Monday, May 11, 2009

கொசுறு 11-05-2009

பிரபு மற்றும் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சிறைச்சாலை திரைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பின் பார்த்தேன். பிரிட்டிஷ் காலத்தில் நேர்ந்த விடயங்களை அழகாக சித்தரித்திருப்பார்கள். சயாம் மரண இரயில் போன்ற கதைகளை இதைப் போல் திரையாக்கினால் சிறந்த சரித்திர ஆவணமாக அமையும். செம்பூவே, இது தாய் பிறந்த தேசம் போன்ற பாடல்கள் இன்று கேட்கும் போதும் அருமையாகவே இருக்கின்றன.
*********

சிலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று. எப்படி உனக்கு எழுத நேரம் கிடைக்குது? என்ற கேள்வி தான்.

அன்று ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். புத்தகங்கள், வலைப்பதிவுகள் என பேசிக் கொண்டிருந்த போது புதிதாக அறிமுகமான ஒருவர் எப்படி உங்களுக்கு புத்தகம் படிக்கவும் எழுதவும் நேரம் கிடைக்கிறது என கேட்டார். அவர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். உங்களுக்கு எப்படி இப்போது டி.வி பார்க்க டைம் கிடைச்சுச்சு? என கேட்டுவிட்டேன். அவர் முகம் சுருங்கிப்போனது. பேச்சைக் குறைத்துவிட்டார். ஏன் டா இப்படி கேட்டுத் தொலைத்தோம் என்றாகிவிட்டது. :(
*********

நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு மற்றும் குறிஞ்சி மலர் போன்ற நாவல்களை படித்தேன். பொன்விலங்கில் ஒரு நெடுங்கவிதை இருக்கும். நவநீத கவி எழுதியதாக குறிப்பிட்டிருப்பார் ஆசிரியர். நவநீத கவி யாரென உங்களுக்கு தெரியுமா? எனக்கும் தெரியாது.

பேராசிரியர் பசுபதி ஐயாவிடம் கேட்டிருந்த போது நவநீத கவி நா.பவின் பல புனைப் பெயர்களின் ஒன்றென்றும் அவருடைய கவிதைகள் மணிவண்ணன் கவிதைகள் எனும் தொகுப்பில் வந்துள்ளதாக சொன்னார். மணிவண்ணன் நா.பாவின் இயற் பெயராகும்.
*********

சமீபத்திய படங்கள் ஏதும் பார்க்கவில்லை. ஆனந்த தாண்டவம் எனும் படம் திரைகண்டுள்ளது. சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை ஒட்டி எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் இப்படம் திரையில் மாறுபாடுகள் கொண்டு சுவாரசியமற்று இருப்பதாக விமர்சனங்கள் கண்டேன்.

தற்சமயம் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம் பாக்கி இருப்பதை முடித்துவிட்டு படம் பார்க்கலாம் எனும் எண்ணம். :)
*********

சிலர் நீக்ரோ, வங்காளி போன்ற சொற்களை எழுதும் போது பயன்படுத்துகிறார்கள். இற்சொற்கள் ஐரோப்பிய கருப்பினத்தவரையும், சீக்கியர்களையும் தாழ்வுபடுத்தும் சொற்களென கேள்விப்பட்டிருக்கிறேன்.

மலேசியாவில் தமிழர்களை கிலிங் என இழிவாக பேசும் நிலை உண்டு. ஆரம்ப காலத்தில் கலிங்கத்தில் இருந்து தமிழ் மக்கள் இங்கு வந்ததால் கலிங்கா என்பது கிலிங் என மாறியுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா, ஜாவா போன்ற இடங்களில் இப்பெயரிட்டு அழைப்பினும் இழிவுபடுத்தும் நிலை அங்கில்லை என சொல்லப்படுகிறது. அதை பற்றிய விளக்கமான செய்தி டாக்டர் ஜெயபாரதியின் இணைய தளத்தில் உள்ளது.
********

சுஜாதாவின் ஹைக்கூ பற்றிய புத்தகம் ஒன்றில் படித்த ஹைக்கூ மிக கவர்ந்தது. ஹைக்கூ என்பதை தமிழில் துளிப்பா அல்லது நறுக்குகள் என குறிப்பிடுகிறார்கள்.

