Friday, November 13, 2009

2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்

மாயன்ஸ் நாட்காட்டி 2012 நிறைவற்று போவதின் காரணம் பல கோணங்களிலும் அலசப்பட்டும் பேசப்பட்டும் இருக்கிறது. 2012-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட அத்தேதியில் உலகம் அழியும் என்பது உண்மையானால் மனித குலத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதே 2012 எனும் திரைப்படத்தின் கண்ணோட்டமாக அமைந்துள்ளது.

தென் அமேரிக்காவின் மெக்சிக்கோ பகுதியில் தோன்றி மறைந்ததாக கூறப்படும் மாயா நாகரிகத்தினரின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றென கூறப்படுவது அவர்களின் நாட்காட்டியாகும். கி.முவில் தொடங்கும் இந்நாட்காட்டி முடியும் திகதி 21-12-2012. 2012 உலகின் மறுபிறப்பு தினம் (ரிஜெனரேஷன் பீரியட் என ங்கிலத்தில் சொல்லப்படுகிறது) என்பது உண்மையெனில் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த ரீஜெனரேஷன் எப்படியெல்லாம் நிகழப் போகிறது?

உலகின் அழிவை நோக்கிய பார்வையில் பல அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. இவ்வமைப்புகள் மக்களை ஒன்றிணைத்து அவர்களை புனித ஆத்மாவாக்கி புதிய யுகத்திற்கு தயார் செய்யும் ஓர் உண்ணத பனியை மேற்கொள்வதாக காட்டிக் கொள்கின்றன. புதிய யுகம் தோன்றும் போது இவ்வியக்கத்தால் புனிதமாக்கப்பட்டவர்கள் மட்டும் புத்துயிர் பெற்று எழுவார்களாம். இது மரண பயத்தைக் காட்டி மனிதனை மிரட்டும் வழி. கடவுள் எனும் பிம்பத்தின் போர்வையில் 'ஏதோ பண்ணும்' யுக்தி.

சரி அப்படி என்றால் கடவுள் என்ன செய்யப் போகிறார். ஒரு நெருப்புப் பிண்டம் சிதறி விழுகையில் பெற்ற தாய் தன் பிள்ளையையும், கணவன் மனைவியையும் விட்டு ஓடலாம். நம்பிக்கைக்குறிய மிக நெருக்கமானவர்களே கைவிடும் சமயத்திலாவது கடவுள் தோன்றுவாரா?

இயற்கையின் சீற்றம் பல வழிகளில் ஏற்படலாம். இன்று வரையிலும் பல முறை உலக மக்கள் உலகின் கடைசி தினம் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். மிரட்டப்பட்டிருக்கிறார்கள். The Millerites இயக்கத்தை நம்மில் பலர் அறிந்திருக்கலாம். இங்கிலாந்து தேசத்தின் விவசாயி ஒருவர் 23 ஏப்ரல் 1843-ஆம் ஆண்டு உலகம் அழியும் என கணிப்பு கூறினார். இவரின் "இவ்வற்புத' சிந்தனைக்கு தோன்றிய இயங்கமே The Millerites.

புதிய நூற்றாண்டான் 2000த்தாம் ஆண்டின் முதல் நாளின் வரவேற்பு எப்படி இருந்தது. Y2K எனும் அறிவியல் பிரச்சனையில் பீதியாகி பய உணர்வொடு வரவேற்றோம். புதிய ஆண்டின் மலர்ச்சி மந்தமாகி போனது. நிச்சயமாக உலகம் அழியும் என சொல்லிக் கொண்ட அமெரிக்க பாதரியார் ஒருவர் அப்படி நிகழாத்தை கண்ட மறு நிமிடம் தற்கொலை செய்துக் கொண்டு மாண்டு போனார்.

1806-ஆம் வருடம் தனது கோழி முட்டையில் ஏசு கிருஸ்து வருகிறார் எனும் எழுத்துகள் பொறித்ததாகவும் அதுவே உலகம் அழியும் அறிகுறியென புரளிகள் கிளம்பின. இதே போல் 1800 களிலும் 1900களிலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் உலகம் இன்னமும் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது.

