Thursday, July 10, 2008

மாயாக்கள் இருந்தார்களா?

பல நூற்றாண்டுகளுக்கு முன், தெளிவற்ற காரணத்தோடு, ஒரு இனம் உலகின் பார்வையிலிருந்து காணாமற் போகிறது. அந்த இனத்தின் பெயர் மாயா. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை. நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த கோவிலின் வேலைபாடுகள் நிறைவடையவில்லை. சிலைகள் பாதியாய் ஊருவம் வாங்கி நிற்கின்றன. அனைத்துக் கட்டுமாணங்களும் பாழடைந்து புதைந்து கொண்டிருக்கிறது.

வேண்டுதல்களும், மாய மந்திர வேலைகளும் நின்றுவிட்டது. அன்று முதல், இவ்வினத்தின் மூதாதைகளின் புத்திசாலிதனமும், கற்பித்தலும் காற்றோடு கலந்துவிட்டது. மிச்சம் மீதி இருந்த மாயா இனத்தவர்களுக்கு எழுத்தின் மீதும் படிப்பறிவின் மீதும் கண் பார்வையற்று போயிற்று. அவர்களுக்கு வாழ்க்கை நேறியும் மறந்து போயிற்று. அவ்வினம் மிருகத்தன்மையை அடைந்தது. மேற் கூறியவை மெக்ஸிகோ நாட்டின் காட்டுப் பகுதியில் மர்மமாய் தோன்றி மறைந்த மாயா நாகரிக அராய்ச்சியாளர்களின் அறிக்கை.

1000 வருடங்களுக்கும் மேலாக இவ்வளவு ஆச்சரியமும், அற்புதமும் நிறைந்த நாகரிகம் புதைந்து கிடந்த்தை யாரும் கண்டறியவில்லை. 1839-ஆம் ஆண்டு, அமேரிக்காவை சேர்ந்த எழுத்தாளரான John Lloyd Stephens தமது உதவியாளர் ஒருவரின் துணையோடு அங்கே செல்கிறார். பாழடைந்த பழமைமிக்க நகர பகுதி அங்கே உதித்து மறைந்ததை அவர் கண்டுபிடிக்கிறார்.

பல்லாயிரம் ஆண்டுகாலமாக செடிகொடிகள் படர்ந்திருந்த கட்டிடங்கள் கலைதிறன் மிக்க வேலைபாடுகளோடு உறுதியோடு இருக்கக் காண்கிறார். அடுத்ததாக அவர் ஒரு விசித்திரத்தை காண்கிறார். அவ்விடத்தில் மனிதர்கள் யாரையும் காண முடியவில்லை. நீண்ட காலமாக அவ்விடம் நாதியற்று கிடந்திருக்கிறது.

அன்று முதல் அவ்விடம் ஆராய்ச்சிக்குள்ளாகிறது. ஆராய்ச்சியின் மேல் ஆராய்ச்சிகள் நடந்து புதைந்து போன மாயா இனத்தவரின் வரலாற்றைத் தோண்டி எடுக்கிறார்கள். மாய இனத்தவர்கள் ஆச்சரியமிக்க நாகரிகத்தை உருவாகியுள்ளார்கள், பலப் பல துறைகளில் அறிவு திறன்மிக்கவர்களாக திகழ்திருக்கிறார்கள். இவையாவும் உலக நாகரிகம் வளர்ராத காலத்தில் நடந்தவை.

இந்த கண்டுபிடிப்பின் மகிழ்ச்சியில், ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு விந்தையும் உதித்தது. ஒரு நகரத்தை வளர்ச்சியடைய செய்து பின்னர் எதற்காக அதைவிட்டு மறைந்தார்கள் என்பதே அவர்களின் வியப்பாகும்.

மாயா இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது உலகிற்குப் பயனுள்ள பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அழிக்கப்பட்டது.
இச்செயல் உலகிற்கு மாயா இனத்தவரை பற்றிய பல உண்மைகளை உணர்த்த முடியாமலும் செய்துவிட்டது. அது நமக்கு பெரும் நஷ்டமும் கூட. தற்சமயம் நமக்கு வெளிபடையாக கிடைத்திருப்பது அந்நாகரித்தை பற்றிய சிறு துளியளவு கண்டுபிடிப்புகள் மட்டுமே. இவையாவும் அவ்விடத்தில் கிடைக்கப் பெற்ற சில துண்டு எழுத்துகளின் வடிவில் கிடைத்தவையாகும்.

