Friday, January 09, 2009
பயனற்ற செல்பேசிகளுக்குப் பின்னால்...
பழுதடைந்து எங்கோ ஒரு மூளையில் கிடத்தி வைக்கப்படிட்டிருக்கும் உங்கள் செல்பேசியை என்ன செய்வீர்கள்? இது மிகவும் எளிமையான கேள்வியே. இதற்கான விடை காண உங்கள் சிந்தனை விதவிதமாக சிதறியிருக்கும். இப்படிதான் செற்பமான சில கேள்விகள் நம்மை சிந்திக்க வைத்துவிடுகிறது.
அண்மையில் நோக்கியா 'NOKIA' நிறுவனத்தினர் ஓர் ஆய்வை மேற்கொண்டார்கள். அந்த ஆய்வு 13 நாடுகளில் வாழும் 6500 ஆட்களிடம் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் செல்பேசி பயன்படுத்துவோரிடையே 4 முக்கிய விடைகளை கண்டறிந்தார்கள்.
அவர்களில் 44 விழுக்காட்டினர் பழுதடைந்த செல்பேசியை வீட்டில் வைத்துக் கொள்வதாக கூறி இருக்கிறார்கள். 33 விழுக்காட்டினர் அதனை மற்றவரிடம் கொடுத்துவிடுவதாகவும், 16 விழுக்காட்டினர் விற்றுவிடுவதாகவும் 4 விழுக்காட்டினர் அதை தூக்கி எறிந்துவிடுவதாகவும் கூறி இருக்கிறார்கள்.
3 விழுக்காட்டினர் மட்டுமே செல்பேசியை மறுபயனீட்டுக்கு அனுப்புவதாய் சொல்லி இருக்கிறார்கள். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 72 விழுக்காட்டினருக்கு செல்பேசி மறுபயனீடு என்பது தெரியாமலே இருந்திருக்கிறது. காகிதம் மற்றும் உலோக பொறுட்களின் மறுபயனீட்டைப் போல் செல்பேசி மறுபயனீடு பிரபலமில்லாததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
நாம் வாங்கும் மின்கருவிப் பொருட்கள் பழுதடையுமாயின் குறைந்தபட்சமாக அது ஏதோ ஒரு வகையில் பயனளிக்கக் கூடியதாகவே அமையும். பழுதடைந்த செல்பேசிக்கும் மதிப்பிருக்கும் என்பது பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. செல்பேசியில் இரும்பு, செம்பு, நிக்கல் மற்றும் தங்கம் போன்ற உலோகப் பொருட்கள் அடங்கியுள்ளது. ஆனால் நாம்மில் பலரும் அதை உணர்வதில்லை. பழுதடைந்தால் அவற்றை எறிந்து விடுகிறோம்.
செல்பேசி அளவில் சிறியது. அதை போலவே அதனுள் இருக்கும் உலோகங்களும் சிறிய அளவிலேயே இருக்கும். ஆகையால் பழுது போன செல்பேசிகளை மறுசுழற்சிக்கு அனுப்புவோமானால் அது பலருக்கும் நம்னை பயக்கும். முக்கியமாக இயற்கைக்கு நன்மை செய்வதாய் அமையும்.
3 பில்லியன் செல்பேசிகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுமானால் அதில் இருக்கும் 240 000 டன் கணிமங்களை சேமிக்க முடியும். அது போக தொலைபேசி போன்ற மின் சாதனத்தில் இருந்து வெளிபடும் நச்சு வளியையும் கட்டுபடுத்த முடியும். 3 பில்லியன் செல்பேசிகளில் வெளிபடும் நச்சு வளியானது 4 மில்லியன் ஊர்திகளில் வெளிபடும் நச்சு புகைக்கு சமமென தெரிவித்துள்ளது நோக்கியா நிறுவனம்.
கையடக்கப் பேசிகளை மறுசுழற்சி செய்யும் முதன்மை நிறுவணங்களில் ஒன்று சிங்கையில் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவணத்தின் பெயர் Tess-Amm என்பதாகும். பல மின் கருவிகளையும் மறுசுழச்சி செய்து அதன் உள் அடக்கங்களை பிரித்து எடுத்து மறுபயனீட்டுக்கு அனுப்புவது இவர்களின் தலையாய செயல்.
ஒரு கிலோகிராம் தங்கம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 150000 முதல் 176000 வரையிலான கையடக்க பேசிகளை மறுசுழற்சி செய்தாக வேண்டும். மறுசுழற்சி நிறுவனங்கள் கையடக்க்கப் பேசியை தவிர்த்து வேறு பல தொழில்நுட்பக் கருவிகளையும் மறுசுழற்சி செய்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் கனிமங்களும் அதிகமாகவே இருக்கும்.
