நண்பர்களே பின்னூட்ட சுனாமி வால்பையன் நமக்காக மனம் திறந்து பேசுகிறார். படித்து ஆனந்தம் அடையுங்கள்...(தமது ஒற்றைக் கரத்தால் தொடர் வண்டியை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் வால்)
வால்: அண்ணே நான் அவ்வளவு வொர்த் இல்லைணே!
பலமான பார்வையெல்லாம் பெரிய வார்த்தைண்ணே!
யாருடா இவன் குரங்கு சேட்டை பண்றான்னு நாலு பேரு பாக்குறாங்க! பண்ற சேட்டைக்கு ஏத்தா மாதிரி அடி விழுது!
கே: பதிவெழுதுவதனால் முன், பின், பக்க விளைவுகள் ஏதும் திரைக்குப் பின்னால் உள்ளனவா?
வால்: ஆரம்ப காலங்களில் பதிவெழுதுவதற்காக நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது! எல்லாவற்றிலும் பதிவுக்கான கருவை தேடி அதை முழுமையாக ரசிக்க மறந்தேன்! மன உளைச்சலுக்கு ஆளானேன்! இது என்னடா வம்பா போச்சுன்னு பதிவை குறைச்சு பின்னூட்டம் மட்டும் போட்டு கொண்டிருக்கிறேன்! நிம்மதியாக இருக்கிறேன்.
கே: தமிழ்மண நட்சத்திர பதிவராக இருந்த அனுபவத்தைப் பற்றி ஓரிரண்டு வரிகள்.
கே: ஏகப்பட்ட பதிவுகளில் உங்களின் கலக்கலான பின்னூட்டங்களைக் காண முடிவதாக பதிவுலக மக்கள் திருவாய் மலர பேசிக்கொள்கிறார்கள். பின்னூட்டங்களைப் பற்றிய உங்கள் பார்வை என்ன?
கே: வாசகர்கள் இல்லாமல் ஒரு பதிவர் வெளிச்சத்துக்கு வந்துவிடுவதில்லை. கருத்துகளை பகிர்ந்துக் கொள்ள நினைக்கும் ஒரு சில வாசகர்களே பின்னூட்டமிடுகிறார்கள். சில பதிவர்களிடையே அதற்கான தகுந்த மறுமொழி இல்லாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
வால்: பதிவுலகம் கண்ணாடி மாதிரி நாம என்னை கொடுக்குறோமோ அது தான் திரும்ப கிடைக்கும்! சிலர் வாங்கிட்டு திரும்பி தரமாட்டாங்க! அவுங்க விதிவிலக்கு லூஸ்ல விடுங்க! அதுக்காக பின்னூட்டம் இடுவதையே பாவ செயல்னு ஒதுங்கிறாதிங்க! பின்னூட்டம் சுவாரஸ்யமாக இருந்தால் மற்ற நண்பர்கள் கவனிப்பார்கள்!
கே: பின்னூட்டங்களை சுயசொறிதல் என கருதுகிறீர்களா?
வழக்கம் போல கலக்கல் அசத்தீடிங்க சூப்பர்சான்சே இல்ல :) என டெம்ப்ளெட் பின்னூட்டங்கள் இடத்தை அடைக்கின்றன! கருத்துகளத்தில் ஜால்ரா சத்தம் தான் அதிகமா கேட்குது!
கே: உன்னை யாரும் வெத்தலை பாக்கு வச்சி அழைக்கல. பிடிக்கலனா என் பதிவ படிக்காதே என சொல்பவர்களைப் பற்றி.
கே: சாருவின் பதிவை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் சரக்கடிப்பது வேஸ்ட் ஆகிவிடுவதாக சொல்கிறீர்கள். அப்படி என்றால் சரக்கடிக்காமல் அவர் பதிவுகளை படிக்க வேண்டும் என சொல்கிறீர்களா?
