Saturday, July 25, 2009

அம்மாவிற்கு ஒரு கடிதம்அன்புள்ள அம்மாவுக்கு,

அம்மா நீங்கள் நலமா? எல்லோரும் நலம் வாழ இலச்சிமல ஆத்தா அருள் புரிவாளாக. எப்போதும், எல்லோரும் மற்றவர் மனம் குளிர சொல்வதை போல் நானும் நலம் என சொல்லிக் கொள்கிறேன்.

உங்களுக்கு 3 கண் ஊனம் என்பதை நான் அறிவேன். உலக மாறுதல் நான்காவது கண் ஒன்றை உருவாக்கி அதுவும் உங்களுக்கு தெரியாமல் செய்துவிட்டது. உலத்தை சொல்லி என்ன புண்ணியம் நீங்கள் தான் கண் திறந்து பார்க்கவில்லை என சொன்னால் பொருந்தும். நான் உளறுவதாக நினைக்க வேண்டாம் கண் என சொன்னது எழுதுவம், படிப்பதும், கணக்கிடுவதும். நான்காவது கண் கணினி, இணையம் என மனிதர்கள் சொல்லிக் கொள்ளும் ஒரு ஜந்து.

நீங்கள் படித்துவிட மாட்டீர்கள் எனும் இருமாப்பில் இக்கடிதத்தை எழுதும் என்னை இலச்சிமல ஆத்தா தான் மன்னிக்க வேண்டும். அம்மா, இக்கனத்தில் நீங்கள் அதிசய பெட்டியின் முன் அமர்ந்து ஆடல்களை இரசித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? முன்பு நம் வீட்டில் அதிசய பெட்டி இல்லை. ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கொரு முறையென மாமா வீட்டில் படம் பார்த்தால் தான் உண்டு.

ஆனால் இப்பொழுதோ காலையும் மாலையும் அலாரம் வைத்தது போல் அதிசய பொட்டியை திறந்துவிடுகிறீர்கள். சீரியல் என்ற பெயரில் வரும் சீரழிவு கண்றாவிகளை மறவாமல் காண்கிறீர்கள். அதனோடு ஒன்றிப் போகிறீர்கள். அவர்கள் அழுதால் அழவும் சிரித்தால் சிரிக்கவும் நீங்கள் கண்ணாடியின் பிரதிபலிப்பென உருவாகிவிட்டீர்கள்.

இத்தோடு நிறுத்தியபாடில்லாமல் பக்கத்து வீடு, எதிர் வீடு என அனைவரையும் கூட்டு சேர்த்துக் கொண்டு தொடர் நாடகங்களை பற்றிய தொடர் விவாதாம் செய்கிறீர்கள். இதனால் என்ன புண்ணியம் நேர்ந்தது? உங்கள் விவாதங்களை கேட்ட ஆர்வத்தில் பக்கத்து தெருவில் இருக்கும் ஆனந்தி அக்கள் வரும் தீபாவளிக்குள் ‘ஆஸ்ட்ரோ’ இணைப்பை ஏற்படுத்த வேண்டும், தொடர் நாடகங்களை பார்க்க வேண்டும் என்றிருக்கிறார். இதை கூட என்னுடன் வேலை பார்க்கும் அவர் கணவன் தான் சொன்னார். வீட்டில் நச்சரிப்பு தாங்கவில்லை என்று.

அம்மா நான் மட்டும் யோக்கியன் இல்லை. நானும் இந்த தொடர் நாடக பித்தத்தில் சிக்கிய காலம் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்தது இலச்சிமல ஆத்தாளின் கருணையாக தான் இருக்க வேண்டும். இப்பொழுதெல்லாம் ‘சீரியல்’ என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சல் தான் வருகிறது. ஜவ்வு மிட்டாயை போல் இழு இழுவென இழுத்து கடசியில் அது ஒன்றும் இல்லாத சக்கை என உணர வைக்கிறது. வாயில் இருக்கும் போது தித்திக்கும் சிறு இனிப்பு கிடைக்குமே அது போல தான் நீங்கள் கண்டு கழிக்கும் போது சிறு ஆனந்தம் ஏற்படுகிறது.