மண்ணெண்ணெய் விளக்கில்
மாணவன் படிக்கிறான்
கம்பியூட்டர் சயின்ஸ்
********

கடற்கன்னிகள் இது சின்ன வயதில் கார்ட்டூன்களில் பார்த்தது. இது உண்மையா இல்லையா என்பது கேள்விக் குறியே.

முன்பு பங்கோர் தீவுக்கு போயிருந்த சமயம் அங்குள்ள மீனவர் ஒருவரிடம் இதைப் பற்றி கேட்டேன். அவர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. சிலர் கண்டிருப்பதாகவும். ஆபத்து வேளைகளில் அவை உதவக் கூடும் என்பதால் மீனவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்றும் சொன்னார்.

அந்த தீவில் கடற்கன்னியின் சிலை ஒன்று இருக்கும். இதில் எனக்கு நம்பிக்கை குறைவு. இணையங்களில் பாதி மனித உடல் (அப்நார்மலாக உள்ளது) பாதி மீன் உடல் கொண்ட படங்கள் சில பார்த்திருக்கிறேன். கிராப்பிக்ஸ் வேலைபாடுகளாக இருக்கக் கூடுமா?

சுபாஷினி அவர்கள் எழுதிய கடற்கன்னிகள் பற்றிய பதிவு இங்கே உள்ளது :
*************
உலகு வாழ் அன்னையர்கள் அணைவருக்கும் எனது அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

29 comments:

தமிழ் பிரியன் said...

விக்கி! சாணியடி சித்தர் ஒன்னும் சொல்லலியே?.. ;-))

MANOKARHAN said...

மேலெட்டமான ஒரு கண்னோட்டமாக இருப்பினும் சுவைகுன்றமால் சொல்லி இருக்கும் பங்கு மிக அருமை. விக்கி.உங்கள் எழுத்து நடை .....சுப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
விக்னேஸ்

Suresh said...

இப்போது தான் உங்க பதிவை பார்த்தேன் மிக அழகாக எழுதுறிங்க வாழ்த்துகள் தலைவா..

இனி நான் உங்க பின்னாடி அதாங்க பாலோவர், உங்களோடு இணைந்து பயணிப்பேன்

ஆயில்யன் said...

//சிலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று. எப்படி உனக்கு எழுத நேரம் கிடைக்குது? என்ற கேள்வி தான்.//

நல்லவேளை நானும் கேக்கணும் கேக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் :)

அது சரி நடுநிசியிலெல்லாம் கூட இப்படித்தான் ஆன்லைன வந்து குந்திக்கிட்டு எழுதுவீங்களா பாஸ் ?

VIKNESHWARAN said...

@ தமிழ் பிரியன்

அண்ணே அவரு தவத்துல இருக்காரு... அடுத்த கொசுறுக்கு அழைச்சுட்டு வரேன்.

@ மனோகரன்

மிக்க நன்றி..

@ சுரேஷ்

எல்லா பதிவிலயும் இதே கமெண்ட போடுறிங்களோ. போன பதிவில் இத தான் சொன்னிங்க. அப்ப ஃபாலோவர் ஆகலை. இப்ப ஆகிட்டிங்க. அடுத்து இந்த கமெண்ட் வராதுனு நினைக்கிறேன். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@ ஆயில்யன்

பாஸ்... பாஸ்... நான் நடுநிசியின் எழுதுவதை பார்க்க உங்களுக்கு எப்படி டைம் கிடைச்சது... :))

எப்போதும் எழுதுவதில்லை. எப்போது எழுத தோணுதோ அப்ப மட்டுமே எழுதுகிறேன்.

Suresh said...

இல்லை பாஸ் அப்போ பாலோவர் ஆக முடியலை ஏதோ பிரச்ச்னை இப்போ ஆயிட்டேன்... வாலு பதிவுக்கு அப்புறம் இப்போ தான் உங்க பதிவை பார்த்தேன்...

ஆயில்யன் said...

