Wednesday, January 28, 2009

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு 2

இரண்டாவது மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு இனிதே நடந்தேறியது. இந்த முறை 24 பதிவர்கள் மற்றும் பதிவு வாசகர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

மதியம் சுமார் 2.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது. முதல் பதிவர் சந்திப்பு பல இடர்பாடுகளுக்கிடையே தலைநகரில் நடந்தேறியது அனைவரும் அறிந்ததே.முதற் சந்திப்பிற்கு பல விதத்திலும் உதவிகள் புரிந்த அகஸ்தியா மூர்த்தி மற்றும் மூ.வேலன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துக் கொள்ளவில்லை. இருவரும் தற்சமயம் தமிழகத்தில் இருப்பதாக அறிகிறேன்.

முதற்சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களில் 4 பேர் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்கள். நான் உட்பட. பேரா மாநிலத்தின் பாரிட் புந்தார் தமிழியல் நடுவத்தில் இச்சந்திப்பு ஏற்பாடாகி இருந்தது. நடுவ மண்டபத்தின் அருகே ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அமைந்துள்ளது.

தலைநகரில் இருந்து சந்திப்பிற்கு வந்திருந்த திரு.குமரன் அவர்கள் என்னை ஈப்போவில் அழைத்துக் கொண்டார். பழைய சாலை வழியாக சுங்கை சிப்பூட்டிற்குச் சென்றோம். சுங்கை சீப்பூட்டில் அவரைச் சந்திக்கச் சென்றோம் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. குமரன் அவர்களின் நண்பர் திரு.கிருஷ்ணமூர்த்தியை சுங்கை சிப்பூட்டில் அழைத்துக் கொண்டோம். அங்குள்ள ஒரு சீனர் உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை இனிதே முடித்துக் கொண்டு கிளம்பினோம்.

சுங்கை சிப்பூட்டில் குமரன் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்றார். குளித்து கம கமவென (துணைக்கால் போட்டு படிச்சிடாதிங்க) புது மாப்பிள்ளை போல் கிளம்பினார். எங்கள் அடுத்த இலக்கு தைப்பிங் 'கொய்தியாவ் கோரேங்'. கொய்தியாவ் கோரேங் தைப்பிங்கில் பேர் போன உணவாகும். மதியத்திற்கு சாப்பிட்டுவிட்டு போகலாம் என குமரன் கூறினார். அதே வேளையில் பவனேஸ்வரியும் தற்சமயம் தைப்பிங்கில் இருப்பதாகவும் சந்திப்பிற்கு வருவதாகவும் கூறினார். சாப்பிட்டுவிட்டு அவரையும் அழைத்துச் செல்ல நினைத்தோம்.

தைப்பிங்கை நெருங்கிய போது சாப்பிட போகலாமா வேண்டாமா என யோசனையில் இறங்கினோம். காலைச் சிற்றுண்டியை தாமதமாக தான் சாப்பிட்டோம். சரி இரவு கிளம்பும் போது பார்த்துக் கொள்ளலாம் என முடிவானது. பவனேஸ்வரி வந்ததும் அவரை அழைத்துக் கொண்டு நேராக பாரிட் புந்தார் சென்றோம். சந்திப்பு இடத்தை அடைவதற்குள் சுமார் நான்கைந்து முறை சுப.நற்குணன் ஐயா அழைத்துவிட்டார்.

பாரிர் புந்தாரை அடைந்தவுடன் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. குமரன் வண்டியை நேராக சீக்கியர் கோவிலுக்கு விட்டுவிட்டார். நற்குணன் ஐயாவின் வழிகாட்டுதலுடன் சரியான இடத்தை அடைந்தோம். நாங்கள் சென்றடைந்த சமயம் ஒவ்வொருவராக வருகை புரிய ஆரம்பித்திருந்தார்கள். மதியை உணவை ஏ.ஆர்.ரகுமான் உணவகத்தில் எடுத்துக் கொண்டோம். ஈ தொல்லை சற்று அதிகமாகவே இருந்தது. அடுத்த முறை 'செல்டாக்ஸ்' மருந்துடன் செல்வதெனும் தீர்மானத்துடன் இருக்கிறேன். :P

பதிவர்கள் அனைவரும் வந்தவுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இம்முறை தைப்பிங், லூனாஸ், பிறை, பினாங்கு, பாகான் செராய், தலைநகர், கிள்ளான், யு.எஸ்.ஜே, ஈப்போ, செலாமா மற்றும் பாரிட் புந்தார் போன்ற இடங்களில் உள்ள தமிழன்பர்கள் கலந்து சிறப்பித்தனர்.