அம்மா நன்றாக யோசித்துப் பாருங்கள், இந்தத் தொடர் நாடகங்கள் பொன்னான நேரத்தை மரண படுக்கைக்கு இட்டுச் செல்லும் அரக்கன் இல்லையா? தீயனவயை போதிக்கும் சாத்தான் இல்லையா? அதன் போதனைகளை சற்று உணர்ந்திருக்கிறீர்களா? இரு மணம் புரிந்துக் கொள்ளும் கணவன், அடுத்தவன் குடும்பத்தை கெடுக்க நினைக்கும் அக்காள், அண்ணியின் மீது வேண்டா வெறுப்புக் கொண்ட தங்கை, மருமகளை அதட்டும் மாமியார், மனைவி பேச்சை வேத வாக்காக மதிக்கும் கணவன். இதுவா நம் தமிழ் கலாச்சாரம்?

முன்பு படித்தவர்கள் அதிகம் இல்லை. ஆனால் அவர்கள் ஓய்வு நேரங்களை நாவல், மாத வார சஞ்சிகைகள் என ஈடுபடுத்திக் கொண்டு தங்களது வெளியுலக அறிவை வளர்த்துக் கொண்டர்கள். இப்போது நடப்பது என்ன? சினிமா ஏடுகளை தவிர மற்ற ஏடுகள் வந்த வேகத்தில் பொட்டிப் பாம்பென அடங்கிவிடுகிறது. இது வருத்தத்திற்குறிய விடயம் இல்லையா?

அம்மா, இப்பொதெல்லாம் பட்டிணத்தில் அடிக்கடி உலகமயமாக்குதல், வினண்வெளி ஆராய்ச்சி, புவி வெப்பம், பண வீக்கம், ஏன் அதிகம் வேண்டாம் நான் இப்போது புலம்பிக் கொண்டிருக்கும் பதிவுலகில் கூட பின் நவீனதுவம் என்றெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். இவற்றை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? இவற்றை பற்றி நீங்கள் கண்டு ரசிக்கும் தொடர் நாடகங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா?

அம்மா, நீங்கள் தொடர் நாடகங்கள் பார்க்க வேண்டாமென நான் சொல்லவில்லை. சிகரெட்டு பழக்கத்தை போல நம்மவர்களிடையே மேலோங்கி நிற்கிறது இந்தச் ‘சீரியல்’ பார்க்கும் பழக்கம். அதைக் குறைத்துக் கொண்டால் நல்லதல்லவா? உங்கள் மனம் புண்படும்படி பேசி இருந்தால் இந்தச் சிறுவனை மன்னியுங்கள். நீங்கள் படிக்காத, பதில் எழுதாத கடிதத்தை இங்கே நிறுத்திக் கொள்கிறேன். இலச்சிமல ஆத்தாளின் ஆசிர்வாதத்தோடு விடைபெருகிறேன்.

அன்பு கலந்த வருத்தத்தோடு,
விக்கி.

பி.கு: இக்கடிதத்தை படித்துவிட்டு அம்மா என்னை அடிக்காமல் இருக்க அந்த இலச்சிமல ஆத்தா தான் காப்பாற்ற வேண்டும்.

49 comments:

இனியவள் புனிதா said...

நான்தான் முதல்...அப்புறம் முழு பதிவும் படிச்சிட்டு மீள் பின்னூட்டம் போடுகிறேன்.. :)

இனியவள் புனிதா said...

ஐ1 நான் தான் முதல் ...(பரிட்சையில்கூட வந்ததில்ல ...இதுல்ல ஏன் இந்த பந்தா - மனசாட்சி புலம்பல்)

அதிஷா said...

