Thursday, January 22, 2009

எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்


நூல்: அவன்-அது=அவள்
ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி
நயம்: சமூக நாவல்
வெளியீடு:தோழமை பதிப்பகம்
பக்கம் : 184

தாய்லாந்தில் நடந்த ஒரு சம்பவம். ஒரு ஆண் பாலியல் மாற்றம் செய்துக்கொண்டான். காலம் கடந்தது. பெண்ணாக வாழ்ந்தது வெறுத்துப் போனது அவளுக்கு. 20 வருடம் கழித்து மருத்துவரை அணுகி கேட்டாளா(?!)ம். மீண்டும் தனக்கு ஆண் குறி வேண்டும் என்று.

பால் மாற்றம் தற்காலத்தில் நாம் அதிகம் கேள்விப்படும் விடயமாக இருக்கிறது. பிறப்பில் ஆணாக இருக்கும் ஒருவர் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொள்ள விருப்பம் கொள்கிறார். இயற்கையாகவே பெண்மையின் குணங்கள் அவரிடம் இருக்கிறது. உள்ளத்தால் பெண்ணான அவர் உடலால் பெண்ணாக மாற்றம் கொள்ள விரும்புகிறார். இவர்களை திருநங்கையர்கள் என நாம் குறிப்பிடுகிறோம்.

உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து நமது விருப்பப்படி வாழ்வதா. நமது வாழ்க்கை நமது விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது.

ஒரு ஆண் பருவம் எய்துகிறான். தனக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகளை அறிகிறான். தன்னை ஒரு ஆணாக கருத மறுக்கிறான். இந்நாவலின் நாயகி கோமதி. கோமதியின் ஆரம்பக் கால வாழ்க்கை மாறுபட்டது.

கோபி பிறப்பால் ஒரு ஆண். ஆணாக வளர்க்கப்படுகிறான். அவனுக்குள் உண்டாகும் உணர்வு மாற்றங்களால் தன்னைப் பெண்காக கருதுகிறான். கோபியின் உணர்வு சித்தரிப்புகளை சிறப்பாக கொடுத்திருக்கிறார் ஆசிரியர் என்றேக் கூற வேண்டும்.

குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயம். தமது தமக்கையின் உடைகளை அணிந்து கொண்டு 'பூ பூக்கும் ஓசை' பாடலுக்கு ஆடும் போதும், அண்ணனிடம் அடி வாங்கும் போதும், பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய் கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள் இலகுவாக மனதில் பதிகிறது.

பார்த்திங்களா என்கிட்டயே மல்லுக்கு நிக்குது இது கொஞ்சம் திமிர் பிடித்த பேய் தான். இதன் போக்கில போய் சமாளிக்க வேண்டும் எனச் சொல்லும் போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே இருக்கிறது.

தான் விருப்பும் வாழ்க்கையை வாழ நினைக்கிறான் கோபி. எதிர்பாரா விதமாக அதற்கான சந்தர்ப்பம் அமைகிறது. குடும்பம், சுற்றம் என அனைத்தையும் தூக்கியெறிகிறான். தனது புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். அவன் கோமதி எனும் பெயரில் மாற்றம் காண்கிறாள்.

திருநங்கைகளின் வாழ்வு முறை. அவர்கள் பேச்சு வழக்கு. அவர்களுக்குள்ளான பிரச்சனைகள் போன்ற விவரிப்புகள் கதைக்கு வலு சேர்க்கின்றது.

திருநங்கைகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக கருதப்படுவது தாயம்மா எனும் குறி அகற்றும் சடங்கு. சில இடங்களின் அறுவடை சடங்கு என இதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆசிரியர் இதை சொல்லும் விதம் மெய்கூசச் செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாகவே நமது சமூகத்தில் ஆண் பெண் என இருபாலரும் ஏற்றுக் கொள்ளாத அல்லது வெறுக்கும் சமூகமாகவே திருநங்கைகள் இருக்கிறார்கள். அப்படியாக திசையற்று தன் வாழ்வை தேடும் திருநங்கைகளுக்கு இன்னொரு திருநங்கையே துணை என்பதை இக்கதையில் காண்கிறோம்.

