Monday, April 20, 2009

ஒரு பயணமும் சில குறிப்புகளும்...

மலேசியாவில் மிகச் சிறிய மாநிலம் பெர்லிஸ் ஆகும். சுமார் 810 கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். ஏனைய மாநிலங்களைக் காட்டினும் வளர்ச்சிகள் சற்றே குறைந்து காணப்படும் மாநிலம் இது.

மலேசியாவின் முதல் நிலை பணக்காரார் திரு.ரோபட் கோக். அவர் ஒரு சீனி வியாபாரி. அவருடைய கரும்புத் தோட்டங்கள் பெர்லிஸ் மாநிலத்தில் நிறைந்து காணப்படும். ரோபட் மலேசியாவில் மட்டுமன்றி தென் கிழக்காசியாவிலேயே முதல் நிலை பணக்கார பட்டியலில் இருக்கிறார்.பெர்லிஸில் முக்கிய பட்டணங்களாக காணப்படுவது சிம்பாங் அம்பாட்(simpang empat), அராவ்(Arau), ஜெஜாவி(Jejawi), சூப்பிங்(Chuping) போன்ற இடங்களாகும். கரும்புத் தோட்டங்கள் நிறைந்துக் காணப்படுவதால் கரும்பு விளைந்து செழிப்பாக இருக்கும் காலங்களில் வனப்பு மிகுந்து காணப்பகும். சிறிய அளவிளான சாலைகளே இங்கு அதிகம். பயணிக்கும் சமயம் சாலையோரத்தில் இருக்கும் கரும்பு விளைச்சல்கள் பசுமையாகவும் கண்களுக்கு இதமாகவும் இருக்கும்.

கெடா மாநிலத்தின் புகிட் காயு ஹிதாம்(Bukit Kayu Hitam) எனும் பகுதியில் இருந்து சுமார் 30 நிமிட பயணத்தில் குவாலா பெர்லிஸ் (Kuala Perlis) எனும் இடத்தை அடைந்து விடலாம். குவாலா பெர்லிஸ் ஒரு துறைமுகம் ஆகும். இங்கிருந்து விசைபடகின் வழி பயணித்தால் 40-45 நிமிடங்களில் லங்காவி தீவை அடைந்துவிடலாம்.லங்காவி ஜாலியாக பொழுதைக் கழிக்கக் கூடிய இடம். பொது விடுமுறை நாட்களில் இங்கு செல்வது சொந்த செலவில் சூன்யம் வைத்தக் கதையாகிவிடக் கூடும். பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். விலையும் சற்று கூடுதலாகவே சொல்வார்கள். ஏனைய ஓய்வு நாட்களில் சென்றால் மனம் விரும்பும் அமைதியை பெருவது தின்னம்.

லங்காவி தீவில் சுங்க வரி விலக்கு கிடைக்கும். அதனால் விஸ்கி, பிராண்டி, பியர், சிகரட், சாக்லெட் போன்றவை மலிவான விலையில் கிடைக்கும். ஒரு பாட்டில் விஸ்கியை நீங்கள் தீவை விட்டு வெளிவரும் போது கொண்டு வர அனுமதிப்பார்கள். அதிகபட்டவைக்கு வரி விதிக்கப்படும். லங்காவி பற்றிய மேலாதிக்க தகவலுக்கு மை பிரண்ட் எழுதிய இப்பதிவை காண்க.
சரி மீண்டும் பெர்லிஸ் மாநிலத்தை பற்றிய பார்வைக்கு வருவோம். பெர்லிஸில் சில உணவு வகைகளும், துணி மற்றும் பொம்மைகளும் மலிவான விலையில் கிடைக்கும். எல்லை மாநிலம் என்பதால் காவல் கெடுபிடிகள் அதிகம். ஆண்கள் மட்டும் பயணித்தார்கள் என்றால் ’சில தவிர்க்க முடியாத கேள்விகளுக்கு’ காவலாலிகளிடம் பதில் சொல்லி தான் வர வேண்டி இருக்கும்.

தாய்லாந்து எல்லை பகுதிகளில் பாலியல் தொழில் அதிகம் இருப்பதுவே இதற்கு காரணம். அது போக சில வேளைகளில் போதை மருந்து உட்கொண்டோமா என்பதற்காக சிறுநீர் சோதனைகளையும் மேற்கொள்வார்கள். குடும்ப சகிதம் விசிட் அடித்து செல்வோருக்கு இப்படிபட்ட இக்கட்டான நிலை விதிவிலக்காக அமையும்.

ஆரம்பத்தில் சொன்ன குவாலா பெர்லிஸ்/ விசைபடகு ஏறும் இடத்தில் இடத்தில் இருந்து 15 நிமிடம் பயணம் செய்தால் பெர்லிஸ் கைவினை பொருட்கள் மற்றும் கலாச்சார மைய கட்டிடத்தை அடையலாம். கைவினை பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஆள் பார்த்து விலை சொல்கிறார்கள் என்பதை உணர முடியும். பேரம் பேசி வாங்க முடிகிறது.அடுத்தபடியாக இருப்பது பாம்பு தோட்டம். கங்கார் எனும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் வடக்கே போனால் இதைக் காண முடியும். பாம்பு, முதலை, உடும்பு, பெரிய பல்லிகள் எனக் காண முடியும்.கோத்தா டாயாங் தொல்பொருட்காட்சி சாலை இங்கிருக்கிறது. 2500 முதல் 2600 ஆண்டுகளுக்கு முந்தய பொருட்கள் இவை என சில தகவல்களை எழுதி வைத்திருப்பார்கள். சோழர்களின் கடார ஆட்சியின் சமயம் பெர்லிஸ் போன்ற பகுதிகள் கடாரம் என்றே அறியப்பட்டிருக்கிறது. சோழர் காலத்துக்கும் முந்திய இந்திய ஆட்சியில் இருந்த பொருட்கள் என சில குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விவரித்தால் பெரும்பதிவாகிவிடும்.

மேலும் இருப்பது மெலாவாத்தி நீர் நிலை பகுதி. மிக ரம்யமான இடமாகும். இங்கு படகு சவாரி போக முடியும. நெடு தூர நடை பயணம் செய்யவும் வசதி படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அராவ், கங்கார் போன்ற இடங்களிலும் சற்றே சுற்றிவிட்டு வர முடியும். அராவ் நகரில் அரச மாளிகையும், பிரதான மசூதியும் அமைந்திருக்கிறது. மற்ற மாநிலங்களின் மன்னர்கள் ’சுல்தான்’ என அறியப்படுகிறார்கள். பெர்லிஸ் மன்னர் ’ராஜா’ என அழைக்கப்படுகிறார்.சின்ன மாநிலம் என்பதால் ஒவ்வொரு இடத்திற்கும் தூரங்கள் அதிகம் இல்லை. இருந்தாலும் சிறிய அளவிலான சாலை அமைப்புகள் சில இடங்களில் படுத்தி எடுக்கிறது. தலைகவசம் அணியாத கணவான்கள் அங்கிட்டும் இங்கிட்டும் விருட்டென புகுந்துச் செல்கிறார்கள். நிதானித்தே வகனத்தைச் செலுத்த வேண்டும்.

நவ நாகாரிக வளர்ச்சிகள் அதிகம் புகுத்தப்படாததால் பெர்லிஸ் பசுமை பொலிவுடன் இருக்கிறது. சாலையில் அதிகமான வாகனங்கள் இருக்காது. அமைதியான பயணத்தை திருப்தியாக முடித்துக் கொண்டு திரும்ப முடியும்.
(பி.கு: நண்பர்களோடு இரு நாள் பயணம் மேற்கொண்டதால் இரவு வேளையில் கோழி வாட்டல் அதாங்க B.B.Q பார்ட்டி எல்லாம் லங்காவியில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸ் குடியலுடன் மங்களகரமாக நடந்தேறியது.)

28 comments:

சி தயாளன் said...

லங்காவி பயணமா..?

நான் அங்கே ஜூன் முதல் வாரமளவில் செல்லலாம் என்று இருக்கிறேன் :-))

சென்ஷி said...

:-)

நல்ல விவரணை.. பகிர்விற்கு நன்றி விக்கி.!

Kalaiyarasan said...