இந்த கடிதம் உங்கம்மா கண்ணு மாட்டணூமே ஆண்டவா ஸாரி இலச்சிமல ஆத்தா

அனுஜன்யா said...

விக்கி,

மிக நல்ல பதிவு. இங்கு பதிவு எழுதும் பலருக்கு ஒரு நாள் திரைப்படம் இல்லாவிடினும் தொலைக்காட்சித் தொடராவது இயக்க வேண்டும் என்ற அவா இருப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களாவது சிறிது சமூகப் பொறுப்போடு நல்ல விஷயங்களை (ஜனரஞ்சகமாக இருப்பினும்) கொடுக்க முயல வேண்டும். ஆனால் நமது பதிவுலகிலேயே ஆழ்த்த எழுத்துக்களுக்கு உள்ள வரவேற்பும் வெறும் சுவாரஸ்யத்தை மட்டும் முன்னிறுத்தும் பதிவுகளுக்குக் கிட்டும் வரவேற்பும் நீங்கள் அறிந்ததே. நமது அம்மாக்கள் இன்னும் முந்தய தலைமுறையினர். எது சுலபமோ அதை நாடுகின்றனர். இதற்கு சுலபமான தீர்வு இல்லை எனினும், நல்ல படைப்பாளிகள் சிறிது compromise செய்துகொண்டு ஆழமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்ல முன்வரவேண்டும்.

அனுஜன்யா

ஜோசப் பால்ராஜ் said...

வெற்றிகரமாக 5 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் இழுத்துக்கொண்டே இருக்கும் கோலங்கள் மெகா தொடர் ரசிகப் பேரவையின் சார்பாக , மெக சீரியல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள இப்பதிவை வன்மையாக கண்டிக்கிறோம்.

இனியவள் புனிதா said...

என்னங்க இது? வயதான காலத்தில் அம்மா தொலைக்காட்சி பார்ப்பது தவறா? அதிலும் ஓய்ந்துப் போய் விட்ட இந்தக் காலத்தில்! தொடர்கள் பார்ப்பது தவறில்லை... எம்மாதிரியான தொடர்கள் என்பதுதான் கேள்விக்குறி?

X-Files, The Apprentice, CSI போன்றவைக் கூட தொடர்தான். பல்கலைக்கழகத்தில் The Apprentice விரிவுரையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.

அப்புறம் இந்த தமிழ் நாடக தொடர்கள் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. முதலில் இந்த ஆஸ்ட்ரோவில் ஒளியேறும் நிகழ்ச்சிகள் தரமாக்கப்பட்டால் தமிழ்நாட்டு நாடகங்கள் ஒளிப்பரப்புவது குறையலாம்.

ஆனால் எங்கே உள்ளூர் படைபாளிகளுக்கு வாய்ப்புத் தருகிறார்கள். அப்படியே தந்தாலும் தமிழ் தெரிந்திருக்கக் கூடாது என்ற நிபந்தனை.

எனக்குத் தெரிந்து ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளிப்பரப்பாவது எல்லாமே தமிழ் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகள்தான்....

வெண்பூ said...

நன்றாக எழுதிகிறீர்கள் விக்கி.. சொல்ல வந்த கருத்தை அழகாக விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN said...

//இனியவள் புனிதா said...
நான்தான் முதல்...அப்புறம் முழு பதிவும் படிச்சிட்டு மீள் பின்னூட்டம் போடுகிறேன்.. :)//

ஆம் நீங்கதான் மொதோ ஆளு..


//இனியவள் புனிதா said...
ஐ1 நான் தான் முதல் ...(பரிட்சையில்கூட வந்ததில்ல ...இதுல்ல ஏன் இந்த பந்தா - மனசாட்சி புலம்பல்)//

மனசாட்சியே நீ வாழ்க...

VIKNESHWARAN said...

