கபடியாட்டம் கொண்ட அரசியலும் இழுத்துப் பறித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரமும் என நாட்டின் நிலை தடுமாறிக் கிடக்கின்றது. ஆட்சிக்கு பங்கம் வந்துவிடுமோ எனும் நோக்கில் பொருளாதார நிலையை மறைத்து வைக்கவே முற்படுகிறார்கள் புத்திசாலி ஆட்சியாளர்கள். முழு பூசணியை பிடி சோற்றில் மறைப்பது சாத்தியமாகுமா? மக்களுக்கு தெரிய வேண்டியவை தெரிந்து தானே ஆகும்.
அனேக மலேசியர்களும் நம் நாட்டின் இன்றய நிலை என்ன என்பதை அறிந்து தான் இருக்கிறார்கள். இந்நிலையில் மக்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள ஆட்சியாளர்களின் முனைப்பு செலுத்துவது அவசியமாகும். அதை விடுத்து நீ கள்ள ஆட்டம் ஆடுகிறாய் நானும் கள்ள ஆட்டம் ஆடுவேன் என அரசாங்க பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தால் கழுதைக் கெட்டு குட்டிச் சுவராகத்தான் போகும்.
பெரிய நிறுவனங்களே வியாபரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டு வருகின்றன. சைட் டிஸ் இல்லாமல் சரக்கடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிக்ஸிங் செய்துக் கொள்ள பச்சை தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என சொன்னால் முறையாகுமா?தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் பணி புரிவோர் நிலை இது தான். வேலை இல்லாமல் இருந்தாலும் பணியாள் கூடுதல் நேரம் வேலை செய்தால் கண்டுக் கொள்ளாமல் இருந்த நிலை இன்றில்லை. மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கிறார்கள். இரண்டு பொது விடுமுறை இரண்டு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டுமாம். தேவைப்பட்டால் ஒரு மாதம் அடைக்கக் கூடும் என்றும் பூடகமான அறிவிப்புகள் வேலை செய்வோரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
சாப்பாட்டுக்கு வழி இன்றி உயிர்விட்ட கதைகள் ஏதும் எழும்பாததால் மாலேசிய பொருளாதாரம் இன்னமும் தேக்கு மரம் போல் கின்னென்று நிற்பதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்க முற்படுகின்றன போலும். பொருளாதாரம் நிலைகுலையும் சமயங்களில் பலமான அடிபடுவது தெழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் தான்.
1997/98 பொருளாதார நெருக்கடியின் சமயம் இதை கண்டிருக்கிறேன். ஆனால் அச்சமயம் இருந்த ஆட்சியில் மக்களுக்கு பயம் ஏதும் இல்லாமல் இருந்தது. இப்போதய நிலைபாடு அதைக்காட்டினும் முற்றினும் மாறுபட்டிருக்கிறது.20 வருடம் 30 வருடம் என ஒரே கம்பெனியில் குப்பைக் கொட்டுவது மலேசியாவில் சகஜமாகக் காணக் கூடிய ஒன்று. இக்கட்டான வேலைகளில் இப்படி அதிக நாள் வேலை செய்தவர்களைக் கழட்டி விடுவது தான் பெரிய கம்பெனிகளின் சிரமமான காரியம். எனக்கு தெரிந்த ஒருவர் 8 வருடங்களாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நான்கைந்து மாதங்களுக்கு முன் பல நெருக்கடிகளைக் கொடுத்து கம்பெனியை விட்டுத் துரத்தினார்கள்.
தோட்டங்களிலும் கிராமங்களிலும் வாழும் மக்களின் நிலை எப்படி? அதைப் பற்றிய செய்திகளை ஊடகங்கள் விவரிக்க முயல்கின்றனவா? சில காலத்திற்கு முன் இரப்பரின் விலை தென்னை மர உயரத்துக்கு இருந்தது. தோட்ட பணியாளர்களும் மரமே மடிந்து விழும் அளவிற்கு உளியைப் போட்டு செதுக்கிக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு உற்சாகம் இருந்தது. இப்போதய நிலை என்ன?
