Thursday, January 08, 2009

எல்லோருக்கும் கட்டாய கிராஸ் பெல்ட் !

சமீப காலமாக சாலையில் அளவுக்கு அதிகமான வாகனங்கள். எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டிருந்த சமயம் வாகன நெரிசல் குறைவாகவே இருந்தது. இப்போது அப்படி இல்லை. மக்களானவர்கள் தரமான(!?) பொதுவாகன சேவையை நாடுவதை குறைத்துள்ளார்கள் போலும்.

சில காலமாக எண்ணெய் விலை குறைப்பிற்காக மக்களின் போராட்ட குரல் அதிகரித்திருந்தது. இப்போது அது ஓரளவு அடங்கி இருக்கிறது. எண்ணெய் விலைக் குறைப்பினால் பலரும் சொந்த வாகனங்களை பயன்படுத்த எத்தனித்துள்ளார்கள்.

2009-ஆம் ஆண்டு 1-ஆம் திகதி முதல் மகிழுந்து உபயோகிப்போர் பின் இருக்கையில் அமர்பவராயினும் கவச பட்டை அணிவதை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். தவறுபவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு பலமான விவாதத்திற்குள்ளானது. மக்களின் நலன் காக்க எடுக்கப்படும் முயற்சி என்பதால் இவ்வாண்டு இது அமலாக்கத்திற்கு வந்தது. ஆச்சரியம் என்னவென்றால் சமீப காலமாக மலேசியாவில் விபத்துகள் அதிகரித்திருக்கிறது.

காரணம் என்ன? வாகனமோட்டிகளின் மெத்தன போக்கே விபத்துக்கு காரணம் என கூறலாம். அவசர வாழ்க்கை. நேரத்தை துரத்தி துரத்தி தொய்ந்து போகும் நிலைக்குட்பட்டுவிட்டோம். சுவாசிப்பது, உணவு கொள்வது போலவே பயணமும் இன்றைய வாழ்க்கையில் அத்தியாவசியமாகிவிட்டது.

சில வேளைகளில் நேரத்தை மிச்சபடுத்தவும் அவசர வேலைகளுக்காகவும் சாலை விதிகளை மீறும் நிர்பந்தம் ஏற்படுகிறது. சாலை விதிகள் மக்களை சிரமப்படுத்த அல்ல என்பதையும் அவை நமது பாதுகாப்பிற்காகவே என்பதனையும் சில வேளைகளில் மறந்துவிடுகிறோம்.


சரி, பின் இருக்கையில் அமர்பவர்கள் கவசப்பட்டை அணிவதை கட்டாயமாக்கிய செய்திக்குத் திரும்புவோம். ஒரு குடும்பத்தில் நான்குக்கும் அதிகமான நபர்கள் இருப்பார்கள் என்றால் எல்லோராலும் கவசப்பட்டை அணிய முடியாது. அதற்காக தனியாக வாகனம் வாங்கும் அளவிற்கு எல்லோருக்கும் வசதி அமைந்துவிடவில்லை.

அப்படியென்றால் ஒரு வாகனத்தில் நான்கு அல்லது ஐந்து நபர்களுக்கு மேல் பயணித்தால் அதற்காக ஒரு அபராதமும் கவசப்பட்டை அணியாத குற்றத்திற்கு தனியாக இன்னொரு அபராதமும் விதிக்கப்படுமோ? பின்னிருக்கையில் அமர்வோர் பெரிய உருவமாக இருப்பின் கவசப்பட்டையை அணிய முடியுமா?

இது மக்களுக்குச் சுமை கூட்டும் விதி என்பதா இல்லை பாதுகாப்புக்கான முயற்சி என்பதா? சாலைவிபத்தில் சிக்கி பிழைத்தவனைக் கேட்டால் பின் இருக்கையில் கவசப்பட்டை அணிவது அவசியமானதே என்பான். சிக்காதவர் அவசியமில்லை என்றே சொல்வார்கள்.