//அதிஷா said...
இந்த கடிதம் உங்கம்மா கண்ணு மாட்டணூமே ஆண்டவா ஸாரி இலச்சிமல ஆத்தா//

அந்த இலச்சிமல ஆத்தா சத்தியமா எக்கம்மா என் வலைதளத்தை பார்த்ததில்லை, படித்ததும் இல்லை. அப்படி பார்த்தார் என்றால் ஸ்ரேயா படத்திற்கே துடைப்பக்கட்டை பிய்ந்துபோய் இருக்கும்...

VIKNESHWARAN said...

//அனுஜன்யா said...
விக்கி,

மிக நல்ல பதிவு. இங்கு பதிவு எழுதும் பலருக்கு ஒரு நாள் திரைப்படம் இல்லாவிடினும் தொலைக்காட்சித் தொடராவது இயக்க வேண்டும் என்ற அவா இருப்பதை என்னால் உணர முடிகிறது. அவர்களாவது சிறிது சமூகப் பொறுப்போடு நல்ல விஷயங்களை (ஜனரஞ்சகமாக இருப்பினும்) கொடுக்க முயல வேண்டும். ஆனால் நமது பதிவுலகிலேயே ஆழ்த்த எழுத்துக்களுக்கு உள்ள வரவேற்பும் வெறும் சுவாரஸ்யத்தை மட்டும் முன்னிறுத்தும் பதிவுகளுக்குக் கிட்டும் வரவேற்பும் நீங்கள் அறிந்ததே. நமது அம்மாக்கள் இன்னும் முந்தய தலைமுறையினர். எது சுலபமோ அதை நாடுகின்றனர். இதற்கு சுலபமான தீர்வு இல்லை எனினும், நல்ல படைப்பாளிகள் சிறிது compromise செய்துகொண்டு ஆழமான விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்ல முன்வரவேண்டும்.

அனுஜன்யா//

உங்கள் பின்னூட்டம் ஊட்டச்சத்து சாப்பிட்ட உணர்வைக் கொடுக்கிறது. மிக மகிழ்ந்தேன்... உங்கள் கருத்துக்கள் யோசிக்க வைக்கின்றன.. நன்றி அனுஜன்யா... மீண்டும் வருக...

VIKNESHWARAN said...

//ஜோசப் பால்ராஜ் said...
வெற்றிகரமாக 5 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் இழுத்துக்கொண்டே இருக்கும் கோலங்கள் மெகா தொடர் ரசிகப் பேரவையின் சார்பாக , மெக சீரியல்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ள இப்பதிவை வன்மையாக கண்டிக்கிறோம்.//

அவ்வ்வ் நீங்க சீரியல் பார்க்கும் கட்சியா??? நான் பல்கலைகழகம் போவதற்கு முன் ஆனந்தம் எனும் நாடகம் ஓடிக் கொண்டிருந்தது... நான் படித்து முடித்து பட்டம் வாங்கிய பின்னும் அது முடிந்தபாடில்லை.. இன்னமும் ஓடுகிறதா என தெரியவில்லை... இலச்சிமல ஆத்தா என்ன கொடுமை இது...

VIKNESHWARAN said...

//இனியவள் புனிதா said...
என்னங்க இது? வயதான காலத்தில் அம்மா தொலைக்காட்சி பார்ப்பது தவறா? அதிலும் ஓய்ந்துப் போய் விட்ட இந்தக் காலத்தில்! தொடர்கள் பார்ப்பது தவறில்லை... எம்மாதிரியான தொடர்கள் என்பதுதான் கேள்விக்குறி?

X-Files, The Apprentice, CSI போன்றவைக் கூட தொடர்தான். பல்கலைக்கழகத்தில் The Apprentice விரிவுரையாளரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.

அப்புறம் இந்த தமிழ் நாடக தொடர்கள் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. முதலில் இந்த ஆஸ்ட்ரோவில் ஒளியேறும் நிகழ்ச்சிகள் தரமாக்கப்பட்டால் தமிழ்நாட்டு நாடகங்கள் ஒளிப்பரப்புவது குறையலாம்.