மலேசியா செம்பனை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய நாடுகளில் அமேரிக்காவும் அடங்கும். இன்றய நிலையில் செம்பனைக்கும் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது.இதனால் வேளாண் தொழில் துறையை நம்பி இருந்தவர்களின் வருமானமும் நிச்சயமற்று இருக்கிறது என்றாகிறது.
பொருளாதார பிரச்சனைகள் துளிர்விடும் சமயங்களில் குற்றச் செயல்களும் கிடுகிடுவென வளர்ந்துவிடவே செய்கின்றன. புதிதாக வாங்கிய நகைகளை காட்டிக் கொள்ள விரும்பும் நங்கைகளை இரகசியப் பார்வைகள் கவனித்துக் கொண்டிருக்கவேச் செய்யும்.வேலை இழந்தவன் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வான். திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இருப்பினும் இதில் விந்தை தமிழர்களே அதிகமான திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். அன்மையில் ஈப்போவில் நடந்த சம்பவம். 1000 ரிங்கிட்டுக்காக எண்ணைக் கடையில் வேலை செய்த தொழிலாளியை வெட்டிக் கொன்று பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்கள். 4 தமிழ் இளைஞர்கள் ஒரு நகைக் கடையில் 5 நிமிடத்தில் 3 இலட்சம் கொள்ளையடித்துச் சென்றார்கள்.
சமீப காலமாக காவல் துறையினரின் மீது இந்தியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பு மறுக்க முடியாத ஒன்று. எதானல் இந்நிலை? மலேசிய குடிமக்களில் இந்தியர்கள் சிறுபான்மையினார். ஆனால் குற்றச் செயல்களைப் பார்த்தோமானால் அவர்கள் தான் முதலிடம் வகிக்கிறார்கள்.
சமீபத்தில் 6 இந்தியர்கள் கூலிமில் சுட்டுக் கொள்ளப்பட்டார்கள். அவர்கள் நிஜத்தில் தவறு செய்தவர்கள் தானா? குகன் எனும் இளைஞரின் மரணம் மக்களிடையே பெரும் பரபரம்பை ஏற்படுத்தியது. அவர் தப்பு செய்தவர் தானா? சட்டம் இதற்கு பதில் சொல்லும் முன்னமே அவர்கள் பலியாகி போனார்கள்.
இது ஒரு புறம் இருக்க. இன்றைய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள சமயத்தில், குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் அதே வேளையில், குற்றம் புரிவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் இந்தியர்களே எனும் சூழல் எதனால் ஏற்பட்டது. கீழ்மட்ட வேலைகளில் அதிகம் இருப்பது இந்தியர்கள் என்பதும், அவர்களே சுலபமாகவும் அதிகபடியாகவும் தூக்கியெறியப்படுகிறார்கள் என்றும் ஆகிறது.
தற்சமயம் அதிகமாக கேள்விப்படுபவைகளுள் சில வழிபறிக் கொள்ளையும், வீடு புகுந்து திருடுவதும் தான். அதுவும் தமிழன் தமிழனிடத்தில் தான் திருடுகிறான். அதுவும் சில்லறைத் தனமான வேலைகளை. எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் என வகுப்பெடுக்க ஆள் இல்லை போல!சில தினங்களுக்கு முன் பக்கத்து வீட்டுக்காரரின் வீட்டின் முன் இருந்த பொருட்களை துப்புரவாக வாரிக் கொண்டு போய்விட்டார்கள். பாவம் ஒரு காலணி கூட விட்டு வைக்கவில்லை. வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் மிதிவண்டிகள் மட்டும் இல்லை அவர்கள் பூனை வளர்க்கும் கூண்டையும் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். பூனையையும் காணோமாம். கூட்டில் இருந்திருக்குமோ! தெரியவில்லை.
பெரிய பெரிய தோள் பைகளை மாட்டிக் கொண்டு திரியும் பெண்கள் அவற்றை ஒரு ஓரமாக கடாசிவிட்டு. பாதுகாப்பான முறையில் இருந்துக் கொள்வது நலம் இல்லையா. அரசியல், பொருளாதாரம், குற்றச் செயல் நாட்டுக்கு கேடாக இருக்கும் வேளையில் தன்னடக்கம், பாதுகாப்பு, சிக்கனம் எனும் முறையில் மக்கள் இருந்துக் கொள்வது சிறப்பு.
