Wednesday, July 22, 2009

நானும் டெரர் தான்... ஜீப்புல ஏறிக்கிறேன்... பார்த்துக்கோங்க...

ஒரு நிகழ்ச்சி முடிந்ததும் ஐயர் கடைக்கு ‘டீ’ அடிக்கப் போனேன். ஐயர் கடை டீ மிகவும் சுவையாக இருக்கும். ஐயர் இந்தியாவில் இருந்து தேத்தூள் இறங்குமதி செய்து டீ போடுறாராம். ஒரு டீ அடிச்சா அதை முடிக்கறதுக்குள்ள அடுத்த டீக்கு ஆடர் கொடுத்துடுவவீங்க. ஐயர் கடை டீக்கு அப்படி ஒரு ‘இம்ம்ம்ப்ப்ப்’ இருக்கு.

அன்று டீ குடிக்க சென்ற போது கொஞ்சம் தள்ளி இருந்த மேசையில் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து தலையசைத்து சிரித்தார். யாரென தெரியாமல் என் மூளையை கசக்கியபடி நானும் சிரித்து வைத்தேன்.

”விக்னேஷ் தானே?” ஆமாம் என்றேன்.

”நான் மனோகரன். நீங்க பிளாக் எழுதுவீங்க தானே?” என்றார். சிரித்துக் கொண்டே ஆமாம் என்றேன்.

டீ வந்ததும் அருந்திக் கொண்டிருந்தேன். அவர் சாப்பிட்டுவிட்டு கைகழுவிட்டு வந்தார். என்னிடம் கைகுழுக்கிவிட்டு பேசினார்.

“ரொம்ப நல்லா எழுதுறீங்க சார். உண்மைய சொல்லனும்னா நீங்க எழுதுறத பார்த்து தான் எனக்கும் எழுதனும்னு ஆசையே வந்துச்சு. மனோவியம் என் பிளாக்கு தான். ஒவ்வொரு பதிவும் வித்தியாசமா எழுதுறீங்க. படிக்க நல்லா இருக்கு. இன்னும் நிறைய எழுதனும் நீங்க. எனக்கு எழுத சிரமமா இருக்கு சரியா எழுத முடியல. நிறைய படிக்கனும்” என்றார். ”ஆர்வம் இருந்தால் நிச்சயம் எழுதலாம் சார். தொடர்ந்து எழுதுங்கள்” என்றேன்.

மகிழ்ச்சியோடு அவரிடம் விடைப்பெற்றுவந்தேன்.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

*******************

பிரபாகரன் தீவிரவாதி ஒசாமா போராட்டவாதி என ஒரு பதிவு எழுதி இருந்தேன். இஸ்லாமிய சகோதரர் ஒருவர் வெகுண்டெழுந்து இஸ்லாத்தை நீ புரிந்துக் கொள்ளாமல் பேசிவிட்டாய் என கேள்விகளை அடிக்கி வைத்து ஒரு மின்மடல் அனுப்பி இருந்தார். அதில் நான் இஸ்லாத்தை புரிந்துக் கொள்ளும் பொருட்டு சில தொடுப்புகளையும் கொடுத்திருந்தார்.

சகோதரர் எனது பதிவை தொடர்ந்து படிக்கிறாராம். அவர் மத தீவிரவாதம் கொண்ட ஆள் இல்லையாம். என் கட்டுரையில் உண்மை இல்லாததால் மடல் எழுதி இருக்கிறாராம். ஏன் அந்த கட்டுரைக்கு மட்டும் என புரியாமல் பல நாள் தூக்கம் இழந்து தவித்து போனேன். சகோதரருக்கு பதில் கொடுக்க விரல்கள் துருதுருத்துக் கொண்டிருக்கின்றன.

நானே எனக்கு ஆப்படித்துக் கொள்ள முடியுமா? யாராவது எனக்கு வெளிநாட்டில் ஒரு வேலையும் பாதுகாப்பும் தருவதாக இருந்தால் சொல்லவும் வகை வகையாக பதில் எழுதுகிறேன்.