இன்றய நாட்களில் ஒருவருக்கு ஒரு கையடக்கப்பேசி என்பது போய் ஒருவருக்கு இரண்டு முன்று என்றாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் கையடக்கப் பேசிகளின் விலைகளும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொது மக்கள் பயன்படுத்தவும் ஏதுவாக அமைந்துவிட்டது.
மறுசுழற்சி பூமியில் குறைந்து வரும் கனிம கட்டுப்பாட்டிற்கு உதவியாய் அமையும் என்பது உறுதி. இயற்கையின் அழிவையும் பாதுக்காக வழி செய்கிறது. தங்க ஆலை வேலைகளின் போது காற்று, நிலம், நீர் என பலவும் மாசுபடுகின்றன.
பிரேசில், ஃகியானா, கானா, வெனிசுலா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளில் தங்கச் சுரங்க வேலைபாடுகள் பல காலமாக இயற்கைக்கு பாதகமாகவே இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் அமேரிக்காவின் நிவாடா எனும் பகுதியில் ஒரு தங்கச் சுரங்கள் மூடப் பட்டது. சுரங்க வேலைக்காக வெளியேற்றப்பட்ட அதிகமான மெர்குரி அமிலத்தினால் அச்சுற்று வட்டாரத்தின் நீர்நிலைப்பகுதிகள் பாதிப்படைந்ததே இதற்குக் காரணம்.
மெர்குரியை தவிர்த்து மேலும் பல வேதிப்பொருட்களை தங்கச் சுரங்க வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது வேறு விசயம். 1990-ஆம் ஆண்டு முதல் 1998 வரை ஏறக்குறைய முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கச் சுரங்க வேலையின் போது கானாவில் காணாமல் போய் இருக்கிறார்கள்.
கையடக்க பேசிகள் குப்பையில் தூக்கி எறியப்படுமாயின் அது மிகவும் ஆபத்தானது. அப்படி தூக்கி எறியப்படும் ஒரு கையடக்கப் பேசியானது பூமிக்குள் இருக்கும் நாப்பதாயிரம் கலன் நீரினை மாசுபடுத்தும் தன்மையைக் கொண்டதாகும்.
நமது இயற்கையை நாம் இன்னும் இவ்வளவு சூறையாடப்போகிறோம் என்பது தெரியவில்லை. புவி வெப்பம், நிலையில்லா வானிலை என அதீத மாற்றங்களில் நாம் பெரிதும் பாதிப்படைந்து வருக்கிறோம். ஆனால் அதை யாரும் பொருட்டாக கருதுவதில்லை. மறுசுழற்றி முறைகள் இவற்றில் இருந்து நம்மை சற்றே பாதுகாக்கும் என்பதில் ஐயம் இல்லை.
கையடக்க பேசிகளில் உலோகப் பொருட்கள் மட்டும் அடங்கி இருக்கவில்லை. மேலும் பல கலவைகளாலும் அவை செய்யப்பட்டிருக்கும். மறுசுழற்சி நடுவங்களில் அவற்றை குழு வாரியாக பிரித்து எடுப்பார்கள்.
உதாரணத்திற்கு இரப்பர் மற்றும் ஞெகிழி போன்றவை தனியாக சேமிக்கப்படும். பிறகு ஞெகிழிச் சுழற்சி நடுவத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவை சாலையோற கூம்புகள், உபரிபாகங்கள் போன்றவற்றை செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள்.
கையடக்கப் பேசியின் பிசிபி (PCB) எனப்படும் தட்டையான பகுதி பலவகையாக பிரித்தெடுக்கப்பட்டு தூளாக்கப்படும். அந்தத் தூள்களை மின் சுத்திகரிப்பு பகுதியில் உட்செலுத்தி தங்கத்தை பிரித்தெடுப்பார்கள். பிசிபி பகுதி அகற்றப்படும் போது சில தங்கம் பூசப்பட்ட பகுதிகள் சுலபமாகவே கிடைத்துவிடுவதும் உண்டு.
இறுதியாக தங்கம் மற்றும் இதற உலோகப் பொருட்களும் அதற்கு தகுந்த இடங்களில் விற்ன்பனை செய்யப்படும். இறுதி வேலையில் இருக்கும் பொருட்கள் தரம் அளக்கப்பட்டே வெளியாக்கப்படுகிறது. பொருட்களின் தரத்தை நிர்ணயம் செய்யும் வகையிலும் தற்சமயம் தொழில்நுட்ப சாதனங்களும் உண்டு.