கே: நான் எழுதும் வரை தான் இந்த எழுத்து எனக்கு சொந்தம் எழுதிய பிறகு யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என சொல்லும் சாரு, சில விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமுடியாமல் கபடியாடிவிடுகிறாரே?
வால்: சாரு தன்னம்பிக்கையை தாண்டி தலைகண லெவலுக்கு சென்று விட்டார். அவரை விமர்சிப்பவர்கள் சாத்தான்களின் தூதுவர்கள் ரேஞ்சுக்கு தான் அவரது பேச்சு இருக்கிறது. ஆனால் இவர் மட்டும் சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சிப்பார்! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவரது சிஷ்ய கோடிகளும் அதே போல் இருப்பது
கே: திரைப்படம் பார்ப்பது எப்படி என பதிவுகள் வந்திருக்கும் பட்சத்தில் உலக திரைப்படம் பார்ப்பது எப்படி என்ற ஒரு பதிவை உங்களிடம் இருந்து கோடான கோடி மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். எழுதினால் என்ன?
கே: சரக்கடித்துவிட்டு பதிவிடுவது நல்லதா இல்லை பின்னூட்டமிடுவது நல்லதா?
கே: சமீப காலமாக புதிய பதிவர்கள் அதிகரித்து வருவதப் பற்றி?
வால்: வாசிப்பனுபவம் உயர்ந்து கொண்டே வருவது நல்ல ஆரோக்கிய சூழல் தானே! வரவேற்கிறேன்! அனைவரையும்
கே: தமிழ்மண திரட்டியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில தலைப்புகளுக்கே மவுசு இருப்பதாக தெரிகிறது. சலிப்படைந்தது உண்டா?
கே: குறுகிய காலத்தில் தமிழிஷின் வெற்றி பற்றி?
கே: நெல்லைத் தமிழ் திரட்டியின் நிர்வாகி நீங்கள் என பேசப்படும் கிசுகிசுக்களைப் பற்றி?
கே: சில பதிவர்களிடையே கருத்து மோதல் எனும் பெயரில் தனிமனித தாக்குதல் நடத்திக் கொள்கிறார்களே?
வால்: ஆழ்ந்து நோக்கினால் தனிமனித தாக்குதலுக்கு ஆரம்ப காரணம் தனிமனித துதி என்பது தெரியும்! யாரும் யாரையும் வரும்போதே எதிரியாக பார்ப்பதில்லை! ஒருவருடைய தனிமனித துதி, கருத்து வேறுபாடுகளால் வாதம் ஏற்படுகிறது! தனிமனித துதியை ஆதரிப்போர் பெரும்பாலும் குறுகிய மனம் படைத்தவர்களாக தான் இருக்கிறார்கள் . அதனாலேயே அவர்களது வாதம் விவாதமாகி பாதியில் முடக்கு வாதமாகி அவரது ப்ளாக்கில் இவரை திட்ட, இவரது ப்ளாக்கில் அவரை திட்ட, அவருக்கு சில ஆதரவு, இவருக்கு சில ஆதரவு என பல குழுக்கள் இன்று தமிழ் வலையுலகில் இருக்கின்றன! (விதிவிலக்குகளும் உண்டு)
கே: சில பதிவர்கள் யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை ஆனால் ஏன் எனக்கு நீ பின்னூட்டம் போடவில்லை என கேட்பது பற்றி?
கே:
//நீ யாரடா ஒரு எழுத்தாளனுக்கு ஆர்டர் போட! கேரளாவில் போய் பார் எல்லாம் எப்படி புட்டு சுடுறாங்கன்னு!
அப்படின்னு தேவையற்ற வார்த்தைகளை இடையில் சேர்த்து பெருக்கி நாலு பக்கத்துக்கு ஒரு கட்டுரை வரும்
வராட்டி ஏண்டா நாயேன்னு கேளுங்க!//
இந்த யுக்தியை எப்படி கண்டு பிடிச்சிங்க? :)
கே: விரும்பிப் படிப்பது?
