென் ஆசிய பகுதியை சேர்ந்த மக்களே அதிகமாக பாம்புக் கடிக்குட்படுகிறார்கள். இ்து தொடர்பாக 68 நாடுகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில் ஆசியாவில் மட்டும் 421000 பேர் ஆண்டுதோறும் சராசரியாக பாம்பு கடிக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. அதில் சராசரியாக 20000 பேர் இறந்துப் போகிறார்கள் என்பது மேலும் அச்சத்தைக் கொடுக்கும் செய்தியாக இருக்கிறது.
மக்கள் தொகை மிகுந்து காணப்படும் நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 80000 பேர் பாம்புக் கடிக்கு ஆளாவதாக தகவல் பதிவு செய்யப்படுகிறது. அதில் 11000 பேர் இறந்துப் போகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.
அடுத்த படியாக இருக்கும் நாடு இலங்கையாகும். இலங்கை மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 33000 பேர் பாம்புக் கடிகளுக்குட்படுகிறார்கள். அதில் வியகத்தக்க செய்தி என்னவென்றால் பாம்புக் கடித்து இறப்பவர்களில் ஆண்களே அதிகம் இருக்கிறார்கள். பெண்களைக் காட்டினும் ஆண்களே வேலைகளில் அதிகம் ஈடுபடுவது இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
சிலருக்கு என்ன பாம்பு கடித்தது என்று கூட சரியாக தெரியாமல் போய்விடுகிறது. இதனால் பாம்புக் கடி சிகிச்சைக்கு தக்க மேம்பாடுகளை சரிவர செய்ய இயலாமலும் போகிறது. அதே வேலையில் சிகிச்சை அளிப்பதிலும் சில சிக்கல்கள் ஏற்படுகின்றனவாம்.
உலகில் ஏறக் குறைய 3000 வகையான பாம்புகள் இருக்கின்றன. அவற்றில் 600 வகை பாம்புகள் நச்சுத் தன்மைக் கொண்டவையாகும். அண்டார்டிகா பகுதிகளில் பாம்புகள் வசிப்பதில்லை. அப்பகுதியின் சீதோசன நிலை பாம்புகள் வாழ உகந்ததாக இல்லாததே அதற்குக் காரணமாகும். அண்டார்டிகா பகுதிகளில் அதீத குளிர் இருக்கும். பாம்புகளும் குளிர் இரத்தம் கொண்ட உயிரனமாகும். இதனால் பாம்புகள் அப்பகுதிகளில் இருப்பதில்லை.
பாம்புகள் பல்லி இனத்தைச் சேர்ந்தவை என்றும் பின்னாட்களில் மாற்றங்களில் கால்கள் இல்லாமல் பாம்பாக மாறி இருக்கக் கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாம்புகளில் மிகப் பெரிதென கருதப்படுவது பச்சை நிற அணக்கொண்டாவாகும். இது 8.8மீட்டர் நீளமும், 30 செண்டி மீட்டர் அகலமும் கொண்டது. இவை 227 கிலோ வரையினும் எடைக் கொண்டவையாக இருக்கும். இவ்வகைப் பாம்புகள் அமசோன் மற்றும் ஓரினகோ நதிக் கரைகளில் காணப்படுகின்றன.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பர்போடோஸ் தீவினில் உலகிலேயே சிறிய வகை பாம்பினை அடையாலம் கண்டார்கள். அவை மண்புழுவை விடவும் அளவில் சிறியவையாகும். அதிகபட்சமாக 10 செண்டிமீட்டர் வரையினும் வளரும் தன்மைக் கொண்டவை. சிறு பூச்சிகளை உண்டு வாழும் இப்பாம்பினம் நச்சுத் தன்மை இல்லாதவை எனக் கூறப்படுகிறது.
பாம்புகளில் ஆண் பெண் வித்தியாசங்களைக் கண்டறிவது சிரமமாகும். சூடு அதிகரிக்கும் வேலைகளில் பாம்புகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். சில பாம்புகளின் நச்சில் மருந்துகள் செய்கிறார்கள். பலருக்கும் பாம்புகளைப் பிடிக்காது. அவற்றை மனிதனின் உயிருக்கு ஆபத்தை தரும் உயிரினமாகவே காண்கிறார்கள். இருப்பினும் அவற்றை செல்லப் பிராணியாக வளர்க்கும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
28 comments:
பேமாக்கீதே!
நாங்கள் அதிகம் பாம்புகள் இருக்கும் இடத்திலே தான் வசித்தோம்.
12ஆம் வகுப்பு வரையில்.
\\பாம்புகள் பல்லி இனத்தைச் சேர்ந்தவை என்றும் பின்னாட்களில் மாற்றங்களில் கால்கள் இல்லாமல் பாம்பாக மாறி இருக்கக் கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன\\
இது புது விடயம்.
என்ன விக்கி..பாம்பை பற்றி இவ்வளவு தெளிவாக சொல்லிருக்கிங்க..
அருமையான ஆய்வு
நல்லா இருக்கு......
மனித பாம்பைப் பற்றி சொல்லவே இல்லை..
உங்கள் ஆராட்சிக்கு பாராட்டுகள் விக்கி
பயனுள்ள கட்டுரை...
அயர்லாந்தில் பாம்புகளே இல்லையாம்...அதிசயம் தான்
குண்டலினி சக்திக்கு பாம்பை தொடர்பு படுத்துவது ஏன் என்று ஆராய்ந்தீர்களா??