உபயோகப்படுத்த முடியாமற் போகும் கையடக்க பேசிகளும் இனி பயன் தரும் என்பதை உணர்வோமாக.
சரி அப்படி மறுசுழற்சி செய்வதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? விலை கொடுத்து வாங்கப்படும் கையடக்கப் பேசியை மறுசுழற்சிக்கு அனுப்பினால் எனக்கு சொற்பமான பணம் தானே கிடைக்கும் என நினைக்கலாம். ஆனால் அப்படி செய்யோமானால் ஏதோ ஒரு வகையில் இந்த இயற்கைக்கு நாம் நன்மை செய்ததாய் அமையும். வருங்காலத்தினருக்கும் அது பயனாக அமையும்.
மலேசியாவில் 'நோக்கிய கியோஸ்க்' (NOKIA KIOSK) எனும் தானியங்கி இயந்திரம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுதுபட்ட மற்றும் தேவையற்ற கையடக்கப் பேசிகளை இந்த இயந்திரத்தில் போட்டுவிடலாம். அப்படி போடப்படும் தொலைபேசிகளுக்கு பணம் கொடுக்கப்படாது. மாறாக நடுவதற்கு ஒரு செடி வழங்கப்படும். இது மரம் வளர்க்கும் திட்டத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியாகும்.
தொழில்நுற்பம் வளர்ந்துவிடினும் இயற்கை பாதுகாப்பு மிகக் கட்டாயமானது. அதன் விழிப்புணர்வு மக்களிடையே பின்னடைந்து இருப்பது வருத்தமான செய்தியாகும்.
(பி.கு: 04.01.2009 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)
குறிச்சொற்கள்
recycle old cell phone,
மறுபயனீடு
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
விக்கி நல்ல பதிவு... சுற்றுபுறச்சூழல் குறித்த விழிப்புணர்வு பதிவுக்கு...
எப்படிங்க இந்த மேட்டர்லாம் தெரிஞ்சிக்கிறீங்க?
எனக்கு இவை புதிய தகவல்கள்!
நன்றி
பயனுள்ள தகவல். அமீரகத்திலும் செல்போன் மறுசுழற்சி என்பதை பற்றிய இயக்கங்கள் இருக்கின்றன.
நல்ல விசயம்
பகிர்ந்தமைக்கு நன்றி :)))
நல்ல தகவல் விக்கி.. பத்திரிக்கையில வந்திருக்கா? சூப்பர்..
எழுத்தாளர் விக்கி வாழ்க...
சமூக ஆர்வலர் விக்கி வாழ்க, வாழ்க...
நல்ல பதிவு.
செல்பேசிகள் மட்டுமில்லாமல் அநேகம் பொருள்களை மறுசுழற்சி செய்யலாம்.
அதன் விழிப்புணர்வும் மக்களுக்கு தேவை,
இப்போது வெகு முக்கிய தேவை ப்ளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு!
lemme answer the first question. i do not any pon which left anywhere in my house. we will use it, or trade in and replace with new one. wow... epadi yenga answer
p/s: so far i ony change 3 phones since 2002
உலகம் கன்னாபின்னாவென்று சூடாகிக்கொண்டிருக்கும் வேலையில், மிக முக்கிய பதிவு.
சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்ச்சி நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகின்றது.
இல்லையென்றால் WALL-E படம் போல் தான் ஆகும் நம் உலகம்
**do not throw.
hey great article. thanks for the information. too bad i do not have any pon to recycle. how about my recent pon?? LOLz...
THEN PITY PPL WHO TEXT AND CALL ME.
:P
keep writing :)
நீளமான கட்டுரை, கருத்து பொதிந்துருக்க
நாமக்கல் சிபி கேட்டது போன்று எனக்கும் "எப்படிங்க இந்த மேட்டர்லாம் தெரிஞ்சிக்கிறீங்க" ன்னு கேட்கனும் போல இருக்கு... பலே
நல்ல தமிழ் சொற்களையும் ஆண்டு இருக்கிங்க (வளி, ஞெகிழி, கூம்பு)
இக்காலக்கட்டத்துக்குத் தேவையான கட்டுரை :)
நல்லதொரு விழிப்புணர்வு.
அருமை சகோ ...
அதனாலே, செல்பேசியை தூர கடாசி விடாமல் எனது முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நான் அதை பழைய மாடல் என்று எண்ணாமல் நானே பயன்படுததுவேன்.
