மொத்த வாழ்க்கையும் ஆரம்பம் முதல் அடிபட்டு வாழ்ந்து வரும் அவனுக்கு போலிஸின் அடியும் உதையும் ஒன்றும் பெரிதில்லை என்பதைப் போல் அசால்டாக அமர்ந்திருக்கிறான். எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில் சொல்கிறான். எனக்கு அந்த கேள்விகளுக்கு விடை தெரியும் என்கிறான். அது எப்படி என்பதாக ‘ஃபிளாஷ்பேக்’, இன்றய நிலை என கதை சுழல்கிறது.
படிப்பறிவு இல்லாத நாயகன். ”இந்த 1000ரூபா நோட்டில் இருக்கிறது யாருனு தெரியுமா?” போலிஸ்காரன் கேட்க. காந்தி என அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மில்லியனர் போட்டியில் அமேரிக்க டாலரில் இருப்பது பெஞ்சமின் ஃப்ராங்களின் என்பதை நினைவு கூர்ந்து பதில் சொல்கிறான்.
எல்லாம் அனுபவத்தில் தெரிந்துக் கொண்டது தான். மதி நுட்பம் கொண்ட சிறுவன். எந்த நேரத்தில் போன் போட்டால் மில்லியனர் நிகழ்ச்சிக்கு சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என்பது முதல் பிஞ்சு மரத்தில் அடித்த ஆணியைப் போல சின்ன வயதில் மனதில் பதிந்த காதலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான்.
“உனக்கு ஒன்னு தெரியுமா... வாழ்க்கையில வரும் பிரச்சனைக்குக் காரணம் ரெண்டு தான் இருக்கு, ஒன்னு பணம் இன்னொன்னு பொண்ணுங்க” என போலிஸ்காரன் ஞான உபதேசம் செய்கிறான். உண்மையில் அவன் வாழ்க்கையில் இரண்டு தேடல்கள் இருந்தன. ஒன்று பணம் மற்றொன்று தொலைந்து போன காதலி.
தன் காதலி தன்னை பார்க்கக் கூடும் என்பதற்காக மில்லியனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறான். ”எல்லோருக்கும் ஏன் இந்த நிகழ்ச்சி பிடிக்கிறது?” என இடையில் சந்திக்கும் தன் காதலியை கேட்கிறான். ”எல்லோரும் எதில் இருந்தோ விடுபட்டு, புதிய ஒன்றை நோக்கி போக பாக்குறாங்க” என்கிறாள் அவள்.
வாழ்க்கை நினைத்தபடி அமைந்துவிடுவதில்லை. சிறு வயதில் ஏற்படும் கலவரத்தில் தாயை பரி கொடுக்கிறான் ஜமால். ஜமால் மற்றும் அவனது அண்ணன் இருவரும் உயிருக்கு தப்பி ஓடுகிறார்கள். அச்சமயம் நாயகியை சந்திக்கிறார்கள்.
எங்கிருந்தாலும் தம் காதலி தம்மைப் பார்க்கக் கூடும் எனும் நம்பிக்கையில் மில்லியனர் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறான். இன்றய நிலையில் இந்தியாவில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் எப்படி இருக்கிறார்கள், ஒரு பெண் எப்படி எல்லாம் அடிமையாக்கப்படுகிறாள் எனும் செய்திகளை கன்னத்தில் அறையாதக் குறையாக படம் பிடித்துள்ளார்கள்.
படத்தின் மையக் கருத்து தன்னம்பிக்கை. மற்றபடி அதிகமாகக் காண்பிக்கப்படுவன நெகட்டிவ் சமாசரங்கள் தான். நெகட்டிவ் கேரக்டர்கள் அதிகபடியாகவும் இருக்கிறது. நாயகன் சிறுவனாக இருக்கும் சமயம் அவனை சிலர் அடிக்க வருகிறார்கள். அப்போது ஓர் அமேரிக்க தம்பதியினர் அவனைக் காப்பாற்றுகிறார்கள். (அவர்கள் நல்லவர்களாம்... என்னா ஒரு வில்லத்தனம்...)
இப்போதெல்லாம் அதிகான தமிழ் படங்களில் பாலிஷ் போட்ட இயற்கைக் காட்சிகளுக்காக வெளிநாடுகளில் சென்று படபிடிப்பு நடத்துகிறார்கள். எல்லா வழங்கள் இருந்தும் இன்னமும் மிதிபட்டுக் கிடக்கும் இந்திய நாட்டின் நிலையை தைரியமாக எடுத்துச் சொன்னப் படங்கள் குறைவு தான். அப்படி இருந்தாலும் அவை அரசியல் நெருக்கடிகளுக்குள்ளாகலாம். இல்லை என்றால் கோர்ட் கேஸ் என நீதிமன்றத்தில் இழுக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படலாம்.