ஆனால் எங்கே உள்ளூர் படைபாளிகளுக்கு வாய்ப்புத் தருகிறார்கள். அப்படியே தந்தாலும் தமிழ் தெரிந்திருக்கக் கூடாது என்ற நிபந்தனை.

எனக்குத் தெரிந்து ஆஸ்ட்ரோ வானவில்லில் ஒளிப்பரப்பாவது எல்லாமே தமிழ் கலாச்சார சீரழிவு நிகழ்ச்சிகள்தான்....//

நீங்க திட்றிங்களா இல்ல பாரட்டுறிங்களா... டீ.பி.சி.டி மாதிரி வில்லங்கமான ஆளா இருக்கிங்களே... பு.த.செ.வி...

இனியவள் புனிதா said...

//நீங்க திட்றிங்களா இல்ல பாரட்டுறிங்களா... டீ.பி.சி.டி மாதிரி வில்லங்கமான ஆளா இருக்கிங்களே... பு.த.செ.வி...//

திட்டாமல் திட்டுவது இப்படித்தான். இந்த வயசுலயும் அம்மாகிட்ட அடி வாங்குவீங்களா...நம்பும்படியாத்தான் சொல்லுங்களேன் ;)

ச்சின்னப் பையன் said...

நல்ல கடிதம். அதிஷா சொன்னாமாதிரி நடந்தா சரிதான்...:-)))

ச்சின்னப் பையன் said...

இன்னும் எவ்ளோ ஸ்ரேயா படம் கைலே வெச்சிருக்கீங்க... (அவ்ளோ பதிவு போடுவீங்கன்னு எதிர்ப்பார்க்கலாம்)...

VIKNESHWARAN said...

// வெண்பூ said...
நன்றாக எழுதிகிறீர்கள் விக்கி.. சொல்ல வந்த கருத்தை அழகாக விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி வெண்பூ...

Anonymous said...

எங்க வீட்ல தான் இப்படின்னு பாத்தா உங்க வீட்லயுமா?

Anonymous said...

தொடர்ந்து மூணு பதிவுல ஸ்ரேயா படம் போடுற, என்ன விஷயம் மகனே?

ARUVAI BASKAR said...

பார்த்தால் மட்டும் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம் !
சிலர் அதனை (எனது அம்மா ) அதை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள் !
உடன் பிறந்தவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது , மருமகள்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது என்று .
அதுதான் கொடுமையிலும் கொடுமை !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

பரிசல்காரன் said...

மிக நல்ல பதிவு.

பதிலுக்கு உங்க அம்மா சார்பில ஒரு பதிவு கூடிய சீக்கிரம் போடறேன் பாருங்க!

தலைப்பு: வலைப்பூவில் விழுந்த மகன்

சதீசு குமார் said...

இதுக்கே இப்படி சொல்றீங்களே, மெட்டி ஒலி தொடர விடாம பாத்துகிட்டு வந்த ஒரு பொண்ணு, கடைசித் தொடர பாக்கத் தவற விட்டதுனாலே, தீக்குளிச்சிருச்சாம்.. என்னமோ டீ குடிக்கிற விஷயம் மாறி எவ்ளோ அசால்டா தனக்குத்தானே காரியம் பண்ணிகிச்சு இந்த பொண்ணு.. மெட்டி ஒலி டைரக்டர் இந்த சம்பவத்த வெச்சி தன்னோட சீரியல்க்கு கிடைச்ச வெற்றின்னு வேற அறிக்கை விட்டுருக்காரு.. இப்ப அடுத்து வெற்றிகரமா கழுத்தறுத்துகிட்டு இருக்குற கஸ்தூரீரீரீரீரீரீரீ ஓ..ஓ..ஓ.. எந்த உயிரே வாங்கபோதோ..?

கு.உஷாதேவி said...

இலச்சிமல ஆத்தா என்றும் உங்களுக்கு துணையாக இருப்பாள்.....தைரியமாக தொடரிந்து உங்கள் கை வரிசையை காட்டுங்கள்...