திரு சுப.நற்குணன் 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் வலைப்பதிவுலகில் இருந்து வருகிறார். ஆரம்ப காலம் முதல் 2009 ஆரம்பம் வரை மலேசிய தமிழ் வலைப்பதிவுலகில் கண்டிருக்கும் மாற்றங்களை பகிர்ந்துக் கொண்டார். ஆரம்ப காலத்தில் 5/6 எனும் எண்ணிக்கையில் இருந்த பதிவுகள் இவ்வாண்டு தொடக்கத்தில் ஏறக் குறைய 40 எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

மலேசிய அரசியல் மற்றும் சமூக செய்திகளை வெளிப்படையாக எடுத்துரைப்பதில் முதன்மையாக விளங்கி வருவது மலேசியா இன்று தளமாகும் என்றால் மிகையில்லை. மலேசிய இன்றிலிருந்து திரு.இளந்தமிழ் வருகை தந்திருந்தார். தமிழ் எழுத்துரு பிரச்சனைகள், ஆரம்ப காலம் முதல் இணைய தமிழின் வளர்ச்சி, இணைய தமிழ் மாநாடு சம்பந்தப்பட்ட விடயங்களை மிக சுவாரசியமாக பகிர்ந்துக் கொண்டார். இலவச தமிழ் மென் பொருள்கள் இருப்பினும், சில நூறு ரிங்கிட் செலுத்தி தமிழ் மொன்பொருள்களை வாங்கி உபயோகிக்கும் தமிழர்களின் மனப்பான்மையை சொல்லி வருத்தம் கொண்டார்.

கெடா மாநிலம், லூனாஸ் பகுதியில் இருந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் திரு. தமிழ்மாறன் ஐயா வருகை தந்திருந்தார். அவருடைய எழுத்துகள் பலவும் எழுதியபடி பரன்மேல் கிடந்ததாக கூறினார். வலைப்பதிவின் பயன்பாட்டினால் அவற்றை நன்முறையில் பதிவு செய்து வைக்க வசதிபடுவதாகக் கூறினார். தமிழ்த் துறையைச் சார்ந்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலர் இன்னமும் இணைய தமிழ் ஊடகத்தின் பயன்பாட்டை அறிந்திராமல் இருப்பது வருந்ததக்க விடயம் என்பதனை மேலும் கூறினார்.

வலைப்பதிவு தொடங்குவது அறியாமல் இருக்கும் பதிவு வாசகர்களுக்கு பட்டறை நடத்தப்பட்டது.

கலந்துரையாடலில் மேலும் பல விடயங்கள் பேசப்பட்டது. பதிவர் புத்தகம் பற்றிய வினா எழுந்த போது பலரும் பல விதமான கருத்துகளை எடுத்துரைத்தார்கள். அதைப் பற்றிய மேலான விளக்கத்தை மற்ற பதிவர்கள் குறிப்பிடுவார்கள் என நம்புகிறேன்.

திரு.கிருஷ்ணமூர்த்தி மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (ஆர்.டி.எம்) விளம்பர பிரிவில் பணியாற்றுகிறார். பல பதிவர்கள் ஒருங்கிணைத்து நன்முறையில் ஒரு கூட்டுப் பதிவை இயக்குவது நலம் என்றார் அவர். மேலும் கூறுகையில் அப்படி ஆரம்பிக்கப்படும் கூட்டுப் பதிவில் சிறப்பான செய்திகளை பதிவிட்டு வந்தால் தினமும் தமிழ் வானொலியில் அதனை பற்றிய செய்தியை ஒலிபரப்ப ஏற்பாடு செய்து கொடுப்பதாகக் கூறினார்.