ஏ.ஆர் ரகுமானின் இசையில் குறை ஒன்றும் சொல்லிவிட முடியாது. தமது பணியை செம்மையாகவே செய்திருக்கிறார். இசை மிக சிறப்பாக இருக்கிறது. தமிழில் இதைவிட சிறப்பாகவும் அவர் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பதே உண்மை. ஆனால் ஆங்கில திரைப்படம் என்பதால் என்னவோ ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படிருக்கிறதாக கருதுகிறேன். எல்லோரும் வாழ்த்து சொல்லிவிட்டார்கள். நான் மட்டும் சொல்லாமல் இருந்தால் என்னாவது. இசைப் புயல் ஏ.ஆர்.குமானுக்கு எனது வாழ்த்துகள்.
ஸ்லாம் டாக் என்றும் பசுமையான காதலாய் மனதில் நிறைகிறது. அதில் ஒரு வசம் வருகிறது. அதை மிகவும் இரசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.
“நான் எந்த தப்பும் பண்ணலை. எனக்கு ஏன் தண்டனை”, என்கிறான் நாயகன்.
”நீ தப்பு பண்ணலை, ரொம்ப நல்லவனா இருக்கிறே. அது தான் தப்பு” என போலிஸ்காரன் சொல்வான். நிஜம்தானே?
26 comments:
விக்கி விமர்சனம் அருமை!
ஆம்! வில்லத்தனம், ஆதங்கம் சரி!
ஏ.ஆர்.ரகுமான் தமிழில் இசை அமைத்ததை எங்கு இவர்கள் கேட்டிருக்கப் போகிறார்கள்!
நம்ம புள்ளை,
ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஏ.ஆர்.ஆர் சுகந்த பாக்கு கொடுத்து வரவேற்போம்!
//“நான் எந்த தப்பும் பண்ணலை. எனக்கு ஏன் தண்டனை”, என்கிறான் நாயகன்.
”நீ தப்பு பண்ணலை, ரொம்ப நல்லவனா இருக்கிறே. அது தான் தப்பு” என போலிஸ்காரன் சொல்வான். நிஜம்தானே?//
சத்தியமாக நிஜம்
அந்த நெகிழ்ந்த வசனம்னு இறுதியில் குறிப்பிட்டுள்ளீர்களே.....
எல்லோர் வாழ்விலும் இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நிகழவே செய்கிறது போலும்.
@ ஜோதிபாரதி
நன்றி அண்ணா...
@ குசும்பன்
ஆமாம் :)
@ வாசுதேவன்
உண்மைதான் ஐயா... வருகைக்கு நன்றி...
அதிகமான எழுத்துப் பிழைகள் விமர்சனத்தை முழுமையாய் வாசிக்கும் ஆர்வத்தை தடுக்கிறது.....
தவிர்த்திருக்கலாம் :-(
@ புனிதா
மன்னிக்கவும். எனக்கு தெரிந்தவற்றை திருத்தி இருக்கிறேன். மேலும் இருந்தால் சொல்லவும்... வருகைக்கு நன்றி...
படம் பார்த்தேன். உங்கள் விமர்சனம் கன கச்சிதம்.
அழகாக ரசித்து எழுதியுள்ளீர்கள். நீங்கள் "சலாம் பம்பே" பலவருடங்களுக்கு முன் வந்தது- மை மெயிக் (சிங்கப்பூர் சீனர் எடுத்த தமிழர் கதை- சமீபத்தில் வெளி வந்தது) பார்த்தீர்களா??
இத் தருணத்தில் "எல்லாப் புகழையும் இறைவனுக்கு "அளித்த எங்கள் ஏ.ஆர்.ரகுமானையும் வாழ்த்துகிறேன்.
ம்...நான் இனிமேல் தான் படம் பார்க்க வேண்டும்,...:-)
நான் இன்றுதான் இந்தப் படத்தை lime wire மூலம் தறமிரக்கி பிரன்ச் மொழி(ஆங்கிலத்தைவிட பிரன்சில்
தான் எனக்கு மிக நன்றாக புரிந்தது)
பயிற்பில் தரமான காப்பியில் பார்த்தேன் படம் அருமையிலும் அருமை.படம் இந்தியாவின்
வல்லரசு கனவுகளின் பீற்றல்களை
யதார்த்த நிகழ்வுகளின் (வறுமை)மூலம் கன்னத்தில் அறைந்திருக்கிறது.நீங்கள் குறிப்பிட்டது
போல் ஏ.ஆர்.ரகுமானின் முழுத்
திறமையையும் பறைச்சாற்றிய படம்
நிச்சயம் இது இல்லை என்பதுதான் என் கருத்தும்.அவர் தூள் கிளப்பிய
பல படங்கள் தமிழிலும் இந்தியிலும்
உண்டு.இதற்கே இரண்டு ஆஸ்கார்
பரிசு என்றால் அவருடைய படங்களை
இதற்கு முன்னறே ஆஸ்கார்வாசிகள்
பார்த்திருந்தால் வருடம் ஒரு ஆஸ்கார்
பரிசு வாங்கியிருப்பார் போலும். எப்படியொ அந்த அற்புத கலைஞருக்கு என் சிரம் தாழ்ந்த
வணக்கங்கள். படத்தின் கடைசியில்
ஒரு டைடில் வரும் it's written
என்று,ஏ.ஆர்.ரகுமான் விசயத்திலும்
அது ஒத்துப்போகிறது.அவருக்கு எழுதி
இருக்கிறது.