விக்கி, சில கொசுறுகள் : கந்தகம், உப்பு இரண்டும் பாம்புக்கு எதிரியாம். பாம்புகளை குதிரையை கடிக்க வைத்து, குதிரையின் உடலில் உற்பத்தியாகும் anti-body கொண்டு அதன் விஷத்தை முறிக்கும் மருந்து செய்கிறார்கள்..
மனிதனி விந்தும் பாம்பின் வடிவில் இருக்கிறதே.. அதன் தாத்பரியம் என்னவாக இருக்கும்?
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது பொய்யாகி.. பாம்பிலிருந்து பிறந்தவன் என்றாகிவிடும் இனி! ஹஹஹ
நல்ல ஆய்வு கட்டுரை.
//
சூடு அதிகரிக்கும் வேலைகளில் பாம்புகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும்.
//
பாம்பு மட்டுமா?
சீனர்கள் சாப்பிடும் பாம்பு சூப் பற்றி சொல்லாததற்கு கண்டனம்
பாம்பு கடித்து இறப்பவர்கள் ஆப்பிரிக்காவில் அதிகம்னு டிஸ்கவரியில சொன்னாங்க! அதையும் கொஞ்சம் என்னானு பாருங்க!
பயமுறுதுறீங்க விக்கி,பார்க்கவே பயமாயிருக்கு.உண்மைதான் இப்போ இருக்கும் எம் நாட்டுச் சூழ்நிலையில் நிறையப் பேர் பாம்பு கடித்தே இறக்கிறார்கள்.
வணக்கம் தோழரே!
பல்வகையான செய்திகளை வழங்குவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்! பாம்புகளைப் பற்றி சில விளக்கங்கள் அருமை!
nalla oru information. keep it up.
எனக்கும் பாம்புக்கும் அவ்ளோ ஒத்துவராது...நான் அடுத்த பதிவில சந்திக்கிறேன் விக்ஸ்
// ♥ தூயா ♥ Thooya ♥ said...
எனக்கும் பாம்புக்கும் அவ்ளோ ஒத்துவராது...நான் அடுத்த பதிவில சந்திக்கிறேன் விக்ஸ்
March 25, 2009 2:32 PM///
ஆமாம் மீ டூ :(
என்ன விக்கி, பயமுறுத்துறியே!
அனுஜன்யா
நண்பரே,
நான் படிக்கும் உங்கள் அனைத்து பதிவும் ஏறக்குறைய மற்றவர்கள் எழுதியதிலிருந்து நீங்கள் அதை மருமுறை சுருக்கமாக எழுதுறிங்களே?
ஏன் நீங்கள் சொந்தமாக எதையாவது எழுதலாமே?
@ ஜமால்
நன்றி...
@ வியா
நன்றி...
@ அ.ஞானசேகரன்
நன்றி...
@ டொன் லீ
நன்றி...
@ கிருஷ்ணா
வருகைக்கும். தகவல்களுக்கும் நன்றி...
@ ஆளவந்தான்
வேறு என்ன? :))
@ வால்பையன்
அப்படியா? தெரியலையே... தேடிப் பார்க்கிறேன்.
@ கோவி.கண்ணன்
நன்றி...
@ ஹேமா
வருத்தமான தகவல். வருந்துகிறேன்.
@ குமார்
வருகைக்கு நன்றி...
@ அனானி
கருத்துக்கு நன்றி... அடுத்த முறை பெயர் போடவும். சில பேமானி அனானிகளை திட்டினால் உங்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்கும்.
@ தூயா
நன்றி...
@ ஆயில்யன்
நன்றி..
@ அனுஜன்யா
நன்றி...
@ அனானி
மற்றவர் எழுதியதை எழுதுகிறேனா? எங்க அவர்கள் எழுதிய சுட்டியை கொடுங்கள் பார்க்கலாம். திருத்திக் கொள்வேன் இல்லையா...
//நண்பரே,
நான் படிக்கும் உங்கள் அனைத்து பதிவும் ஏறக்குறைய மற்றவர்கள் எழுதியதிலிருந்து நீங்கள் அதை மருமுறை சுருக்கமாக எழுதுறிங்களே?
ஏன் நீங்கள் சொந்தமாக எதையாவது எழுதலாமே?//
அனானி நண்பரே,
விக்கி எங்கிருந்து எடுத்து சுருக்கினார் என்று சுட்டியுடன் சொன்னீர்கள் எனில் விரிவாகப் படிக்க எங்களுக்கும் வசதியாக இருக்கும்!
அதை விடுத்து வெறுமனே சுருக்குகிறார் என்று சொல்வது முறையாகாது!
தகவல்களுக்கு நன்றி.
//
கிருஷ்ணா said...
குண்டலினி சக்திக்கு பாம்பை தொடர்பு படுத்துவது ஏன் என்று ஆராய்ந்தீர்களா??
//
பாம்பினை சீண்டும் வரை அது தன்பாட்டில் அமைதியாய் இருக்கும். அதைச் சீண்டினால் சீறிப்பாயும். அவ்வாறே குண்டலினி சக்தியும்.
நல்ல பதிவு விக்னேஷ்வரன்
nalla thagavalgal....
@ நாமக்கல் சிபி
நன்றி அண்ணா...
@ வலசு வேலணை
வருகைக்கு நன்றி...
@ ஜவஹர்
வருகைக்கு நன்றி :)
@ தமிழரசி
நன்றி அக்கா...
Post a Comment