2012 உலகம் அழிந்து போகும் நிலை ஏற்படலாம் எனும் ஆராய்ச்சிகள் பல கோடி செலவுகளில் நடத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும், கணிப்புகளும் எத்தனை தூரம் உண்மை என்பதினை அறிந்துக் கொள்ள இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளன. அந்தரத்தில் வீடு ட்டிக் கொண்டால் இயற்கை பேரிடர்களில் இருந்து பல வகையிலும் விடுபட்டுக் கொள்ளலாம் இல்லையா? புவி ஈர்ப்பு சக்தியை நாம் மீற முடியாமல் தான் இருக்கின்றோம்.

2012க்கு பிறகு இப்படம் எடுக்கப்பட்டிருந்தால் இதன் வரவேற்பு எப்படி இருந்திருக்கும் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நடக்கப் போகும்/நடக்காத ஒன்றினை இப்படி ஏற்படும் சாத்தியம் உண்டு எனும் எதிர்ப்பார்ப்புகளை செலுத்தி வணிக ரீதியாக இலாபத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மிகையில்லை. அதற்கான மெனக் கெடுதல் அமர்ந்த இடத்தில் இருக்கும் நம்மையும் எகிர வைக்கிறது.

தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படும் கபாடபுரம், (*பாண்டியர்களின் முன்னால் தலைநகரம். நா.பாவின் நாவல் இப்பெயரில் வெளிவந்துள்ளது) சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பல்லவர்களின் மாமல்லபுரம் போன்றவை குமரிக் கண்டத்தை கடல் கொண்ட சமயம் அமிழ்ந்து போனதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. குமரியின் ஆய்வு விசாலமானது. மேற்கத்தியர்கலால் இப்பகுதி லெமூரியா என குறிப்பிடபடுகிறது. லெமுர் மற்றும் அட்லாண்டீஸ் போன்ற ஆய்வு நூல்களில் தமிழ் தமிழர் சார்ந்த விடயங்கள் இம்மியும் கிடையாது. மனித னத்தின் பரினாம வளர்ச்சி எல்லோருக்கும் ஒன்றுதான் போலும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் கடல் கொந்தளிப்பு கதையின் முக்கிய அம்சமாக பேசப்பட்டுள்ளது. உலக அரசுகள் மக்களை எவ்வகையில் பாதுகாக்கப் போகிறது. உடனடி ஏற்பாடுகள் செய்யப்படுகிறதா எனும் பார்வையும் இங்கு முன் வைக்கப்படுகிறது.

இன்றய நிலையில் மனிதர்களின் நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. பூகம்பம், வெள்ளப் பெருக்கு, சுனாமி, என இயற்கையின் மிரட்டல்கள் அதிகரித்துவிட்டிருக்கின்றன. இயற்கை மனிதனோடு நட்புறவு கொள்ள மறுத்துவிட்டிருக்கிறது.

தொடக்கத்திற்கு முடிவும் இருக்க வேண்டும் எனும் சித்தாந்த அடிப்படையில் கடைசி நாள் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் நாசப்படும் பூமி முற்றிலும் அழியும் என்பது அதற்கான நாள் தூரம் இல்லை என்பதும் பல மதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

அறிவியல் முன்னோடிகள் பூமியின் அழிவு பிக் பேங் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் நிகழலாம் எனும் கருத்துக் கணிப்பினையும் முன் வைக்கிறார்கள். இந்த பிக் பேங் சித்தாந்தம் 1929-ஆம் ஆண்டு எட்வின் ஹபில் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. பிக் பேங் சித்தாந்தத்தின் படி பார்ப்போமேயானால் இந்த பிரபஞ்சமானது ஒரு மாபெரும் இராட்ச்சச வெடிப்பினால் உருவான பிண்டங்கள். தொடக்கத்தைப் போலவே பூமியின் முடிவும் இருக்கும் என்கிறது இச்சித்தாந்தம். 13.7 பில்லியன் வயதைக் கொண்ட பூமி இன்னும் 20பில்லியன் வருடங்கள் கழித்து இறந்துபோகும் என்பதும் பிக் பேங் சித்தாந்தத்தின் முக்கிய கருத்தியலாகும்.

புவி வெப்பம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று. அதே போல் சூரியனின் கொதிப்பும் பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது. இப்வெப்பத்தின் பாதிப்பு துருவங்களின் பனிப்பாறைகளை கரையச் செய்து கடல் மட்டத்தை பெருக்கெடுக்க வைக்கிறது. கடல்மட்டம் உயருவதால் கரைப்பகுதிகள் அமிழ்ந்து போகின்றன.