அருமையான படம்...அசத்தலான விமர்சனம்...
நல்லா விமரிசனம் பண்றீங்க. இது போல நீங்க பார்த்த பிற படங்களைப் பற்றியும் சொல்லுங்க... ( நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கலே). உங்களது விமரிசனத்தை பார்த்த பின்பு கட்டாயம் பார்க்கணும் போல இருக்கு. பல குறை நிராவ்கள் இருந்தாலும் இந்திய சேரி வாழ்க்கை பற்றி உலகம் முழுக்க தெரிவித்த படம் அது. நிச்சயமாக இந்திய நடுத்தர வர்க்கம் வெட்கப்பட வேண்டும். அவர்களது நாட்டு வறுமை உலகம் முழுக்க இப்போது தெரிந்து விட்டது. தங்கள் நாட்டில் ஏழைகளே இல்லை என்பது போல நடந்து கொண்டார்கள். இனியாவது இந்தியா தனது ஏழைகளின் வாழ்க்கையை வலம் படுத்த வேண்டிய நிலைமையை உணர வேண்டும்.
@ யோகன் பாரிஸ்
நான் இன்னமும் அந்த படத்தைப் பார்க்கவில்லை நண்பரே... வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பார்க்கிறேன்... வருகைக்கு நன்றி...
@ டொன் லீ
நிச்சயம் பாருங்கள் நண்பா...
@ moulefrite
உண்மை தான்... சரியாகச் சொன்னீர்கள்... வருகைக்கு நன்றி... :))
@ கலையரசன்
அவர்களூக்கு சண்டை போடவே நேரம் போதவில்லையே... மக்களை கவனிப்பார்களா... ஓட்டுக் கேட்க கூட சேரி பக்கம் போவார்களா என்பது கூட சந்தேகமாக இருக்கிறது... கண்டிப்பாக பாருங்கள்... நல்ல படம்...
நல்ல விமரசனம்!
நிறைய பண்ணுங்க!
@ சிவாஜி த பாஸ்
நன்றிங்க... தொடர்ந்து வருக...
விக்னேஷ்வரன் நல்லா எழுதி இருக்கீங்க..
நான் படம் பார்த்துட்டேன்..இன்னொரு முறை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
@ கிரி
நன்றிங்க....
(அவர்கள் நல்லவர்களாம்... என்னா ஒரு வில்லத்தனம்...)
அமெரிக்கர்களில் நல்லவர்களே இல்லை என்கிறீர்களா?!!!!
@ பலசரக்கு
இந்தியர்களில் நல்லவர்கள் இருக்க மாட்டார்களா என்கிறேன்...
வணக்கம். உங்கள் வலைபதிவுக்கு நான் புதியவன். சிலம்டாக் மில்லியனர் படத்தைப் பற்றி தங்களது விமர்சனம் படித்தேன். நல்ல விமர்சனம். ஆனால், அமெரிக்கர்களைக் கேலி செய்வது போல் எழுதி இருக்கிறீர்கள். ஏன் என்று சரியாக புரியவில்லை. சற்று விளக்கினால் நலம். நன்றி.
@ குமார்
வருகைக்கு நன்றி... நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? வெள்ளையர்களை வெகுளிகளாகவும் நல்லவர்களாகவும் காட்டி இருக்கிறார்கள். அதே போல் இந்தியர்களை மூர்க்கத் தனம் மிகுந்தவர்களாக காட்டி இருக்கிறார்கள். பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு புரியும்.
நல்ல பதிவு!
அசால்டாக என்பதை "அலட்சியமாக" என்று திருத்தவும். assault என்பதன் அர்த்தமே வேறு.
அதில் ஒரு //வசம்// வருகிறது.
தாயை //பரி//
அங்கிருந்து தப்புகிறார்கள் //ஜாமாலும்//
அறையாத//க்// குறையாக
அதிக//p//படியாகவும்.
விக்கி,
எழுத்து/இலக்கணப்பிழைகளை சரி செய்யவும்!
நல்ல பார்வை,.... முடிந்தால் என் பார்வையில் சில மட்டும்... பார்த்துவிட்டு போங்கள் விக்கி
http://aammaappa.blogspot.com/2009/02/blog-post_24.html
நல்ல படம்.நானும் பார்த்தேன். உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது.
சேரி வாழ்வின் துயரம் மனத்தை அழுத்தியது.
@ ஜோ
நன்றிங்க மாற்றிடுறேன்..
@ஆ. ஞானசேகரன்
நன்றி. பார்த்தேன். கருத்திட்டேன்.
@ மாதேவி
நன்றி...
//இசைப் புயல் ஏ.ஆர்.குமானுக்கு எனது வாழ்த்துகள்.//
அது யாருங்க அது குமான்?
அதிகபட்ச எழுத்துப்பிழைகளை கண்டுபிடித்த எனக்கு நீங்கள் ஒரு ஆயிரம் ரிங்கட் பணம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment