அன்பு நளினாவுக்கு,
மேற்காணும் அன்பு எனும் சொல்லை எழுதுவதற்குள் கூசி குறுகிப் போனேன். இதில் நலம் விசாரித்தல் தான் ஒரு கேடா. உன் கடிதம் கண்டேன். ‘காதல் போயின் சாதல்’ என்றான் பாரதி. செத்துப் போவது சில நொடி துன்பம். உன் காதலன்றி வாழ்வது ஒவ்வொரு நாளும் துன்பம். உன் மீது கொண்ட பித்தத்துக்கு சாகும் வரை அனுபவிப்பேன். நீ வருந்தாதே! வருத்தங்கள் வறுத்தெடுக்க ஆள் இல்லாமல் பூமியில் என்னை பிறக்கச் செய்தார்கள் போலும். எல்லா நேரமும் கவலைக் கொண்டு உயிர் வாழ பிறந்தவன் நான்.
எந்நாட்டாரும் போற்றும் தென்னாட்டு முருகன் நம் தமிழ்க் கடவுள் என்பாய். நான் எழுதும் கவிதையெல்லாம் அவன் அருளிய தமிழால் என்பாய். எத்தனை முறை மனுதுள் வெகுண்டிருப்பேன். அப்போதெல்லாம் கூட முகம் முழுக்க பல்லைக் காட்டியபடி தான் நிற்பேன். இப்போது நீ போய்விட்டாலும் தமிழோடு ஒட்டி வந்த இன்பம், என்னை இன்னும் உயிரோடுதான் வைத்திருக்கிறது. ஆதலால் சாகாமல் செத்துக் கொண்டு இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.
உன் கடிதம் என்னைப் பார்த்துச் சிரித்தது. உன் செந்தமிழ் நடை என் சிந்தையைத் தொட்டது. எல்லாம் நமது பசுமை மாறாத இளமைக்கால எண்ணங்கள். அந்தக் கடிதத்தை மார்போடு பலமுறை ஒற்றிக் கொண்டேன். அது நீயாகவும், என்னை இருகரத்தால் இறுக அணைத்து நோகாமல் முத்தம் நூறு கொடுப்பது போன்றிருந்தது.
என் நினைவெல்லாம் நீ தான். சுடும் நெருப்பெல்லாம் நான் தான், பனிநீராய்க் குளிர்வேனா! இல்லை, நிச்சயம் குளிரமாட்டேன். குளிர்நிலவும் பிரிந்திருக்கும் காதலர்க்கு கொடுமை செய்யும் கொள்ளியாக சுடுமல்லவா! இத்தனை வேதனைகளுக்கிடையே வெந்து புழுங்கும் என்னைப் பார்த்து நலமா என்று கேட்கிறாயே! விளையாட்டாக கேட்டு என் வேதனையை இரசிக்க முயற்சிக்கிறாயா? உன் மனமென்ன கல்லா! உணர்ச்சியில்லாப் பெரும்பாறையா?
நெந்துப் போனவன் நலத்தை உன் செவிகளுக்கு நோகாமல் எப்படிச் சொல்வது? கேட்டுவிட்டாய். கேளாதவனாக மனதைஇறுக்கி முடிந்து கொண்டு இருக்க முடியவில்லை. நான் சொல்லியும் கேளாத என் விரல்கள் பேனாவை எடுத்து சொற்களைப் பொறுக்கிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. திருந்தாதவனுக்கு விருந்தாகப் போன நீ, என் வாழ்க்கை நலத்தை தெரிந்துக் கொள்ள எண்ணியதே விந்தைதான். ஒப்புக்கு கூட நலமென்று எப்படி சொல்வது.
என் வீட்டு நன்றியுள்ள நாய் நலம். நாளொரு முட்டையிடும் கோழி நலம். என்னை ஏய்த்து திருடித் தின்னும் எலி நலம். எலி திருடி மிச்சம் விட்டதை சுமந்து செல்லும் எறும்பும் நலம். ஆடையின்றி வாழ்ந்தாலும் ஆடையுள்ள பால்தரும் பசுவும் நலம். பக்கத்து வீட்டுச் சீனன் மிக்க நலம். எதிர்வீட்டு மலாயன் நலமோ நலம். நான் நலமென்று எப்படிச் செல்வது.
என்னைப் பற்றி இனி எண்ணாதே! எழுதாதே! எல்லாம் பொய்யாய் போகட்டும். உன்னுள் கிடக்கும் எண்ணச் சிதறல்களை தோண்டி எடுத்து ஒரு பாழும் கினற்றில் போட்டு மூடிவிடு. நீ யாரோ! நான் யாரோ! என் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும். நான் உனக்கு எழுதும் கடைசிக் கடிதம் இது தான். என் வாழ்வை பாலையாக்கிய படிதாண்டா பத்தினியே, இனி மேலாவது என்னை உயிரோடு வாழவிடு.