இது போல வேறு எந்தெந்த இடங்களுக்கு பயணம் செய்திருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். போட்டோக்களையும் தாராளமாக போட்டு விடுங்கள். நீங்கள் கண்டவற்றை நாங்களும் பார்க்கலாம்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ டொன் லீ

லங்காவிக்கு சின்ன விசிட் தான். பெர்லிஸில் தான் அதிக பயணம். வாங்க வாங்க... வரும் போது சொல்லுங்க... :))

@ சென்ஷி

நன்றி சென்ஷி

@ கலையரசன்

நிச்சயமாக பதிப்பிப்பேன்... இப்படி பதிவிடுவது எனக்கும் நல்ல ஞாபகமாகவும் இருக்கும் இல்லையா... வருகைக்கு நன்றி...

நிஜமா நல்லவன் said...

நல்லா விவரிச்சி இருக்கீங்க....:)

சி தயாளன் said...

//VIKNESHWARAN said...
@ டொன் லீ

லங்காவிக்கு சின்ன விசிட் தான். பெர்லிஸில் தான் அதிக பயணம். வாங்க வாங்க... வரும் போது சொல்லுங்க... :))
//

நன்றி..:-))

ஆயில்யன் said...

அழகான போட்டோஸ் பார்க்கும்போது அருமையானதொரு லொக்கேஷன் மாதிரி தெரியுது!

இரண்டு நாள் என் ஜாய் பண்ணியிருக்கீங்க சூப்பரேய்ய்ய்!

//அதாங்க B.B.Q பார்ட்டி எல்லாம் லங்காவியில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸ் குடியலுடன் மங்களகரமாக நடந்தேறியது//

எல்லோரும் நம்பிட்டோம்....! :))))

VG said...

Wow, seems perlis is a nice place too. in north side really got so many nice play for lepaking yar. but far for me. haiz.. :P:P:P


You have explained it in nice and interesting way

VIKNESHWARAN ADAKKALAM said...

@ நிஜமா நல்லவன்

நன்றி அண்ணா...

@ டொன் லீ

:)... தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்ள திட்டங்கள் உள்ளனவா?

@ ஆயில்யன்

ஆமாண்ணே அடக்க ஒடக்கமா போய்ட்டு வந்தேன்... நான் நல்ல பையனு சொல்லி தான் ஊர் உலகுக்கு தெரியனுமா... :)) நேரம் இருந்தா வாங்க விசிட் அடிக்கலாம். லாங்காவியில் பில்லா பாலம் இருக்கு.. பதிவர் சந்திப்ப அங்க வச்சிக்கலாம் :))

@ விஜி

வாங்க... உங்கள் பொன்னான செந்தமிழ் கருத்துக்கு நன்றி :)

VG said...

etho enaku terinjathey nan eluturen.. :D

Thamiz Priyan said...

நீங்க எதுக்காக அங்க போனீங்க?
டேட்டிங்ன்னா என்னங்ண்ணா? இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்பதைக் கூறிக் கொள்கின்றேன்.

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விஜி

எழுதுங்க எழுதுங்க...

@ தமிழ் பிரியன்

நீங்கள் கேட்டிருக்கும் கேள்வி மிகக் கடினமாக இருப்பதால். நான் பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது... போதிய நேரம் கொடுத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

குசும்பன் said...

கரும்பு தோட்ட புகைப்படம் இன்னும் கொஞ்சம் போட்டு இருக்கலாம்!

ஆரஞ்சு ஜூஸ் மேலே இருக்கும் எந்த பாட்டிலில் இருந்தது?:)))

VIKNESHWARAN ADAKKALAM said...

@ குசும்பன்

ஏற்கனவே படம் அதிகமா போட்டுட்ட மாதிரி இருக்குண்ணே...
ஆரஞ்சு பாட்டில் இரண்டாவது வரிசையில் இருக்கும். பக்கா லெமன் என்று எழுதி இருந்தது. லெமன் என்றால் ஆரஞ்சு தானே? என்னை யாரும் ஏமாத்த முடியாது. சரியா படிச்சி பார்த்து தான் வாங்கினேன்.

