உன் பார்வையில்
எத்தனை மௌன மொழிகள்!
எத்தனை மௌன மொழிகள்!
விழியோரம் வழிந்திடும்
இரகசியப் பார்வை!
இரகசியப் பார்வை!
இதழோடு இதழ்
உரசிடும் மெல்லிய புன்னகை!
உரசிடும் மெல்லிய புன்னகை!
உள்மனம் உன்னை
நெருங்கச் சொல்கிறது!
நெருங்கச் சொல்கிறது!
நீயோ- பக்கத்தில் வந்தால்
வெட்கத்தில் ஓடுகிறாய்
வெட்கத்தில் ஓடுகிறாய்
எப்போதோ பார்க்கும் உன்னை
தப்பாமல் நினைக்கிறேன்
தப்பாமல் நினைக்கிறேன்
சிக்காமல் செல்லும் உன்னை
சிறையெடுக்கத் தவிக்கிறேன்
சிறையெடுக்கத் தவிக்கிறேன்
சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?
எனக்குச் சக்தி கொடுப்பாயா?
பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!
காதலித்தால் கவிதை வருமாமே!
கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?
கவலை என்ன இலவச இணைப்பா?
காதலெனும் (க)விதையை
விதைத்துவிட்டேன்
விதைத்துவிட்டேன்
நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.
என்றால் தீமூட்டு.
17 comments:
//காதலித்தால் கவிதை வருமாமே!கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?//
ஆஹா..
//நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.
//
அருமை நண்பரே..
//காதலேனும் (க)விதையை
நட்டுவிட்டேன் //
இது கொஞ்சம் இடிக்கிறது. விதையை விதைக்க முடியும். மரம், செடி அல்லது பயிர் நட முடியும்.
எல்லாரும் எப்படிங்க இப்படி எழுதறீங்க? உங்கள விட நானெல்லாம் சூப்பரா கவித எழுதுவேன். சேம்பிளுக்கு ரெண்டு போட்டதுக்கே மக்கள் பதறிக்கிட்டு இருக்காங்க. ஹி ஹி, டென்ஷன் ஆகாதீங்க, அதை படிச்சாலே என் கவிதை ரசனை உங்களுக்கு புரிஞ்சிரும்.
//நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு//
வாவ்...very nice! ரொம்ப கவித்துவமா இருக்கு! வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள்!
//பெண்ணே!
காதலித்தால் கவிதை வருமாமே!
கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?//
காதலித்தால் கவிதை வருமாம்
கவிதையோடு கண்ணீரும் இலவச இணைப்பாம்
இது என்றோ நான் எழுதியது..... இருவருக்கும் எப்படி ஒரே கற்பனை தோன்றியதோ தெரியவில்லை....
நன்றாக இருந்த்து கவிதை
ஆஹா, விழுந்தாச்சா காதல் வலையில் ! கொஞ்ச நாட்களுக்கு நிறைய காதல் கவிதைகளை எதிர்பார்க்கலாமா? நல்லா இருக்கு.
அனுஜன்யா
கலக்கிட்டீங்க...
//காதலித்தால் கவிதை வருமாமே//
வந்துருச்சு!!!!
//கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா//
இலவச இணைப்பு வேண்டாம்....
அழகான கவிதை வரிகள்...படித்தேன்....இரசித்தேன்!
//PPattian : புபட்டியன் said...
//காதலித்தால் கவிதை வருமாமே!கவிதையோடு வரும்
கவலை என்ன இலவச இணைப்பா?//
ஆஹா..
//நல்ல மரம் வளர
நீர் ஊற்று
நாசமாய் போகட்டும்
என்றால் தீமூட்டு.
//
அருமை நண்பரே..
//காதலேனும் (க)விதையை
நட்டுவிட்டேன் //
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே... நீங்கள் குறிப்பிட்டதை சற்று மாற்றி அமைத்து இருக்கிறேன் இப்போதுப் பார்த்துச் சொல்லுங்கள்...
//rapp said...
எல்லாரும் எப்படிங்க இப்படி எழுதறீங்க? உங்கள விட நானெல்லாம் சூப்பரா கவித எழுதுவேன். சேம்பிளுக்கு ரெண்டு போட்டதுக்கே மக்கள் பதறிக்கிட்டு இருக்காங்க. ஹி ஹி, டென்ஷன் ஆகாதீங்க, அதை படிச்சாலே என் கவிதை ரசனை உங்களுக்கு புரிஞ்சிரும்.//
படிச்சேங்க... கரடி மேல அப்படி என்னங்க கோபம் உங்களுக்கு.
//காதலித்தால் கவிதை வருமாம்
கவிதையோடு கண்ணீரும் இலவச இணைப்பாம்
இது என்றோ நான் எழுதியது..... இருவருக்கும் எப்படி ஒரே கற்பனை தோன்றியதோ தெரியவில்லை....
நன்றாக இருந்த்து கவிதை//
ஆஹா... இப்படியாகிப் போச்சா... மன்னிச்சிடுங்க....
//அனுஜன்யா said...
ஆஹா, விழுந்தாச்சா காதல் வலையில் ! கொஞ்ச நாட்களுக்கு நிறைய காதல் கவிதைகளை எதிர்பார்க்கலாமா? நல்லா இருக்கு.//
காதலில் விழுந்தால் தான் கவிதை வருமா?
நல்லா இருக்கு போங்க உங்கப் பேச்சு... :))
//ச்சின்னப் பையன் said...
கலக்கிட்டீங்க... //
காப்பியா???
//இலவச இணைப்பு வேண்டாம்....//
அண்ணாச்சி கல்யாணம் ஆன உங்களுக்கு காதல வேண்டம் என்கிறேன்... இப்பதான் இலவச இணைப்பு வேண்டாமாம்.
//இனியவள் புனிதா said...
அழகான கவிதை வரிகள்...படித்தேன்....இரசித்தேன்!//
உங்கள் கவிதை வரிகளுக்கு முன் இது இணையாகுமா?
//வாவ்...very nice! ரொம்ப கவித்துவமா இருக்கு! வாழ்த்துகள்! தொடர்ந்து எழுதுங்கள்!//
மன்னிக்கவும், தவறுதலாக உங்களை விட்டுவிட்டேன். மிக்க நன்றி மீண்டும் வருக...
//சிவனில் பாதி சக்தியாமே!
எனக்குச் சக்தி கொடுப்பாயா?//
ரொம்ப நல்லா இருக்கு...
சொல்லவேல்ல!!!!
ரெண்டு நாளா வீட்ல சிஸ்டம் மக்கர் பண்றதால எல்லாருடைய வீட்டுக்கும் போக முடியல... இன்னைக்குத்தான் படிச்சேன்..
நடத்துங்க.. நடத்துங்க..
(ஆமா, என்ன... என்கூட டூ-வா?)
//பரிசல்காரன் said...
சொல்லவேல்ல!!!!
ரெண்டு நாளா வீட்ல சிஸ்டம் மக்கர் பண்றதால எல்லாருடைய வீட்டுக்கும் போக முடியல... இன்னைக்குத்தான் படிச்சேன்..
நடத்துங்க.. நடத்துங்க.. //
வருகைக்கு நன்றிங்க... என்னத்த நடத்தனும்....
Post a Comment