//@ ஆயில்யன்

பாஸ்... பாஸ்... நான் நடுநிசியின் எழுதுவதை பார்க்க உங்களுக்கு எப்படி டைம் கிடைச்சது... :))///

உங்களுக்கு நடுசின்னா எனக்கு சாயங்காலம் பாஸ்!

RAHAWAJ said...

நான் கேட்க வேண்டிய கேள்வியை தமிழ் பிரியன் கேட்டுவிட்டார்

நான் ஆதவன் said...

நல்லாயிருக்கு விக்கி :)

//உங்களுக்கு நடுசின்னா எனக்கு சாயங்காலம் பாஸ்!//

பாஸ் எப்படி பாயிண்ட புடிச்சாரு பாருங்க ஆயில்ஸ்!!

வியா (Viyaa) said...

nice..

VIKNESHWARAN said...

@ சுரேஷ்

நன்றி


@ ஆயில்யன்

பாஸ் அப்ப நான் காலையில பார்க்கும் போது நீங்க ஆன்லனில் இருக்கிங்களே பாஸ். அப்பவும் உங்களுக்கு மத்தியானம் தானா?

@ ஜவஹர்

அப்படினா உங்களுக்கு சொல்ல வேண்டிய பதில தமிழ் பிரியனுக்கு சொல்லிட்டேன் :))

@ நான் ஆதவன்

ஆமா பாஸ்... ஆயில் அண்ணேலாம் பதிவுலகத்துல பெரிய டெரராச்சே... என்ன சொன்னாலும் மடக்கி பிடக்கி சாத்தி போடுறாங்க...

@ வியா

நன்றி...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

சமீபத்தொல் படங்கள் எதுவும் பார்க்கவில்லை என்ற கவலை புரிகிறது. ஆகவே குரு என் ஆளு பார்க்கவும். :)

’டொன்’ லீ said...

வித்தியாசமான அழகான கொசுறு....

சிறைச்சாலை இப்போது தானா பார்த்தீர்கள்...? :-)))

பிரிவோம் சந்திப்போம் படம் பார்க்க வேண்டாம்...நாவலை மட்டும் படியுங்கள்...

VIKNESHWARAN said...

@ சஞ்சய்

நீங்க அந்த படத்துல மேல ஏன் இவ்வளோ கொலைவெறிவோடு இருக்கிங்க? :))

@ டொன் லீ

நீங்கள் பிரிவோம் சந்திப்போம் எனும் தலைப்பில் வந்த சேரனின் படத்தை சொல்லவில்லையே? :)

pappu said...

கடற்கன்னியெல்லாம் இல்லை. கடல் பசுவுக்கு பொண்ணுக்கு இருக்கிற மாதிரி மார்பக்ங்கள் உண்டு. தூரத்தில நிழலுருவாய் பார்க்கும் போது வித்தியாசம் தெரியவா போகுது.

வால்பையன் said...

கொசுறு வலை தொகுப்பாயிருச்சே!

viji said...

sempoove is my favourite song too. chirai saalai movie i watched when i was in primary school. songs mathum ninaivil. :d

VIKNESHWARAN said...

@ பப்பு

சிந்திக்க வேண்டிய தகவல்... வருகைக்கு நன்றி...

@ வால்பையன்

:) ரெண்டு லிங் போட்டதாலயா? அடுத்த முறை குறைச்சிக்கிடுறேன் பாஸ்...

@ விஜி

சிறைச்சாலை படம் வந்த போது எனக்கு 11/12 வயதிருக்கும்... அப்படினா அச்சமயம் நீங்க இன்னும் பால் போத்தலோடு தான் சுத்திகிட்டு இருந்திருக்கனும். :)

குமார் said...