37 comments:
மிக அருமையான பதிவு !!
ஆலமான கருத்து.......
குற்றச்செயல்களில் முன்னிலை வகிப்பது இந்தியர்கள் என்ற செய்தி வருத்தத்தை தருகிறது :(
பல ஆயிரக்கணக்கான ரூபாய்களினை கொடுத்துவிட்டு அங்கு வந்து காசுக்கே வழியில்லாத பட்சத்தில் இது போன்ற தவறான வழிகளையே தேர்ந்தெடுக்கின்றனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மையாக மாறிக்கொண்டிருக்கிறது :(((
பொருளாதார வீழ்ச்சி அதனால் பெருகும் குற்றங்கள் பற்றி அலசியிருந்தாலும்,
//பெரிய நிறுவனங்களே வியாபரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டு வருகின்றன. சைட் டிஸ் இல்லாமல் சரக்கடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிக்ஸிங் செய்துக் கொள்ள பச்சை தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என சொன்னால் முறையாகுமா?//
இந்த ஆதங்கம் தேவைதானா....???
ரொம்ப அவதானித்து எழுதி இருக்கீங்க...
//பெரிய நிறுவனங்களே வியாபரத்தை வெகுவாக குறைத்துக் கொண்டு வருகின்றன. சைட் டிஸ் இல்லாமல் சரக்கடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிக்ஸிங் செய்துக் கொள்ள பச்சை தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என சொன்னால் முறையாகுமா?//
ஆனா இந்த நிலைக்கு வந்திட்டீங்களா?.. :(
மலேசியாவில் உங்கள் சுற்றாடலில் நடப்பவற்றை எழுதி உள்ளீர்கள். இது போன்ற தகவல்கள் வெளி நாடுகளில் இருக்கும் எமக்கு தான் வாசிக்க ஆர்வமாக இருக்கும் என நினைக்கிறேன். ஒப்பீட்டில் அதிகளவு தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது பற்றி இதற்கு முன்னரும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பது தமிழர்கள் தான். தற்போது வந்துள்ள பொருளாதார நெருக்கடி தமிழ் சமூகத்தை தான் அதிகமாக பாதிக்கும் என்று நீங்கள் கருதுவது சரி தான். அவர்கள் தமிழர்களிடமே திருடினால் அரசும், பிற சமூகங்களும் அக்கறைப்படா. அந்த எல்லையை மீறி மற்றவர்கள் மேல் கைவைத்தால், அது இனரீதியாக பாகுபாடு உருவாக வழிவகுக்கும்.
மலேசியாவில் மட்டுமல்ல, நான் பார்த்த அளவில் இங்கிலாந்திலும், கனடாவிலும் இதே போன்று தமிழ் சமூகத்தின் உள்ளே வளர்ந்த கிரிமினல்கள் இருக்கின்றனர். உங்களது கட்டுரையை படித்த போது எனக்கு அந்த நாடுகளில் நடக்கும் சம்பவங்கள் ஞாபகத்திற்கு வந்தன.
மிக அருமையான பதிவு !!
//சைட் டிஸ் இல்லாமல் சரக்கடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிக்ஸிங் செய்துக் கொள்ள பச்சை தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என சொன்னால் முறையாகுமா?//
நல்ல அலசல் போல் இருக்கு...
ARUMAIYANA KARUTHU.VEERIVAGA INNUM NIRAIYA ATHARANGGAL POTTU ELUTHINAAL NANDRU.
