Thursday, March 12, 2009

கொசுறு 12/03/2009

சாணியடி சித்தர் யோக நிஷ்டையில் இருப்பதால் தத்துவத்துக்குக் காலவரையில்லா விடுப்பு கொடுக்கப்படுகிறது என்பதை கடிதம் எழுதாமல் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
****

நாமக்கல் சிபி அண்ணனுக்கு நேற்று திருமண நாள். அவருக்கு என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துகள். எதிர் வீட்டு ஜன்னல் பார்ட் 2 எழுதி தமது 16வது பிறந்த நாள் கொண்டாடிய நண்பன் அதிஷாவுக்கும், சென்ற வார தமிழ் மண நட்சத்திரம் வால் பையனுக்கும் இந்த வார நட்சத்திரம் கார்க்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
****

மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை. கண்ணதாசன் சொன்னது.
****

வெண்ணிலா கபடிக் குழு படம் பார்த்தேன். லேசா பறக்குது மனசு எனும் பாடல் மனதைக் கவர்கிறது. நகைச்சுவைகளும் இயல்பாக இருக்கின்றன. முடிவு சற்றே ஒப்பாதது போல் தோன்றுகிறது.
****


நந்திபுரத்து நாயகி எனும் விக்கிரமன் எழுதிய சரித்திர நாவலை படித்து வருகிறேன். கதையோட்டத்துக்கு முக்கிய இடங்களில் நல்ல விறுவிறுப்பாக இட்டுச் செல்லும் ஆசிரியர் தேவையற்ற சில இடங்களில் ஜவ்வை போல் இழுத்து எழுதி இருப்பது படிப்பவரை எரிச்சலடையச் செய்கிறது.
****

சூரியனுக்கு விளக்கு பிடிக்கக் கூடாதுனு சொல்வாங்க. பாரிசல்காரனின் இந்தப் பதிவு மிகவும் சுவாரசியாமாக இருந்தது. புத்தகம் இரவல் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை அழகாக சொல்லி இருக்கிறார்.

இரவல் கொடுப்பது வராமல் போய்விட்டாலும் பரவாயில்லை என வாங்கிக் கொள்ளலாம். ஆனால் கிழிசலோடு வரும் புத்தகங்களின் மௌன கண்ணீர் நம் நெஞ்சை ரனமாக்கிவிடுகிறது. நான் ஓரிரு நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகத்தை இரவல் கொடுப்பதில்லை. புத்தகம் சேமிக்கும் அவர்களும் அதிகம் இரவல் வாங்க மாட்டார்கள்.(படிப்பவர்களுக்கு தானே அருமை தெரியும்) நூலகத்தில் படிக்கும் புத்தகங்கள் பிடித்திருந்தாலும் அதை சேகரிக்கும் பொருட்டு கடைகளில் வாங்கிவிடுவேன். இரவல் புத்தகத்தை விட புதிய புத்தகங்களின் வாசனையே தனி தான்.
****

எழுத்தாளர் எஸ்.ராவின் ’’கதாவிலாசம்’’, ’’துணையெழுத்து’’ என இரண்டையும் வாசித்துவிட்டேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமாய் மனதை வருடுகிறது. அடுத்தபடியாக தேசாந்திரி புத்தகத்தை தேடி வருகிறேன்.
****

பதிவர்களின் நல்ல படைப்புகளை தேர்வு செய்து யூத்புல் விகடனில் அளிக்கிறார்கள். இது நல்ல ஊக்குவிப்பு என்றே கூற வேண்டும். தமிழ் பிரியன் அண்ணாச்சியின் முந்தய சிறுகதை ஒன்று யூத்புல் விகடனில் வந்திருந்தது. மனதைக் கசக்கிப் பிழியும் அக்கதையை வாசித்து இருக்கிறீர்களா? ஒரு முறைக்கு மேல் என்னால் வாசிக்க முடியவில்லை. முறிந்த சிறகுகளில் உயிர்த்த உறவு எனும் அக்கதையின் சுட்டி.
****

ஹிட்லர் அசைவம் சாப்பிட மாட்டார். அவர் நல்லவரா கெட்டவரா? விவேகானந்தர் அசைவ உணவுகளை சாப்பிடுபவர். அவர் கெட்டவரா நல்லவரா? தசவதாரம் படத்தில் உலக நாயகன் ஒரு கேள்வி கேட்பார். மடம்னா தப்பே நடக்காதாய்யா? அப்படிதானே இருக்கிறது இக்கேள்வி.
****

லத்தா கிஞ்சாங் எனும் நீர் வீழ்ச்சி இங்குள்ளது. வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது தாப்பாவை தாண்டி வருகையில் நீங்கள் இதைக் காண முடியும்.