மன்னிக்கவும் சகோதரர் சபீர் கான் உங்கள் கேள்விக்கான பதில் சொல்ல முடியாமல் மீளா துயரத்தில் வாடுகிறேன். மின்மடலில் ‘think first' என நீங்கள் போட்டிருந்த தலைப்பை மிக இரசித்தேன். இஸ்லாமிய நாகரீக கல்வியில் நான் சிறப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறேன். அதனால் நீங்கள் அனுப்பிய தளங்கள் எல்லாம் சுத்த ’வேஸ்ட்’. ஏன் நேரத்தை வீணாக்கிக் கொள்கிறீர்கள். போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாருங்க.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

*****************

ஒரு இலக்கிய சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு லேகியம்... மன்னிக்கவும்... இலக்கியம் தெரியாது என்றாலும் கார வடையும் கோப்பி தண்ணியும் இலவசமாக கொடுப்பதாக கூறி இருந்ததால் நிச்சயம் கலந்துக் கொண்டே ஆக வேண்டும் எனும் ஆளாதியான எண்ணம் கொந்தளிக்க இனிதே கலம் கைகொடுக்க கலந்துக் கொண்டேன். மேற்கானும் வாக்கியம் லேகியம் பிசகாமல் வந்திருக்கிறதா என சங்க இலக்கியங்களை எடுத்து சரி பார்த்துக் கொள்ளவும்.

ந என ஆரம்பிக்கும் நான்கெழுத்து தோழர் பத்திரிக்கையின் ( அட எனக்கும் கிசுகிசு எழுத வருது) ஆசிரியர் ஒருவர் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசலானார். எனது வெறு வாய்க்கு அவில் கொடுத்தமைக்கு நன்றி. இலக்கியம் அப்படி இருக்கனும். எதிர்காலத்துல வெள்ளைக்காரன் ஆராய்ச்சி பண்ணினா நம்ம மொழி நாசமா போய்டும் (எதிர்கால வெள்ளைக்காரனுக்கு இப்பவே வாய்ப்பு கொடுத்துட்டாரு). மரபு படிங்க. என பேசி ஒரு சில சங்க பாடல் வரிகளைச் சொல்லி சிலாகித்துக் கொண்டார்.

அவர் பேசி முடிந்ததும் அவர் வேலை செய்யும் பத்திரிக்கை தர்மத்தை எடுத்துரைத்தேன். நான் அனுப்பிய கட்டுரை மற்றும் சிறுகதைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கூட உங்கள் பத்திரிக்கை சரி செய்ய முற்பட்டதாக தெரியவில்லை. ஆசிரியரிடம் விசாரித்தால் நீங்கள் கவனமாக எழுதி அனுப்ப வேண்டும் என்கிறார். இதை பற்றி வலையில் எழுதிவிட்டால் புரக்கணிப்புகள் ஏற்படுகின்றன. இதை என்ன சொல்வதென்றேன்.

நான் இப்போது பத்திரிக்கையில் வேலை செய்பவன் அல்ல என்ற முறையில் பார்த்தால் மிகவும் வருந்துகிறேன் என சொல்லி உள் நடக்கும் சில ஆமை கதைகளை சொன்னார். அது நமக்கு தேவையற்றது. முதலில் நம்மைச் சுற்றியுள்ள சூழலை கவனிக்க வேண்டும். அதைவிட்டு நீ இப்படி எழுதனும் இதை செய்யனும் என ஊருக்கு உபதேசம் செய்வது, தமிழ் நலம் காக்கும் ஆசான் தம் பிள்ளையை மலாய் பள்ளிக்கு அனுப்பிய கதையாக தான் இருக்கிறது.

மேலும் அவர் சொன்ன ஒரு விடயம் கொச்சையாக எழுதாதீர்கள் என்பது. இந்த கொச்சை வார்த்தை, கச்சை வார்த்தை எல்லாம் எப்படி தீர்மானிக்கிறீர்கள் தெரியவில்லை. பட்டிணத்தார் பாடல்களில் இல்லாததையா இப்போது எழுதப்பட்டுவிடுகிறது. புரியவில்லை...