வாகன விபத்துகளில் மரணமடைவோர்களின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையிலானோர் கவசப் பட்டை அணியாதிருந்திருக்கிறார்கள் என அறிக்கைகள் தெரிவித்துள்ளன. கோர விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இம்முறை மிக அவசியமானதே என கருதுகிறேன்.

அடுத்ததாக பொதுச் சேவை வாகனங்கள் சிறந்த முறையில் இயங்குவதும் அவசியமாகும். சரியான நேரப்படி பொது வாகனங்கள் இயங்குமாயின் மக்கள் மாற்று போக்குவரத்துக்குக் கண்டிப்பாக அவற்றை பயன்படுத்திக் கொள்வார்கள். அதே போல் போது வாகன வசதிகள் போதுமானதாகவும் தரமாகவும் அமைதல் வேண்டும்.

பெயர் பலகைகள் புதிப்பிக்கப்பட்டும் அனைவரும் அறியும் மொழியிலும் எழுதப்பட்டால் பலருக்கும் நன்மை பயக்கும். ஆபத்து நிறைந்த சாலை பகுதிகள் சரிவர குறிப்பிடப்பட வேண்டும். வாகனமோட்டிகளுக்கு அது நினைவூட்டலாக அமையும்.

சாலைகளில் தனது ஆத்திர உணர்வையும் அவசரத்தையும் காட்டுவதனால் யாருக்கும் நன்மை இல்லை என்பதே உண்மை. தேய்வு உணர்ச்சிகளால் சாலையில் பாதிப்படைவது ஒரு சாரார் மட்டுமல்ல. காரணம் அறியாமல் பாதிப்படைவோரும் இருக்கவே செய்கிறார்கள். வாகனத்தைச் செலுத்தும் போதாவது நமது சுயநலச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அமர்வோமாக.

22 comments:

கோவி.கண்ணன் said...

யோவ்.....உங்க ஊரில் இந்துக்களுக்கு பூணூல் போட்டு விடுறாங்க போல என்று படிக்க வந்தேன்.....தலைப்பை வச்சு ஏமாத்துறாங்கப்பா

தராசு said...

மீ தெ பர்ஸ்ட்

பதிவைப் படிச்சுட்டு அப்புறமா வர்றேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மீ த தேடு!

VG said...

oh gawd, vicknes why people are fighting to be the first to comment in ur post... ? avalo admirer's.

ok back to topic. NAN ninaithen, ninga elutitinga... :)
ungaluku eluntha kelvigal enakkulum olitatu.

i'm still wondering, how the kids goin to wear the seat belt when there are 8 in family. parpom, how long this sattam. :))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மீ த பிபிது!
சிங்கையில் இருந்து மலேசியா கஷ்டமைத் தாண்டி காரில் செல்லும் போது ஓட்டுனர்கள் சீட் பெல்டை அவிழ்த்து விட்டு விட்டு சுதந்திரப் பறவையாகப் பறப்பதைப் பார்த்திருக்கிறேன்.

Anonymous said...

கிராஸ் இல்லாத பெல்ட் தான் நாங்க போடுவோம்....

A N A N T H E N said...

//சுயநலச் சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு அமர்வோமாக.//

இந்த சட்டை எங்கே விக்குறாங்க? சொன்னா நாங்களும் வாங்கி மாட்டிக்குவோமில்லே?

//பெயர் பலகைகள் புதிப்பிக்கப்பட்டும் அனைவரும் அறியும் மொழியிலும் எழுதப்பட்டால் பலருக்கும் நன்மை பயக்கும்.//
இது சரியா விளங்கவில்லை

VIKNESHWARAN ADAKKALAM said...

பின்னூட்ட ஆதரவு போததால் அனானிகளின் ஆதரவும் நாடப்படுகிறது....

மீத செவன்த்து....

பத்துக்குள்ள நம்பட் ஒன்னு சொல்லு...

