இதனை எண்ணும் போதெல்லாம் கொச்சை வார்த்தைகள் கொந்தளிக்கின்றன. வேதாளத்திற்கு வாக்கப்பட்டால் முருங்கை மரத்தில் ஏற வேண்டுமாம். அதனால் பொத்த வேண்டியதை பொத்திக் கொண்டு மூட வேண்டியதை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய நிர்பந்தம் தான் போல.
‘ஷாருக்கானுக்கு டத்தோ விருது’ இதனைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் பச்சை வார்த்தைகள் பாய்ந்து வருகின்றன. அப்படி என்றால் நான் நாட்டின் துரோகியாக இருப்பேனோ என்ற எண்ணமும் கூடவே சேர்ந்துக் கொள்கிறது.
ஒருவருக்கு வாழ்த்தும் விருதும் கொடுத்து சிறப்பிப்பது சிறந்த செயல் என்றாலும் கூட எதற்கும் ஒரு வரையறை வேண்டாமா? முதல் வகுப்பு தேறிய மாணவனுக்கு(!?) இளங்கலை பட்டம் கொடுத்தீர்கள் என்றால் அம்மாணவனின் மனநிலை எப்படி இருக்கும்? அதன் பெருமை அவனறிவானா? அதனால் அவனுக்கு என்ன பயனுண்டு?
மலேசியாவில் மலாக்கா மாநில ஆளுநரின் 70-ஆம் ஆண்டு பிறந்த தினத்தையொட்டி ஷாருக்கானுக்கு டத்தோ விருது வழங்கப்பட இருக்கிறது. எதனால் விருது? மலாக்காவில் திரைப்படம் தயாரித்து மலாக்கா மாநிலத்தை வெளிநாட்டினரிடையே பிரபலப்படுத்தியதற்காக இவ்விருது கொடுக்கப்பட இருக்கிறது. அதை பெற்றுகொள்ள நேரமில்லையென அந்த பிரபல நடிகர் கூறி இருப்பது அதைவிட மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்ல வேண்டும்.
சரி, ஒரு நடிகர் என்ற முறையில் ஷாருக்கான் செய்தது மகத்தான செயலாகவே இருக்கட்டும். அதற்காக கொடுக்கப்பட இருக்கும் விருதும் போற்ற தக்கதாகவே இருக்கட்டும். ஏனைய அரசு தரப்பினரும், அரசு சார்பற்ற தரப்பினரும் எடுத்துரைக்கும் கருத்துக்கு செவி சாய்க்காமல் இருப்பது முறையான ஒன்றா? என்ன சொல்ல கோமளித் தனமாக தான் இருக்கிறது சில வேளைகளில் சிலரது செயல்கள்.
பூப்பந்தாட்டத்தில் தமது பிள்ளைகளை சிறப்புர பயிற்சியளித்து உலகளவில் பெறுமை பெற செய்த சீடேக் சகோதரர்களின் தந்தைக்கு டத்தோ விருது கொடுக்கப்பட்டது. நாட்டுக்கு புகழ் சேர்த்த பிள்ளைகளின் தந்தைக்கு கொடுக்கப்பட்ட விருது மெத்த மகிழ்ச்சியான விடயமே. மறுப்பார் இல்லை.
அதே போல, கராத்தே தற்காப்புக் கலை பயிற்றுணர் திரு.பொன்னையா தமது பிள்ளைகளை தற்காப்பு கலையில் வலுமையாக பயிற்சி கொடுத்து, நாட்டிற்கும் வீட்டிற்கும் பெறுமை சேர்க்க செய்தார். அவரை டத்தோ பொன்னையாவாக பார்க்கும் வாய்ப்பு கிட்டுமா என்பது கேள்விக்குறி தான்.
சில வருடங்களுக்கு முன் கப்பல் கொண்டு உலகை வலம் வந்தவருக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்ட்து. 1996-ஆம் ஆண்டு இமயத்தில் மலேசிய கொடியை நாட்டிய நமது சகோதரர்கள் மகேந்திரனும் மோகன தாஸூம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.
இவருக்கு விருது கொடுங்கள் இவருக்கு கொடுக்காதீர்கள் என்று சொல்ல எனக்கு ஏற்ற பட்டறிவு இல்லை. இது எனது பொறாமை பார்வையும் இல்லை. எதையும் நடு நிலை நோக்கோடுதான் கொஞ்சம் பாருங்களேன் என அன்பு வேண்டுகோள் வைக்கிறேன். இது 'தவறான கருத்து' என நினைத்தால் என்னைச் செருப்பால் அடியுங்கள்.
இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
41 comments:
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு டாக்டர். விஜய்க்கு படிக்க பரிந்துரை செய்யப்படுகிறது...