வால்: தமிழ் வலைப்பூக்கள்
கே: பிடிக்காதது?
வால்: தற்புகழ்ச்சி
கே: உங்கள் பார்வையில்:
அதிஷா- எழுத்தில் திரிஷா
குசும்பன் - எழுத்து கலைவாணர்
லக்கிலுக் - நகைச்சுவையாக எழுதியவர்(தற்பொழுது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்)
கோவி.கண்ணன் - பகுத்தறிவு கருத்து கந்தசாமி!
வடகரை வேலன் - மரியாதைகுறிய அண்ணாச்சி
கார்க்கி - பெண் ரசிகைகளை ஏராளமாக கொண்டவர்(கனவில் மட்டும்)
கே: பதிவர் சந்திப்பு?
கே: பதிவுலக சாதனை?
வால்: ஏராளமான நண்பர்கள்
கே:பிடித்த எழுத்தாளர்?
வால்:ஒன்றை போல் ஒன்று இருப்பதில்லை! யாரை சொல்ல!
(கேள்வியும் பதிலும் நீங்களே)
அய்யனார்
குசும்பன்
ச்சின்னபையன்
மற்றும் உங்களை
(பி.கு: பேட்டி கொடுத்த வால்பையனுக்கு நன்றி. அடுத்தபடியாக ஃபிட்டுபடம் with அதிஷா எனும் பதிவை விரைவில் எதிர்பாருங்கள். அதிஷாவிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை எனக்கு மின்மடலில் அனுப்பி வைக்கலாம்).
57 comments:
பேட்டி அருமை..வால் பையன் வாழ்த்துக்கள்..
விக்கி புதிய முயற்சி போல் இருக்கு..வெற்றியடைய வாழ்த்துக்கள்
வால்பையனின் பதில்கள் அருமை..!
(என்னாது இது டெம்ப்ளேட் பின்னூட்டமா?)
அய்யனார்
குசும்பன் //
அய்யனார் வரிசையில் என் பெயரையும் சொன்னதை நான் இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்!:)
பின்னூட்டம் பற்றிய உங்கள் கருத்துஅருமை வால்!
//(தமது ஒற்றைக் கரத்தால் தொடர் வண்டியை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் வால்)//
டிரைனை கடத்தி மோத செய்ததில் இவருக்கும் தொடர்பு இருக்கும் போல இருக்கே!!!
அருமையான பேட்டி கொடுத்துள்ளார் வால்பையன் . பேட்டியெடுத்த நண்பருக்கும் வாழ்த்துக்கள்
படத்தில் வால் “பையனை” காணவில்லையே...? :-)))
கல்லக்கல்ல் :-)))))
@ வியா
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
@ டக்ளஸ்
டெம்ப்ளேட் தானே? அதில் என்ன சந்தேகம்... வருகைக்கு நன்றி :)))
@ குசும்பன்
சுண்டு விரலில் தொடர் வண்டியை தூக்கி வீச வல்லவர் வால். கடத்தல் எல்லாம் ஜுஜுபி மேட்டர். வருகைக்கு நன்றி குசும்பரே... :)
@ சுரேஷ் குமார்
வருகைக்கு நன்றி... டெம்ப்ளேட்டா??? :))
@ டொன் லீ
டபுள் மீனிங் பேச்சு... டொன் லீயை வன்மையாக கண்டிக்கிறேன் :))
@ சென்ஷி
நன்றி அண்ணே... இதுவும் டெம்ப்ளேட் தானே?? :))
//வால்: நான் திரையரங்கம் செல்லவதில்லை! வீட்டிலேயே லேப்டாப்பில் பார்ப்பதோடு சரி! என் மகள் விளையாட வந்தால் படத்தை நிறுத்தி விளையாட சென்று விடுவேன்! திரைப்படத்தை விட எனக்கு என் மகள் தான் முக்கியம்! திரைப்படம் நிழல், என் மகள்.//
ஐ வால் சித்தப்பா ரொம்ப நல்லவரா இருக்காரே!!