இதை தவிர்த்து விண் கற்கலின் மோதலாலும், பூமியின் அழிவு ஏற்படுதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாசாவின் தகவல் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நமது பூமியை விண்கற்கள் மோத வருகின்றன. அட்மோஸ்பேராவின் பாதுகாப்பால் அவை தகர்க்கப்படுகிறது. கோள்களின் மோதலாலும் பூமி அழிந்து போகக் கூடும் என ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. கோள்களின் சுழற்சி அதிகரிக்குமானால் கோள்களின் மோதல் ஏற்ப்பட சாத்தியம் இருப்பதாக அறிவியல் கருத்துகள் கூறப்படுகிறது.

2012 திரைப்படத்தில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விடயம் பாதுகாப்பு கப்பல்கள். இது நோவாவின் கப்பலின் கதையின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கக் கூடும். எவ்வளவு பேரை இக்கப்பலில் காப்பாற்ற முடியும் எனும் பட்சத்தில் முதலாளிதுவமும் ஆட்சியாளர்களின் கெடுபிடியும் அங்கே முந்திக் கொள்ள நினைக்கிறது. சுயநலம் பெருக்கெடுக்கிறது. ரஸ்ய நாட்டில் பேழை ஒன்று உள்ளது. இப்பேழையில் 5 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. உலகம் அழிந்து போகுமாயின் இப்புத்தங்கள் அப்பேழையில் பாதுகாப்பாக இருக்குமாம். அந்த 5 புத்தகத்தில் ஒன்று திருக்குறள் என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகங்களை காப்பதை போல மனிதர்களை காக்க முடியுமா?

இப்படிப்பட்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தன் குடும்பத்தை ஒரு சாமனிய வர்க்கத்தை சேர்ந்த வாகன ஓட்டி எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மிக அழகாக சித்தரித்திருக்கிறார்கள். இயற்கையின் சீற்றத்தின் முன் நாம் எந்த அளவுக்கு கையாளாகதவர்களாகிறோம் என்பதை போட்டில் அடித்து சொல்லப்படுகிறது.

மாயன்ஸ் நாகரீகம் பற்றிய எனது முந்தய படைப்புகள்:

பாகம் 1: மாயாக்கள் இருந்தார்களா?

பாகம் 2: உலகின் இறுதி நாள்

26 comments:

Subankan said...

கலக்கல் இடுகை நண்பா

Ganee said...

Really good

கோவி.கண்ணன் said...

//13.7 பில்லியன் வயதைக் கொண்ட பூமி இன்னும் 20பில்லியன் வருடங்கள் கழித்து இறந்துபோகும் என்பதும் பிக் பேங் சித்தாந்தத்தின் முக்கிய கருத்தியலாகும்.//
:)

இன்னும் 200 ஆண்டுகளில் உலகம் அழிந்தாலும் தற்பொழுது வாழும் நமக்கு பாதிப்பு இல்லை, மனிதனுக்கு ஆயுள் 100 ஆண்டுக்குள் தானே !

மனோவியம் said...

சிறப்போ சிறப்பு...சிறந்த படைப்பு,அற்ப்புதமான அலசல்.வாழ்த்துக்கள் நண்பா!

வால்பையன் said...

படம் கட்டாயமாக பார்க்க வேண்டும் என ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு!

சி தயாளன் said...

படம் இன்று வெளியாகின்றது....கட்டாயம் பார்க்க வேணும்..

//சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பல்லவர்களின் மாமல்லபுரம் போன்றவை குமரிக் கண்டத்தை கடல் கொண்ட சமயம் அமிழ்ந்து போனதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன.//

மாமல்லபுரம் போனது கி.பி..ல் தான்...குமரிக்கண்டம் போனதாக சொல்லப்படுவது 3000 - 5000 ஆண்டுகளுக்கு முன்னால்...குமரிக் கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை அல்லவா..?

Meridian Guy said...

Next time give us the links where you collected all those informations for your post.

Anyway nice written, good luck!

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் விக்னேஷ்வரன்,


ரோலண்ட் எம்மரிச் எப்போதும் அவரது அழிவுப்படங்கள்(Disaster_films) வழியாகத்தான் அறியப்படுபவர். அவர் எடுத்த வீர,தீரப்படங்கள்(Action films) பலர் அறியாதது. அவருக்கு நம்மை பயமுறுத்தி பணம் பார்ப்பதில் அபார விருப்பம்.