சரி அதை விடுவோம், கூட்டம் முடிந்ததும் என்னிடம் சொன்னார். உள்ளுக்குள் வேலை அப்படி. நாம தான் கவனமா இருக்கனும் என முன்பு சொல்லியவரை போலவே சொன்னார். அச்சமயம் அவர் பத்திரிக்கை ஆசிரியராக மாறிவிட்டார். இவருக்கு அடிக்கடி அந்நியனாகும் நோய் இருக்கிறது. என் உயிருக்கு ஏதும் ஆபத்தாகிவிடுமோ என நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பேராசிரியர் அவர்கள் எனது வலைப்பதிவை பார்வையிடுகிறார் என அறிய முடிகிறது,

பாதியில் கலந்துக் கொண்டாலும் அவர் உரை இரசிக்கும் படியாகவே இருந்தது. சில கருத்து முரண்பாடுகளும் எனக்கு இருக்கவே செய்கிறது. அவர் இறுதியாக சொன்ன ஒரு விடயம்: பத்திரிக்கையை நாம் அனுசரித்து போக வேண்டும் என்பது. இதில் கிஞ்சித்தும் உடன்பாடுகிடயாது. இதை நான் விளக்கவும் தேவை இல்லை என்று கருத்துகிறேன்.

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

******************************
சமயமெனும் சாக்கடை உலகம் எனும் எனது கட்டுரைக்கு வந்த ஓர் எதிர்பதிவு:

ஆரம்பக் கால ஆசிரியரை
'இடி அமீன் வாத்தி'என
நினைவு கூர்ந்தார்
பட்டதாரி எழுத்தாளர்
இதுவா பண்பு
இதுவா நன்றிக்கடன்
வலைபகுதியில்
எப்படி வேண்டுமானாலும்
எழுதலாமா - சுகந்தினி (மேலும் படிக்க இங்கே சுட்டவும்)

ஆசிரியர்களை அவ்வரி பாதித்திருந்தால் பொறுத்தருள வேண்டும் அதை மாற்றி விட்டேன்.

நன்றி
விக்னேஸ்,
எழுத்து வேகம்,
விவேகம், வியூகம்
உம்மிடம் கண்டேன்
இனிய தமிழ்ச் சொற்களைப்
பயன்படுத்தினால்
உம் கிறுக்கல்கள்
மேலும் சிறப்படையும்
தொடரட்டும் உம் பணி.

கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு தவறுகளை பார்க்கிறீர்கள். ம்ம்ம் ஆகட்டும்....

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....
*****************

நண்பர் அப்பாவி முரு எனக்கு விருது வழங்கி இருக்கிறார். அவரது அன்புக்கு மிக்க நன்றி.

மற்றவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு நான் இன்னும் வளராததால் தற்சயம் என் வசமே இருக்கட்டும். இதுவும் கொஞ்சம் கொஞ்சம் 32 கேள்வி தொடர் விளையாட்டு மாதிரியே இருக்கு.

என்னை வச்சு காமிடி கிமிடி பண்ணலையே?

நானும் விருது வாங்கிட்டேன்.

(பிற்சேர்க்கை: எனக்கு இவ்விருதை வழங்கி இருக்கும் மேலும் இருவர் கோமா மற்றும் தமிழ் பிரியன் ஆகியோருக்கு நன்றி.)

பார்த்தீங்களா நானும் டெரர் தான்....

33 comments:

Unknown said...

// மற்றவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு நான் இன்னும் வளராததால் தற்சயம் என் வசமே இருக்கட்டும். இதுவும் கொஞ்சம் கொஞ்சம் 32 கேள்வி தொடர் விளையாட்டு மாதிரியே இருக்கு. //



இந்த எடத்துலதான் நீங்க டெரரா இருக்குறீங்க....!! என்ன ஒரு கஞ்சத்தனம்.....!??!??!

Unknown said...

// ஐயர் இந்தியாவில் இருந்து தேத்தூள் இறங்குமதி செய்து டீ போடுறாராம் //


( தேத்தூள் ) ------> அப்புடீனா....??


ஆர்வத்துடன்

லவ்டேல் மேடி......

Unknown said...

// தொடர்ந்து எழுதுங்கள்” என்றேன்.

மகிழ்ச்சியோடு அவரிடம் விடைப்பெற்றுவந்தேன். //



உண்மைய சொல்லுங்க ... டீ ' யுக்கு யாரு காசு குடுத்தது.......????