அரசியல் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி தான் விக்கி.... :(
சூப்பர், நான் அப்பவே நினைச்சேன் போடுவீகன்னு! நாம் விவாதிக்கும் போது தங்களிடம் கொஞ்சம் வெப்பம் இருந்ததை உணர்ந்தேன். நம் தமிழர்களில் சில புல்லுருவிகள், ஆள்க்காட்டிகள் இருக்கக் கூடும். பார்த்துக் கொள்ளுங்கள்!
தலைப்பை பார்த்து பயந்திட்டேன்..
//முதல் வகுப்பு தேரிய மாணவனுக்கு//
தே"றி"ய
halo mike relex lah.....!
if u have money u also can be a Dato or Dato' Seri in malaysia....
ini semua xada nilai lagi kat malaysia lah mike.....
u ada baca DR M blog tak?
dia sokong tindakan ini.....apa...
//http://test.chedet.com/che_det/2008/10/snippets-16.html//
ஏன் இந்த கொலைவெறி?
யாருக்கோ என்ன விருதோ, கிருதோ கொடுத்துவிட்டு போகிறார்கள்.அதற்கு நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு செருப்பு, கிருப்புன்னு???
டேக் இட் ஈசி பாலிஸி பாஸ்
கோபம் நியாயமானதுதான்!
/*இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.*/
"செய்றோம்... செய்றோம்.....
எங்களுக்கென்ன லாபம்.....?" என்று கேட்கிறது சில சதுரமும், செவ்வகமும்.....
/*இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.*/
"செய்றோம்... செய்றோம்.....
எங்களுக்கென்ன லாபம்.....?" என்று கேட்கிறது சில சதுரமும், செவ்வகமும்.....
உறைக்கும்படியாக சொன்னீர்கள்!
நன்று.
@ சென்ஷி
அட மீத பஸ்ட்டு போடலையா? தமிழ் பிரியன் உங்களைவிட ஒரு நிமிட தாமதம் பாருங்களேன். உங்கள் பரிந்துரை.... கி கி கி கி...
@ தமிழ் பிரியன்
ஒரே மதிரியாக இருக்கவிட்டு விட்டோமோ? இல்லை வளர்த்துவிட்டோமோ? சொல்லுங்க அண்ணாச்சி...
@ ஜோதிபாரதி
வருகைக்கு நன்றி அண்ணா. வெப்பம் இன்னிக்கு தான் கொதிச்சிருக்கு பாருங்களேன் :))). நாம் பேசவும் பதிவிடவும் மட்டுமே முடிகிறது... கேட்டவர் கயவர் எனும் முத்திரை குத்தப்படுகிறதே... அதை என்ன சொல்ல...
@ தூயா
ஏன் பயம்???
@ நாமக்கல் சிபி
மாற்றிடுறேன்... வருகைக்கு நன்றி...
@ டாக்டர் சிந்தோக்
நீங்கள் தமிழில் சொல்லி இருந்தால் பலருக்கும் புரிந்திருக்கும் இல்லையா...
டாக்டர் சிந்தோக் கொடுத்திருக்கும் சுட்டி மலேசிய முன்னால் பிரதமர் துன் டாக்டர் மஹாதிர் முகமதுவின் பதிவாகும்...
அவர் தம் பதிவில் பலருக்கும் கொடுக்கப்பட்ட டத்தோ விருது ஷாருக்கானுக்கு கொடுப்பதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் மலேசியாவில் பிறந்து வளர்ந்த எனக்கு 2 விருது கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்யுங்களேன்...
@ செல்வன்
முதல் வருகைக்கு நன்றி... உணர்ச்சிவசப்படவில்லை... மனதில் கிடக்கும் குப்பையை வெளியே தூக்கி போடுகிறேன்...
@ ஜூர்கேன் க்ரூகேர்
முதல் வருகைக்கு நன்றி... கோபம் இல்லை... கோபம் கொண்டால் அது தவறாகிவிடும்...
@ நையாண்டி நைனா
ஹா ஹா ஹா.... என்ன சொல்றிங்க புரியலை... வருகைக்கு நன்றி...
@ மு.வேலன்
வருகைக்கு நன்றி...
/*@ நையாண்டி நைனா
ஹா ஹா ஹா.... என்ன சொல்றிங்க புரியலை... வருகைக்கு நன்றி...*/
அதாவது,
ஆதாயம் இல்லைன்னா, அடிக்கடி நம்ம கண்ணுலே படக்கூடிய வட்டம், மாவட்டம் கூட செய்ய மாட்டாங்க என்று சொல்ல வருகிறேன்.
நானே
"mee the firstuu"-ன்னு போட்டிருப்பேன்....
யாரும் தப்பா நினைச்சிட்டாங்கன்ணா....