அடுத்த பதிவர் சந்திப்பு மலேசியா இன்று ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற இருக்கிறது. மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவகத்தில் ஓர் ஓய்வு நாளில் ஏற்பாடாக திட்டமிடபட்டுள்ளது. மூன்றாவது சந்திப்பில் மீண்டும் வலைப்பதி பட்டறைகள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில் கலந்துக் கொண்டவர்களுக்கு தமிழ் நாள்காட்டி மற்றும் வள்ளலார் வழிபாட்டுக் குறிப்பு புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.சுமார் 7 மணியளவில் தேநீர் விருந்துபசரிப்புடன் சந்திப்பு இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்விற்காக பெரிதும் பங்காற்றிய திரு.சுப.நற்குணன், திரு,கோவி.மதிவாரன் மற்றும் திரு.விக்கினேசு கிருஷ்ணன் ஆகியோருக்கும் சந்திப்பில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி. அடுத்தடுத்த சந்திப்புகளில் கலந்துக் கொண்டு மேலும் சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சந்திப்பில் கலந்துக் கொண்டவர்கள்:
இல.கார்த்திகேசு
செ.முத்தரசன்
மு.நாகராசன்
ப.தமிழ்மாறன்
சு.முனியாண்டி
தா.மா.ஞானசேகரன்
க.இராசகுமாரன்
சூ.கெல்வின்
ம.ஜீவன்
ம.தமிழ்ச்செல்வன்
இரா.பாலமுரளி
மு.மதிவாணன்
சுப.சந்துரு
சி.ம.இளந்தமிழ்
குமரன் மாரிமுத்து
கு.கிருஷ்ணமூர்த்தி
து.பவனேஸ்வரி
விக்னேஷ்வரன் அடைக்கலம்
அனந்தன்
மு.கோகுலன்
கோவி.மதிவரன்
சுப.நற்குணன்
க.முருகையன்

(பி.கு: சந்திப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப் பட்டவர்கள் சதிசு குமார் மற்றும் ஆய்தன். இவர்கள் அடுத்த முறை கண்டிப்பாக கலந்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்.)

(பி.பி.கு: பின்னுக்கு பின் குறிப்பு போட்டால் மக்கள் அதை காமிடியாக்கிவிடுகிறார்கள். அதனால் எஸ் ஆகிக்கொள்கிறேன்)

(பி.பி.பி.கு: ஓன் நிமிட் பிலிஸ், இதையும் படிச்சிடுங்க: அனந்தன், மலேசியா இன்று)

16 comments:

A N A N T H E N said...

//குளித்து கம கமவென (துணைக்கால் போட்டு படிச்சிடாதிங்க) புது மாப்பிள்ளை போல் கிளம்பினார்//
சிறகுகளைச் சேமித்துக் கொண்டிருக்கும் "மாடப்புறா" பதிவு எழுத்தாளாரைப் பற்றி எத்தனை நையாண்டி....!

//சாப்பிட்டுவிட்டு அவரையும் அழைத்துச் செல்ல நினைத்தோம்.//
நினைவு நனவானதா?

சந்திப்பில் கலந்துக் கொண்டவர்கள்:
இல.கார்த்திகேசு
செ.முத்தரசன்
மு.நாகராசன்
ப.தமிழ்மாறன்
சு.முனியாண்டி
தா.மா.ஞானசேகரன்
க.இராசகுமாரன்
சூ.கெல்வின்
ம.ஜீவன்
ம.தமிழ்ச்செல்வன்
இரா.பாலமுரளி
மு.மதிவாணன்
சுப.சந்துரு
சி.ம.இளந்தமிழ்
குமரன் மாரிமுத்து
கு.கிருஷ்ணமூர்த்தி
து.பவனேஸ்வரி
விக்னேஷ்வரன் அடைக்கலம்
அனந்தன்
மு.கோகுலன்
கோவி.மதிவரன்
சுப.நற்குணன்
க.முருகையன்//
இந்த லிஸ்ட்ட எங்க புடிச்சீரு?.. கலக்கல்

//(பி.பி.கு: பின்னுக்கு பின் குறிப்பு போட்டால் மக்கள் அதை காமிடியாக்கிவிடுகிறார்கள். அதனால் எஸ் ஆகிக்கொள்கிறேன்)//
-சுப. நற்குணன் ஐயா கவனத்துக்கு!

Covai Ravee said...

மலேசிய பதிவர்கள் வெற்றிகரமாக நடந்ததற்க்கு வாழ்த்துக்கள். பதிவு முச்சூடும் ஒரே சாப்பாடு மயாமாக இருக்கிறதே... கலக்கீட்டீங்க போல..

நட்புடன் ஜமால் said...