//உலக திரைப்படமாக இருந்தாலும் சரி உள்ளூர் படமாக இருந்தாலும் சரி! இரவு மூன்று மணிக்கு மேல் பார்ப்பது எனது வழக்கம்! உங்களுக்கு சரிப்பட்டு வருமா!//
ஐய்யோ., அது பேய்கூட தூங்கிற நேரமே...
வாழ்த்துகள் விக்கி, நல்ல கான்செப்டை பிடிச்சிருக்கீங்க.`இதே போல் இருபது பதிவுகளை எதிர்பார்க்கலாமா?
//@ சென்ஷி
நன்றி அண்ணே... இதுவும் டெம்ப்ளேட் தானே?? :))//
அடப்பாவி! ஹேய்.. உண்மையிலேயே ரொம்ப ரசிச்சு படிச்சேன்ப்பா கேள்வி பதிலை.
வால்பையன் அறிவாளின்னு தெரியும். ஆனா பதிலை இவ்ளோ அழகா சொல்ற சாமர்த்தியசாலின்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
கேள்விகளும் ரொம்ப நல்லாயிருக்குது!
இது வேற வாயி....
தெகிறியமிருந்தா சனிக்கெழம ராத்திரி...இல்லாட்டி...நாயித்துக்கெழம பகல்ல பேட்டி எடுத்துப்போடுங்க விக்கி.
பல உண்மைகள வெளிய கொண்டாரலாம்.
தலைப்புக்கும் பேட்டிக்கும் பொருந்தலை.
இது ஒரு மனம் திறந்த பேட்டி என்பது படிக்கும்போது தெரிகிறது...ஆனா தலைப்பு கிண்டலடிக்கிற மாதிரி இருக்கு விக்கி.அப்ஜெக்ஷன் சஸ்டெய்ண்டு.
//லக்கிலுக் - நகைச்சுவையாக எழுதியவர்(தற்பொழுது தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்)
//
I differ in this comment
Now too he writes funny things on DMK :)
Anputan
Singai Nathan
// குசும்பன் said...
அய்யனார் வரிசையில் என் பெயரையும் சொன்னதை நான் இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்!:)//
ஏந் தல உங்கள நீங்களே அண்டர்எஸ்டிமேட் பண்ணிக்குரீங்க.
அட்டகாசமான கேள்விகள்.. பதிலும்தான்...
வாலு வாலுதான்.. இது சூப்பர் வாலுதான்..
இந்த வாலுக்கேத்த விக்கி கேள்விதான்...
ஹே கஞ்சி கஞ்சிதான்.. இது சுண்ட கஞ்சிதான்
அடுத்து வர்றது அதிஷா பேட்டிதான்...
பதிவு நன்றாக வந்துள்ளது. விக்கி, வால்பையன், இருவருக்கும் வாழ்த்துக்கள்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
//
ஆரம்ப காலங்களில் பதிவெழுதுவதற்காக நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது! எல்லாவற்றிலும் பதிவுக்கான கருவை தேடி அதை முழுமையாக ரசிக்க மறந்தேன்! மன உளைச்சலுக்கு ஆளானேன்! இது என்னடா வம்பா போச்சுன்னு பதிவை குறைச்சு பின்னூட்டம் மட்டும் போட்டு கொண்டிருக்கிறேன்! நிம்மதியாக இருக்கிறேன்.
//
சேம் பிளட் :)
சென்ஷி said...
வால்பையன் அறிவாளின்னு தெரியும். ஆனா பதிலை இவ்ளோ அழகா சொல்ற சாமர்த்தியசாலின்னு //
சொல்லவே இல்ல:))
கார்த்திக் said...