இந்த மர்ம நகரில் பெரும் கற்களைக் கொண்ட கட்டிட வேலைபாடுகள் உள்ளன, பெரிய அளவிளான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றதக்க கலைத்திறன்களாகும். இவை தற்போதய தொழில்நுட்பத்தைவிடவும் மேலானவையாகவே கருதப்படுகிறது.

எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலை மாயா இனத்தவரின் வான் ஆராய்ச்சி நுட்பத்தை குறிக்கிறது. இதைத் தவிர்த்து கட்டிடங்களின் உட்புறமும் வெளிப்புறமும் பல வகையான எண்களால், வான் மாற்றங்களை பற்றிய விடயங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.



மாயாக்களால் எப்படி ஆசாத்தியமிக்க கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? அதுவும் அடர்ந்த காட்டிற்குள்? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மாயக்கள் இப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்ததும், அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும் அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். மாயாக்கள் எவ்விதமான தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தகய நகரத்தை அமைத்தார்கள் என்பதும் கோள்விக்குறியே.

அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.

900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயாக்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம் மாயா நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான்.

இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். மாயாக்களின் கலைத் திறன் மிகவும் நுட்பமானது, சிற்பக் கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது.

இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.

Bonamak என்ற இடத்தில் அமைந்த மாயாக்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயாக்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.

மாயாக்களின் எழுத்தின் அடிப்படையில், இச்சிற்பங்களை வடிவமைத்தவர்கள் தங்களது பெயரை சிற்பத்தின் எதாவது ஒரு இடத்தில் பொறித்துள்ளார்கள். இதனால் சிற்பிகள் மாயாக்களின் காலத்தில் பேற்றதக்கவர்களாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. சிற்பகலை வருங்கால சந்ததியினருக்கு இவர்களின் சரித்திரத்தை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என முன்னதாகவே இவர்கள் அறிந்திருக்கின்றனர்.

மாயாக்களால் நுட்பமாய் செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாயினும் உறுதியாகவே இருக்கின்றன. பிரமிடு, வழிபாட்டு இடங்கள் மற்றும் வியாபார தளங்கள் இந்நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்துள்ளன. இவையே ஆராய்ச்சியாளர்கள் மாயா நாகரிகத்தை அறிந்து கொள்ளச் சிறந்த தடயமாய் அமைந்தது.

மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .

ஆராய்ச்சியாளார்களின் கவனத்தை ஈர்த்த இன்னோரு விசயம் மாயாக்களின் விளையாட்டு மையம். ஒவ்வோரு மாயா நகர பகுதிகளிலும் மிகப் பெரிய பந்து விளையாட்டு மைதானம் காணப்படுகிறது. இம்மைதானங்கள் ஆங்கில எழுத்தின் ‘I’ ‘ஐ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

மாயாக்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.
இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வான் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன.

சுவாரசியமான ஒரு நாவலில் கடைசிப் பக்கம் இல்லாமல் போனால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது மாயாக்களின் வரலாறும். மேலும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

51 comments:

Sathis Kumar said...

மாயா நாகரீகம் தொடர்பான விளக்கக் கட்டுரை அருமை. எகிப்து தொடர்பாக தாங்கள் எழுதிய கட்டுரை ஞாயிறு நண்பனில் வெளிவந்ததுபோல், இக்கட்டுரையும் நாளிதழில் பிரசுரமானால் அருமையாக இருக்கும்.

கோவி.கண்ணன் said...

விக்கி,
மாயக்கள் பற்றி நல்ல தகவல்கள் அறிந்து கொண்டேன். இது பற்றி நானும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். எளிய தமிழில் விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

Thamiz Priyan said...

விக்கி! நல்ல ஆராய்ச்சி பதிவு... மூல தொடுப்புகளையும் கொடுக்கலாமே... படங்கள் பிரமாதம்.. :)

Thamiz Priyan said...

சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அமெரிக்க செவ்விந்தியர்கள் முற்றிலுமாக தமது சொந்த நாட்டிலேயே அழித்து ஒழிக்கப்பட்ட கதையே மறைக்கப்பட்டிருக்கும் போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாயா நாகரீகவாசிகளின் கடைசி கட்டம் மறைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை... :)

மாசிலா said...