VIKNESHWARAN said...

//ச்சின்னப் பையன் said...
நல்ல கடிதம். அதிஷா சொன்னாமாதிரி நடந்தா சரிதான்...:-)))//

என்ன மாட்டிவிட பெரிய படையே சுத்துது போல...

//ச்சின்னப் பையன் said...
இன்னும் எவ்ளோ ஸ்ரேயா படம் கைலே வெச்சிருக்கீங்க... (அவ்ளோ பதிவு போடுவீங்கன்னு எதிர்ப்பார்க்கலாம்)...//

கைல இல்லைங்க நெட்ல இருக்கு... வருகைக்கு நன்றி சின்ன பையன்.

VIKNESHWARAN said...

// vijaygopalswami said...
எங்க வீட்ல தான் இப்படின்னு பாத்தா உங்க வீட்லயுமா?//

எல்லோர் வீட்டிலும் தான் போல சித்தப்பு.

//தொடர்ந்து மூணு பதிவுல ஸ்ரேயா படம் போடுற, என்ன விஷயம் மகனே?//

ஸ்ரேயா மேல காதல்...

VIKNESHWARAN said...

//ARUVAI BASKAR said...

பார்த்தால் மட்டும் கூட பரவாயில்லை என்று விட்டு விடலாம் !
சிலர் அதனை (எனது அம்மா ) அதை வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள் !
உடன் பிறந்தவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது , மருமகள்களுக்குள் பிரிவை ஏற்படுத்துவது என்று .
அதுதான் கொடுமையிலும் கொடுமை !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்//

வாங்க... அருவை பாஸ்கர்... உங்கள் முதல் வருகையை வரேவேற்கிறேன்...
நீங்கள் சொல்வது வருததிற்குறிய விடயம்தான். என்ன செய்வது. நமது ஊடகங்களுக்கு அதுதானே வேலையாக இருக்கிறது...

VIKNESHWARAN said...

// பரிசல்காரன் said...
மிக நல்ல பதிவு.
பதிலுக்கு உங்க அம்மா சார்பில ஒரு பதிவு கூடிய சீக்கிரம் போடறேன் பாருங்க!
தலைப்பு: வலைப்பூவில் விழுந்த மகன்//

அவ்வ்வ் பரிசல் நீங்க கூட என் பக்கம் இல்லையா? வேதனை படுகிறேன்...

VIKNESHWARAN said...

// சதீசு குமார் said...
இதுக்கே இப்படி சொல்றீங்களே, மெட்டி ஒலி தொடர விடாம பாத்துகிட்டு வந்த ஒரு பொண்ணு, கடைசித் தொடர பாக்கத் தவற விட்டதுனாலே, தீக்குளிச்சிருச்சாம்.. என்னமோ டீ குடிக்கிற விஷயம் மாறி எவ்ளோ அசால்டா தனக்குத்தானே காரியம் பண்ணிகிச்சு இந்த பொண்ணு.. மெட்டி ஒலி டைரக்டர் இந்த சம்பவத்த வெச்சி தன்னோட சீரியல்க்கு கிடைச்ச வெற்றின்னு வேற அறிக்கை விட்டுருக்காரு.. இப்ப அடுத்து வெற்றிகரமா கழுத்தறுத்துகிட்டு இருக்குற கஸ்தூரீரீரீரீரீரீரீ ஓ..ஓ..ஓ.. எந்த உயிரே வாங்கபோதோ..?//

எதற்கு யார் எப்படி சொன்னார்கள்... சொல்லுங்கள் பஞ்சாயத்தை கூட்டிவிடுவோம்... நீங்கள் சொல்வதும் வேதனையை கொடுக்கிறது... யோசிக்கத் தெரியாத மூடர்களின் வேலை அது...

VIKNESHWARAN said...