ஏந் தல உங்கள நீங்களே அண்டர்எஸ்டிமேட் பண்ணிக்குரீங்க.//
அண்டர் எஸ்டிமேட்டும் இல்ல ஒன்னும் இல்ல பினா வானா ஆட்கள் அருகில் நம்ம பேரும் என்றால் எனக்கு அலர்ஜி அதான்:)
இயல்பான பேட்டி
வாழ்த்துக்கள்
தெளிவான பதில்கள்.
வால் சார் நீங்க எங்கயோ போயீட்டீங்க.
//குசும்பன் said...
கார்த்திக் said...
ஏந் தல உங்கள நீங்களே அண்டர்எஸ்டிமேட் பண்ணிக்குரீங்க.//
அண்டர் எஸ்டிமேட்டும் இல்ல ஒன்னும் இல்ல பினா வானா ஆட்கள் அருகில் நம்ம பேரும் என்றால் எனக்கு அலர்ஜி அதான்:)
//
நல்லவேளை நான் கொஞ்சம் தள்ளியே இருக்கேன்.... :-)))
@ அப்பாவி முரு
காலம் அனுமதி கொடுத்தால் தினமும் கூட பதிவிடலாம். :)
@ சென்ஷி
நன்றி :)
@ கும்கி
அண்ணே நான் சனிக்கிழமை தான் கேட்டேன்... பதில் செவ்வாய் தான் வந்தது. வால் நெம்ப பிசி :)
இப்பிடி தலைப்பு போட்டா தான் 4 பேரு நம்ம பிளாக்கு பக்கம் எட்டி பாக்குறாங்க... என்ன செய்ய :))
@ சிங்கை நாதன்
நாராயணா... நாராயணா.... ஆகட்டும் ஆகட்டும் நடத்துங்கள்...
@ கார்த்திக்
வருகைக்கு நன்றிங்க...
@ ச்சின்னப் பையன்
உங்க பேட்டி எப்போ??
@ பொன்.வாசுதேவன்
வாழ்த்துக்கு நன்றி அன்பரே...
@ ஆளவந்தான்
வருகைக்கு நன்றி...
@ குசும்பன்
அப்ப என் பேரு பக்கத்துல துண்ட போட்டு எடம் புடிங்க...
@ அறிவே தெய்வம்
நன்றி...
@ விஷ்ணு
வருகைக்கு நன்றி...
@ ச்சின்னப் பையன்
மீண்டும் நன்றி :)
வந்துட்டேன்!
வாழ்துரைத்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!
பதில்கள் எல்லாம் சூப்பர்..
//சாரு தன்னம்பிக்கையை தாண்டி தலைகண லெவலுக்கு சென்று விட்டார். அவரை விமர்சிப்பவர்கள் சாத்தான்களின் தூதுவர்கள் ரேஞ்சுக்கு தான் அவரது பேச்சு இருக்கிறது. ஆனால் இவர் மட்டும் சகட்டு மேனிக்கு அனைவரையும் விமர்சிப்பார்! இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவரது சிஷ்ய கோடிகளும் அதே போல் இருப்பது//
அவரைப் பற்றி எழுதக் கூடாதென்பது என் அவா. நீங்களே அவரை எழுதி ஏன் அந்தாளை குசிப் படுத்தி உங்களை இகழ வேண்டும்? இலக்கியம் என்றால் குனிந்து பார் வாழைக் குலையே தெரியும் என்பதும், மொழிபெயர்ப்புகளும் ஒருவரை உச்சாணிக்கு கொண்டு போகுமா? தப்பு உங்களிடம்.
அவர் ஒரு இடத்தில் சொல்லுவார் தன்னைப் பிடிக்காட்டி ஏன் தன்னைப் படிக்கணும் என்று. அவர் தன்னைத் திட்டும் பதிவுகளைப் படிப்பது ஒரு ஆன்மீகமாம். நல்லது. அதே மாதிரி மூட் வந்தால் அந்த மாதிரிக் கதைகள் படிக்க அங்க போறதும் தப்பில்லை.