மிக அருமையான கட்டுரை. படிக்கத்தான் ஆட்களில்லை! நம் மக்களுக்கு கூத்தாட்டக்காரகளின் சங்கதிதான் பிடிக்கும். ஒரு ஆண்டுக்கு முன் நான் கூட இதே போன்று "மாயாக்கள் அழிவின் மர்மம் என்ன?" மாயாவைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டேன். ஒரு ஈ கூட எட்டிப் பார்க்காமலே காணாமல் போய்விட்டது. மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள். நன்றி. அன்புடன் மாசிலா.

http://naalainamathae.blogspot.com/2007/02/blog-post_11.html

அகரம் அமுதா said...

மிக அருமையான வரலாற்று செய்தியை அறிந்து கொள்ள அளித்துள்ளீர் வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//சதீசு குமார் said...
மாயா நாகரீகம் தொடர்பான விளக்கக் கட்டுரை அருமை. எகிப்து தொடர்பாக தாங்கள் எழுதிய கட்டுரை ஞாயிறு நண்பனில் வெளிவந்ததுபோல், இக்கட்டுரையும் நாளிதழில் பிரசுரமானால் அருமையாக இருக்கும்.//

சரி அனுப்பிடலாம்... வருகைக்கு நன்றி நண்பரே....

VIKNESHWARAN ADAKKALAM said...

//கோவி.கண்ணன் said...
விக்கி,
மாயக்கள் பற்றி நல்ல தகவல்கள் அறிந்து கொண்டேன். இது பற்றி நானும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். எளிய தமிழில் விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்//

மிக்க நன்றி கோவி.கண்ணன் அவர்களே... மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

// தமிழ் பிரியன் said...
விக்கி! நல்ல ஆராய்ச்சி பதிவு... மூல தொடுப்புகளையும் கொடுக்கலாமே... படங்கள் பிரமாதம்.. :)//

//தமிழ் பிரியன் said...
சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அமெரிக்க செவ்விந்தியர்கள் முற்றிலுமாக தமது சொந்த நாட்டிலேயே அழித்து ஒழிக்கப்பட்ட கதையே மறைக்கப்பட்டிருக்கும் போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாயா நாகரீகவாசிகளின் கடைசி கட்டம் மறைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை... :)//

எல்லாம் மனிதனின் சுயநலம் தான் காரணம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//மாசிலா said...
மிக அருமையான கட்டுரை. படிக்கத்தான் ஆட்களில்லை! நம் மக்களுக்கு கூத்தாட்டக்காரகளின் சங்கதிதான் பிடிக்கும். ஒரு ஆண்டுக்கு முன் நான் கூட இதே போன்று "மாயாக்கள் அழிவின் மர்மம் என்ன?" மாயாவைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டேன். ஒரு ஈ கூட எட்டிப் பார்க்காமலே காணாமல் போய்விட்டது. மனம் தளராமல் தொடர்ந்து எழுதுங்கள். நன்றி. அன்புடன் மாசிலா.//

வருகைக்கு நன்றி மாசிலா... எதற்காக நான் மனம் தளர போகிறேன். காமக் கதைகள் படிக்க விரும்பும் 100 பேரில் ஒருவர் கூடவா இந்த பதிவை படிக்காமல் போக போறாங்க... இதோ இப்போது நீங்க படிச்சிட்டு போகலயா???? ;))

VIKNESHWARAN ADAKKALAM said...

//அகரம்.அமுதா said...
மிக அருமையான வரலாற்று செய்தியை அறிந்து கொள்ள அளித்துள்ளீர் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி.. மீண்டும் வருக...

Athisha said...

இது போன்ற கட்டுரைகளை நிறைய பதிவிடுங்கள் விக்கி
மிக அருகையான கட்டுரை
ஆனால் கொஞ்சம் நீளம் அதிகம்

2 பதிவுகளாக இட்டிருக்கலாம்

உங்கள் கட்டுரைகளை காமக்கதைகளை படிக்கும் நாங்களும் படிப்போம் நண்பரே

VIKNESHWARAN ADAKKALAM said...

//அதிஷா said...
இது போன்ற கட்டுரைகளை நிறைய பதிவிடுங்கள் விக்கி
மிக அருகையான கட்டுரை
ஆனால் கொஞ்சம் நீளம் அதிகம்
2 பதிவுகளாக இட்டிருக்கலாம்
உங்கள் கட்டுரைகளை காமக்கதைகளை படிக்கும் நாங்களும் படிப்போம் நண்பரே//

நன்றி நண்பரே... ஏன் இரண்டு பதிவு. படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக இறுதிவரை படிப்பார்கள்... கும்மியடிக்க நினைப்பர்கள் சின்ன பதிவா இருந்த சட்டுனு முடிச்சி கும்மி போடலாம் நினைப்பாங்க... நீங்க எந்த ரகம்?????