\\இல.கார்த்திகேசு
செ.முத்தரசன்
மு.நாகராசன்
ப.தமிழ்மாறன்
சு.முனியாண்டி
தா.மா.ஞானசேகரன்
க.இராசகுமாரன்
சூ.கெல்வின்
ம.ஜீவன்
ம.தமிழ்ச்செல்வன்
இரா.பாலமுரளி
மு.மதிவாணன்
சுப.சந்துரு
சி.ம.இளந்தமிழ்
குமரன் மாரிமுத்து
கு.கிருஷ்ணமூர்த்தி
து.பவனேஸ்வரி
விக்னேஷ்வரன் அடைக்கலம்
அனந்தன்
மு.கோகுலன்
கோவி.மதிவரன்
சுப.நற்குணன்
க.முருகையன்\\

இத்தனை பேறா

கலக்கல் தான் போங்க

சுப.நற்குணன் - மலேசியா. said...

கவனிக்க:- சந்திப்பு நடந்தது தமிழ் நெறிக் கழகத்தில் அல்ல. பாரிட் புந்தார் தமிழியில் நடுவத்தில்.

//பாரிட் புந்தாரை அடைந்தவுடன் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. குமரன் வண்டியை நேராக சீக்கியர் கோவிலுக்கு விட்டுவிட்டார். நற்குணன் ஐயாவின் வழிகாட்டுதலுடன் சரியான இடத்தை அடைந்தோம்.//

இப்படி மொட்டையா சொன்னா எப்படி விக்கி...

"தமிழியல் நடுவத்துக்கு வாங்கப்பான்னா.. ஏம்பா வங்காளி நடுவத்துக்குப் போனீங்கன்னு நற்குணன் கேட்டு சரியான வழியைக் காட்டினார்" என்று விளக்கமாக சொல்றதில்லையா..!

நல்ல தொகுப்பு. என்னுடைய தொகுப்பு விரைவில்...

ஜெகதீசன் said...

மலேசிய பதிவர்கள் வெற்றிகரமாக நடந்ததற்க்கு வாழ்த்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

ஜீப்பர் விக்கி :)))

thevanmayam said...

மலேசிய பதிவர்கள் வெற்றிகரமாக நடந்ததற்க்கு வாழ்த்துக்கள்///

இவ்வளவு பேருக்கும் தொடுப்பு கொடுத்தால் நல்லது!!

ச்சின்னப் பையன் said...

கலக்கல் சந்திப்பு நடத்தியதற்கு வாழ்த்துகள்.... :-))

’டொன்’ லீ said...

சின்னப்பையன்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள்...வருங்காலப் பதிவர்களோ...

ஈக்கள் எல்லாம் சந்திப்புக்கு எப்படி வந்தது..ஏன் யாரும் கமெராவை தூக்கி படம் எடுக்கலையா..? ஒன்று, இரண்டு ஈயாவது செத்திருக்கோனுமே..?

ஜோதிபாரதி said...

விக்கி, சிங்கையில் கேட்டக் கேள்வியைப் பொய்யாக்கி விட்டீர்கள்!
வாழ்த்துகள்!

K.USHA said...

வாழ்த்துக்கள் விக்கி...உங்கள் முயற்சி பெறும் பாராட்டுக்குறியது என்றால் அது மிகையாகாது...அடுத்த பதிவர் சந்திப்பு மென்மேலும் சிறப்பு பெற வேண்டுமெனெ எதிர்ப்பார்ப்போம்....

VIKNESHWARAN said...

@ அனந்தன்

அவர் கோவிச்சுக்க மாட்டார்... அவர் ரொம்ப நல்லவர்...

@ கோவை ரவி

நன்றி

@ ஜமால்

வருகைக்கு நன்றி...

@ சுப.நற்குணன்

நன்றி ஐயா... பிழைகள் திருத்தப்பட்டுவிட்டது.

@ ஜெகதீசன்

நன்றி...

VIKNESHWARAN said...

@ அப்துல்லா

நன்றி அண்ணே...

@ தேவன் மயம்

வருகைக்கு நன்றி... எல்லோருக்கும் தொடுப்பா...

@ ச்சின்னப் பையன்

வருகைக்கு நன்றி...

@ டொன் லீ

ஆமாம் அவர்கள் வருங்கால பதிவர்கள் போல :))

@ ஜோதிபாரதி

வாழ்த்துகள் எல்லாம் பாரிட் புந்தார் தமிழியல் நடுவம் ஏற்பாட்டுக் குழுவினருக்கே... வருகைக்கு நன்றி...

@ உஷா

இது என் முயற்சி அல்லவே... வருகைக்கு நன்றி...

viji said...

12 become 24, a good improvement. I hope in future there will be many will join u all.

Good luck for future.

~

VIKNESHWARAN said...

@ விஜி

நன்றி..

viji said...

you are welcome