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டம் பத்தலையா

யாருப்பா அங்கே ...

ஓடியாங்க ஓடியாங்க

பெல்ட் குடுக்கிறாங்க ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger கோவி.கண்ணன் said...

யோவ்.....உங்க ஊரில் இந்துக்களுக்கு பூணூல் போட்டு விடுறாங்க போல என்று படிக்க வந்தேன்.....தலைப்பை வச்சு ஏமாத்துறாங்கப்பா\\

ஹி ஹி ஹி ...

நட்புடன் ஜமால் said...

\\Blogger ஜோதிபாரதி said...

மீ த தேடு!\\

பாரதி பெல்ட்டை தேடுறாரா

தராசு said...

//காரணம் என்ன? வாகனமோட்டிகளின் மெத்தன போக்கே விபத்துக்கு காரணம் என கூறலாம். அவசர வாழ்க்கை. நேரத்தை துரத்தி துரத்தி தொய்ந்து போகும் நிலைக்குட்பட்டுவிட்டோம். சுவாசிப்பது, உணவு கொள்வது போலவே பயணமும் இன்றைய வாழ்க்கையில் அத்தியாவசியமாகிவிட்டது.//

வழி மொழிகிறேன்

தராசு said...

இதோ சொல்லியாச்சு,

10

RAHAWAJ said...

பட்டைய கிளப்பிட்டிங்க விக்கி,கார் வார்பட்டையை போடும் முன் "பட்டை" போடவேண்டும்

சின்னப் பையன் said...

ரீடர்லே தலைப்பை மட்டும் படிச்சிட்டு டென்சனாயிட்டேன்!!! அப்புறம் பதிவ படிச்சப்புறம்தான் நிம்மதியாச்சு!!!

சி தயாளன் said...

:-) நான் ஏதோ வேற பெல்ட் என்று நினைச்சு வந்தனான்

ஜோசப் பால்ராஜ் said...

என்னடாம்பி,
க்ராஸ் பெல்ட் அது இதுன்னு எழுதி எங்கவாளயெல்லாம் ரென்சன் பண்றியே நீ?

இதெல்லாம் நல்லாயில்லையப்பா.
தலைப்ப மாத்து.

ஐய்யங்கார்.

Tamil whatsapp stickers and png images said...

அட போங்கப்பா....
போலிஸுக்கு வருமானம் குறைவா இருக்காம்...
அதனாலதான் புது சட்டம்.

Anonymous said...

நிச்சயம் இருக்கை பட்டி அணிவது முக்கியம்..நல்ல பதிவு..

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கோவி.கண்ணன்

அண்ணே இது உங்க ஐடியா தானே... நீங்களே இப்படி சொன்னா எப்படி...

@ தராசு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

@ ஜோதிபாரதி

சுதந்திரமா எங்க பறக்கிறாங்க... ஒரேடியா பறந்திடுறாங்க... கருத்துக்கு நன்றி அண்ணே...

@ விஜி

நீங்க சொல்ற மாதிரிலாம் எதும் இல்லை.... சும்மா ஒரு விளையாட்டுக்குதான் மீ த பர்ஸ்ட் கமெண்டு எல்லாம்... வருகைக்கு நன்றி...

@ ஆனந்தன்

அந்த சட்டைலாம் போடக்குடாது தம்பி...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ஜமால்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ ஜவஹர்

என்ன பட்டைய சொல்றிங்கனு புரியலையே :P

@ ச்சின்னப் பையன்

எதுக்குங்க டென்சன்

@ டொன் லீ

என்னனு நினைச்சி வந்திங்க... எல்லாம் வயசு தான் காரணம்... கண்டத நினைக்காதிங்க...


@ சிவகுமார்

அப்படியா?

VIKNESHWARAN ADAKKALAM said...

@ தூயா

தூயா அக்கா கடைசியாக கருத்து கந்தசாமி மாதிரி அறிவுரை கொடுத்து முடிச்சிட்டாங்க :P