சின்னப் பையன் said...

//விக்கி! நல்ல ஆராய்ச்சி பதிவு... மூல தொடுப்புகளையும் கொடுக்கலாமே... படங்கள் பிரமாதம்.. :)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்...

TBCD said...

அப்போகாலிப்டோ, என்று படம், இவர்களின் காலத்தைப் ஒட்டி வந்தப் படம்...

மாயாக்களின் எச்சம் இன்னும் மெக்சிகோ பகுதி மக்களிடையே இருப்பதாகவே அறிவேன்..

பரிசல்காரன் said...

நல்லதொரு பதிவு.. என் போன்ற மொக்கையர்களை தலை குனியச் செய்யும் ஒரு பதிவு!

சபாஷ்!

கயல்விழி said...

இப்போது தான் இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்தது, சமீப காலத்தில் நான் படித்த கட்டுரைகளில், this is one is very informative. இன்னும் இதை அதிக பதிவாளர்கள் படிக்க வேண்டும். கட்டுரைக்கு மிக்க நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

//TBCD said...
அப்போகாலிப்டோ, என்று படம், இவர்களின் காலத்தைப் ஒட்டி வந்தப் படம்...
மாயாக்களின் எச்சம் இன்னும் மெக்சிகோ பகுதி மக்களிடையே இருப்பதாகவே அறிவேன்..//

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வந்த படம் அது... அப்படத்தின் சண்டைக் காட்சிகள் அசத்தலாக இருக்கும். மாயக்களை பற்றிய புத்தகங்களை மேலும் சில தேட வேண்டியுள்ளது... இவர்களின் காலண்டர் 2012ல் முடியும்... அதை ஒட்டிய தகவல் சில சேகரிக்க வேண்டும்... வருகைக்கும் தகவலுக்கும் நன்றி...

VIKNESHWARAN ADAKKALAM said...

//பரிசல்காரன் said...
நல்லதொரு பதிவு.. என் போன்ற மொக்கையர்களை தலை குனியச் செய்யும் ஒரு பதிவு!
சபாஷ்!//

ஐஸ் வேண்டாம்... வருகைக்கு நன்றி... தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான். :)

VIKNESHWARAN ADAKKALAM said...

//கயல்விழி said...
இப்போது தான் இந்த கட்டுரையை பார்க்க நேர்ந்தது, சமீப காலத்தில் நான் படித்த கட்டுரைகளில், this is one is very informative. இன்னும் இதை அதிக பதிவாளர்கள் படிக்க வேண்டும். கட்டுரைக்கு மிக்க நன்றி.//

மிக்க நன்றி கயழ்விழி... இது வரை 200க்கு மேல் சுட்டி இருக்காங்க... அதில் எத்தனை பேர் படித்தார்கள் என தெரியல... 200ல் 2 பேர் முழுமையா படிச்சிருந்தாலும் சந்தோஷம் தான்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//ச்சின்னப் பையன் said...
//விக்கி! நல்ல ஆராய்ச்சி பதிவு... மூல தொடுப்புகளையும் கொடுக்கலாமே... படங்கள் பிரமாதம்.. :)//
ரிப்பீட்டேய்ய்ய்ய்...//

:(

யாத்ரீகன் said...

did you watch apacalypto ?!

Thekkikattan|தெகா said...

கட்டுரைக்கு நன்றி!

ஒரு சிறிய விளம்பரத் தட்டி வைச்சிக்கிறேங்க...

இது தொடர்பாக நிறைய நாங்கள் பின்னூட்டங்களில் பேசிக் கொள்ள ஒரு வாய்ப்புகிட்டியது. பதிவின் தலைப்பு... அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...!

அந்தப் படத்தின் அரசியலும் கொஞ்சம் அலசப் பட்டிருக்கும், இதற்கு நிறைய தொடர்பிருக்கலாம், நேரமிருப்பின் சென்று பாருங்கள்.

Anonymous said...

அருமையான விளக்கங்களுடன் ஒரு நாகரிகம் சிதைந்த வரலாறு... நண்பனுக்கு மறவாமல் அனுப்பி வையுங்கள்!