நீங்க "mee the firstuu" போடுற மாதிரியா தலைப்பு வச்சிருக்கீங்க....
@ நையாண்டி நைனா
ஓ இது தான் அந்த வட்டமும் சதுரமுமா? சரியாதான் சொன்னிங்க... லாபத்தை எதிர்பார்த்து ஓட்டு போடும் மக்களுக்கு கடமையைச் செய் பலனை எதிர் பாராதேனு படம் சொல்றாங்களோ...
///////இறுதியாக சில வார்த்தைகள். நமது இந்திய அரசியல்வாதிகள் தமிழ் பள்ளி பிரச்சனை, இந்து மத கோவில் பிரச்சனை எனும் இரண்டு விடயங்களில் மட்டும் உருண்டு பிரண்டு கொண்டு இருக்காமல் சற்றே வெளி வந்து ஏனைய பிரச்சனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.//////
இந்த கருத்தை புத்தியில் உரைக்க செருப்பாலடித்தார்போல் மீண்டும் மீண்டும் உரையுங்கள்.
விக்கி,நீங்க ரொம்ப கோவமா இருக்கீங்க.அப்புறமா வரேன்.
யப்பா.. எனக்கும் ரெண்டு வாங்கி வைப்பா. நான் அங்கன வரும்போது வாங்கிக்கொள்கிறேன்.
//சென்ஷி said...
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு டாக்டர். விஜய்க்கு படிக்க பரிந்துரை செய்யப்படுகிறது...
/
Repeatteyyyyyyyyyy
டத்தோ விக்கி,
no feelings of malaysia.அவங்க உங்களுக்கு டத்தோ பட்டம் கொடுக்கவில்லைன்னா என்ன?பதிவுலக மக்கள் பாசமா உங்களுக்கு டத்தோ பட்டம் கொடுக்குறோம் :)
நானும் பூமிபுத்ரான்னு சொல்லிகிட்ட மாதிரி இதுவும் சொல்லிகிட்டாதான் உண்டு..என்ன செய்ய?எல்லாம் நம்ப இளிச்சவாயதனம்!
@ அகரம் அமுதா
வருகைக்கு நன்றி... சொல்வதால் மாற்றம் நிகழுமா?
@ ஹேமா...
வருகைக்கு நன்றி... கோபம் இல்லை...
@ ச்சின்னப் பையன்
எதை சொல்றிங்க... விருதையா? செருப்பையா :))) சரியா சொல்லுங்க... மொட்டையா சொன்னா எப்படி...
@ பரிசல்காரன்
வருகைக்கு நன்றி. உங்களுக்கு ஏதும் விருது வேணுமா?
@ அனானி
வருகைக்கு நன்றி...
அப்புறம் அவங்க எப்படி பிழைப்ப ஓட்டுவாங்க.
எனக்குத் தெரிந்து ஈப்போவில தமிழ் எழுதுற ஒரு ஆள் நீங்களாத் தான் இருக்கணும். எனக்கும் பல மலேசியத் தமிழர்களைத் தெரியும். உண்மையில் நான் பெருமைப் பாடுறன்.உங்களை நினைத்து.
அப்புறம் வைரமுத்து கவிதை எழுதித் தாறதா சொல்லி வேறு பிரச்சினையாமே? எல்லாம் மக்களின் ஆர்வம் திசை திருப்பப் படுவது தான் காரணம். தமிழென்றால் வெறும் சினிமா தான் பலருக்குத் தெரிகிறது.
அப்புறம் வடிவேல், சங்கர் எல்லாரையு ம் விட்டுட்டானுகள்.
@ ஆட்காட்டி
நீங்க பேசரது நெம்ப ஓவரா இருக்கு சாமி... மலேசிய எழுத்து புலிகள் இதை பார்த்தா கிழி கிழினு கிழித்து துவம்சம் செஞ்ஜிடுவாங்க... உங்களை இல்லை நான் எதாவது தப்பா எழுதிட்டா என்னை.... பலர் இருக்கிறார்கள்...
உண்மை சுடும்...உங்கள் பதிவு சுட்டது.
கோபம் நல்லது தானே..
விக்கி, இந்தியனுக்கு பல விடயங்களில் உலகவிலும் "டத்தோ" பட்டத்தை விட இன்னும் சிறந்த அங்கீகாரங்கள் கொடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.அதை பற்றி எழுதுங்கள், படிக்க இன்னும் சிறப்பு.யாருக்கு வேண்டும் இவர்களின் டத்தோ பட்டம்?
அட... இதெல்லாம் அரசியல் விக்கி.. அது புரியாம இருக்குறதுக்காக வேணா உங்கள.. ஹி..ஹி..
உலகம் முழுக்க இதுதான் நிலமை. என்னா செய்ய முடியும்...