இப்படிக்கு,
உனக்கு இப்போது எவனோ ஒருவனான நான்.
இந்தக் கடிதத்தை படித்ததும் ஸ்தம்பித்து போனாள் வசந்தா. அவளை அறியாமல் கண்ணீர் அவள் கண்களில் தாரை தாரையாக வழிந்தது. என்ன செய்வதென்றே அவளுக்கு புரியவில்லை.திடீரென அவள் கணவன் அங்கே வந்தார்.
“ஏன் அழுகிற?” என்று கேட்டுக் கொண்டே கடிதத்தை வாங்கினார். வசந்தா ஒன்றும் சமாளிக்க முடியாமல் கடிதத்தைக் கொடுத்தாள்.
வசந்தா கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சமயலறை நோக்கி நடந்தாள். அவள கணவன் பாஸ்கர் அக்கடிதத்தை படித்து முடித்ததும் கோபம் மேலிட கத்தினார்.
“ஏய் தேறிக்க.... யாருடி இத எழுதுனது” என்று ஓர் அதட்டு போட்டார்.
“வேற யாரு எல்லாம் உங்க மகன் தான்! நம்ம புள்ளயைய எவளோ ஒருத்தி நல்லா மயக்கி ஏய்ச்சிட்டிருக்கா... அதான் பிள்ளை அவ்வளோ வருத்தமா எழுதி இருக்கான்”. மீண்டும் அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் திரண்டது.
அந்த சமயத்தில் அறையிலிருந்த அக்கடிதத்தைத் தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்த்தான் பாரி. பாஸ்கரனுக்கு கோபம் கனலாய் தெறித்தது. பாரி பம்மி நகர்ந்தான். விடுவாரா அவர்.
“டேய் பாரி, யாருடா எழுதினது இத?” என்று கடிதத்தை தூக்கி முன்னெறிந்தார்.
“நான் தான்ப்பா”.
“ஏன் டா, அந்த பொண்ணு யாருடா? உண்மைய சொல்லு... இல்ல தோலை உறிச்சிடுவேன்”
பாரி பயந்து போனான். “நம்ம பக்கத்து தாமானில் இருக்கும் நந்தினி தாம்ப்பா”.
“ஏன்டா. அந்த பொண்ணுக்கு இன்னும் கல்லாயமே ஆகலை... நீ என்னென்னமோ எழுதி வச்சிருக்கியே. பைத்தியக்காரதனமா இல்ல இருக்கு” என்றார்.
பாரி சிரித்துவிட்டு சொன்னான். “அது உண்மையான காதல் கடிதம் இல்லைப்பா, நான் எழுதின நாடகத்துல வர காதல் கடிதம் அது. நந்தினி அந்த நாடகத்துல நளினான்ற பேருல நடிக்கிறா. அதான் நேத்து எழுதி வைச்சேன். அந்த வசனத்தை இப்படி கொடுங்க”. வாங்கிக் கொண்டு வெளியேறினான் பாரி.
“எனக்கு அப்பவே தெரியும்! என் புள்ள அப்படி எல்லாம் செய்ய மாட்டான்னு” எனக் கூறிக் கொண்டே வெளி வந்தாள் பாரியின் தாய் வசந்தா.
25 comments:
நானே முதல்!
கதை நன்று!!
வாழ்த்துகள் விக்கி!!!
நானோ என்னமோ என்று நினைத்துவிட்டேன்
கதை நன்றாக உள்ளது விக்கி
hahahaha.. nice.. LOL
நானும் என்னமோன்னு நினைச்சு பயந்துட்டேன், அப்புறம் தான் தெரிந்தது இது அந்த மேட்டர்னு
;-) இப்படியா ட்விஸ்ட் வைப்பது... நல்லா தான் இருக்கு!
கடிதத்தைப் படித்து மனம் மெழுகிவிட்டது. காதலின் ரணம், மரணத்திலும் கொடுமை. அழகான உவமைகள்.. நன்று விக்னேஷ்..
மறுபடியும் பாரி, நந்தினி, நளினா_ விட மாட்டீங்க போல இவர்களை...
மிக்க நன்று..தொடருக தமிழோடு :)
இது நல்லா இருக்கே? நாம எழுதின கடிதம்னு சொன்னா திட்டுவாங்கன்னு, அதை கதையா மாத்தி வெளியிடலாமாஆஆஆஆஆ!!!!