VIKNESHWARAN ADAKKALAM said...

//யாத்திரீகன் said...
did you watch apacalypto ?!//

பார்த்தாச்சுங்க... டீ.பி.சி.டி ஐயாவுக்கு பதில் கொடுத்திருக்கேன் பார்க்கலயா யாத்திரீகன். வருகைக்கு நன்றி. மீண்டும் வருக...

VIKNESHWARAN ADAKKALAM said...

//Thekkikattan|தெகா said...
கட்டுரைக்கு நன்றி!
ஒரு சிறிய விளம்பரத் தட்டி வைச்சிக்கிறேங்க...
இது தொடர்பாக நிறைய நாங்கள் பின்னூட்டங்களில் பேசிக் கொள்ள ஒரு வாய்ப்புகிட்டியது. பதிவின் தலைப்பு... அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...!
அந்தப் படத்தின் அரசியலும் கொஞ்சம் அலசப் பட்டிருக்கும், இதற்கு நிறைய தொடர்பிருக்கலாம், நேரமிருப்பின் சென்று பாருங்கள்.//

சுட்டிக்கு மிக்க நன்றி... கண்டிப்பாக வருகிறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//இனியவள் புனிதா said...
அருமையான விளக்கங்களுடன் ஒரு நாகரிகம் சிதைந்த வரலாறு... நண்பனுக்கு மறவாமல் அனுப்பி வையுங்கள்!//

நன்றி புனிதா அவர்களே... சரி அனுப்பிடலாம்...

Anonymous said...

அருமை !!! அருமை !!! அருமை !!!

anujanya said...

விக்கி,

மிக நல்ல பதிவு. நிறைய அவர்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும் புகைப்படங்களுடன் பொருத்தமான எழுத்துக்கள் ஒரு நல்ல அனுபவம். சில இடங்களில் ஸ்பெல்லிங் சரி செய்ய வேண்டும். மொத்தத்தில் மிக மிக நல்ல பதிவு. தொடருங்கள்.

அனுஜன்யா

VIKNESHWARAN ADAKKALAM said...

//சேவியர் said...
அருமை !!! அருமை !!! அருமை !!!//

என்ன சேவியர் அண்ணே, சாலமன் பாப்பையா மாதிரி மூனு தடவ சொல்லியிருக்கிங்க...

VIKNESHWARAN ADAKKALAM said...

//விக்கி,

மிக நல்ல பதிவு. நிறைய அவர்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும் புகைப்படங்களுடன் பொருத்தமான எழுத்துக்கள் ஒரு நல்ல அனுபவம். சில இடங்களில் ஸ்பெல்லிங் சரி செய்ய வேண்டும். மொத்தத்தில் மிக மிக நல்ல பதிவு. தொடருங்கள்.

அனுஜன்யா//

மிக்க நன்றி

கைப்புள்ள said...

மிக அருமையான கட்டுரை விக்னேஷ். ஒரு இனமே அழிந்து போனதற்கு காரணம் தெரியாமல்ல் போனதை அறிந்ததும் ஏனோ வருத்தமாக இருந்தது.

இதே போல தென்னமேரிக்காவில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினைக் குறித்தான எனது பதிவு, தபால்தலையின் வாயிலாக.

http://kaipullai.blogspot.com/2007/12/3.html

CVR said...

அருமையான ஆராய்ச்சிப்பதிவு!!
முடிந்தால் "Road to El-Dorado" படம் பாருங்கள்!! :-)

Anonymous said...

Vikki,
Ulagam Urundai Endru ungalukku nallaave Theriyum.

Maayan Civilisation
vazhipatta Pyramiddukku diametrically Oppositela
tiruvannaamalai irukku enbathai
Ramana Maharshi oru thadavai
solli irukkaaar.

Ippadiku
oru Sivabhakthan

VIKNESHWARAN ADAKKALAM said...

//கைப்புள்ள said...
மிக அருமையான கட்டுரை விக்னேஷ். ஒரு இனமே அழிந்து போனதற்கு காரணம் தெரியாமல்ல் போனதை அறிந்ததும் ஏனோ வருத்தமாக இருந்தது.

இதே போல தென்னமேரிக்காவில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தினைக் குறித்தான எனது பதிவு, தபால்தலையின் வாயிலாக.//

மிக்க நன்றி.... உங்கள் பதிவிற்கு வந்தேன்... பயனுள்ள பதிவு..