வணக்கம் தோழாரே, நல்ல பதிவு. கடற்கன்னிகள் பற்றி எழுதி இருப்பது நன்று. உங்களைப் போல் எனக்கும் கடற்கன்னிகள் தோற்றங்கள் குறித்து நம்பிக்கை இல்லை. ஆனால், எனது பள்ளி நாட்களில் கெடா மாநிலத்தில் மீனவர் ஒருவர் இறந்த கடற்கன்னியின் எலும்புக் கூட்டை இன்னமும் வைத்திருப்பதாக படித்துள்ளேன். நான் படித்த அந்தப் புத்தகத்தில் கடற்கன்னியின் எலும்புக் கூட்டின் படம் பிரசுவிக்கப்பட்டிருந்தது. பார்ப்தற்கு உண்மையிலேயே தலைப்பகுதி மனிதர் போலவும் இடுப்புக்கு கீழே மீன் போலவும் தோற்றம் இருந்தது. ஒரு மனித எலும்புக் கூட்டின் தலைப்பகுதியும் மீனின் வால் பகுதியும் தனிதனியாக எடுத்து வந்து இணைக்கப்பட்டது போல் இல்லாமல் மிகவும் இயற்கையாக இருந்தது அந்த எலும்புக் கூடு. அது பற்றி விவரங்கள் ஏதும் தெரிந்தால் எழுதுங்கள்.

VIKNESHWARAN said...

@ குமார்

வாங்க குமார். நலமா? நெடு நாட்களாக ஆளைக் காணோமே? கடற்கன்னிகளைப் பற்றி தகவல்கள் நிறம்பவே காணக்கிடக்கின்றன. சூவாரசியமான தகவல்கள் கிட்டுமாயிம் நிச்சயம் எழுதுகிறேன். பப்புவின் பின்னூட்டத்தை கவனியுங்கள் ஒரு வேளை அப்படியும் இருக்கக் கூடுமோ? வருகைக்கு நன்றி.

வினோத்குமார் சுப்ரமணியம் said...

நன்றி, தோழா
உங்கள் அன்னைக்கும் எனது வாழ்த்துகள்

VIKNESHWARAN said...

@ வினோத்

வருகைக்கு நன்றி..

Anonymous said...

silar nigro & vanggali endru eluthum pothu endru kurippitu irukingga> athu ennne endru thelivaga illai! its a great vimarsanam about many topic keep it up! viknes(B.Com)

VIKNESHWARAN said...

@ விக்கி

நிக்ரோ மற்றும் வங்காலி போன்ற சொற்களைப் பயண்படுத்துவது தவறு என சுட்டி இருக்கிறேன். அது அவர்களை அவமதிக்கும் சொல்லாகும். வருகைக்கு நன்றி...

’டொன்’ லீ said...

@ டொன் லீ

நீங்கள் பிரிவோம் சந்திப்போம் எனும் தலைப்பில் வந்த சேரனின் படத்தை சொல்லவில்லையே? :)
//

மன்னிக்கவும் நான் சொன்னது ஆனந்த தாண்டவம்..நாவல் தான் பி.ச

நெல்லைத்தமிழ் said...

உங்களுக்கு எப்படி இப்போது டி.வி பார்க்க டைம் கிடைச்சுச்சு?

எனக்கு டிவி பாக்க டைம் கிடைக்க மாட்டேங்குது .. பதிவுகளை படிக்கவே நேரம் பத்தலை. நீங்க சொன்னமாதிரி ஆர்வம் இருந்தா எப்படியாவது படிக்க முடியும்

VIKNESHWARAN said...

@ நெல்லைத்தமிழ்

கருத்துக்கு நன்றி, விளம்பர பின்னூட்டத்தை தவிர்க்க வேண்டுகிறேன். :)

Subash said...

சிறைச்சாலை எனக்கும் மிகவும் பிடித்த படம்.


சுனாமி வந்த நேரம் 2அடி நீளமான கடற்கன்னியையொத்த ஒரு உயிரினத்தை இறந்தநிலையில் கண்டுடித்திருக்கிறாபர்கள். உயிர்களை காப்பாற்றும் வேளையில் அதற்கு அப்போது மவுசு இருக்கவில்லை. தூக்கிப்போட்டுவிட்டார்கள்

மொத்தத்தில் சுவாரசியமான துணுக்குகள் விக்னேஷ்.

VIKNESHWARAN said...

@ சுபாஷ்

கருத்துக்கு நன்றி... தூக்கிப் போடவில்லை. ஆராய்வதாக கேள்விப்பட்டேன்.