// கு.உஷாதேவி said...
இலச்சிமல ஆத்தா என்றும் உங்களுக்கு துணையாக இருப்பாள்.....தைரியமாக தொடரிந்து உங்கள் கை வரிசையை காட்டுங்கள்...//

உஷா எனக்கு சாதகமாக ஓட்டு போட்டிருக்கிங்க.. ரொம்ப நன்றி... மீண்டும் வருக...

ஜி said...

:))))

ஜெகதீசன் said...

இந்தப் பதிவை என் அம்மாவிடம் காட்டினேன்...

நான் சீரியல்ல உக்காந்துருக்குறதை விட அதிக நேரம் நீதான் ப்ளாக் ல உக்காந்துருக்க.. நீ மொதல்ல அதை நிறுத்து.. நான் இதை நிறுத்துறேன்.. அப்படின்னு சொல்லி என் வாயை அடைச்சிட்டாங்க
:P

A N A N T H E N said...

இது அம்மாக்கு எழுதின மாதிரி தெரியல

சீரியல் பார்க்கிற எல்லாருக்கும் எழுதுன மாதிரி இருக்கு

(அட இவ்வளவு லேட்டா புரியுதே அனந்தா உனக்குன்னு கிண்டல் செய்யக் கூடாது)

இருந்தாலும் சீரியல்னால நீங்க ரொம்ப அடிப்பட்டு இருக்கிங்கன்னு தெரியுது

அதானே... விக்னேசு சொல்லுற மாதிரி அதுல என்னத்தான் இருக்கு? அழுகை, குழப்பம், மசாலா தவிர?

A N A N T H E N said...

//நான் சீரியல்ல உக்காந்துருக்குறதை விட அதிக நேரம் நீதான் ப்ளாக் ல உக்காந்துருக்க.. நீ மொதல்ல அதை நிறுத்து.. //

ஹாஹா... இப்படி உண்மையெல்லாம் பேசுறதுக்கு ஆம்மாக்கு எப்படித்தான் மனசு வருதோ!

VIKNESHWARAN said...

@ ஜீ, ஜெகதீசன், ஆனந்தன் அணைவருக்கும் நன்றி... மீண்டும் வருக...

மங்களூர் சிவா said...

/
அதிஷா said...

இந்த கடிதம் உங்கம்மா கண்ணுல மாட்டணூமே ஆண்டவா ஸாரி இலச்சிமல ஆத்தா
/

ரிப்பீட்டு


பதிவு சூப்பர்

கிரி said...

வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. சீரியலை பார்த்து தன் நிலை மாறாமல் இருந்தாலே போதும்.

என் வீட்டில் கூட என் அம்மா சீரியல் பார்த்தார்கள் என்றால் நான் தடுப்பதில்லை, நாம் அங்கே இங்கே வெளியே போகிறோம், பலரை சந்திக்கிறோம், அவர்கள் வீட்டிலேயே இருப்பவர்கள் அவர்கள் வேறு என செய்வார்கள்.

நான் கூறுவது இந்த நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே....

VIKNESHWARAN said...

@சிவா

பதிவு சூப்பரா இல்லை பதிவில் இருக்கும் ஸ்ரேயாவா?

@கிரி

மிக்க நன்றி கிரி. என் அம்மாவும் அதிகம் சீரியல் பார்க்க மாட்டார். பதிவுக்காக எழுதியது,

அவனும் அவளும் said...

உங்க அம்மா வேற என்ன பண்ணலாம்ன்னு சொல்லி இருக்கலாமே ? நம்ப வலைப்பூல எழுதற நேரத்துல ஒரு மணிநேரம் அம்மா கூட பேசி பாக்கலாமே. (எத பத்தி வேணும்னாலும்) பாதி வீட்டுல ஒரு விதமான depression.
அவங்களோட பேசறதுக்கு ஆள் கிடையாது. அப்படி இருக்கும் போது அவங்களுக்கு உரிய தோழிகளோட அவங்களுக்கு புரிஞ்சத/பிடிச்சத பாக்க அரம்பிக்கறாங்க. அப்புறம் அது ஒரு பழக்காமவே போய்டுது. அவ்வளவு தான். இந்த பின்னூட்டத்த பெர்சனலா எடுத்துக்காதீங்க.