Unknown said...

ஆபீசுக்கு போயிட்டு வந்து மீதிய வெச்சுக்குறேன்...... !!!

இராகவன் நைஜிரியா said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

நீங்களும் டெரர் தான் ஒத்துகிட்டோம்.

தராசு said...

ஹலோ,

என்ன வேண்ணா சொல்லிக்கோங்க, நீங்க டெரர்ங்கறத நாங்க ஏத்துக்க முடியாது.

Unknown said...

/// மன்னிக்கவும் சகோதரர் சபீர் கான் உங்கள் கேள்விக்கான பதில் சொல்ல முடியாமல் மீளா துயரத்தில் வாடுகிறேன். //



கேள்விகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி.......!!!!!

Unknown said...

//
நண்பர் அப்பாவி முரு எனக்கு விருது வழங்கி இருக்கிறார். அவரது அன்புக்கு மிக்க நன்றி. //


வாழ்த்துக்கள்......!! வாழ்க வளமுடன்....!!!!!!!

அப்பாவி முரு said...

வலது மேல் படத்தில் ஒரு சைடா பார்க்குறதுல இருந்தே தெரியுதே, நீங்க ஒரு டெரர்ன்னு...

எழுதவே தேவையில்லை கன்பார்ம்...

pudugaithendral said...

ஆக நீங்களும் டெர்ரர்னு பதிவாகிட்டீங்க.

வாழ்த்துக்கள்

sivanes said...

சூப்பரப்பு!!!!!!!!!!!!!!!!

வால்பையன் said...

நீங்க டெர்ரர்னு எனக்கு முன்னாடியே தெரியுமே!

இப்போ தான் உலகுக்கு தெரியுதா!

வால்பையன் said...

சாபீர் கேள்விகளை எனக்கு அனுப்பி வையுங்க!
இங்க சும்மா தான் இருக்கேன் நானும் டெர்ரர் ஆக முயற்சி பண்றேன்!

சின்னப் பையன் said...

யப்பா தம்பி... நீ டெரர்தான்... டெரர்தான்... டெரரேதான்.....

goma said...

விக்னேஷ்வர்
உங்களை 16ம் தேதியே ஜீப்பில் ஏற்றிவிட்டேன் .உங்களுக்கு அறிவிக்கத் தவறி விட்டேன்.

நாமக்கல் சிபி said...

தேத்தூள் ) ------> அப்புடீனா....??


யோவ் லவ்டேல் மோடி!

தேத்தூள் னா டீத்தூள்னு அர்த்தம்

நாமக்கல் சிபி said...

// மன்னிக்கவும் சகோதரர் சபீர் கான் உங்கள் கேள்விக்கான பதில் சொல்ல முடியாமல் மீளா துயரத்தில் வாடுகிறேன். /

உங்கள் துயரில் நானும் பங்கு பெறுகிறேன் விக்கி! (20%)

Tamilvanan said...

டெரரா ஆகறது பெரிசில்லை... தொடர்ந்து டெரரா பெயர் போடனும்.. வாழ்த்துக்கள்

PPattian said...

நீங்ளுமா?

லேகிய கூட்டம் ஒண்ணும் பிரியலை.. இத்தான் கிசுகிசுவோ.. ஓஹோ..

மத்ததெல்லாம் ரசித்து படித்தேன்

VIKNESHWARAN ADAKKALAM said...

@ லவ்டேல் மேடி

ஏன் இப்படி கொலை வெறி பின்னூட்ட முயற்சி... நீங்களும் என்னை ஷாக் ஆக்கிடாதிங்க... முதல் கமெண்ட் போட்டதால விருத நீங்களே எடுத்துக்குங்க... :)

@ ராகவன் நைஜீரியா

நன்றி ராகவன்... வேட்டையாடு விளையாடு படத்துல நடிச்சது நீங்க தானே?

@ தராசு

பாஸ் இப்படிலாம் பேச கூடாது எவ்வளோ அடி வாங்கி வந்திருக்கேன். பரிசு எனக்கு தான். தனியாள நின்னு அடிக்கிறவன் பெரிசுல்ல அடி வாங்குறவன் தான் பெரிசு.