//
"என்னைச் செருப்பால் அடியுங்கள்!"
//
சென்னை வரும்போது சொல்லி அனுப்பவும். அர்ஜன்ட் என்றால் கொரியர் பணம் வயர் ட்ரான்ஸ்பர் பண்ணவும்.. :))))
@ அருள்
வருகைக்கு நன்றி... தன் வினை தன்னைச் சுடாமல் அடுத்தவனை சுடுவது நியாயமா?
@ உஷா
வருகைக்கு நன்றி...
@ வெண்பூ
ரொம்ப நாளா காத்திருக்கிற மாதிரி பதில் சொல்றிங்களே...
விக்னேஸ்வரன் அவருக்காக உங்களை ஏன் இவ்வாறு தலைப்பிட்டு வருத்துகிறீர்கள்.. பட்டம் கொடுப்பதால் மட்டுமே அவர் உயர்ந்து விட போவதில்லை, விட்டு தள்ளுங்கள், மக்கள் அறிவார்கள் உண்மையை.
மங்களூர் வாறூம் போது சொல்லி அனுப்பவும். அர்ஜெண்ட் என்றால் ரிடர்ன் ப்ளைட் டிக்கட் அனுப்பவும்.
COOOOOOL Man
Dato பட்டம் வட இந்திய நடிகருக்கு கொடுக்கபட்டுள்ளது. சரி. அந்த பட்டத்தை
ஏற்றுகொள்ள ஷாருக் கான் அவர்களுக்கு நேரம் இல்லை. இதுவும் சரி.
இந்த இரண்டு விடயங்களும் கொடுத்தவருக்கும் நடிகருக்கும் இடைபட்ட விஷயம்.
இதனில் கோபம் எதற்கு? நான் ஏன் செருப்பால் அடிக்க வேண்டும் ? சவுக்கால்
அடித்தால் சரி வராதோ ?
@ கிரி
வருகைக்கு நன்றி...
@ சிவா
முடிவோடுதான் இருக்கிங்க இல்லையா... :)) வருகைக்கு நன்றி...
@ benzaloy
வருகைக்கு நன்றி... சாட்டை வேறா...
ஒருவன் உற்பத்தி செய்கிறான் ஒருவன் விலையேற்றுகிறான் அதனால் உனக்கு என்ன என்று இருக்க முடியுமா...
//சென்ஷி said...
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பதிவு டாக்டர். விஜய்க்கு படிக்க பரிந்துரை செய்யப்படுகிறது...//
LOL
என்ன சார் நீங்க? இந்திய சமுதாயத்திற்கென்று நம் அரசியல்வாதிகள் கொஞ்சம் மூக்கை நுழைக்கிற விஷயம் இந்த கோயிலும், தமிழ்ப்பள்ளியும்தான். அதையும் விட சொல்றீங்களா? ஆனா ஒன்னு சார், நம்ம சமுதாய மக்களுக்கு இந்த கோயில், தமிழ்ப்பள்ளிகளில் அதுவும் முக்கியமா கோயில் பிரச்சனைகள் ஈடுப்படுகிற அரசியல்வாதிகள் மட்டும் தற்போதைக்கு ஹீரோக்கள். இன்னும் கொஞ்ச நாள் போனா கோயிலுக்கு நிலத்தை வாங்கி கொடுக்கிற அரசியல்வாதிகளுக்கெல்லாம் டத்தோ பட்டம் தரச் சொல்லி போர் கொடி தூக்கப் போவுது பக்தி முத்திப் போன நம் இந்திய சமுதாயம்.
@ இனியவள் புனிதா
வருகைக்கு நன்றி...
@ செவ்வந்தி
செவ்வந்தி வருகைக்கு நன்றி... நீங்கள் மலேசியரா? பத்தி முத்தி போன மக்கள் இல்லை... மடத்தனம் முத்தி போன மக்கள்... நிலம் வாங்கி கொடுத்த அரசியல்வாதிகளுக்கு டத்தோ பட்டம் இல்லை அவர்களுக்கும் சேர்த்து சிலை வைத்து பூஜை கூட செய்வார்களானால் ஆச்சரியப்படுவதற்கில்லை...
பெறுமை?!?
பெருமை என்பதே சரி!
மற்றபடி உங்களது கோபம் நியாயமானது. இந்தியர்கள் எங்கிருந்தாலும் அதே அபத்தமான அரசியலை தான் செய்வார்கள், விடுங்கள்!
நான் மலேசிய தமிழ்ப்பெண் விக்கினேஸ்வரன். நீங்கள் கூறியதும் உண்மைதான்.
@ ஜோ
வருகைக்கு நன்றி அன்பரே... மீண்டும் வருக...
@ செவ்வந்தி
மீண்டும் வருக... மிக்க நன்றி...
Post a Comment