VIKNESHWARAN ADAKKALAM said...

//CVR said...
அருமையான ஆராய்ச்சிப்பதிவு!!
முடிந்தால் "Road to El-Dorado" படம் பாருங்கள்!! :-)//

வருகைக்கு நன்றி தல... கண்டிபாக நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்...

VIKNESHWARAN ADAKKALAM said...

//Vikki,
Ulagam Urundai Endru ungalukku nallaave Theriyum.
Maayan Civilisation
vazhipatta Pyramiddukku diametrically Oppositela
tiruvannaamalai irukku enbathai
Ramana Maharshi oru thadavai
solli irukkaaar.
Ippadiku
oru Sivabhakthan//

என்ன சொல்ல வரிங்கனு புரியல அனானி... உலகம் உருண்டைனு எதுக்கு ஒரு பிட்டு....

ஜி said...

tholporul araaichi matrun nagareega aaraichu katturai arumaiyaaga irukkuthu.. menmelum thodara vaazththukkal :))

Dr. சாரதி said...

மீண்டும் ஒரு பொன்னியின்செல்வன் ...... அருமை

tamilraja said...

அருமையான பதிவு !!!
கையில் அழிக்கும் ஆயுதங்கள் இருக்கிறது என்ற காரணத்துக்காக ஸ்பெயின் ,இங்கிலாந்து உட்பட ஐரோப்பியர்கள் அழித்தொழித்த மக்களின் எண்ணிக்கை பலகோடிகளை தொடும்.
இவர்களுக்கு ஏன் இந்த வெறி?

"மாயாக்கள்" நாகரீக வளர்ச்சியில் நன்றாக இருந்த மாயாக்கள் எப்படி ஸ்பெயின் காரர்களால் அழிந்து போனார்கள்?!
என்பதையும் கொஞ்சம் எழுதுங்கள்,அதேபோல் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளை பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள் என் நண்பரிடம் பேசும் போது அவர்கள் நம் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
அவர்கள் எலிகளை விட கேவலமாக ஆங்கிலேயகைதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர் என்றும் கூறினார்
கொஞ்சம் விளக்கவும்.
மிக பயனுள்ளது உங்கள் கட்டுரை நன்றாக வாழ்ந்த ஒரு இனம் ஏன் காணமல் போனது?
இருமுறை படித்தேன்.மனம் கனக்கிறது?
வாழ்த்துக்கள்!

nanri
tamilraja
chennai

Subash said...

wow. keep rocking brof.
thx 4 share these details.

Subash said...

:)

Unknown said...

அருமையான ஆராய்ச்சி பதிவு!

நன்றி விக்னேஷ்வரன்.

RAHAWAJ said...

அருமையான பதிவு,நன்றி- ஜவகர்

RAHAWAJ said...

இந்த மாயாக்கள் தான், இந்திரலோகத்து மனிதர்கள் போலும்,பாரதத்தில் மாளிகை கட்டியவர்கள் ஒரு வேளை இவர்களாக இருக்கலாம்

Anonymous said...

Excellent essay sir.
Write more.
-Mappla.

ஆளவந்தான் said...

பண்டைய நாகரீகங்களை பார்க்கும் போதும் பெரும்பாலானவை சிற்பம் மற்றும் கட்டிடகலைகளுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதை உணர முடிகிறது.

அதே போல எல்லா நாகரீகங்களும் இயற்கையால் அழிந்ததாகவே கேள்வி.. உண்மையா என தெரியாது :(


அருமையான பதிவு விக்கி :) நாந்தேன் கொஞ்சம் தாமதமா வந்துட்டேன் :))

manjoorraja said...

Nice and very informative article. Thank you very much. and best wishes.

யூர்கன் க்ருகியர் said...

படித்து முடித்ததும் நீண்ட பெருமூச்சு வந்தது ...

- யெஸ்.பாலபாரதி said...

//சுவாரசியமான ஒரு நாவலில் கடைசிப் பக்கம் இல்லாமல் போனால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருக்கிறது மாயாக்களின் வரலாறும்.//

உண்மை. அதுபோல.. பின்னூட்டங்களின் வழியே மேலும் சில பதிவுகளுக்கு போகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

நன்றி விக்கி!

தோழன்
பாலா

Anonymous said...

Hi Sir, this is a first time i read this blog i very much like your blog and this will help me to know About the "MAYA PEOPLES" and i am very much eager to know more details about MAYA PEOPLES can you help me out......????