@ அப்பாவி முரு

ஐ ஜாலி... இப்படி நாலு பேரு என்ன டெரர்னு சொன்னா தானே நாங்களும் சந்தோஷ படுவோம்.

@ புதுகை தென்றல்

நன்றி... :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ சிவனேசு

நன்றி...

@ வால்பையன்

சபீர் கான் கேள்விகளை உங்கள் மடலுக்கு அனுப்பி வைக்கிறேன். அடிச்சி ஆடுங்க... நான் நெம்ப சந்தோச படுவேன். நீங்க பெரிய டெரர் ஆச்சே மீண்டும் டெரர் ஆகனுமா என்ன?

@ ச்சின்னப்பையன்

வாங்க அண்ணாச்சி... ரொம்ப நாளா ஆள காணும் என்னாச்சி...

@ கோமா

என்ன அறிவிக்க மறந்தீர்கள்? :) வருகைக்கு நன்றி...

Unknown said...

//பிரபல பதிவர் நாமக்கல் சிபி said... //



// யோவ் லவ்டேல் மோடி! //


மேடி ய ...... " மோடி " சொல்லி என்ன பி.ஜே.பி இல சேத்துவிட்டு..... சர்ச்சையில சிக்க விடல்லாமின்னு பாக்குறிங்க...... !!!





// தேத்தூள் னா டீத்தூள்னு அர்த்தம் //


ஓஒ..... அப்புடியா.......???? நாயர் கட டீத்தூளுக்கு மட்டும்... இப்புடி ஒரு பேரு இருக்குதா......??

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நாமக்கள் சிபி

ஏன் 20% மட்டும்? மீதி 80% என்ன பண்றது :( துயரத்தில் விக்கி....

@ தமிழ்வாணன்

:) அட சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா இவ்வளோ சிரியசா ஒரு பின்னூட்டமா? உங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...

@ புபட்டியன்

அது ஒன்றும் இல்லை நண்பரே. நான் கேள்வி கேட்ட போது சொன்னார். நான் இப்போது இந்த கேள்விகளுக்கு சாதாரண மனிதனாக பதில் கொடுக்கிறேன் பத்திரிக்கை ஆசிரியனாக இல்லை என்றார். பிறகு கூட்டம் முடிந்ததும் அதே கேள்விக்கு பத்திரிக்கை ஆசிரியராக பதில் சொன்னார். ஒரு கேள்விக்கு ரெண்டு பதில். அப்படினா அவர் அந்நியன் தானே? அதான் பயந்துட்டேன்.

கலையரசன் said...

யப்பா டெரரு... வாழ்த்துக்கள் சாமியோவ்!

கிரி said...

//பார்த்தீங்களா நானும் டெரர் தான்....//

:-))

Thamiz Priyan said...

விக்கி தம்பி.. நீங்களும் ரவுடி தான் ஒத்துக்கிறோம்.. ;-))))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ கலையரசன்

நன்றி...

@ கிரி

நன்றி...

@ தமிழ் பிரியன்

:)) ஓகே.... கன்பர்ம் பண்ணிக்கிட்டேன்.

இராம்/Raam said...

டெரரர் பாஸ்,

ரவுடியா ஆனதுக்கு வாழ்த்துக்கள்.. :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

விக்கி என்னா பொன்ன சேட்டையா இருக்கு...

யாராவது சீலாப்பா பேசுனா சொல்லுங்க. நானும் ரவுடிதான்...


அருமை...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ ராம்

நன்றி தலைவரே...

@ ஜோதிபாரதி

ஓகே பாங்... ஒரு கை பார்திடலாம்...

VIKNESHWARAN ADAKKALAM said...

பிற்சேர்க்கை: எனக்கு இவ்விருதை வழங்கி இருக்கும் மேலும் இருவர் கோமா மற்றும் தமிழ் பிரியன் ஆகியோருக்கு நன்றி.

மனோவியம் said...

நன்றி விக்கி இந்த சிறியேனையும் ஞாபகத்தில் வைத்து எழுதியமைக்கு।

அன்புடன் மனோகரன்।

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மனோகரன்

நன்றி... :)