சைம் டார்பி பெர்ஹாட் (Sime Darby Berhad) மலேசியாவின் பிரபலமான வல்லிய நிறுவனங்களுள் ஒன்று. இந்நிறுவனம் அரசாங்கத்தின் கண்கானிப்பில் இருக்கும் தேசிய இருதய கழகத்தின் பங்குகளை பெருவாரியாக வாங்கி அதைத் தன் வசமாக்கிக் கொள்ள எத்தனித்திருத்தது. தேசிய இருதய கழகம், Institute Jantung Negara அல்லது ஐ.ஜே.என் என அழைக்கபடும்.
தேசிய இருதய கழகத்தை தனியார்மயமாக்குவதில் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை என அண்மையில் துணை பிரதமர் அறிவித்திருந்தார். பொது மக்களின் பார்வையைக் கருத்தில் கொண்டு தான் இப்படிபட்ட அறிக்கை வெளியாகியுள்ளதா என்பது சற்று யோசிக்க வேண்டிய விடயமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டம் முடிந்தது. கூட்டத்தின் பிறகு தேசிய இருதய கழகத்தின் தனியார்மயமாக்குதலின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தேசிய பொருளாதார இலாக்கா, நிதித் துறை, மற்றும் சுகாதார அமைச்சு என தனித் தனியே ஆய்வெடுக்கும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
பொது மக்களின் கருத்துக்கு அரசாங்கம் முக்கியதுவம் கொடுக்குமென துணை பிரதமர் அறிவித்திருக்கிறார். நாட்டு மக்களின் நலனில் அரசாங்கத்தின் சமூகவியல் சேவை பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மலேசிய முன்னால் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தேசிய இருதய கழகத்தைத் தோற்றுவித்தவராவார். பல தரப்பினரும் சிரமம் இல்லாமல் இருதய சிகிச்சையை மேற்கொள்ளும் பொருட்டு இக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. அரசு சார்ந்த பல நிறுவனங்களை தனியார்மயமாக்கும் திட்டமும் இவர் பிரதமராக பொறுப்பில் இருந்த போது ஆரம்பிக்கப்பட்டதே.
தற்சமயம் அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஆய்வறிக்கை முயற்சியினை பெரிதும் வரவேற்பதாக தமது http://chedet.com/ எனும் வலைப்பதிவினில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கூறுகையில் தற்போதய இருதய கழகத்தின் நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அதில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியமற்றது எனவும் கூறியுள்ளார்.
பொதுவாகவே நமது நாட்டில் வேண்டிய அளவிற்கு தனியார் மருத்துவமனைகள் சிறப்பாகவே செயற்பட்டு வருக்கின்றன. சொகுசு முறையில் மருத்துவம் செய்து கொள்பவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் நற்சேவையை வழங்கி வருக்கின்றன. அப்படி இருக்கையில் தேசிய இருதய கலகத்தை தனியார்மயமாக்குதல் தேவையற்றதே.
அரசாங்கம் மக்களுக்கு அதன் சேவையை தொடர்ந்து நன் முறையில் அளித்து வர நினைக்குமாயின் தனியார்மயமாக்குதலை தவிர்க்கும் என நம்புவோமாக. தற்சமயம் முழுவதுமாக அரசாங்க பொறுப்பின் கீழ் இருக்கும் தேசிய இருதய கழகம் தனியார்மயமாக்கும் அளவிற்கு குறைபாடுகள் கண்டுள்ளதாக நமக்கு தெரியவில்லை.
தனியார்மயமாக்கப்பட்டால் தரமான சேவையை நாம் எதிர்ப்பார்க்க முடியும் என்பது அரசியல் தரப்பின் வாதமாக இருக்கிறது. தற்சமயம் ஒரு நோயாளிக்கான சிகிச்சைக் காலம் அதிகமாக இருந்தாலும் அது பண வசதி குறைந்தவர்களும் சிகிச்சை எடுத்துக் கொள்ள ஏதுவாக அமைகிறது.
இப்போதய நிலைக்கு தேசிய இருதய கழகம் பாகுபாடின்றி அதன் சேவையை அனைவருக்கும் வழங்கி வருகிறது. இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மக்களில் பெருவாரியானவர்கள் அரசாங்க வேலையில் இருப்பவர்களாகவும், வேலை ஓய்வு பெற்றவர்களாகவும், பண வசதி குறைந்தவர்களாகவும் இருப்பதாக ஆய்வுகள் குறிக்கின்றன. பண வசதி படைத்தவர்கள் தனியார் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களாகவும், தேசிய இருதய கழகத்தின் உதவியை அவர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனையே குறிக்கிறது.
தனியார்மயமாக்கம் சிறந்த சேவைக்கு வழிவகுக்கிறது என்பது மறுக்க முடியாததே. தேசிய மின்சார வாரியம், டெலிக்கோம் மலேசியா போன்ற நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டது. அதன் சேவை தரம்(!?) உயர்ந்துள்ளதை போலவே கட்டணமும் உயர்ந்துக் கொண்டே போகிறது.