Anonymous said...

hello anna! Sutrulla thuraiyil romba arvamaga iranggithingga pole! any way carry on. Unggal katturai padika ithamai irukkirathu katru pole!take care. VIKNESVARY(B>COM)

RAHAWAJ said...

இதுபோல் எல்லா இடங்களுக்கும் சென்று விபரமாக எழுதினால் நாங்கள் செல்லும்போது வசதியாக இருக்கும், அடுத்த முறை தங்கும் இடம் எவ்வளவு செலவாகும் என விபரமாக செல்லவும் :)

ஆளவந்தான் said...

//
லங்காவி ஜாலியாக பொழுதைக் கழிக்கக் கூடிய இடம்.
//

சிங்கப்பூர்ல இருக்கும்போது போகணும்.. போகணும் முயற்சி பண்ணி போக முடியாம போச்சு..

பதிவ படிக்கும் போது கண்டிப்பா போயாகணும் போல இருக்கு

ஆளவந்தான் said...

//
ஆண்கள் மட்டும் பயணித்தார்கள் என்றால் ’சில தவிர்க்க முடியாத கேள்விகளுக்கு’ காவலாலிகளிடம் பதில் சொல்லி தான் வர வேண்டி இருக்கும்.
//
அருமையான தகவலுக்கு அசத்தலான் நன்றி.. உஷார இருந்துக்குறோம் :)

VIKNESHWARAN ADAKKALAM said...

@ விக்னேஷ்வரி

நன்றி சகோதரி. மீண்டும் வருக :)

@ ஜவஹர்

வருகைக்கு நன்றி. லங்காவியில் தங்குமிடம் நம் வசதிக்கு ஏற்ப தேடிக் கொள்ள முடியும். ஆனால் சிலர் குவாலா பெர்லிஸ் துரைமுகத்தில் ஹொடல் பிடித்து கொடுக்கும் ஆட்களின் பேச்சை நம்பி அதிக பணம் கொடுத்து ஏமாந்து போகிறார்கள். நீங்கள் விசை படகு ஏறும் முன் சொல்வார்கள் “இங்கேயே ஹோட்டல் புக் செய்துக்குங்க, அங்கே போய்ட்டா இடம் கிடைக்காது” என சொல்லி செல்லமாய் மிரட்டி விடுவார்கள் :). ஆனால் அங்கு போனால் நம் வசதிக்கு இடத்தை தேடிக் கொள்ள முடியும் என்பதை அறிய முடியும்.

@ ஆளவந்தான்

நேரம் இருக்கும் போது கண்டிப்பாக போய் பாருங்க... :) வருகைக்கு நன்றி...

மனோவியம் said...

நல்ல பயண குறிப்புகள்...

VIKNESHWARAN ADAKKALAM said...

@ மனோகரன்

வருகைக்கு நன்றி :)

வியா (Viyaa) said...

super : )

வால்பையன் said...

அண்ணே மலேசியாவையே சுத்தி காட்டிடிங்க!

கிருஷ்ணா said...

//லங்காவியில் வாங்கிய ஆரஞ்சு ஜூஸ்//

இதை வாங்க எதுக்கு விக்கி லங்காவி வரைக்கும் போகனும்?! ஆரஞ்சு கலந்த அமுத பானமோ?!

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வியா

நன்றி...

@ வால்பையன்

ஆஹா... அதிகபட்சமாக இருக்கே பாஸ்... தெளிவாக தான் பின்னூட்டம் போட்டிங்களா?

@ கிருஷ்ணா

அது ஸ்பெஷல் ஆரஞ்சு ஜூஸ் :)

வியா (Viyaa) said...

viki come to my blogger and visit. naan unggalukku oru viruthu koduthurikkiren..

வெங்கட்ராமன் said...

விக்கி நிறைய ஊர் சுத்துவீங்க போல. . . . .

VIKNESHWARAN ADAKKALAM said...

@ வியா

பார்த்தேன். விருதுக்கு நன்றி.

@ வெங்கட்ராமன்

நான் எங்கங்க ஊர் சுத்துரேன். நீங்க தான் நிறைய இடங்களுக்கு போய் படம் பிடிச்சி போட்டு அசத்துறிங்க :)