எனது பூர்வக் குடியைச் சேர்ந்த நண்பன் ஒருவன் நீர் வீழ்ச்சியின் அருகே வசிக்கிறான். அன்று சந்திக்க நேர்ந்த போது அழைத்திருந்தான். முன்பு அவன் சொன்ன தகவல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

நகைகளை கழற்றி வைக்காமல் நீர் வீழ்சியில் குளிப்பவர்கள் சில வேளைகளில் அதை தவற விட்டுவிடுவார்களாம். பகல் வேளையில் நீரில் விட்ட நகையை தேடி எடுப்பது சிரமம். இரவு வேளையில் டார்ச் லைட்டை நீரில் அடித்தால் நகை மினுக்கும் ஒளியைக் காண முடியும். தொலைந்து போன நகையும் சுலபத்தில் கிடைத்துவிடும். (யாருக்கு கிடைக்கும்?) :))
****

என்னை
சுற்றினும்
சிறு சிறு வட்டங்கள்!

சில
இனிமை பொழுதுகள்!
எளிமைக் கவிதைகள்!
வறுமை வருத்தங்கள்!

தலைசாய்த்து
தயவுகொள்ள
தாய்மை ஸ்பரிசத்தோடு
தலைவருடும்
தனிமைத் தருணங்கள்!

கண்ணீரில்
கவலையைக் கரைத்தும்!
வெறிநீரில்
உடல்தனை எரித்தும்!
புகைத்தாரில்
புன்னகை மறைந்தும்!

விட்டுச் செல்லாமல்
வெட்டிச் சிரிக்கிறது
இனிய பொழுதினிலும்
இளமையின் தனிமை!

கவிதையை படிச்சிட்டு அடிக்க வராதிங்க பிலிஸ்...

****

திரு.ஜவஹர் நாளைய தினம் தமிழக பயணம் மேற்கொள்கிறார். அதிகமாக பதிவுகளை வாசிக்கும் இவர் பதிவுகள் எழுதுவதில்லை. ஓரிரு தளங்களில் பின்னூட்டம் இடுவார். அவருடைய பயணம் இனிதே அமைய வாழ்த்துகள். அதிஷாவுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வருவதாக சொல்லி இருக்கிறார்.

52 comments:

நட்புடன் ஜமால் said...

கொசுறுகள் வழக்கம் போல் அருமைதான்

கவிதை மிக அருமை.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தம்பி விக்கி, கொசுறு காய்கறிக்கு கறிவேப்பிலை இலவசம் மாதிரி இல்லை. காய் கனியா இருக்கு!

Anonymous said...

gr8

ஆ.ஞானசேகரன் said...

கொசுறுகள் சூப்பர்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜமால்

நன்றி

@ ஜோதிபாரதி

அப்படியா :)) நன்றி அண்ணா

@ தூயா

10Q

@ ஞானசேகரன்

நன்றி...

Anonymous said...

சிறப்பான பதிவு.

வியா (Viyaa) said...

கொசுறு அருமை..
நானும் வெண்ணிலா கபடிகுழு படம் பார்த்தேன்
அந்த பாடல் நன்றாக இருந்தது..
என் மனதும் லேசா பறக்குது.

பரிசல்காரன் said...

தம்பி.. கொசுறு நல்லாத்தான் இருக்கு. எழுத்துப் பிழைகளுக்கு ஏதாவது செய்யுங்களேன். கண்ட இடத்துல காலைப் போடறீஙக!!!!

சி தயாளன் said...

//நந்திபுரத்து நாயகி எனும் விக்கிரமன் எழுதிய சரித்திர நாவலை படித்து வருகிறேன். கதையோட்டத்துக்கு முக்கிய இடங்களில் நல்ல விறுவிறுப்பாக இட்டுச் செல்லும் ஆசிரியர் தேவையற்ற சில இடங்களில் ஜவ்வை போல் இழுத்து எழுதி இருப்பது படிப்பவரை எரிச்சலடையச் செய்கிறது.

//

கவிஞர் கண்ணதாசன் எழுதின “சேரமான் பெருமாள்” படித்தீர்களா..?

அது நல்லாயிருக்கும். :-))

Thamiz Priyan said...

கொசுறு நல்லா இருக்கு!