விடுங்கள்.
//நான் திரையரங்கம் செல்லவதில்லை! வீட்டிலேயே லேப்டாப்பில் பார்ப்பதோடு சரி! என் மகள் விளையாட வந்தால் படத்தை நிறுத்தி விளையாட சென்று விடுவேன்! திரைப்படத்தை விட எனக்கு என் மகள் தான் முக்கியம்!//
இது எப்படியோ, என்னுடன் வேலை பார்க்கும் ஒருவன், ஒரு நாள் அடிச்சு சொன்னது ஞாபகம் வந்தது. சந்தர்ப்பம் உலகின் மிகப் பெரும் நிறுவனத்தில் மிகப்பெரும் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில்.
மகள் கொடுத்து வைத்தவள். நம்மாலும் அப்படி இருக்க முடியுமா?
//இது வேற வாயி....
தெகிறியமிருந்தா சனிக்கெழம ராத்திரி...இல்லாட்டி...நாயித்துக்கெழம பகல்ல பேட்டி எடுத்துப்போடுங்க விக்கி.
பல உண்மைகள வெளிய கொண்டாரலாம்.//
ரிப்பீட்டேய்!
அந்த சாரு மேட்டர் சூப்பருங்க!
வித்தியாசமா முயற்சி செய்திருக்கீங்க.நல்லா இருக்கு.
தொடருங்கள்.அட இது சத்தியமா டெம்பிளேட் பதில் இல்லைங்க :)
சூப்பர்ங்கிறது டெம்ப்ளேட்டா இருக்குன்னு சொன்னாலும் அதுதான உண்மை!
சிம்பிளா இருக்கீங்களே!
தண்ணியில்லாம வால் பையன் பேச்ச எடுக்கவே முடிய்றதேயில்லையே!
//கார்க்கி - பெண் ரசிகைகளை ஏராளமாக கொண்டவர்(கனவில் மட்டும்)//
ஹிஹிஹி... ஏன் இந்த கொலைவெறி?
புகழினி
நானும் சாருவை பற்றி பேசுவதையோ, எழுதுவதையோ நிறுத்தி ரொம்ப நாளாச்சு!
கேள்விகள் வந்ததால் எழுத வேண்டிய கட்டாயம்!
அரம்பமே அசத்தல்
"(தமது ஒற்றைக் கரத்தால் தொடர் வண்டியை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் வால்)"
வோட்டு போட்டாச்சு இனி நான் உங்க பின்னாடி அதாங்க பாலோவர்
/யாருடா இவன் குரங்கு சேட்டை பண்றான்னு நாலு பேரு பாக்குறாங்க! பண்ற சேட்டைக்கு ஏத்தா மாதிரி அடி விழுது!//
ஹா ஹா தன்னடக்கம் சிகரம் ;)
தனிமனித தாக்குதல் பற்றிய கருத்துக்கள் ஓகே!
வால்... இரவு 3 மணிக்குமேல் படம் பார்ப்பது சரியல்ல!!!
@ வால்பையன்
வாங்க, பேட்டிக்கு நன்றி தல...
@ புவனேஷ்
நன்றி...
@ புகழினி
எழுதக் கூடாதுனு தான் நினைத்தேன். இந்தக் கை விரல்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியல... :))
நீங்களும் எழுதக் கூடாதுனு அவர பத்தி எழுதிட்டிங்க....
@ வெங்கிராஜா
முதல் வருகைக்கு நன்றி... டெம்ப்லட் பின்னூட்டமா? :))
@ பட்டாம் பூச்சி
வருகைக்கு நன்றி... டெம்ப்லட் இல்லைனு சொன்னாலும் டெம்ப்லெட் மாதிரியே இருக்கே... :))
@ பப்பு
நீங்க பதிவர் சந்திப்ப தண்ணியடிக்கிற வாய்ப்பா எடுத்துக்கிறது இல்லையா... அடடா...