தரமான அரசாங்கத்தால் மக்களின் தேவையை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முடியும் என்பதினை நம்புவோம்.
21 comments:
கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது..
நல்ல கருத்துள்ள கட்டுரை. தலைப்பும் அருமை!
//தரமான அரசாங்கத்தால் மக்களின் தேவையை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முடியும் என்பதினை நம்புவோம்//
வேலிட் பாயிண்ட்!
//கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது..//
!?
தூயாக்கா என்ன சொல்ல வறீங்க?
தனியார் மயமாக்குதலில் நோக்கம் எப்போதும், நிறுவனத்தை லாபம் பெற வைப்பது என்று சொல்லுவார்கள். அப்படி தனியார் மயமான நிறுவனங்களின் முதலாளிகளாக அவதாரம் எடுப்பவர்கள் பெரும்பாலும் அரசியல் வாதிகள் தான்.
தனியார் மயம் என்றாலும் அரசு மையம் என்றாலும் அதன் கட்டுபாடுகளும் லாபமும் அரசியல்வாதிகளுக்கே உடையவை.
//தேசிய மின்சார வாரியம், டெலிக்கோம் மலேசியா போன்ற நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டது. அதன் சேவை தரம்(!?)//
:(
கட்டுரை பற்றி ஒன்றும் எனக்குப் புரியவில்லை.என்றாலும் விக்கி,என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்னும் இன்னும் நிறைந்த படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.
\\உள்(ள)விழிகள்!\\
தலைப்பே தூள்
\\தனியார் மயம் என்றாலும் அரசு மையம் என்றாலும் அதன் கட்டுபாடுகளும் லாபமும் அரசியல்வாதிகளுக்கே உடையவை.\\
சரியாகச்சொன்னீங்க அண்ணேன்...
ஆழமான கட்டுரை..அர்த்தமுள்ள தலைப்பு...
தேசிய இருதய கழகம் ஒரு நிறுவனத்துக்கு விற்பதால் ..யாருக்கு ஆதாயம் என யோசித்தால் நலம்...புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு திறப்புவிழா காண்பதற்கு முன்பே kanakku பார்ப்பதை பார்த்தால் உண்மையிலே யாருக்குதான் மக்கள் மீது அக்கறை
தனியார் மயமாக்குதல் என்றாலே தனியார்க்குச் சாதகமான ஒன்று என்றுதானே பொருள்
என்ன செய்வது? தனியார்மயம் ஆனால்தான் நாடு விரைவில் வளர்ச்சியடையும் என்று சில தரப்பினர் நம்புகின்றனரே!
///என்ன செய்வது? தனியார்மயம் ஆனால்தான் நாடு விரைவில் வளர்ச்சியடையும் என்று சில தரப்பினர் நம்புகின்றனரே!//
வளர்வது நாடா இல்ல அவங்களா
//"உள்(ள)விழிகள்!"//
இதுக்கு என்ன பொருள்? சரியா விளங்கல எனக்கு
@ தூயா
இது மாலேசிய அரசியல் பற்றிய பதிவு... இன்னொரு முறை படிச்சி பாருங்க கண்டிப்பாக புரியும்.
@ சுபாஷினி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
@ நாமக்கல் சிபி
வருகைக்கு நன்றி...
@ கோவி கண்ணன்
ஆழமான பார்வையைக் கொண்ட கருத்து... அத்தனையும் உண்மைகள் என தைரியம் கொண்டு சொல்லலாமா வேண்டாமா என யோசிக்கிறேன்...
@ ஆனந்தன்
வருகைக்கு நன்றி...
@ ஹேமா
உங்களைப் போன்றேரின் ஊக்குவிப்புகளே எனக்கு ஊக்கம்... நன்றி..
@ ஆதிரை ஜமால்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே...
@ டொன் லீ
நன்றி
@ மூர்த்தி
உங்கள் சிந்தனை நன்று...
@ சீனா
அரசாங்கத்திற்கு நன்மை இல்லாமல் அதை தனியார்மயமாக்காதே ஐயா... வருகைக்கு நன்றி ஐயா...
@ து.பவனேஸ்வரி
வருகைக்கு நன்றி... உங்கள் சிந்தனைபடி பார்த்தால் அரசாங்கமே தனியார்மயமாக இருந்தால் நன்கு இல்லையா?
மக்களின் நலனைப் பேணி காப்பது அரசாங்கத்தின் கடமை. இந்த தனியார்மயம் கொள்கை மக்களின் நலனை பாதிப்பதாக இருந்தால், எதற்கு தனியார்மயம்?
//...அரசாங்கமே தனியார்மயமாக இருந்தால் நன்கு இல்லையா?//
நல்ல சிந்தனை.
நற்செய்தி. SIME நிறுவனம் IJN-னின் 51% உரிமையை வாங்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக NST நாளிதழ் இன்று தெரிவித்தது.
http://www.nst.com.my/Current_News/NST/Wednesday/Frontpage/2445847/Article/index_html
@ மு.வேலன்
உங்கள் கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி. இப்போதெல்லாம் அரசு மக்களின் கருத்துக்கும் செவி சாய்க்கிறது போலும்...
Post a Comment