தமிழன் திருடுகிறான், தமிழன் கொலை செய்கிறான், இன்னும் இதை செய்கிறான் அதை செய்கிறான் என அன்று தொட்டு இன்று வரை பலரும் சொல்லி விட்டார்கள். அதே தமிழனும் கோபுரம் அளவுக்கு சாதனையும் படைட்திருக்கிறான் பல இடங்களில் பல விடயங்களில் ஆனால் இந்த நல்ல விடயங்களைப் பற்றி யாரும் அலசி ஆரய்ந்து அதிகம் எழுதலையே யேன்? அப்படி எழுதினால் அது நம் தமிழர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையுமே. நூற்றில் ஒருவராவது இந்நல்ல விடயங்களைப் படித்து பயன் பெருவாரே. கொலை கொள்ளையை விடுத்து தமிழனின் சாதனைகளை அலசி ஆராய்வோம், விக்கி.
//தற்சமயம் அதிகமாக கேள்விப்படுபவைகளுள் சில வழிபறிக் கொள்ளையும், வீடு புகுந்து திருடுவதும் தான். அதுவும் தமிழன் தமிழனிடத்தில் தான் திருடுகிறான். அதுவும் சில்லறைத் தனமான வேலைகளை. எதையுமே பிளான் பண்ணி பண்ணனும் என வகுப்பெடுக்க ஆள் இல்லை போல!//
இதற்கு சினிமாவும் ஒரு காரணமா இருக்குமோ?
//இதற்கு சினிமாவும் ஒரு காரணமா இருக்குமோ?//
சுபஷினி அவர்களே, தமிழன் மட்டும்தான் திருடுகிறானா?
யேன்? தமிழன் மட்டும்தான் சினிமா பார்க்கிறானா?
உஷா அவர்களே தமிழன் முதலில் தன்னிடம் இருக்கும் நல்லது, கெட்டதுகளை அலசி ஆராய்ந்தால் தானே முன்னேற முடியும்? தன்னிடம் கேட்டது இல்லை என்று வாதாடிக் கொண்டிருந்தால் எப்படி? யாருமே perfect இல்லை.
//உஷா அவர்களே தமிழன் முதலில் தன்னிடம் இருக்கும் நல்லது, கெட்டதுகளை அலசி ஆராய்ந்தால் தானே முன்னேற முடியும்? தன்னிடம் கேட்டது இல்லை என்று வாதாடிக் கொண்டிருந்தால் எப்படி? யாருமே perfect இல்லை.//
உங்கள் பெயர் என்ன?
தமிழனிடம் கெட்டது மட்டுமே இருக்கிறது என்று வாதாடுவதை நீங்கள் தவிர்க்கலாமே?
தமிழனின் நல்லதை பேசாவிட்டாலும் பரவ்வயில்லை ஆனால் கெட்டதைப் பேசி பேசி முன்னேற துடிக்கும் இந்திய சமுதாயத்தை முடக்காதீர், அன்பிற்குரிய பெயர் இல்லாதவரே!
உஷா அவர்களே, நான் தமிழர்களிடம் கெட்டது மட்டுமே இருக்கிறது என்று சொல்லவில்லையே? எல்லோரிடமிடமும் இருப்பது போல தமிழரிடம் நல்லதும் கெட்டதும் இருக்கிறது என்று மட்டுமே சொன்னேன். அது தவறா?
வணக்கம் தோழாரே, நல்ல கட்டுரை. சமுதாயத்தின் பிழைகளை அலசி இருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்த சில விசயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அண்மையில் சிம்பாங் அம்பாட் சிறைச்சாலையில் நடத்திய ஆய்வில், அங்கு இருப்பவர்களில் 58 விழுக்காடு தமிழர்கள் ஆவார்கள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 7.8 விழுக்காடாக இருக்கும் நாம் சிறைசாலையில் 58 விழுக்காடு இருக்கிறோம் என்றால், இது யாருடைய தவறு? பெற்றோர்களா, நண்பர்களா, அரசாங்மா, சினிமாவா, இளையச் சமுதாயத்தை வழிநடத்தி செல்ல மறுக்கும் அரசியல்வாதிகளா அல்லது சமூகச் சுற்றுசூழலா?
"எல்லோரிடமிடமும் இருப்பது போல தமிழரிடம் நல்லதும் கெட்டதும் இருக்கிறது என்று மட்டுமே சொன்னேன்"
இது எப்பொழுது சொன்னிங்க?