இக்கதையில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் நாயகனா அல்லது வில்லனா என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம். சமுதாய சூழலல அறிந்து வாழும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்படும் இவர் பிற்பகுதியில் ஒரு கொடுமைக்காரனாக சொல்லப்படும் விதம் நெருடுகிறது.

ஆண் சமூகத்தை அவமானப்படுத்துபவர்கள் திருநங்கையர் எனும் எண்ணம் பொரும்பாலான ஆண்களுக்கு உண்டு. அதே போல் தம்மை கேவலப்படுத்தும் ஆண் வர்க்கத்தை வெறுக்கும் திருநங்கையரும் உண்டு. இதற்கு அப்பாற்பட்டு அவர்களை மனமுவந்து ஏற்று வாழ்க்கை நடத்துபவர்களும் உண்டு.

இக்கதையில் போலிஸ், ரவுடிகள், திருநங்கையரை ஏமாற்றி திருமணம் செய்யும் ஆண்கள் என பல வகையில் ஆண்களே திருநங்கையருக்கு கொடுமைகள் நிகழ்த்துபவர்களாக சொல்லி இருப்பது திருநங்கையர்களுக்கு ஆண்கள் மட்டுமே எதிரிகள் என்பது போல் உள்ளது.

நன்கு படித்த திருநங்கைகள் தங்களுக்கு ஏற்ற வேலைகளில் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். அது இந்திய நாட்டுச் சூழலில் மாறுபடுகிறதா என்பது தெரியவில்லை. படிப்பறிவுள்ள கோமதியும் கடை(பிச்சை) கேட்டு பிழைக்கும் சித்தரிப்புகள் எதிர்ப்பார்க்காத ஒன்று. திருநங்கைகள் வாழ்க்கையில் தங்களை எப்படி உயர்த்திக் கொள்ள முடியும். தம் பிள்ளைகள் திருநங்கையராக மாறுவார்களாயின் அதை எப்படி குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள முடியும் போன்ற முக்கிய கூறுகளை கொஞ்சம் விளங்கக் கூறியிருந்தால் மேலும் நன்மையாய் அமைந்திருக்கும்.

நாம் விரும்பும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் சுதந்திரத்துக்குற்பட்டது. சமூக அமைப்பில் திருநங்கையர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே. கீழான பார்வைக்கும் செயல்களுக்கும் அவர்களை முற்படுத்துவதில் நமது சமூகமும் காரணமாகிறது என்பது தான் உண்மை.

இன்றைய சமூக அமைப்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் முனைப்பு காட்டி இருக்கும் ஆசிரியர் பாலபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது. கதை வழி திருநங்கையர் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று நாம் அறிய வேண்டிய தகவலை இலகுவாக சொல்லி இருப்பது மிக அருமை.

(பி.கு: இப்புத்தகத்தை எமக்கு பரிசளித்த எழுத்தாளர் பரிசல்காரன் அவர்கட்கு நன்றி.)

16 comments:

நட்புடன் ஜமால் said...

\\"எஸ்.பாலபாரதியின் அவன்-அது=அவள்"\\

நல்ல தலைப்பு ...

நட்புடன் ஜமால் said...

\\இன்றைய சமூக அமைப்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் முனைப்பு காட்டி இருக்கும் ஆசிரியர் பாலபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது\

ஆசிரியருக்கு பாராட்டுக்கள்

பகிர்ந்தமைக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து நமது விருப்பப்படி வாழ்வதா. நமது வாழ்க்கை நமது விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது.
//

சுதந்திரம் அவ்வளவு எளிதாக வரையரை செய்துவிட முடியாது.

உறவு, சமூகம், மதம் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதுதான் மனித உணர்வுகள். அவற்றை உள்ளடக்கியதில் தனிமனித சுதந்திரமாக எவையெல்லாம் இருக்கிறதோ அவை மட்டும் தான். அதனை மீறுபவர்களை சமூகமும் அங்கீகரிப்பதில்லை

நட்புடன் ஜமால் said...

