ஆதிமனிதன்
கிழிசல் ஆடையில்
****
வண்ணப் பூச்சுகள்
மறைவில் ஓர் உறுவம்
நவீன ஓவியம்
****
உண்ணாவிரத போராட்டத்தில்
தவம் கிடக்கிறது
ஆரஞ்சு ஜூஸ்
****
போர் களத்தில்
குழந்தையின் கையில் கிளுகிளுப்பை
சிரிப்புக்கு ஏங்கும் தாய்
****
விதவைக் கோலம் கொண்ட
வெள்ளைக் காகிதங்களுக்கு
நீலமும் கருப்புமாகபொட்டிட்டுப் பூவைத்து
அழகு பார்க்கிறேன்
உன் பெயர் எழுதினால்
தமிழ் எழுத்தின்
அழகு இலட்சணங்கள்
அதிகமாகவே ஒட்டிக் கொள்கிறது
இரத்தச் சிவப்பான- உன்அதிகமாகவே ஒட்டிக் கொள்கிறது
செவ்விதழ் சிந்தும் துளிச் சிரிப்பின்
சிறு தருணத்திற்காக
கால காலமாக
தவம் கிடக்கும்
மனம்
செல் பேசியில்தவம் கிடக்கும்
மனம்
உன் பெயர் பார்த்து சிரிக்கிறேன்
பேசி முடித்து
சில நொடிகளே கடந்திருந்தது
இரண்டடி எஸ்.எம்.எஸ்
என்ன திருக்குறளின்
மாற்றுவடிவா?
மீண்டும் மீண்டும்
படித்து மனனம் செய்கிறேன்
புரிந்தது எது
புரியாதது எது
புத்தம் புதிய சூழலின்
புரியாத புதிர் ஒன்றில் மாட்டிக் கொண்டேனோ?
தண்ணொளியை வீசும்
பனித்திடும் கருணையும்
எரித்திடும் கோபமும் - சடுதியில்
திணறடித்திடும் வேகமாய்
கவிதைகள் பொழியுதடி
****
(பி.கு: பாசரம் எழுதி வெகு நாட்களாகிறது. ஏதோ மனதில் எழுந்ததை எழுதிவிட்டிருக்கிறேன்)
22 comments:
நல்லா இருக்கு நண்பரே
எல்லாமே வித்தியாசமா இருக்குது. இன்னும் கொஞ்சம் அங்க இங்க தட்டி எழுத்துக்களை சீர்படுத்தியிருந்தா அருமையான கவிதையா உருவெடுத்திருக்கும்!
வாழ்த்துக்கள் விக்கி..
\\உன் பெயர் எழுதினால்
தமிழ் எழுத்தின்
அழகு இலட்சணங்கள்
அதிகமாகவே ஒட்டிக் கொள்கிறது\\
மிகவும் இரசித்தேன்
எல்லாம் அருமை
நல்லா இருக்கு, விக்கி.
வாழ்த்துக்கள்!
விக்கி கவிதைக்கு ஏற்றவாறு படம் அருமை..
கவிதையும் கூட சூப்பர்
புரிந்தது எது
புரியாதது எது
புத்தம் புதிய சூழலின்
புரியாத புதிர் ஒன்றில் மாட்டிக் கொண்டேனோ?
எனக்கு புரியுது ஆனால் புரியவில்லை :)
//
உண்ணாவிரத போராட்டத்தில்
தவம் கிடக்கிறது
ஆரஞ்சு ஜூஸ்
//
வரலாறை புரட்டி பாத்தா உண்ணாவிரதம் இருக்கிற மக்கள் தான் ஆரஞ்சு ஜூஸுக்கு தவம் கிடக்குற மாதிரி தெரியுது
Nallaa irukku... :))
//சென்ஷி said...
எல்லாமே வித்தியாசமா இருக்குது. இன்னும் கொஞ்சம் அங்க இங்க தட்டி எழுத்துக்களை சீர்படுத்தியிருந்தா அருமையான கவிதையா உருவெடுத்திருக்கும்!//
Mmmm :))
ஹைக்கூ வடிவிலான படைப்புகள் அருமையாக இருக்கிறது.
@ ஆ.ஞானசேகரன்
நன்றி.. :)
@ சென்ஷி
தட்டும் வழிமுறைகளைக் கொஞ்சம் கற்பிக்கவும் பிலிஸ் :)
@ நட்புடன் ஜமால்
நன்றி...
@ உஷா
நன்றி
@ வியா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
@ ஆளவந்தான்
ஆமால.... ஜூப்பர் ஐடியா
உண்ணாவிருத போராட்டம்
ஆரஞ்ச்ய் ஜூஸுக்கு
தவமிருக்கும் அரசியல்வாதி
இப்படி ஓகேவா? :)
@ ஸ்ரீமதி
தங்கச்சி நீங்க என் பிளாக்கு பக்கமெல்லாம் வருவிங்களா? :)) வாங்க வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@ கிருஷ்ண பிரபு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. உங்கள் மின்மடல் முகவரி கிடைக்குமா?
கொஞ்சம் புரிஞ்சுது, கொஞ்சம் புரியல
புரிந்தது எது
புரியாதது எது
புத்தம் புதிய சூழலின்
புரியாத புதிர் ஒன்றில் மாட்டிக் கொண்டேனோ?///
நல்லா சொல்லுகிறீர்கள் நண்பரே!
@ தராசு
புரியறது புரியாம இருக்காது புரியாதது புரியாது :)
@ தேவன்மயம்
டாக்டர் நல்ல வேலை எனக்கு வியாதினு சொல்லாம போனிங்களே :)
தம்பி என்ன அதிசயம் பார், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கொலை வெறிக் கவிதை எழுதியிருந்தேன். அதை உனக்கு சொல்லிப் போக வந்தால், அதிசயத்திலும் அதிசயமாக நீயும் கவிதை எழுதியிருக்கிறாய்!!!!
என்னே ஆச்சரியம்!!!
//
@ ஆளவந்தான்
ஆமால.... ஜூப்பர் ஐடியா
உண்ணாவிருத போராட்டம்
ஆரஞ்ச்ய் ஜூஸுக்கு
தவமிருக்கும் அரசியல்வாதி
இப்படி ஓகேவா? :)
//
எனக்கு ஓகே தான் விக்கி.. :)))))
@ விஜய்கோபால்சாமி
நன்றி... :) பார்க்கிறேன்...
@ ஆளவந்தான்
:) ஓகே ஓகே...
புரியாத புதிர் தனில்
புதிதாக தடுமாறுவதும் ஏனோ..
புதியவளின் புன்னகையில்
உறைந்ததனாலோ..
...
hahaha dnt worry..
முகவரி கொடுங்க..
அந்த கொடுமைக்காரியை
தேடலாம்..
~டீபா~
@ டீபா
கொடுமைக்காரியே அதை வந்து சொல்லக் கூடது சரியா.... :)
கொடுமைக்காரியே அதை வந்து சொல்லக் கூடது சரியா.... :)
//
அப்ப நானு...:)
@ நமிதா
ஆஹா... கிளம்பிட்டாய்ங்க...
Post a Comment