\\வேலை இழந்தவன் வயிற்று பிழைப்புக்கு என்ன செய்வான். திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கின்றன.\\
இது என்ன கருத்து விக்கி
சரி என்று சொல்றீங்களா!
//சைட் டிஸ் இல்லாமல் சரக்கடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். மிக்ஸிங் செய்துக் கொள்ள பச்சை தண்ணீரைக் கூட கொடுக்க முடியாது என சொன்னால் முறையாகுமா?//
இங்க தான் நீங்க என்னோட ஃப்ரண்டுன்னு நிறுபிக்கிறிங்க!
வீட்டில் இருப்பவர்கள் அண்ணன் அப்படி செய்றான் தம்பி இப்படி செய்றான்
இத மாதிரி பேசிக்குவோம்
அது போல நாமும் தமிழறாய் இருந்து கொண்டு
இப்படி தமிழரையே குறை சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் ஓட்டுவோமோ!
சிறைச்சாலைகளில் மட்டும் ஆய்வுகளை நடத்துவதை விட்டு விட்டு பள்ளிக்கூடங்களிலும் பழ்கலைக்கலகளிலும் ஆய்வுகள் நடத்தினால் சாதனைகள் பல படைத்த ஆயிரம் ஆயிரம் தமிழ் முத்துக்களின் புள்ளி விவரங்கள் வியப்பூட்டும். (இது தமிழனை தாக்கும் பலரின் அறியாமையை தெளிவு படுத்தும்)
வணக்கம் விக்னேஷ்,
வாழ்த்துகள் உங்கள் எலுத்துக்களுக்கு,
இன்று நமது நாட்டில் நடக்கும் அரசியல் மற்றும் பொருளாதர வீக்கத்தால் ஏற்படும் குற்றச்செயல்களைத் தெள்ள தெளீவாக எலுதிருகிங்க.விக்னேஷ், ஒரு இந்தியார இருந்து உங்களுடைய கடமையைச் செஞ்சிருகிங்க.ஒரு அரசியல்வாதியால் முடியாததை,ஒரு எலுதாலரால் முடியும்..இதற்க்கு உதராணம் தேவையே இல்ல..நமது முன்னோர்கள் பாரதி,பாரதிதாசன் போன்றவர்களின் கவிதைகளும் எலுத்துக்களும் பலரின் வாழ்க்கை சரிதரத்தையே மாற்றி உள்ளது.இதே போல உங்கள் எலுத்துக்களும் பலரின் வாழ்க்கைக்கு ஒரு நல்ல விழிபுணராகவும் வழிகாட்டியாகவும் இருக்கட்டும்..!
முயற்சிகள் தொடரட்டும்..!
வீழ்வது நாமக இருந்தாலும்..,
எலுவது நமது இந்திய சமுதாயமாக..
இருக்கட்டும்..!
காயத்ரி பன்னீர்செல்வம்.
அருமையான பதிவு
@ ராஜா முகமது
நன்றி...
@ ஆயில்யன்
கருத்துக்கு நன்றி... மிஸ்டர் வாலுக்கு பிடிச்சிருக்கு பாருங்க :))
@ தமிழ் பிரியன்
நன்றி...
@ கலையரசன்
நிங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை... ஆனால் இங்கு நான் விளங்கக் கூற முடியாத சில அரசியல் பின்னனி விடயங்களும் அடங்கிக் கிடக்கின்றன.
@ ச்சின்னப் பையன்
நன்றி...
@ ஆ.ஞானசேகரன்
நன்றி.. அலசலும் கலக்கலும் :))
@ அனானி
நன்றி...
@ k.usha
எழுத வேண்டியதை நீங்களே கூட எழுதளாம். உணமை சில வேளைகளில் உறைக்கத் தான் செய்யும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் கருத்துகளை உங்கள் பதிவில் பதிவு செய்யுங்கள். இங்கு வரும் வாசகரிடையே நீங்கள் சண்டையிடுவது நாகரீகமாக தெரியவில்லை.