புதுகைச் சாரல் said...

சுதந்திரத்தை கொண்டாடுவோம்!

சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!
http://mohideen44.blogspot.com

RAHAWAJ said...

இப்போது இருக்கும் அம்மன்கள் பத்தாது புதிதாக இலச்சிமல ஆத்தாள் வேறு சாமி இந்த விளையாட்டுக்கு நா வரலை ஹி ஹி ஹி ஹி

ஆட்காட்டி said...

அப்ப நாங்கள் எல்லாம் என்ன செய்யிறது? சட்டிங், டேட்டிங் எண்டு போகவா முடியும்?

VIKNESHWARAN said...

@ அவனும் அவளும்

சிறப்பான கருத்து... வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி... மீண்டும் வருக.

@ஜவஹர்.

அது சும்மா ஒரு இணைப்புக்கு எடுத்துக் கொண்டது. நான் அவனில்லை எனும் படத்தின் நாயகன் சொல்லும் வார்த்தை.

@ ஆட்காட்டி

என்ன? ஒன்னும் புரியல :((

ஆட்காட்டி said...

அம்மாவா சொன்னனுங்கோ.

Karthik said...

Pinkurippu rombha arumainga!!!!

தராசு said...

///////தொடர்ந்து மூணு பதிவுல ஸ்ரேயா படம் போடுற, என்ன விஷயம் மகனே?//

ஸ்ரேயா மேல காதல்...////////

அய்யய்யோ, இந்த பையனப் பாருங்க. நேத்து வரைக்கும் நல்லா பேசிகிட்டு , பழகிகிட்டு இருந்துச்சு, இன்னைக்கு திடீர்னு இப்பிடி ஆகிப்போச்சே,

ஆத்தா, நீ இதையெல்லாம் பாக்க மாட்டியா???????

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு விக்கி...சிரேயா மாதிரி விக்கிக்கு ஒரு பொண்ணு அமைய வாழ்த்துகள்...

tamilvanan said...

வயதான அம்மா அப்பாக்கள் எல்லாம் மெகா தொடர் பார்க்கலாம். ஆனா வளரும் குழந்தைகளும், நடுத்தர வயதினரும் தவிர்த்தால் நல்லது.

சிவனேசு said...

சிவனேசு : நல்ல படைப்பு! வாழ்த்துக்கள் நண்பா!

மனசாட்சி : முதல்ல விக்கியோட அம்மாகிட்ட அவர மாட்டிவிட்டுட்டு தான் மறுவேலை ஹி ஹி ஹி!

Anonymous said...

ஹை, நானும் படிச்சேனே..:)
சொல்ல வந்த கருத்துக்களை ரொம்ப அருமையாக சொல்லிருக்கீங்க..
its really nice விக்கி..

மறந்திடாம உங்க shereyaக்கு ஒரு hi kva..:)

~டீபா~

VIKNESHWARAN said...

@ ஆட்காட்டி

நன்றி...

@ கார்த்திக்

நன்றி...

@ தராசு

ஆத்தாவா... ஹி ஹி ஹி.... நல்லா இருங்க...

@ ஜோதிபாரதி

அண்ணா ஏன் இந்த கொலை வெறி...

@ தமிழ்வாணன்

எப்படி சொல்றிங்க??? நல்ல கமிடி அடிக்கிறிங்க போங்க...

இத தான் பெரிசுக டம் அடிச்சா டென்ஷன்னு சொல்றதும் சிறிசுக டம் அடிச்சா உறுப்பிடாதததுனு சொல்றதுக்கும் சமம்...

@ சிவனேசு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

@ டீபா

நக்கலு... இருக்கட்டும்....