:-)
@ ஜோதிபாரதி
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா.
@ வியா
நன்றி வியா
@ விஜி
வருகைக்கு நன்றி
@ தராசு
:)) பிட்ட போடுறிங்களே... என்ன மேட்டருனு சொல்லிட்டு போக வேண்டி தானே. எல்லோரும் வந்து இப்படி பிட்டு பிட்டா எதாவது சொல்லிட்டு போயிடுறிங்க. பின் விளைவுகள் அதிகமா இருக்கு :)
@ தமிழ் பிரியன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸ்
@ மலர்விழி
நன்றி...
@ ச்சின்னப் பையன்
ரொம்ப நாளுக்கு அப்புரம் வந்திருக்கிங்க... :) நன்றி பாஸ்...
நான் என்றால் இன்னொரு வரியையும் சேர்த்து கிளைமாக்ஸை டிவிஸ்டு பண்ணியிருப்பேன்...:-))))
இத படிச்சதும் எனக்கு ஒரு பொறி தட்டியிருக்கு....பதிவா வந்தாலும் வரும் :-)
@ டொன் லீ
ம்ம்ம் அடிச்சு ஆடுங்க... :)
தொடர்கதை வேற பெயர்ல வருதா?
சும்மா எட்டிப்பார்த்து தலையைக் காட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்.
நளினாவுக்கு எழுதிய கடிதம் கட்டிப் போட்டு விட்டது...கதையில் இத்தனை knot ஆ?சரியான knotty boy
விக்னேஷ்வர் எங்கே ஆளையே காணோம்....எனக்குத்தான் வீட்டிலே ஆணி பிடுங்ற வேலை உங்களுக்கு என்ன?
.....[.நான் வேறுமாதிரி knot போடவா?]
“எனக்கு அப்பவே தெரியும்! என் புள்ள அப்படி எல்லாம் செய்ய மாட்டான்னு” எனக் கூறிக் கொண்டே வெளியே வந்தாள் பாரியின் தாய் வசந்தா..
தாய் உள்ள போனதும் ,பாரி “சாரிம்மா!இது நிஜமான கடிதம்தான் “என்று சொல்லியவாறு ...கண்ணீரைத் துடைத்தபடி வெளியேறினான்.
////
“எனக்கு அப்பவே தெரியும்! என் புள்ள அப்படி எல்லாம் செய்ய மாட்டான்னு” எனக் கூறிக் கொண்டே வெளி வந்தாள் பாரியின் தாய் வசந்தா////////
இவங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்.
:)
அடங்கொக்கமக்க .......!!!!!!பொழைக்க தெருஞ்ச புள்ள..........!!! கடைசியா எப்புடி எஸ்கேப் ஆனாம்பாருங்கோ.........!!!
நல்ல அப்பா......!!!
நல்ல அம்மா......!!!
நல்ல புள்ள....!!!
நல்ல குடும்பம்........!!!
நல்ல பல்கலைகழகம்...!!!
நீடூடி வாழ்க.......!!!!!
miga arumaiyana siru kathai. Meelum thodaravum. From, viknesvary.
@ வால்பையன்
இல்லை... இது வேற... :))
@ கோமா
கோமா அம்மா என்ன இது ஃக்னோட்டி ஃக்னோட்டி விளையாடுறிங்க... வருகைக்கு நன்றி... நீங்க எழுதின முடிவும் சூப்பர். :)
@ பப்பு
அதே தான் பாஸ். நல்ல பிள்ளைன்னா அம்மா பிள்ளையாம். குரும்பு செய்தால் அப்பா பிள்ளையாம் :))
@ ஜெகதீசன்
நானும் :)
@ மேடி
:)) நல்ல பின்னூட்டமும் கூட... வருகைக்கு நன்றி
@ விக்னேஷ்வரி
நன்றி சகோதரி...
கத நல்லாதான் இருக்கு...
@ மதி
வாங்க மதி, கோலாலம்பூரில் எங்க இருக்கிங்க? நாளைக்கு நான் கே.எல் வருகிறேன். வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி :)
விக்கி, கதையின் ஒவ்வொரு வரியிலும் துக்கம் கலந்த நகைச்சுவை....உங்களால மட்டும்தான் இப்படி எழுத முடியும்...வாழ்த்துக்கள்...தாமதாக உங்கள் பதிவை படிக்கிறேன்...சாரி...பிசியாக்கும்...
@ உஷா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Hi anna, itharku munbu padhithu iruken, But innum paddippatharku arvamaga iruku! Good job carry on.
From,
Viknesvary(B.Com)
Post a Comment