@ சுபாஷினி
இதற்கு சினிமா மட்டுமின்றி பெற்றோர்கள் பிள்ளைகள் நலன் மீது சரியாக கவனம் செலுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இதை பொதுவில் கூறிக் கொள்கிறேன் இல்லை என்றால் தமிழ் பெற்றோர் மட்டும் தான் சரி இல்லையா என கேட்பார்கள்.
@ அனானி
உங்கள் கருத்துக்கு நன்றி...
கட்டுரை அறிவுப்பூர்வமாக இருக்கிறது. பின்னூட்டத்தில் கே.உசா அவர்களின் பதில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. நான் இரண்டாம் ரகம். விக்கி அவர்களே! தங்களது கட்டுரையை மனப்பூர்வமாக அங்கீகரிக்கிறேன். அதே நேரத்தில் தமிழன் தவறான பாதையில் செல்லாமல் சரியான பாதையில் செல்வதற்குச் சரியான வழியையும் கட்டுரையில் வழங்கினால் நலமாக இருக்கும்.
என்னைக் கேட்டால் ஒருவனின் குற்றத்தைச் சுட்டிக்காட்டுவதை விட அக்குற்றம் மீண்டும் நடக்காமல் இருக்க தக்கவழி உரைப்பதே சாலச் சிறந்தது எனக்கருதுகிறேன்.
@ குமார்
நீங்க ஆதாரத்தோடு சொல்லி இருக்கிங்க... ஆனா அதைக் கூட ஏன் சொல்ல வேண்டும் நல்லதை பார்க்க மாட்டிங்களானு கேட்கிறார்கள் பாருங்கள். கெட்டதை அறிந்தால் தானே திருத்திக் கொள்ள முடியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ ஜமால்
ஒரு நாட்டில் ஒரு சிருவன் பசியால் வாடுகிறான். பசி தாங்காமல் ஒரு ரொட்டியை திருடி சாப்பிட்டு விடுகிறான். அவன் ஏன் அப்படி செய்தான் என்பதை அங்கிருந்தவர்கள் கேட்கவில்லை. திருடிவிட்டான் எனும் நோக்கில் அவன் கையை வெட்டி விட்டார்கள். இந்த வீடியோவை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அந்தச் சிறுவன் செய்தது தவறா?
திருடுவது தப்பு தான் அந்நிலை ஏற்பட காரணம் என்ன?
@ வால்பையன்
ச்சியர்ஸ்.....
@ காயத்திரி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ வியா
நன்றி...
@ அகரம் அமுதா
இதற்கான தீர்வு சரியான வழி நடத்துதலே... மலேசியாவில் தமிழ்ப் பள்ளியில் படித்தால் அவன் கோவிலுக்கு மணியடிக்கத்தான் போவான் என பெரியவர்களே சொல்லும் போது அடிப்படை தவறு எங்கிருக்கிருக்கிறது. பெற்றவரிடம் தானே. 50 ஆண்டு காலத்தில் தமிழரிடம் இவ்வளவு பிரச்சனை என்றால் அதை ஏன் கேட்பார் இல்லை. கேட்க ஆரம்பித்தால் தமக்கு ஆபத்து என நினைக்கும் அரசியல் கட்சிகளால் தான் என்பேன்.
தமிழர் மத்தியில் பயம் ஏற்பட வேண்டும் என்பதற்கு தான் போலிஸ்காரன் சுட்டுக் கொல்கிறானோ என்னவோ தெரியவில்லை. பிரச்சனைகள் இருக்கக் கூடாது என்றால் நல்லது செய்ய வேண்டும். தமிழர் அரசியல் கட்சிகளுக்கு அடித்துக் கொள்ளவே இங்கு நேரம் போதவில்லை பிறகு எப்படி அடுத்தவர் முன் உதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.
சண்டைக்கு அர்த்தம் தெரியாத உங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருது விக்கி. வாசகர்களுடைய பின்னூட்டத்தை முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்....
ஆழமான பார்வை..இந்தப் பார்வை உங்கள் அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்ல..பொதுமக்களிடமும் ஏற்பட வேண்டும்....
bayangarama paathika pathirukka polhe.. :P
i'm worrying what goin to happen by end of this year.. =(
காலத்திற்கேற்ற தேவையான ஓர் அலசல்.