பிறகு 2012 டிசம்பர் 21ம் தேதி இந்த பூமி ஒன்றும் அழியாது. இதற்கு முன் பூமியானது பல சிக்கல்களை சமாளித்து தான் இந்த நிலையில் உள்ளது. நம்மைவிட அளவில் பெரிய டைனோசர்கள் முற்றிலுமாக அழிந்தும் இந்த பூமி அழியவில்லை. இந்த இடத்தில் "வலுத்தவைகள் மட்டுமே வாழும், Fittest only Survival" என்ற விதிக்கு ஆப்படிக்கப்பட்டு விட்டது. அந்த ஆப்பை அடித்தது யார் என்று தெரியவில்லை !!!


ஆனால், ஆனால் அதற்கு பிறகு பூமியில் உள்ள சில நானோகிராம் எடையுள்ள ஒரு செல் அமீபாவிலிருந்து, சில டன் எடையுள்ள நீலத்திமிங்கலம் அல்லது அதை விட பெரிதாக இருப்பதற்கான சாத்தியமுள்ள இந்த Bloop(http://en.wikipedia.org/wiki/Bloop) வரை பாதிக்ககூடிய சாத்தியங்கள் பல உள்ளன.(மனிதனும் இதில் அடக்கம்) அதில் ஒன்று இந்த பூமியின் காந்தபுல மாற்றம். விஞ்ஞானபூர்வமாக இதை அறிய கீழே உள்ள சுட்டிகள் அனைவருக்கும் உதவக்கூடும். அதில் என்னுடைய PDF filesயும் படித்தால் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியையும், அதன் வரையைறையும் அறிந்து கொள்ளமுடியும். நன்றி.


1. http://jayabarathan.wordpress.com/2009/05/14/katturai-58/
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள். (The Deadly Magnetars)

http://gnuismail.googlepages.com/rishan_email_communication.pdf


2. http://jayabarathan.wordpress.com/2009/06/05/katturai-59/
பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா ? (Earth’s Magnetic Pole Reversal)

http://gnuismail.googlepages.com/regarding-reversalsinoursolarobjects.pdf


நன்றி,

with care & love,

Muhammad ISmail .H, PHD,

அஹோரி said...

உங்க பதிவு நல்லா இருக்கு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நட்சத்திரம் உச்ச நட்சத்திரமாக மாறி மிளிர்கிறீர்கள்

Unknown said...

//"2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்"
//

aduththathu 2024 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்" varapooguthu

cheena (சீனா) said...

அன்பின் விக்கி

2012ல் நடப்பவை நடக்கட்டும் - இப்பொழுதிலிருந்தே கவலைப்ப்ட வேண்டுமா - ஒய்டூகே நாங்கள் மகிழ்ச்சியாக கவலைப்படாமல் இருந்த காலம் - அயலகங்களில் குய்யொ முறைய்யொ எனக் கத்தும் பொழுது ஒன்றும் நடக்காது எனத் தைரியமாக இருந்தவர்கல் நாங்கள்

படம் வந்து விட்டதா

நல்ல ஆய்வுக்கட்டுரை

நல்வாழ்த்துகள் விக்கி

- யெஸ்.பாலபாரதி said...

விக்கி, அனேகமாக முதல் முறையாக இன்று தான் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன்.

எளிமையான வசீகரமான எழுத்து உங்களுடையது.. தொடர்ந்து எழுதுங்கள். தனி முத்திரை பதிக்க முடியும்.

மற்றதையும் படித்து விட்டு வருகிறேன்,

வாழ்த்துக்கள் நண்பா!

தோழன்
பாலா

Anonymous said...

fantastic info....

குசும்பன் said...

2012 திரைப்படம்- மரணத்தின் விளிம்பில்"

பார்த்தவர்களா?:)))


//மற்றதையும் படித்து விட்டு வருகிறேன்,

வாழ்த்துக்கள் நண்பா!

தோழன்
பாலா//

தல சொன்னதை எல்லாம் இதுவரை செஞ்சதாக சரித்திரம் கிடையாது, சும்மா இப்படி உசுப்பேத்துவதே தலயோட வேலை:))))

Anonymous said...

Hi anna! How are you? Karutthai arumaiyaga velikondu vanthurikkurirgal. Ennodaiya vazhthugal!.Viknesvary(B.COM)

Tamilvanan said...