மிகவும் பிரயோசனமான பதிவு விக்கி.இங்கு மின்சாரக் கழிவுப் பொருட்களை மின்கலன்கள் முதல் அனைத்து மின் இயங்கிகள் அத்தனையையும் பழுதடைந்து விட்டால் ஏதோ ஒரு மின் இயக்கப் பொருட்கள் விற்பனை நிலையங்
களிலேயே திருப்பிக் கொடுத்து
விடலாம்.இங்கு குப்பை போடக்கூட எதனை லிட்டர் குப்பை என்பதைப் பொறுத்து அதற்குப் பணம் செலுத்தியே நாம் எறிய வேண்டும்.
எனவே பழுதடைந்த பாரமான மின் இயக்கப் பொருட்களை கொடுத்து விடுவதால் எங்களுக்கும் செலவு குறைக்கப்படுகிறது
எங்கே CELLல்லும் இந்த பாதை.....வேறெங்கே அழிவை NOKI[a]த்தான்.அருமையான எண்ணக் குமுறல்....யார் காதிலும் விழாது .எல்லார் காதுமே SWITCH OFF mode
நல்ல பதிவு. நம்மவர்களிடையே சுற்றுச் சூழலின் மீதுள்ள பற்றை இந்த பதிவு அதிகரிக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்!
அர்த்தமுள்ள..பதிவு...வாழ்த்துகள்..:-)
தமிழோசையில் படித்தேன்... தொடர்ந்து எழுதுகிறீர்கள்...தொடரட்டும் பணி
Awesome post! very informative...
நல்ல பதிவு.
விக்கி, பழைய குறுந்தகடுகளையும் மறு பயனீடு செய்யலாமே!
அருமை. ஐ எஸ் ஓ வே கொடுக்கலாம்.
@ Natty
வருகைக்கு நன்றி நண்பரே...
@ நாமக்கல் சிபி
வருகைக்கு நன்றி... எல்லாம் படிக்கும் பார்க்கும் தகவல்கள் தான்...
@ சென்ஷி
தகவலுக்கு நன்றி அண்ணே...
@ ஆயில்யன்
வருகைக்கு நன்றி பாஸ்
@ வெண்பூ
வருகைக்கு நன்றி...
@ வால்பையன்
கருத்துக்கு நன்றி வால்பையன்...
@ விஜி
கருத்துக்கு நன்றி..
@ கிஷோர்
நன்றி...
@ ஆனந்தன்
தமிழ் செற்களை பத்திரிகையில் மாத்தி இருக்காங்க... நான் அனுப்பும் போது அப்படி இருக்கல... வருகைக்கு நன்றி...
@ ஜமால்
நன்றிங்க அண்ணே... மீண்டும் வருக...
ரொம்ப உபயோகமான பதிவு விக்கி. தம்பி இப்போல்லாம் தமிழோசைல நிரந்தர இடம் பிடிச்சிட்ட போல. ரொம்ப சந்தோஷமா இருக்கு, வாழ்த்துக்கள்பா.. இன்னும் பல செய்தி தாள்களில் விரைவில் இடம் பிடிக்கோனும். :-)
@ கூட்ஸ் வண்டி
எதனால இப்படி ஒரு டெரரான பின்னூட்டம்.... வருகைக்கு நன்றி அன்பரே...
@ ஹேமா
நல்ல தகவல் சொல்லி இருக்கிங்க... வருகைக்கு நன்றி...
@ கோமா
அம்மா என்ன இது இவ்வளோ டெரராக கவிதை பின்னூட்டம்...
@ மு.வேலன்
என்னுடைய இந்த ஒரு பதிவினால் விழிப்புணர்வா... ஜோக் அடிக்காதிங்க தலைவா... விவேக் ஒரு படத்தில் சொல்லுவாரே... எத்தன பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுனு அந்த கதை தான்....
@ டொன் லீ
நன்றி பாஸூ....
@ சேவியர்
நான் தொடர்ந்து எழுதக் காரணம் நீங்கள் தான் அண்ணா... எனது நன்றிகள்...
@ ச்சின்னப் பையன்
நல்ல பின்னூட்டம்...
@ ஜோதிபாரதி
அண்ணா எதற்கு ஐ.எஸ்.ஓ
@ சஞ்சய்
நன்றி அண்ணா...
உங்களுக்கு நான் பட்டாம் பூச்சி விருதை வழங்கியுள்ளேன்..பார்க்கவும் http://donthelee.blogspot.com/2009/01/blog-post_10.html
தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்
@ டொன் லீ
வருகைக்கு நன்றி.. உங்கள் விருது எனக்கு மகிழ்ச்சி அழிக்கிறது...
@ நையாண்டி நைனா
நன்றி... உங்களுக்கும் வாழ்த்துகள்...
@ வண்ணத்துப்பூச்சியார்
நன்றி... மீண்டும் வருக....
Post a Comment