சிறந்த படைப்புகள்/பதிவுகள் என்பது எடுத்துக் கொண்ட தலைப்பை மீறாமல் கருத்துகள் தடம் புறளாமல் வார்ப்பதாகும். அந்த வகையில், காலச் சூழல் மாற்றங்களினால் நம்மவர்கள் எவ்வாறான பாதிப்புகளை காணக்கூடும் என்று முன் எச்சறிக்கை விடுப்பதாகவே இப்பதிவை நான் பார்க்கின்றேன். இதற்கு முன்னால் வெளியிட்ட பதிவுகளிலும் சமுதாயத்திற்குத் தேவையான பல் தகவல்களை வெளியிட்டிருக்கின்றீர்கள் என்பதும் நான் அறிவேன்.
பாவம் பால்குடி மாறா பாலகி உசா புலம்புவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவரின் வலைப்பதிவை பார்த்ததுண்டா? அவர் 'அங்கு' கொட்ட முடியாததை உங்கள் பதிவில் கொட்டியிருக்கிறார்.
விட்டு விடுங்கள்....
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது! தமிழனாய் பார்த்து திருந்தாவிட்டால்.. அவன் தலையெழுத்தை மாற்ற இயலாது!
//20 வருடம் 30 வருடம் என ஒரே கம்பெனியில் குப்பைக் கொட்டுவது மலேசியாவில் சகஜமாகக் காணக் கூடிய ஒன்று.//
இது இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய உண்மை! நம்மவர்களுக்கு முதலாளிதான் தெய்வம்.. சீனன், இரண்டு வருடத்தில் மூன்று கம்பெனி மாறி 30 விழுக்காடு அதிக சம்பளம் பெறுவான்.. இன்னும் ஐந்து ஆண்டுகள் போனால், மூன்று மடங்கு ஊதியம் பெறுவான்.. நமக்கு அந்த தைரியமும் இல்லை.. வாய்ப்புக்களும் இங்கே இல்லை!!!
அதானால்தானோ என்னவோ.. நம்ம தல கூட 30 வருஷமா அரசியல்ல இருந்து விலக மாட்டேன்னு அடம் புடிக்குது!
\\திருடுவது தப்பு தான் அந்நிலை ஏற்பட காரணம் என்ன?\\
சட்டம் தன் கடமையை செய்யும் அப்படின்னு சொல்லிட்டு செய்றாங்க.
மனிதாபிமானம் கிஞ்சித்தும் இல்லை
இந்த நிலைக்கு காரணம் அரசாங்கமே!
//பாவம் பால்குடி மாறா பாலகி உசா புலம்புவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவரின் வலைப்பதிவை பார்த்ததுண்டா? அவர் 'அங்கு' கொட்ட முடியாததை உங்கள் பதிவில் கொட்டியிருக்கிறார்.
விட்டு விடுங்கள்....//
சகோதரரே!
நான் புலம்புகிறேனா? உம்மைப்போல் சமுதாய அக்கறை இல்லாதவர்கள் இருக்கும் வரை உருப்பட்ட மாதிரித்தான்...நான் புலம்புவதை எல்லி நகையாடுவதை விட்டு விட்டு விக்கிக்கி பாச வார்த்தைகளை பூச்சரமாய் தொடுப்பதை விட்டு விட்டு இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்வதில் உங்கள் நேரத்தை அற்பணியுங்கள்....:)
@ டொன் லீ
வருகைக்கு நன்றி...
@ விஜி
வருகைக்கு நன்றி...
@ குமரன்
வருகைக்கு நன்றி... நீங்களும் இது தொடர்பான செய்திகளை எழுதுங்கள்.
@ கிருஷ்ணா
அப்படியா... :)) கருத்துக்கு நன்றி நண்பரே...
முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிவை படிச்சுட்டு அப்புறமா வர்றேன்.
@ தராசு
நன்றி...
dear usha,
well said. if they do not want you to comment here ur opinions, the blog owner can remove comment part from his article.
as a reader, we have all rights to express our feelings.
and, from my point of view, YOU R RIGHT akka. =)
Post a Comment