வால்பையன் said...

// எதிர் வீட்டு ஜன்னல் பார்ட் 2 எழுதி தமது 16வது பிறந்த நாள் கொண்டாடிய நண்பன் அதிஷாவுக்கும், சென்ற வார தமிழ் மண நட்சத்திரம் வால் பையனுக்கும் இந்த வார நட்சத்திரம் கார்க்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.//

உமக்கு அடுத்தவாரம்,
பசங்க ட்ரீட் கேப்பாங்கன்னு இப்பவே ஜகா வாங்க்கினியா நைனா!

வால்பையன் said...

//மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை.//

நளினாவும், நந்தினியும் ரொம்ப தொந்தரவு பண்றாங்களோ!

வால்பையன் said...

//நந்திபுரத்து நாயகி எனும் விக்கிரமன் எழுதிய சரித்திர நாவலை படித்து வருகிறேன்.//

அவரு விசயகாந்த்த வச்சி படமெடுக்குறதா சொன்னாங்க!

VG said...

ungaluku kalyanam maame.. unmaiya??


ooh illeya??


pirantha naala??


eppo??


wish panuna tret kudupingala??


innum athe phone number thaa use panneringala??


cheri nan wish paneran,


treat eppo nu sollunga...!!

தராசு said...

வால்பையன் said...
//மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை.//

நளினாவும், நந்தினியும் ரொம்ப தொந்தரவு பண்றாங்களோ!


ஹலோ, விக்கி, என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும். யார் உங்களை தொந்தரவு பண்றது????

VIKNESHWARAN ADAKKALAM said...

@ குமார்...

நன்றி... உள்குத்து ஏதும் இல்லையே :)) மீண்டும் வருக... நீங்கள் மலேசியரா?

@ வியா

மனசுக்கு இறக்கை வந்திடுச்சினா அப்படிதாங்க... பறக்கட்டும் பறக்கட்டும். என்சாய் பண்ணுங்க...

@ பரிசல்காரன்

சாரிங்க பாஸ்... என்ன பண்றது அதுவா வந்து விழுந்துடுது... திருத்திக்கிறேன்...

@ டொன் லீ

அண்ணாச்சி அது சேரமான் காதலி அல்லவா? இந்த பெருமாள்ங்கிறது நமிதா நடித்த படம் தானே? :))

@ தமிழ் பிரியன்

நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வால்பையன்

தலைவரே நீங்க பண்ணுர அட்டகாசத்துல எல்லோரும் எனக்கு நிசமாவே கல்யாணம் ஆச்சுனு நினைச்சிக்க போறாங்க.... அவ்வ்வ் பாவம் நான்....

@ விஜி

எதுங்க... வாழ்த்து சொல்ல லஞ்சமா? இலச்சி மல ஆத்தா விஜிக்கு நல்ல புத்தி கொடு...

VG said...

I am sorry. i dono her??

Yaar athu, unga sonthama?? adikadi avanga pera solringa..?

:D:D:D


innum bathile sollale... TREAT KIDAIKUMA? KIDAIKATHA???

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/சாணியடி சித்தர் யோக நிஷ்டையில் /

அப்படியா...இப்ப கூட பேசினாரே....:)

நிஜமா நல்லவன் said...

/தத்துவத்துக்குக் காலவரையில்லா விடுப்பு கொடுக்கப்படுகிறது/

பதிவுலகம் தப்பிச்சிதுடா சாமி...:)

நிஜமா நல்லவன் said...

/கடிதம் எழுதாமல் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்./

ரொம்ப நன்றி அண்ணே...

நிஜமா நல்லவன் said...

/சென்ற வார தமிழ் மண நட்சத்திரம் வால் பையனுக்கும் இந்த வார நட்சத்திரம் கார்க்கிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்./

அடுத்தவாரம் யாரு அண்ணே???

நிஜமா நல்லவன் said...

/மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை. கண்ணதாசன் சொன்னது./

அவரு சொன்ன பலவிஷயங்கள் உங்களுக்கு பிடிக்கும்னு சொல்லுவீங்களே...இது எப்படி?

நிஜமா நல்லவன் said...

/வெண்ணிலா கபடிக் குழு படம் பார்த்தேன். லேசா பறக்குது மனசு எனும் பாடல் மனதைக் கவர்கிறது. நகைச்சுவைகளும் இயல்பாக இருக்கின்றன. முடிவு சற்றே ஒப்பாதது போல் தோன்றுகிறது./

சற்றே தானே ஒப்பலை...பல படங்கள் சுத்தமாகவே ஒப்ப மாட்டிங்குது....:)

நிஜமா நல்லவன் said...