@ கார்க்கி
வருகைக்கு நன்றி கார்க்கி :))
@ சுரேஷ்
வருகைக்கு நன்றி...
@ தேவன்மயம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் :)) இரவு படம் பாத்தால் கண் பாதிக்குமா :)
//கே: சமீப காலமாக புதிய பதிவர்கள் அதிகரித்து வருவதப் பற்றி?
வால்: வாசிப்பனுபவம் உயர்ந்து கொண்டே வருவது நல்ல ஆரோக்கிய சூழல் தானே! வரவேற்கிறேன்! அனைவரையும் / /புதியவர்களை ஊக்கப் படுத்தியதற்கு நன்றி
விக்னேஷ்வரனின் சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்!
வால் பையனின் maturity கொப்பளிக்கும் பதில்கள்!
நன்றி!
சினிமா விரும்பி
@ சுந்தர்
நன்றி...
@ சினிமா விரும்பி
நன்றி...
கேள்விகளும் அருமை அதற்கு வால்பையன் பதில்களும் மிக அருமை
இது நான் உணர்ந்து கூறுவது.
//
//
ஆரம்ப காலங்களில் பதிவெழுதுவதற்காக நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது! எல்லாவற்றிலும் பதிவுக்கான கருவை தேடி அதை முழுமையாக ரசிக்க மறந்தேன்! மன உளைச்சலுக்கு ஆளானேன்! இது என்னடா வம்பா போச்சுன்னு பதிவை குறைச்சு பின்னூட்டம் மட்டும் போட்டு கொண்டிருக்கிறேன்! நிம்மதியாக இருக்கிறேன்.
//
உண்மையை அப்பட்டமாக கூறி இருக்கிறார் வால்பையன்.
இதுதான் வாலின் வெற்றிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மை!!
பின்னூட்டங்களுக்கு நன்றி சொல்லுவதைத் தவிருங்கள். இணையத்தில் வீணான சுமை. ( வேலை செய்யிறவனுக்குத் தானே தெரியும்)
@ ரம்யா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@ புகழினி
நான் நன்றி சொல்வது இங்கு படித்துவிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு நான் கொடுக்கும் மரியாதை. நான் இங்கு நன்றி சொல்வது உங்களுக்கு சிரமம் கொடுக்குமாயின் வருத்தப்படுகிறேன்.
Nalla erukku boss... unga kelvikalum.... valo sir pathilkalum......
nalla erukku boss..... ungal kelvikalum... val sir pathilkalum....
சுவை, மணம் மற்றும் குணம் நிறைந்த சுண்டக்கஞ்சி.
பேஷ், பேஷ்...
@ கார்த்திக்
நன்றி
@ அறிவிலி
நன்றி :)
very nice.. but too long.. :P
------ இது என்னடா வம்பா போச்சுன்னு பதிவை குறைச்சு பின்னூட்டம் மட்டும் போட்டு கொண்டிருக்கிறேன்! நிம்மதியாக இருக்கிறேன். -----------
--> good decision. :D
@ விஜி
நன்றி :)
இங்கு கேள்விகளே புதுசா தான் இருந்தது.... வால் பையன் வெறும் விளையாட்டுப்பையன் எப்பவும் காமிடித்தான்னு நினைத்தேன் சீரியஸ் அதிரடிபதில்கள்....உண்மையாகவே நல்லா இருந்ததுப்பா........ நல்லா தைரியமான பதில்கள்.....
@ தமிழரசி
நன்றி...
சுவாரஷ்யமான பேட்டி.. கேள்வியும் அருமை.. பதிலும் அருமை..! வாழ்த்துக்கள்..
@ கிருஷ்ணா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
Post a Comment