//புவி வெப்பம் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று.// பூமியின் அழிவை நோக்கி ம‌னித‌ வாழ்க்கை ந‌க‌ர்கிற‌து. ந‌ல்ல‌ ப‌திவு.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ subankan

நன்றி...

@ கனி

நன்றி

@ கோவி.கண்ணன்

மனிதனின் ஆயுள் 120. ஏனோ அதில் பாதி கரைவதற்குள் ஒடுங்கிவிடுகின்றோம்... ;-)...

@ மனோகரன்

ஆஹா... நன்றி சார்...

@ டொன்லீ

சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பா. திருத்திவிடுகிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மெரிடியன் காய்

முதலில் உங்கள் சுய ஐடியில் எழுத முயற்சி செய்யுங்கள். ஆர்டர் போடுவதற்கு நான் உங்கள் கோஸ்ட் ரைடர் கிடையாது. வருகைக்கு நன்றி.

@ முகமது இஸ்மய்ல்

சிறப்பான தகவல்களை தொகுத்து கொடுத்தமைக்கு நன்றி அன்பரே. கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன். சில விளக்கங்களுக்கு பிறகு உங்களை தொடர்பு கொள்கிறேன்.

@ அஹோரி

நன்றி

@ சுரேஸ்

நன்றி

@ ஜெய்சங்கர்

நன்றி நண்பா.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சீனா

நன்றி ஐயா... வயது என்பது உடலுக்கான என் தானே? நீங்கள் இன்னும் இளைஞராகவே இருக்கிறீர்கள்... ;-)

@ யெஸ்.பாலபாரதி

உங்களின் உற்சாகமான வாழ்த்துக்கு நன்றி அன்பரே. எழுதுவது மிக பிடித்தமான செயல். நிச்சயமாக இன்னும் நிறைய எழுதுவேன். நன்றி.

@ உஷா

நன்றி...

@ குசும்பன்

வருகைக்கு நன்றி பாஸ். இல்லை பாஸ் அதன் பின் அவர் என் பழைய பதிவையும் படித்து பின்னூட்டமிட்டிருக்கிறார். உசுப்பேத்தவில்லை.

@ தமிழ்வாணன்

பூழி அழியாது. இயற்கையை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் அது தான் உண்மை. கருத்துக்கு நன்றி நண்பரே.

எட்வின் said...

விளக்கங்களுடன் கூடிய அருமையான விடயங்கள் அன்பரே... உங்களுக்கு நன்றி தெரிவித்து உங்கள் சுட்டியை எனது வலைப்பூவில் கொடுத்திருக்கிறேன்.

A N A N T H E N said...

பல விசயங்கள ஆராஞ்சி எழுதி இருக்கிங்க... மாயன், Y2K, Millerites, பிக் பேங் போன்றவை.

நேரம் கிடைச்சா குமரி கண்டத்த பத்தியும் சொல்லுங்க...

படம் பார்த்தேன், நல்லாருக்கு... ரொம்ப தைரியமா பெரிய பெரிய தலைங்களுக்கு குட்டு கொடுத்திருக்காங்க... க்ளமேக்ஸ் சொதப்பல சுருக்கி இருக்கலாம்.

மனுசன் உலகம் அழிஞ்சி மீண்டும் பூமிய பார்க்கும் போது தரை மட்டமா இருக்கு... இதுக்கு அப்புறம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப எப்படி முடியும்? உணவுக்கு என்ன பண்ணுவான்... செடி கொடி, கோழி ஆடு எல்லாம் இய்றகையா வளர பரிணாம வளர்ச்சி வேணுமே... அதுக்கு மத்தவங்க கூட சேர்ந்து சேத்தே போயிருக்கலாம்... ஹிஹிஹி

வியா (Viyaa) said...

சிறப்பான பதிவு விக்கி...வாழ்த்துக்கள்
படம் பார்த்தேன்..அருமையான படம் இருந்தாலும் எனக்குள் ஒரு பயம் வந்து விட்டது..உலகம் அழிந்து விடுமோ என்று..பொறுத்து இருந்து பார்ப்போம்..

Raman Kutty said...

//போட்டில்// பொட்டில்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ எட்வின்

வருகைக்கு நன்றி...

@ அனந்தன்

நன்றி...

@ வியா

நன்றி

@ ராமன்

நன்றி...

Anonymous said...

Hi there

Awesome blog, great write up, thank you!