/நந்திபுரத்து நாயகி எனும் விக்கிரமன் எழுதிய சரித்திர நாவலை படித்து வருகிறேன். கதையோட்டத்துக்கு முக்கிய இடங்களில் நல்ல விறுவிறுப்பாக இட்டுச் செல்லும் ஆசிரியர் தேவையற்ற சில இடங்களில் ஜவ்வை போல் இழுத்து எழுதி இருப்பது படிப்பவரை எரிச்சலடையச் செய்கிறது./

இதுக்கு தான் அண்ணே நான் படிக்கிறதே இல்லை...:)

நிஜமா நல்லவன் said...

/இரவல் கொடுப்பது வராமல் போய்விட்டாலும் பரவாயில்லை என வாங்கிக் கொள்ளலாம். ஆனால் கிழிசலோடு வரும் புத்தகங்களின் மௌன கண்ணீர் நம் நெஞ்சை ரனமாக்கிவிடுகிறது./


/இரவல் கொடுப்பது வராமல் போய்விட்டாலும் பரவாயில்லை என வாங்கிக் கொள்ளலாம். ஆனால் கிழிசலோடு வரும் புத்தகங்களின் மௌன கண்ணீர் நம் நெஞ்சை ரனமாக்கிவிடுகிறது./


நெஞ்சுக்கு நீதி கேட்க்க ஆரம்பிச்சிடுவீங்க போல...:)

நிஜமா நல்லவன் said...

/நான் ஓரிரு நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகத்தை இரவல் கொடுப்பதில்லை./

திருப்பி கொடுக்குறவங்களும் இருக்காங்களா????

நிஜமா நல்லவன் said...

/இரவல் புத்தகத்தை விட புதிய புத்தகங்களின் வாசனையே தனி தான்/

ஆமாண்ணே...பள்ளிக்கூடத்தில் புது புத்தகம் கொடுத்த கொஞ்ச நாளைக்கு அதை முகர்ந்து பார்த்துட்டே இருப்பேன்....:))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

உங்க நாக்குல சூடு வைக்க...

@ நிஜமா நல்லவன்

அவ்வ்வ்வ்வ் முடியலை... அழுதிடுவேன்னே.... எல்லா வாக்கியத்துக்கும் கேள்வி கேட்டா எப்படி...

நிஜமா நல்லவன் said...

/அடுத்தபடியாக தேசாந்திரி புத்தகத்தை தேடி வருகிறேன்./


தேசாந்திரி நல்லா இருக்கும்...நான் படிச்சி இருக்கேன்...வாங்கி படிங்க!

நிஜமா நல்லவன் said...

/பதிவர்களின் நல்ல படைப்புகளை தேர்வு செய்து யூத்புல் விகடனில் அளிக்கிறார்கள்/

அப்படியா...யாருமே சொல்லலையே...ஆமா நான் எங்க நல்ல படைப்புகளை எழுதி இருக்கேன்????

நிஜமா நல்லவன் said...

/ஹிட்லர் அசைவம் சாப்பிட மாட்டார். அவர் நல்லவரா கெட்டவரா? விவேகானந்தர் அசைவ உணவுகளை சாப்பிடுபவர். அவர் கெட்டவரா நல்லவரா? தசவதாரம் படத்தில் உலக நாயகன் ஒரு கேள்வி கேட்பார். மடம்னா தப்பே நடக்காதாய்யா? அப்படிதானே இருக்கிறது இக்கேள்வி./


:))

நிஜமா நல்லவன் said...

/இரவு வேளையில் டார்ச் லைட்டை நீரில் அடித்தால் நகை மினுக்கும் ஒளியைக் காண முடியும். தொலைந்து போன நகையும் சுலபத்தில் கிடைத்துவிடும்/

பேசாம ஒரு வாரம் லீவு போட்டுட்டு போனா நிறைய நகைகள் கிடைக்கும் போல...:)

நிஜமா நல்லவன் said...

/என்னை
சுற்றினும்
சிறு சிறு வட்டங்கள்!/

வட்டங்களுக்குள் சிக்கிய வாழ்க்கைப்பயணம்????

நிஜமா நல்லவன் said...

/கவிதையை படிச்சிட்டு அடிக்க வராதிங்க பிலிஸ்.../

படிக்க நேரத்தை செலவு பண்ணினதே பெருசு....இதில் காசு செலவு பண்ணி மலேசியா வந்து அடிக்கனுமா????