\\உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து நமது விருப்பப்படி வாழ்வதா. நமது வாழ்க்கை நமது விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது\\

சுதந்திரம் - அவர் அவர் சுதந்திரம்

நட்புடன் ஜமால் said...

\\உண்மையில் சுதந்திரம் என்பது யாது? குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதா? இல்லை நமது சிந்தனைக்கு மதிப்பளித்து நமது விருப்பப்படி வாழ்வதா. நமது வாழ்க்கை நமது விருப்பப்படி இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம். அதே வேளையில் இச்சமூக விதிகளை மதித்து நாம் வாழ வேண்டியது அவசியமாகிறது\\

சமூகம் - இது என்ன - யார்?

புதுகைத் தென்றல் said...

பரிசல்காரன் அவர்கள் வைத்த காப்ஷன் போட்டியில் சரியாகச் சொன்னதற்கு இந்த புத்தகத்தை பரிசாக அனுப்பியிருந்தார்.

படித்து முடித்து என்னுள் ஏற்பட்ட மாற்றத்தை பதிவிட்டிருந்தேன்.
http://pudugaithendral.blogspot.com/2008/09/blog-post_24.html

அருமையான புத்தகம், பாலபாரதிக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள்.

A N A N T H E N said...

அவனது அவள், நல்ல விமர்சனம்

திருநங்கைகளின் மீதுள்ள இழிவான பார்வை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாகத்தான் உணர்கிறேன்.

மக்களின் விழிப்புணர்வு, நவீன நோக்கு இப்படி சில.

மக்கள் தொலைக்காட்சியில் (இந்தியா) கூட "இவர்கள்" அங்கத்தில் இதுபோன்ற பேட்டிகளை எடுத்துள்ளனர். நல்லதொரு வேலையில் இருப்பவங்க அங்கேயும் இருப்பதாகத்தான் சொன்னாங்க...

VIKNESHWARAN said...

@ ஜமால்

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி...

@ கோவி.கண்ணன்

அண்ணே உங்க கருத்து நெம்ப குழப்பமா இருக்கு... உதாரணத்தோட சொன்ன புரியும்னு நினைக்கிறேன். பின்னவீனத்துவ கருத்து மாதிரி இருக்கே?

@ புதுகைத் தென்றல்

வாழ்த்துக்கு நன்றி... உங்கள் பக்கம் கண்ணேன்... உங்கள் அனுபவத்தை அசத்தலாக பதிவு செய்திருக்கிறீர்கள்...

@ ஆனந்தன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே...

PPattian : புபட்டியன் said...

இப்போதுதான் புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். அதனால், இந்த பதிவை படிக்கவில்லை (எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது என்பதற்காக). படித்து முடித்ததும் பதிவை படித்து பின்னூட்டுவேன்...

சுப.நற்குணன் - மலேசியா. said...

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்

VIKNESHWARAN said...

@ புபட்டியன்

சரி படிச்சிட்டு ஒரு விமர்சனம் போடுங்க...

thevanmayam said...

இன்றைய சமூக அமைப்பில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை மக்களுக்கு தெரிவிப்பதில் முனைப்பு காட்டி இருக்கும் ஆசிரியர் பாலபாரதியின் முயற்சி பாராட்டத்தக்கது. கதை வழி திருநங்கையர் உலகிற்கு நம்மை அழைத்துச் சென்று நாம் அறிய வேண்டிய தகவலை இலகுவாக சொல்லி இருப்பது மிக அருமை.///

இத்தகைய
முயற்சிகள்
சமுதாய
அங்கீகாரத்தை
அளிக்கும்...

VIKNESHWARAN said...

@ தேவன்மயம்

உங்கள் வருகைக்கு நன்றி ஐயா, நிச்சயமாக அங்கிகரிக்க வேண்டிய முயற்சி... நீங்கள் படித்து விட்டீர்களா?

viji said...

nice story line, i also have interest knowing this people. But do not have experience of knwing dem closely

VIKNESHWARAN said...

@ விஜி

நன்றி..

viji said...

you are welcome