நிஜமா நல்லவன் said...

/வால்பையன் said...

//மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை.//

நளினாவும், நந்தினியும் ரொம்ப தொந்தரவு பண்றாங்களோ!/


இதென்ன புதுக்கதை???

அப்ப பூங்குழலி என்ன ஆனாங்க????

நிஜமா நல்லவன் said...

/நட்புடன் ஜமால் said...

கொசுறுகள் வழக்கம் போல் அருமைதான்

கவிதை மிக அருமை./

பண்டை காலத்து புலவரே சொல்லிட்டாரு....கவிதை அருமைன்னு...:)

நிஜமா நல்லவன் said...

/ வியா (Viyaa) said...

கொசுறு அருமை..
நானும் வெண்ணிலா கபடிகுழு படம் பார்த்தேன்
அந்த பாடல் நன்றாக இருந்தது..
என் மனதும் லேசா பறக்குது./

ஆஹா...என்ன இது? படம் பார்த்த எல்லோரும் பறக்குறாங்க...:)

நிஜமா நல்லவன் said...

/பரிசல்காரன் said...

தம்பி.. கொசுறு நல்லாத்தான் இருக்கு. எழுத்துப் பிழைகளுக்கு ஏதாவது செய்யுங்களேன். கண்ட இடத்துல காலைப் போடறீஙக!!!!/


ஹா...ஹா...ஹா...நான் எழுத்து பிழைகளுக்காக சிரிக்கலை....நீங்க சொன்ன கடைசி வரிக்காக சிரிச்சேன்...:)

நிஜமா நல்லவன் said...

/ தமிழ் பிரியன் said...

கொசுறு நல்லா இருக்கு!/

அட...டெம்ப்ளேட் முன்னாடி கொசுறு சேர்த்துக்கனுமா அண்ணே????

நிஜமா நல்லவன் said...

/தராசு said...

வால்பையன் said...
//மனைவி என்றும், மக்கள் என்றும், சுற்றம் என்றும் வளர்த்துக் கொள்வது ஒரு போகம். இதை விட்டு ஓட முடிந்துவிட்டால் யோகம். நான் சொல்லவில்லை.//

நளினாவும், நந்தினியும் ரொம்ப தொந்தரவு பண்றாங்களோ!


ஹலோ, விக்கி, என்ன நடக்குது இங்கே? எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகணும். யார் உங்களை தொந்தரவு பண்றது????/


ஒருத்தர் ரெண்டு பேருன்னா சொல்ல முடியும்....விக்கி நிலைமை சொல்லுற மாதிரியா இருக்கு....:)

நிஜமா நல்லவன் said...

/VIKNESHWARAN said...

@ விஜி

உங்க நாக்குல சூடு வைக்க...

@ நிஜமா நல்லவன்

அவ்வ்வ்வ்வ் முடியலை... அழுதிடுவேன்னே.... எல்லா வாக்கியத்துக்கும் கேள்வி கேட்டா எப்படி.../


பொதுவுல வந்துட்டா சொல்லித்தான் ஆகணும்....:))

நிஜமா நல்லவன் said...

அடுத்த கொசுறு எப்ப???

நிஜமா நல்லவன் said...

சாணியடி சித்தர் அப்ப வருவாரா?

நிஜமா நல்லவன் said...

இல்லை தீரா நிஷ்டையை தொடருவாரா?

நிஜமா நல்லவன் said...

சித்தர் இல்லாத கொசுறு 'று' இல்லாத பதிவின் தலைப்பு மாதிரி...:)

VG said...

u very jahat.. i no pren u..bye

அரட்டை அகிலன் said...

நிஜமா நல்லவன்

அவ்வ்வ்வ்வ் முடியலை... அழுதிடுவேன்னே.... எல்லா வாக்கியத்துக்கும் கேள்வி கேட்டா எப்படி...

கொசுற போட்டு இப்படி நிஜமனல்லவன் கிட்ட கொத்து வாங்கிறதை விட இனிமே கொசுறு போடாம இருகிறதே மேல் ...

நான் சொல்லுறத சொல்லிட்டேன் இதுக்கு மேல உங்க விருப்பம் ..

அரட்டி அகிலன் ....

VIKNESHWARAN ADAKKALAM said...

me the 50th :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி...

Anonymous said...

வெண்ணிலா கபடிக் குழு குறித்த எனது கருத்தும் அதே !